search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gutka seized"

    • வடமாநில வாலிபர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • அங்கு குட்காவை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது.

    கோவை,

    கோவையில் தடைசெய்யப்பட்ட குட்கா விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    மேலும் மளிகை மற்றும் பெட்டிக்கடைகளில் சோதனை செய்து குட்காவை பறிமுதல் செய்து வருகின்றனர். இந்நிலையில் அவினாசி சாலை எல்.ஐ.சி சந்திப்பு அருகே சிலர் குட்கா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் ரேஸ்கோர்ஸ் போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அங்கு குட்காவை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் குட்காவை விற்பனைக்கு வைத்திருந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பிரவீன் குமார் (வயது 22) மற்றும் நிலீஸ்குமார்(28) ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 140 கிலோ குட்கா மற்றும் செல்போனை பறிமுதல் செய்தனர். பின்னர் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள கடை உரிமையாளர் ரமேஷ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • கடலூர் மாவட்டத்தில் குட்கா மற்றும் கஞ்சா விற்பனை செய்த பெண் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை போலீ சார் பறிமுதல் செய்து வழக்கு பதிவுசெய்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் கஞ்சா விற்பனை செய்வதை தடுக்கும் விதமாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதோடு, தீவிர சோதனை பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூர், புதுநகர், முதுநகர், காடாம் புலியூர் ஆகிய பகுதிகளில் 240 கிராம் கஞ்சாவும், மங்க லம்பேட்டை, கருவேப்பி லங்குறிச்சி, புதுப்பே ட்டை, ஸ்ரீமுஷ்ணம், நெல்லிக்கு ப்பம், ஆலடி ஆகிய பகுதி களில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை போலீ சார் பறிமுதல் செய்து வழக்கு பதிவுசெய்தனர். இதில் கடலூர் திருப்பாதிரி ப்புலியூர் சூர்யா (26), சிதம்பரம் நடராஜன் (41), கடலூர் புதுப்பாளையம் சீனிவாசன் (22), பணிக்கன் குப்பம் நவீன் (21), கடலூர் முதுநகர் சிவானந்தபுரம் ராகுல் (21), ஆகியோரை கஞ்சா வழக்கிலும், மங்கலம் பேட்டையை சேர்ந்த அக்பர் அலி (51), சிவகலை (34) என்ற பெண், கருவேப்பி லங்குறிச்சி காசிநாதன் (55), பண்ருட்டி ஏழுமலை (61), ஸ்ரீமுஷ்ணம் ராஜதுரை (61), நெல்லிக்குப்பம் கணபதி (50), விருத்தாச்சலம் வீரா ரெட்டி குப்பம் பீட்டர்நாயகம் (64) ஆகியோரை தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்ததாக போலீசார் கைது செய்தனர். மேலும் கடலூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் கஞ்சா பொருட்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
    • யார் ஈடுபட்டாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சக்தி கணேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா பொருட்கள் பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கையாக தொடர்ந்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வப்போது கடைகள் மற்றும் சாலை ஓரங்களில் விற்பனை செய்யப்படும் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கடலூர் மாவட்டத்திற்குட்பட்ட கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாச்சலம், திட்டக்குடி, சேத்தியாத்தோப்பு, சிதம்பரம் ஆகிய உட்கோட்டத்தில் போலீசார் திடீரென்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது நெல்லிக்குப்பம், கடலூர் புதுநகர், முதுநகர், விருத்தாச்சலம் பகுதியில் விற்பனை செய்யப்பட்ட கஞ்சா மற்றும் மாவட்ட முழுவதும் விற்பனை செய்யப்பட்ட தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் ஒரே நாளில் மாவட்ட முழுவதும் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்பட்டதாக 9 பெண்கள் உட்பட 40 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும் இவர்களிடம் இருந்து 30 ஆயிரம் மதிப்பிலான கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல் செய்தனர். மேலும் மாவட்டம் முழுவதும் இது போன்ற நடவடிக்கையில் யார் ஈடுபட்டாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சக்தி கணேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • முத்துராஜ் சொந்தமாக மாடுகள் வைத்து வளர்த்து வருகிறார்.
    • ரூ.80 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    நெல்லை:

    சங்கரன்கோவில் அருகே உள்ள குலசேகரன்கோட்டை காலனி தெருவை சேர்ந்தவர் முத்துராஜ்(வயது 31). இவர் சொந்தமாக மாடுகள் வைத்து வளர்த்து வருகிறார்.

    அந்த மாடுகளை பராமரிப்பு செய்வதற்காக வீட்டின் அருகிலேயே தொழுவம் ஒன்று வைத்துள்ளார். அந்த தொழுவத்தில் புகையிலை பொருட்களை அதிக அளவில் பதுக்கி வைத்து கடைகளுக்கு விற்பனை செய்வதாக கரிவலம்வந்தநல்லூர் போலீசாருக்கு கதவல் கிடைத்தது.

    உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று தொழுவத்தில் சோதனை செய்தனர். அப்போது மூட்டைகளில் புகையிலை பாக்கெட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து ரூ.80 ஆயிரம் மதிப்பிலான 218 கிலோ புகையிலை பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துராஜை கைது செய்தனர்.

    • கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 5 கிலோ எடை உள்ள குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
    • இதனை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

    கருமத்தம்பட்டி :

    கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் குட்கா விற்பனை நடைபெறுவதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கருமத்த ம்பட்டி அருகே உள்ள காடுவெட்டிபாளையம் பகுதியில் கருணாகரன்(36) என்பவரின் மளிகை கடையில் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 5 கிலோ எடை உள்ள குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதனையடுத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கடையின் உரிமையாளர் கருணாகரனுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தார்.

    தொடர்ந்து பதுவம்பள்ளி பகுதியில் உள்ள சுந்தரமூர்த்தி(59) என்பவரின் மளிகை கடையில் சோதனை மேற்கொண்டதில் 5 கிலோ குட்கா பறிமுதல் செய்து, ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

    இதனை தொடர்ந்து உரிமையாளர்களிடம் மேலும் இதனை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

    குஜராத்தில் இருந்து சென்னைக்கு லாரிகளில் கடத்திய 5 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    பூந்தமல்லி:

    தமிழகத்தில் குட்கா, புகையிலை பொருட்களுக்கு தடைவிதிக்கப்பட்டு உள்ளது. எனினும் பல இடங்களில் குட்கா பொருட்கள் விற்கப்பட்டு வருகின்றன.

    இவை வடமாநிலங்களில் இருந்து கடத்தி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சப்ளை செய்வதாக தெரிகிறது.

    இந்த நிலையில் பூந்தமல்லி அருகே லாரிகளில் குட்கா பொருட்கள் கடத்தப்பட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    சப்-இன்ஸ்பெக்டர் சிவா தலைமையில் போலீசார் இன்று காலை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். பூந்தமல்லி அருகே பெங்களூர் நெடுஞ்சாலை பாரிவாக்கம் ஜங்‌ஷனில் 2 லாரிகளில் இருந்த பொருட்களை சிலர் லோடு ஆட்டோவில் மாற்றி ஏற்றிக் கொண்டு இருந்தனர். சந்தேகம் அடைந்த போலீசார் சோதனை செய்ய சென்ற போது லோடு ஆட்டோவில் இருந்த 2 வாலிபர்கள் தப்பி ஓட்டம் பிடித்தனர்.

    2 லாரிகளில் தடை செய்யப்பட்ட குட்கா மூட்டைகள் இருந்தன. இதையடுத்து சுமார் 5 டன் குட்காவை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு லட்சக்கணக்கில் இருக்கும்.

    லாரியில் இருந்த 2 வடமாநில வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். 2 லாரி மற்றும் லோடு ஆட்டோ பறிதல் செய்யப்பட்டது.

    பிடிபட்ட 2 லாரிகளும் குஜராத் பதிவு எண் கொண்டது. குஜராத்தில் இருந்து அவர்கள் குட்கா, புகையிலையை கடத்தி வந்து சென்னையில் பல்வேறு இடங்களில் சப்ளை செய்து வந்தது தெரியவந்தது.

    இது தொடர்பாக கைதான 2 வாலிபர்களிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    நெல்லை அருகே குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.15 லட்சம் மதிப்புள்ள போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    நெல்லை:

    நெல்லை பகுதியில் பள்ளி-கல்லூரி மாணவர்கள் பலர் போதை பழக்கத்திற்கு உட்பட்டு மோதல்களில் ஈடுபட்டு வந்தனர். இதை தடுக்க சமீபத்தில் நெல்லை பகுதியில் அதிரடி சோதனை நடத்தி ஏராளமான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    கஞ்சா வியாபாரிகள் 10-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இதைத்தொடர்ந்து நெல்லை பகுதியில் ஏராளமாக தடை செய்யப்பட்ட “போதை பாக்கு” உள்ளிட்ட தடை செய்யப்பட்டபுகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட சிறப்பு குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல்கள் கிடைத்தன.

    இதைத்தொடர்ந்து சிறப்பு குற்றப்பிரிவு போலீசார் இன்று காலை நெல்லை பேட்டை அருகே உள்ள திருவேங்கடநாதபுரம் செல்லும் ரோட்டில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது அந்த வழியே ஒரு லாரி சந்தேகப்படும்படி சென்றது. அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டு முன்பு லாரி நிறுத்தப்பட்டது. அதில் இருந்து போதை பாக்குகள், புகையிலை பொருட்கள் இறக்கி வைக்கப்பட்டன. இதை நோட்டமிட்ட போலீசார் அந்த வீட்டை சுற்றி வளைத்து அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது அங்கு போதை பாக்கு மற்றும் புகையிலை பொருட்கள் குவியல் குவியலாக வைக்கப்பட்டிருப்பதை பார்த்தனர். இதையடுத்து அவற்றை கொண்டு வந்த லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். அருகில் நின்ற லாரி டிரைவர் சம்பத்(30), கிளீனர்(28) ஆகிய 2 பேரையும் போலீசார் மடக்கி பிடித்தனர். இதை கவனித்த சிலர் அந்த வீட்டின் பின்பக்க கேட் சுவர் வழியாக தப்பி ஓடிவிட்டனர். உடனே அவர்களை போலீசார் விரட்டினர். போலீசார் சுற்றி வளைத்து மடக்கியதில் நெல்லையைச் சேர்ந்த அன்வர் என்பவர் பிடிபட்டார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தொடர்ந்து போலீசார் வீட்டில் சோதனை போட்டனர்.

    பெட்டி பெட்டியாக வைக்கப்பட்டிருந்த போதை பாக்குகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பல மூட்டைகளிலும் போதை பாக்குகள் கட்டி வைக்கப்பட்டு இருந்தன. அந்த வீட்டின் அனைத்து அறைகளிலும் போதை பாக்குகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.15 லட்சத்திற்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.

    அனைத்தையும் போலீசார் பறிமுதல் செய்து, சுத்தமல்லி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் சுத்தமல்லி போலீஸ் இன்ஸ்பெக்டர் குமாரிசித்ரா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அன்வரை உள்ளிட்ட 3 பேரை கைது செய்தனர். தப்பி ஓடிய நெல்லை வியாபாரி ஹனீபா உள்பட சிலரை போலீசார் தேடிவருகிறார்கள்.

    குடோனில் பதுக்கி வைத்திருந்த ரூ.7 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

    விருதுநகர்:

    தமிழகம் முழுவதும் புகையிலை பொருட்களுக்கு அரசு தடை விதித்தபோதிலும் அதிகாரிகள் மற்றும் போலீசாரின் மெத்தனத்தால் சர்வ சாதாரணமாக கடைகளில் விற்கப்பட்டு வருகிறது.

    இதை தடுக்க போலீசாரும் அவ்வப்போது அதிரடி நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்.

    சிவகாசி போலீசார் நேற்று சாத்தூர்-சிவகாசி ரோட்டில் உள்ள பாரப்பட்டி விலக்கில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வேனை மறித்து சோதனை செய்தபோது அதில் ரூ.1 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் வேனில் இருந்த சாத்தூர் நெல்மேனியை சேர்ந்த சரவணமணிகண்டன் (வயது30), ராமகுருநாதன் (25) ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்கள் போலீஸ் நிலையம் அழைத்து செல்லப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

    அப்போது புகையிலை பொருட்களை சிவகாசி அருகே அனுப்பன்குளத்தில் உள்ள குடோனுக்கு கொண்டு செல்ல இருந்ததாக தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த குடோனுக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு பதுக்கி வைத்திருந்த ரூ.6 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள், ரூ.1 லட்சத்து 28 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதில் தொடர்புடைய சிவகாசியை சேர்ந்த சரவணக்குமாரை என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

    திண்டுக்கல்லில் ரூ.60 ஆயிரம் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    குள்ளனம்பட்டி:

    தமிழகத்தில் குட்கா, போதை பாக்குகள் தடை செய்யப்பட்டபோதும் பல இடங்களில் பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். போலீசார் சோதனை நடத்தி இவற்றை பறிமுதல் செய்து அபராதம் விதித்தபோதும் குட்கா விற்பனையை தடுக்க முடியவில்லை.

    குடைப்பாறைப்பட்டி பகுதியில் வீடுகளில் குட்கா பொருட்கள் பதுக்கி விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி எஸ்.பி. தனிப்படை சப்-இன்ஸ் பெக்டர் மாரிமுத்து தலைமையிலான போலீசார் இன்று அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ரூ.60 ஆயிரம் மதிப்பிலான குட்கா, புகையிலை பொருட்கள் பதுக்கியது தெரிய வந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக சரவணன் (வயது35) என்பரை கைது செய்து தெற்கு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    மதுரை அருகே குடோனில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 342 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    மதுரை:

    தமிழக அரசு புகையிலை பொருட்களுக்கு தடை விதித்திருந்தாலும் சர்வ சாதாரணமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக போலீசார் நடவடிக்கை எடுத்தும் புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க முடியவில்லை.

    செல்லூர் குலமங்கலம் மெயின்ரோட்டில் உள்ள பூந்தமல்லி நகரில் உள்ள குடோனில் சட்ட விரோதமாக புகையிலை பொருட்கள் பதுக்கப்பட்டு நகரில் சப்ளை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து செல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் போலீசார் அப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது மீனாட்சி சுந்தரம் (39) என்பவருக்கு சொந்தமான குடோனில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 342 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.1½ லட்சம் ஆகும்.

    இதுதொடர்பாக ராஜாஅருள்மொழி, சசிக்குமார், ரங்கநாதன், மற்றொரு மீனாட்சிசுந்தரம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய குடோன் உரிமையாளர் கல்யாணசுந்தரம் மற்றும் குருசாமி ஆகியோரை தேடி வருகின்றனர்.

    உத்திரமேரூர் விவசாய பண்ணை குடோனில் குட்கா பதுக்கி வைத்து விற்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    காஞ்சீபுரம்:

    உத்திரமேரூர் அருகே உள்ள சாலவாக்கம் ஒன்றியத்தில் பேரணகாவூர் கிராமம் உள்ளது.

    இங்கு இருக்கும் ஒரு விவசாய பண்ணைக்கு, அடிக்கடி வேன்கள் மற்றும் வாகனங்கள் வந்து போயின. இங்கிருந்து அட்டை பெட்டிகளில் பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டன.

    இது குறித்து சாலவாக்கம் போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையில் போலீசார் அங்கு சென்று திடீர் சோதனை நடத்தினார்கள்.

    அப்போது அந்தவிவசாய பண்ணை குடோனில், ஏராளமான அட்டை பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அவற்றை திறந்து பார்த்த போது தடை செய்யப்பட்ட குட்கா பாக் கெட்டுகள் இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து அங்கிருந்த குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றின் மதிப்பு ரூ. 4 லட்சம்.விசாரணையில், விவசாய பண்ணை குடோனில், குட்காவை பதுக்கி வைத்து விற்றவர் சிங்கபெருமாள் கோவிலை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. அவரை தேடி போலீசார் அங்கு சென்றுள்ளனர்.

    தடை செய்யப்பட்ட குட்கா விற்பனையை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் உத்திரமேரூர் விவசாய பண்ணை குடோனில் குட்கா பதுக்கி வைத்து விற்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கோயம்பேடு தனியார் பார்சல் சர்வீஸ் அலுவலகத்தில் ரூ.11 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்களை லாரியுடன் பறிமுதல் செய்த போலீசார் 3 பேரை கைது செய்தனர். #gutkaseized
    போரூர்:

    கோயம்பேடு மற்றும் சுற்று வட்டார பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட பொருட்கள் மொத்தமாக பல்வேறு பகுதிகளுக்கு சப்ளை செய்யப்படுவதாக கோயம்பேடு போலீசா ருக்கு புகார் வந்தது.

    உதவி கமி‌ஷனர் ஜான் சுந்தர் மற்றும் இன்ஸ்பெக்டர் ராஜகுமார் ஆகியோர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் கோயம்பேடு தெற்கு மாட வீதியில் உள்ள தனியார் பார்சல் சர்வீஸ் அலுவலகத்தில் குட்கா பொருட்கள் பார்சல் மூலம் வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது .

    இதையடுத்து இன்று காலை பார்சல் சர்வீஸ் அலுவலகத்தில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு இரண்டு மினி லாரிகளில் பார்சல் மூட்டைகளை போல குட்கா பொருட்களை ஏற்றிக்கொண்டு இருந்தனர்.

    உடனடியாக அங்கிருந்த ஊழியர்களான தாம்பரம் கஸ்தூரிபாய் நகரைச் சேர்ந்த விஜயகுமார், விருத்தாசலம் பகுதியைச் சேர்ந்த அன்வர், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த விஜய் என்கிற முன்னாராம் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். 2 மினி லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டது. கைப்பற்றப்பட்ட குட்காவின் மதிப்பு சுமார் ரூ. 11 லட்சம் ஆகும்.

    எங்கிருந்து குட்கா பொருட்கள் பார்சல் மூலம் வருகிறது. அதை யார் அனுப்பி வைக்கின்றனர். எங்கு சப்ளை செய்யப்படுகிறது என்கிற கோணத்தில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். #gutkaseized

    ×