search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "abducted"

    • உசிலம்பட்டியில் வியாபாரியின் மகள் பட்டப்பகலில் கடத்தப்பட்டார்.
    • போலீஸ் அதிரடியால் 3 மணி நேரத்தில் மீட்கப்பட்டாள் சிறுமியை கடத்தி சென்ற 2 பேரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    உசிலம்பட்டி

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள ஏ.ராமநாதபுரத்தை சேர்ந்தவர் பார்த்தசாரதி. இவரது மனைவி வித்யா. இவர்களுக்கு 4 வயதில் ஜனனி என்ற பெண் குழந்தை உள்ளது.

    பார்த்தசாரதி மதுரை-உசிலம்பட்டி ரோட்டில் உள்ள பூதிப்புரம் விலக்கில் பிராய்லர் கடை நடத்தி வருகிறார். மேலும் உசிலம்பட்டி நகர் பகுதியில் பேக்கிரி கடையும் வைத்துள்ளார். இன்று காலை பார்த்தசாரதி மனைவி மற்றும் குழந்தையுடன் பிராய்லர் கடையில் வியாபாரம் பார்த்து கொண்டிருந்தார்.

    அப்போது அருகில் உள்ள வீட்டின் முன்பு சிறுமி ஜனனி விளையாடி கொண்டிருந்தாள். காலை 11 மணியளவில் ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிளில் ஒரு ஆணும்-பெண்ணும் பிராய்லர் கடைக்கு வந்தனர். அவர்கள் விளையாடி கொண்டிருந்த ஜனனியிடம் பேச்சு கொடுத்தனர். அப்போது மர்ம நபர்கள் எங்களுடன் வந்து விடுகிறாயா? என குழந்தையிடம் கேட்டுள்ளனர். ஏதும் அறியாத அந்த குழந்தையும் அவர்களுடன் செல்வதாக தெரிவித்தாள்.

    மேலும் மர்ம நபர்கள் வித்யாவிடம் குழந்தையை அழைத்து செல்வதாக தெரிவித்துள்ளனர். அதை வித்யா விளையாட்டாக எடுத்துக் கொண்டார். ஆனால் மர்ம நபர்கள் குழந்தையை மோட்டார் சைக்கிளில் ஏற்றி கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து மாயமானார்கள்.

    1 மணி நேரத்திற்குள் மேலாகியும் அவர்கள் திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பார்த்தசாரதி-வித்யா மற்றும் குடும்பத்தினர் ஜனனியை தேடி பார்த்தனர். ஆனால் பலனில்லை. இதையடுத்து குழந்தை கடத்தல் தொடர்பாக உசிலம்பட்டி நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர் விஜய் பாஸ்கரன், சப்-இன்ஸ்பெக்டர் அருண்குமார் மற்றும் போலீசார் விரைந்து செயல்பட்டு விசாரணையை தீவிரப்படுத்தினர். கடத்தல் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

    தொடர்ந்து உசிலம்பட்டியை சுற்றியுள்ள சோதனை சாவடிகளிலும் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டது. 3 மணி நேர போராட்டத்திற்கு பின் போலீசார் சிறுமி ஜனனியை மீட்டனர். சிறுமியை கடத்தி சென்ற 2 பேரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    பொலிவியாவில் ஆட்கடத்தல் கும்பலால் கடத்தப்பட்ட பெண் 32 ஆண்டுகளுக்குப் பின் மீட்கப்பட்டு, அவரது குடும்பத்தினருடன் சேர்த்து வைக்கப்பட்டார். #ArgentineWoman #PeopleTraffickers
    லா பாஸ்:

    பொலிவியாவில் 1980களில் அர்ஜென்டினாவைச் சேர்ந்த ஒரு சிறுமி ஆட்கடத்தல் கும்பலால் கடத்தப்பட்டார். இதுபற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். ஆனால் அவரைப் பற்றிய எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்நிலையில் கடத்தப்பட்ட பெண் தெற்கு பொலிவியான் பெர்மிஜோ பகுதியில் இருப்பதாக  இந்த ஆண்டின் துவக்கத்தில் காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து பொலிவியா மற்றும் அர்ஜென்டினா போலீசார் இணைந்து, அந்த பெண் குறித்த விவரங்கள் மற்றும் அங்க அடையாளங்களை வைத்து தெற்கு பொலிவியாவில் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட முயற்சிக்குப் பிறகு அந்த பெண்ணை போலீசார் கண்டுபிடித்தனர். ஆட்கடத்தல் கும்பலில் சிக்கியிருந்த அந்த பெண்ணையும், அவரது மகனையும் இந்த மாத துவக்கத்தில் மீட்டு குடும்பத்தினருடன் சேர்த்து வைத்துள்ளனர். தற்போது அந்த பெண்ணுக்கு 45 வயது ஆகிறது.

    கடத்தப்பட்ட பெண் 32 ஆண்டுகளுக்குப் பிறகு மீட்கப்பட்டு, மார் டெல் பிளாட்டா பகுதியில் உள்ள அவரது குடும்பத்தினருடன் சேர்த்து வைத்திருப்பதாக அர்ஜென்டினா காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆனால், அந்தப் பெண்ணை கடத்திச் சென்ற நபர் குறித்த எந்த தகவலையும் வெளியிடவில்லை. #ArgentineWoman #PeopleTraffickers

    பேரணாம்பட்டு அருகே போலீசார் சோதனை சாவடியில் வாகன சோதனை நடத்தினர். அப்போது ஆந்திராவுக்கு ரேசன் அரிசி கடத்திய கல்லூரி மாணவன், தாயை கைது செய்யப்பட்டனர்.

    பேரணாம்பட்டு:

    பேரணாம்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் அப்பாசாமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன், பாலு வெங்கட்ராமன் ஆகியோர் பேரணாம்பட்டு அடுத்த பத்தலப்பல்லி சோதனை சாவடியில் இன்று அதிகாலை 3 மணிக்கு வாகன சோதனை நடத்தினர்.

    அப்போது வேகமாக வந்த காரை நிறுத்துமாறு போலீசார் சைகை செய்தனர். ஆனால் கார் நிற்காமல் பத்தலப்பல்லி மலை பாதையில் வேகமாக சென்றது. போலீசாரும் அந்த வாகனத்தை துரத்தி சென்றனர். 3-வது கொண்டை ஊசி வளைவில் காரை மடக்கிபிடித்து சோதனை செய்தனர்.

    அப்போது 50 கிலோ எடை கொண்ட 30 மூட்டைகளில் 1½ டன் ரேசன் அரிசி இருந்தது. இதையடுத்து ரேசன் அரிசி மற்றும் காரை பறிமுதல் செய்த போலீசார் காரில் இருந்தவர்களிடம் விசாரணை செய்தனர்.

    பள்ளிகொண்டாவில் இருந்து ஆந்திரா மாநிலம் வி.கோட்டாவிற்கு ரேசன் அரிசி கடத்தி சென்றுள்ளனர். காரை ஓட்டி வந்த வாலிபர் தனியார் கல்லூரி மாணவர் என்பதும் அவருடன் இருந்தவர் அவருடைய தாய் ஜோதி எனவும் தெரியவந்தது.

    2 பேர் மீதும் பேரணாம்பட்டு போலீசார் அரிசி கடத்தல் பிரிவில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசியை வேலூரில் உள்ள உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசில் ஒப்படைத்தனர்.

    வத்தலக்குண்டு அருகே மாயமான சப்-இன்ஸ்பெக்டர் மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்டாரா? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

    வத்தலக்குண்டு:

    வத்தலக்குண்டு அருகே பட்டிவீரன்பட்டியைச் சேர்ந்தவர் பாண்டி (வயது 44). இவர் கொடைக்கானல் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 26-ந் தேதி திண்டுக்கல் கோர்ட்டுக்கு சென்ற பாண்டி அதன் பின்பு பணிக்கு திரும்பவில்லை.

    வீட்டுக்கும் செல்லாததால் அதிர்ச்சியடைந்த அவரது மனைவி மீனாட்சி பட்டிவீரன் பட்டி போலீசில் புகார் அளித்தார். திண்டுக்கல்லில் நிறுத்தப்பட்டு இருந்த பாண்டியின் மோட்டார் சைக்கிளை சோதனையிட்ட போது செல்போன் மற்றும் கடிதம் சிக்கியது. அதில் நான் மன உளைச்சலில் இருப்பதால் வெளியே செல்கிறேன். யாரும் தேட வேண்டாம் என குறிப்பிட்டு இருந்தார்.

    இது குறித்து பட்டிவீரன்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது இன்ஸ்பெக்டர் கலைவாணி தலைமையில் தனிப்படை அமைத்து தாண்டிக்குடி, பண்ணைக்காடு உள்ளிட்ட மலை கிராமங்களில் பாண்டியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    சப்-இன்ஸ்பெக்டர் பாண்டி மாவோயிஸ்டு தேடுதல் தொடர்பான வழக்குகளில் அதிகமாக ஈடுபட்டு வந்தார். எனவே அவர்கள் பாண்டியை கடத்தி இருப்பார்களா? என போலீசார் சந்தேகிக்கின்றனர். அவருடைய உறவினர்கள் தர்மபுரியில் இருப்பதால் அங்கு சென்றாரா? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாயமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஜம்மு காஷ்மீரில் காவலராக பணியாற்றும் முகம்மது சலீம், விடுமுறைக்கு தனது வீட்டுக்குச் சென்ற நிலையில், அவர் பயங்கரவாதிகளால் கடத்திக் கொல்லப்பட்டுள்ளார். #Kashmir
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் காவல் துறையில் காவலராக பணியாற்றும் முகம்மது சலீம் என்பவர், விடுமுறைக்காக குல்காமில் உள்ள தனது வீட்டுக்குச் சென்றுள்ளார். நேற்று, அவரை பயங்கரவாதிகள் கடத்திச் சென்றனர். பின்னர், அப்பகுதியில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது.

    பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட முகம்மது சலீமின் உடல் போலீஸ் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. சமீபத்தில், இது போல எல்லை பாதுகாப்பு படை வீரர் பயங்கரவாதிகளால் கடத்தி கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
    பாகிஸ்தானில் ராணுவத்திற்கு எதிராக குரல் கொடுத்து வந்த காரணத்திற்காக கடத்தப்பட்ட பெண் பத்திரிகையாளர் குல் புஹாரி இன்று பத்திரமாக வீடு திரும்பினார். #GulBukhari #BringBackGulBukhari
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானை சேர்ந்த பத்திரிகையாளர் மற்றும் சமூக ஆர்வலர் குல் புஹாரி. இவர் பாகிஸ்தான் ராணுவத்திற்கு எதிரான கருத்துகளை சமூக ஊடகங்களில் வெளியிட்டு வந்தார். வருகின்ற ஜூலை மாதம் 25-ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இவரது கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தி வந்தன.

    இந்நிலையில், நேற்று இரவு புஹாரி லாகூர் நகரில் டிவி புரோகிராம் செய்வதற்காக சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த மர்ம கும்பல் புஹாரியை கடத்தி சென்றது. அவர்கள் முகத்தில் முகமுடி அணிந்திருந்ததால் யார் என்பது குறித்து தெரியவில்லை என புஹாரியின் கணவர் கூறினார்.

    புஹாரி கடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், கடத்தப்பட்ட சில மணி நேரங்களில் புஹாரி பத்திரமாக வீடு திரும்பினார். அவர் நலமாக இருப்பதாக அவர் கணவர் தெரிவித்தார்.

    கடத்தியவர்களில் ஒருவர் ராணுவ உடை அணிந்திருந்தாக புஹாரி தெரிவித்தார். ஆனால் இதுகுறித்து ராணுவத்தினர் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. கடந்த 6 மாதங்களாக புஹாரி பல பிரச்சனைகள் குறித்த செய்திகளை வெளியிட்டு வருகிறார். #GulBukhari #BringBackGulBukhari
    ராமாயணத்தில் சீதையை ராமர் கடத்தியதாகவும், லட்சுமணன் ராமருக்கு உபதேசம் செய்ததாகவும் குஜராத் பாடப்புத்தகத்தில் வெளியான விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. #Ramayana #Gujarat #SchoolBook
    ஆமதாபாத்:

    குஜராத் மாநிலத்தில், ஆங்கில வழியில் பிளஸ்-2 படிக்கும் மாணவர்கள் சமஸ்கிருதத்தை விருப்பப்பாடமாக தேர்வு செய்து படித்து வருகிறார்கள்.

    பிளஸ்-2 சமஸ்கிருத பாட புத்தகத்தில் ‘சமஸ்கிருதமும், இலக்கியமும்’ என்கிற பாடம் வருகிறது. இதில் ராமாயணம் பற்றிய தொடக்க உரை இடம் பெற்றிருக்கிறது.

    அதில் சீதையை ராமர் கடத்தியதாகவும், லட்சுமணன் ராமருக்கு உபதேசம் செய்ததாகவும் கூறப்பட்டு இருந்தது. இதனை படித்த மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இதுபற்றி மாநில அரசின் பாடநூல் நிறுவன செயல் தலைவர் நிதின் பெதானி விளக்கம் அளிக்கையில் “மொழி பெயர்ப்பின் போது கவனக்குறைவின் காரணமாக ஏற்பட்ட பிழை இது. ‘கைவிடப்பட்ட’ என்ற வார்த்தை ஆங்கிலத்தில் ‘கடத்தப்பட்ட’ என தவறாக மொழிபெயர்க்கப்பட்டு விட்டது. இந்த பாடத்தை பயிற்றுவிக்கும் போது, குறிப்பிட்ட அந்த வார்த்தையை திருத்தி பயிற்றுவிக்கும்படி ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டு இருக்கிறது” என்றார்.

    இருப்பினும் ஒரு வார்த்தையை மாற்றியதால் ராமாயணத்தின் அடிப்படையே தவறாகி விட்டதாக ஆன்மிகவாதிகள் வருத்தத்துடன் தெரிவித்தனர்.  #Ramayana #Gujarat #SchoolBook 
    ×