search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காஷ்மீர்"

    • உக்ரைன் போர் சூழலுடன் காஷ்மீர் விவகாரத்தை இணைத்து பேசினார்.
    • தொடர்ந்து பொய்களை கூறும் மனபாங்குடன் இதுபோன்ற பேச்சுக்கள் உள்ளன.

    ரஷியாவுக்கு எதிரான தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் பேசிய பாகிஸ்தான் தூதர், காஷ்மீர் விவகாரத்தை எழுப்பினார். உக்ரைன் போர் சூழலுடன் காஷ்மீர் விவகாரத்தை இணைத்து பேசினார்.

    இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. ஐ.நா.வுக்கான நிரந்தர இந்திய பிரதிநிதி ருசிரா கம்போஜ் கூறும்போது, "இந்தியாவுக்கு எதிராக அர்த்தமற்ற விஷயங்களை குறிப்பிட்டு ஐ.நா. அமைப்பை மீண்டும் ஒருமுறை தவறாக பயன்படுத்த வெளிநாட்டு குழு ஒன்று முயற்சித்து உள்ளது. தொடர்ந்து பொய்களை கூறும் மனபாங்குடன் இதுபோன்ற பேச்சுக்கள் உள்ளன. இது எந்த மதிப்புக்கும் உரியவை அல்ல.

    ஜம்மு-காஷ்மீர் எப்போதும் இந்தியாவுடன் ஒருங்கிணைந்த ஒரு பகுதியாகும். எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நிறுத்துமாறு பாகிஸ்தானை கேட்டு கொள்கிறோம். இதனால் எங்கள் குடிமக்கள் தங்களது வாழ்வுரிமை மற்றும் சுதந்திரத்தை அனுபவிக்க முடியும்" என்றார்.

    • கொல்லப்பட்ட பயங்கரவாதி பல பயங்கரவாத குற்றங்களில் ஈடுபட்ட நபர் என்பதும், சமீபத்தில் ஒரு என்கவுண்டரில் இருந்து தப்பினார்.
    • பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையில், ஏகே ரக துப்பாக்கிகள், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் மீட்கப்பட்டன.

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் பாஸ்குச்சான் பகுதியில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே இன்று காலை துப்பாக்கிச் சண்டை நடந்தது.

    இந்த என்கவுன்டரில் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான். அந்த பயங்கரவாதி நசீர் அகமது பட் என அடையாளம் தெரியவந்தது. பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்புடையவர் என தெரிய வந்தது. பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையில், ஏகே ரக துப்பாக்கிகள், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் மீட்கப்பட்டன.

    மேலும், கொல்லப்பட்ட பயங்கரவாதி பல பயங்கரவாத குற்றங்களில் ஈடுபட்ட நபர் என்பதும், சமீபத்தில் ஒரு என்கவுண்டரில் இருந்து தப்பினார் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

    முன்னதாக வெள்ளிக்கிழமை அன்று பாரமுல்லா பகுதியில் நடந்த என்கவுன்டரில், தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமது உடன் தொடர்புடைய இரண்டு உள்ளூர் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மாவட்ட விளையாட்டு அலுவலர் தொடங்கி வைத்தார்
    • சாதனை பயணம் சாதனை புத்தகத்தில் இடம் பெற உள்ளது

    கன்னியாகுமரி:

    ஆந்திர மாநிலம் கர்னூலை சேர்ந்தவர் சபீர் (வயது27). இவர் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீருக்கு 58 மணி நேரத்தில் 3ஆயிரத்து 600 கிலோமீட்டர் தூரத்தை காரில் கடந்து சாதனை நிகழ்த்தி உள்ளார்.

    இதனை முறியடிக்கும் வகையில் கன்னியா குமரியில் இருந்து காஷ்மீருக்கு அதே தூரத்தை 48 மணி நேரத்தில் கடக்க சபீர் திட்டமிட்டார். அதன்படி அவரது சாதனை பயணத்தின் தொடக்க விழா கன்னியாகுமரி 4 வழி சாலை முடிவடையும் சீரோ பாயிண்ட் பகுதியில் நடந்தது.

    அவரது சாதனை பய ணத்தை குமரி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலு வலர் டேவிட் டேனியல் கொடியசைத்து தொடங்கி வைத்தார். சபீர், தேசிய நெடுஞ்சாலை 44 வழியாக பல்வேறு மாநிலங்களை கடந்து 3600 கிலோ மீட்டர் தூரத்தை 48 மணி நேரத்தில் கடந்து காஷ்மீர் சென்றடைகிறார்.

    இதன் மூலம் இவரது சாதனை பயணம் சாதனை பயணம் சாதனை புத்தகத்தில் இடம் பெற உள்ளது புத்தகத்தில் இடம் பெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    • ஸ்ரீநகர் புகர் பகுதியில் லால்பஜார் என்ற இடத்தில் சோதனை சாவடி இருக்கிறது.
    • போலீசார் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

    ஸ்ரீநகர்:

    காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகர் புகர் பகுதியில் லால்பஜார் என்ற இடத்தில் சோதனை சாவடி இருக்கிறது.

    இதை குறி வைத்து நேற்று இரவு 7.15 மணியளவில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். அவர்கள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். போலீசாரும் சுதாரித்துக் கொண்டு பதில் தாக்குதலில் ஈடுபட்டனர்.

    பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் அங்கு பணியில் இருந்த உதவி சப்-இன்ஸ்பெக்டர் முஸ்தாக் அகமது குண்டு பாய்ந்து பலியானார்.

    பயங்கரவாதிகள் சுட்டதில் பயாஸ் அகமது, அபுபக்கர் ஆகிய இரண்டு போலீசாரும் காயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக காஷ்மீர் மண்டல போலீசார் தெரிவித்தனர்.

    போலீசார் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

    ராணுவத்தில் லேன்ஸ் நாயக் ஆக இருக்கும் முக்தார் அஹ்மது மாலிக், விபத்தில் இறந்த தனது மகனின் இறுதிச்சடங்குக்காக வீட்டுக்கு வந்த நிலையில், பயங்கரவாதிகள் அவரை சுட்டுக்கொன்றுள்ளனர். #Kashmir
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் உள்ள ஷுரத் கிராமத்தை சேர்ந்த முக்தார் அஹ்மது மாலிக் இந்திய ராணுவத்தில் லேன்ஸ் நாயக் ஆக பணியாற்றி வந்தார். முக்தாரின் மகன் சில நாட்களுக்கு முன் சாலை விபத்தில் உயிரிழந்ததால், விடுப்பு எடுத்துக்கொண்டு தனது கிராமத்திற்கு அவர் திரும்பியுள்ளார்.

    இந்நிலையில், நேற்றிரவு முக்தாரை அவரது வீட்டின் அருகே பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
    ஸ்ரீநகரில் உள்ள ஓட்டல் ஒன்றில் இளம்பெண்ணுடன் நுழைந்து தகராறு செய்த ராணுவ மேஜர் லீதுல் கோகோய் மீதான குற்றம் ராணுவ கோர்ட்டில் உறுதியாகியுள்ளதால், அவர் தண்டனையை எதிர்நோக்கியுள்ளார். #MajorGogoi #MajorGogoiGuilty #Army
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் தொகுதிக்கு கடந்தாண்டு நடந்த இடைத்தேர்தலின் போது, பொதுமக்கள் பாதுகாப்பு படையினர் மீது கல்வீச்சில் ஈடுபட்டனர். அப்போது, ராணுவ மேஜர் லீதுல் கோகோய் அங்குள்ள இளைஞர் ஒருவரை பிடித்து தனது ஜீப்பில் கட்டி ஊர்வலமாக சென்றார். இந்த சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கடந்த மே மாதம் ஸ்ரீநகரில் உள்ள ஒரு ஓட்டலுக்கு இளம்பெண்ணுடன் லீதுல் கோகோய் நுழைந்து தகராறு செய்தார். இதனை அடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவர் மீதான விசாரணை ராணுவ கோர்ட்டில் நடந்து வந்த நிலையில், கோகோய் மீதான குற்றச்சாட்டு உறுதியாகியுள்ளது.

    இதன் காரணமாக அவர் தண்டனையை எதிர்நோக்கியுள்ளார். ராணுவ கோர்ட் தனது விசாரணை அறிக்கையை ராணுவ தலைமையகத்திடம் கொடுத்துள்ளதாகவும், விரைவில் அவருக்கு தண்டனை அறிவிக்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
    ஜம்மு காஷ்மீர் மாநில காவல்துறையில் சப்-இன்பெக்டராக பணியாற்றும் முகம்மது அஷார்ப் தார், ஈத் பண்டிகைக்காக வீட்டுக்கு வந்த நிலையில் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். #Kashmir #Pulwama
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் காவல்துறையில் சப்-இன்பெக்டராக பணியாற்றும் முகம்மது அஷார்ப் தார், ஈத் பண்டிகைக்காக புல்வாமாவில் உள்ள தனது வீட்டுக்கு வந்துள்ளார். இந்நிலையில், அவரது வீட்டுக்குள் புகுந்துள்ள பயங்கரவாதிகள் அவரை சுட்டுக்கொன்றுள்ளனர்.

    குல்காம் பகுதியில் பயிற்சி காவலர் சுட்டுக்கொல்லப்பட்டு சில மணி நேரங்களில் இந்த சம்பவம் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஸ்ரீநகர் அருகே இன்று பயங்கரவாதிகள் உடனான துப்பாக்கி சண்டையில் சிறப்புப்படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #Kashmir #Batamaloo
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநில தலைநகர் ஸ்ரீநகர் அருகே உள்ள பாடாமாலோ என்ற பகுதியில் பயங்கரவாதிகளை வேட்டையாட சிறப்பு ஆபரேஷனை பாதுகாப்பு படையினர் இன்று தொடங்கியுள்ளனர். சில மணி நேரம் நீடித்த இந்த துப்பாக்கி சண்டையில் சிறப்புப்படை வீரர் ஒருவர் உயிரிழந்ததாக அம்மாநில போலீஸ் டிஜிபி தெரிவித்துள்ளார்.

    மேலும், மூன்று வீரர்கள் காயமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து சண்டை நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் பாராமுல்லா மாவட்டத்தில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
    ஜம்மு காஷ்மீரின் குல்காம் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. #Kulgam
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் காவல் துறையில் காவலராக பணியாற்றும் முகம்மது சலீம் என்பவர், விடுமுறைக்காக குல்காமில் உள்ள தனது வீட்டுக்குச் சென்றுள்ளார். நேற்று, அவரை பயங்கரவாதிகள் கடத்திச் சென்றனர். பின்னர், அப்பகுதியில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது.

    இந்நிலையில், குல்காம் பகுதியில் காஷ்மீர் போலீசார், ராணுவம் மற்றும் சிஆர்பிஎப் ஆகிய படைகளின் வீரர்கள் சிறப்பு தேடுதல் வேட்டையை நடத்தினர். இந்த தேடுதலில் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தை வீரர்கள் சுற்றி வளைத்தனர். சில மணி நேர சண்டைக்கு பிறகு 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இன்னும் அங்கு தேடுதல் வேட்டை நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ஜம்மு காஷ்மீரில் காவலராக பணியாற்றும் முகம்மது சலீம், விடுமுறைக்கு தனது வீட்டுக்குச் சென்ற நிலையில், அவர் பயங்கரவாதிகளால் கடத்திக் கொல்லப்பட்டுள்ளார். #Kashmir
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் காவல் துறையில் காவலராக பணியாற்றும் முகம்மது சலீம் என்பவர், விடுமுறைக்காக குல்காமில் உள்ள தனது வீட்டுக்குச் சென்றுள்ளார். நேற்று, அவரை பயங்கரவாதிகள் கடத்திச் சென்றனர். பின்னர், அப்பகுதியில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது.

    பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட முகம்மது சலீமின் உடல் போலீஸ் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. சமீபத்தில், இது போல எல்லை பாதுகாப்பு படை வீரர் பயங்கரவாதிகளால் கடத்தி கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
    ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்க தளபதி புர்கான் வானி சுட்டுக்கொல்லப்பட்டதன் நினைவு தினத்தை ஒட்டி காஷ்மீரில் போக்குவரத்து, தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. #Kahmir
    ஸ்ரீநகர்:

    காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் கடந்த 2016ம் ஆண்டு ஜூலையில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் தளபதியான புர்ஹான் வானி சுட்டு கொல்லப்பட்டார். 

    அவரது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுவதை ஒட்டி காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் இன்று பொது வேலை நிறுத்தத்திற்கு பிரிவினைவாத அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன. இதனால் பயணிகள் பாதுகாப்பினை முன்னிட்டு ரெயில் சேவை இன்று ரத்து செய்யப்பட்டு உள்ளது.

    இதனால் ஸ்ரீநகர்-பத்காம் மற்றும் வடகாஷ்மீரின் பாராமுல்லா ஆகிய பகுதிகளுக்கு ரெயில்கள் இயக்கப்படாது.  இதேபோன்று தெற்கு காஷ்மீரின் ஜம்மு பகுதியில் பத்காம்-ஸ்ரீநகர்-அனந்த்நாக்-குவாஜிகண்ட் பகுதியில் இருந்து பனிஹால் செல்லும் ரெயில் சேவையும் தற்காலிக ரத்து செய்யப்பட்டு உள்ளது.

    காஷ்மீரில் இந்த ஜூலையில் ரெயில் சேவை ரத்து செய்யப்படுவது இது 2வது முறை ஆகும். கடந்த காலங்களில் கல் வீச்சுகள் மற்றும் பிற போராட்டங்களால் ரெயில்கள் பலத்த சேதமடைந்தன. 

    தேச விரோத செயல்களுக்காக துக்தர்-இ-மிலாத் அமைப்பின் தலைவியான ஆசியா அந்த்ரபி மற்றும் அவரது 2 உதவியாளர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.  இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரிவினைவாதிகள் நேற்று ஒரு நாள் பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன.  இந்நிலையில், இன்று 2வது நாளாக பொது வேலை நிறுத்தம் தொடருகிறது.
    காஷ்மீரில் கலவரத்தை அடக்கும் பணிகளில் ஈடுபட மத்திய துணை ராணுவப்படையில் இருந்து 500 பெண் காவலர்களை நியமிக்க உள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
    ஸ்ரீநகர் :

    காஷ்மீர் மாநிலத்தில் கல்வீச்சு மற்றும் கலவரம் போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.  காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் சமீப காலமாக நடைபெற்று வரும் கல்வீச்சு சம்பவங்களால், பாதுகாப்பு படையினர் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

    இவ்வாறான சம்பவங்களில் அம்மாநில பெண்களும் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை எதிர்கொள்ள முடியாமல் பாதுகாப்புப்படையினர் திணறி வருகின்றனர்.

    எனவே, கல்வீச்சு சம்பவங்களில் ஈடுபடும் பெண்களை கட்டுப்படுத்த துணை ராணுவப்படையில்  கான்ஸ்டபில் அந்தஸ்தில் உள்ள 500 பெண் போலீசாரை பணியில் அமர்த்த ராணுவம் திட்டமிட்டுள்ளது.

    இவர்களுக்கு இரவு நேரப் பாதுகாப்பு, கவசமின்றி கலவரங்களை எதிர்கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
    ×