என் மலர்
நீங்கள் தேடியது "பொலிவியா"
- ஓடுபாதையில் இருந்து விலகிச்சென்ற அந்த விமானம், தீப்பிடித்து எரிந்தபடி அருகில் இருந்த நெடுஞ்சாலையில் விழுந்து நொறுங்கியது.
- பலியானவர்களில் விமான ஊழியர்களும், சாலையில் சென்ற வாகன ஓட்டிகளும் அடங்குவர்.
பொலிவியா தலைநகர் லா பாஸ் அருகே எல் ஆல்டோ பகுதியில் நிகழ்ந்த சரக்கு விமான விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர்.
தென் அமெரிக்காவில் உள்ள பொலிவியா நாட்டின் லா பாஸ் அருகே எல் ஆல்டோ சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் அந்நாட்டு விமான படைக்கு சொந்தமான ஹெர்குலஸ் ரக சரக்கு விமானம் விபத்துக்குள்ளானது.
ஓடுபாதையில் இருந்து விலகிச்சென்ற அந்த விமானம், தீப்பிடித்து எரிந்தபடி அருகில் இருந்த நெடுஞ்சாலையில் விழுந்து நொறுங்கியது. இதில் நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த வாகனங்கள் சேதம் அடைந்தன. இந்த விபத்தில் சிக்கி 15 பேர் உயிரிழந்தனர். மேலும் 30 பேர் காயம் அடைந்தனர்.
பலியானவர்களில் விமான ஊழியர்களும், சாலையில் சென்ற வாகன ஓட்டிகளும் அடங்குவர். காயம் அடைந்தவர்களை மீட்கும் பணியில் மீட்பு குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
விபத்துக்குள்ளான விமானத்தில் பொலிவிய மத்திய வங்கியின் புதிய கரன்சி நோட்டுகள் பிற நகரங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. விமானம் மோதிய வேகத்தில் அந்த பெட்டிகள் உடைந்து, சாலை மற்றும் அருகில் இருந்த வயல்வெளிகள் முழுவதும் ரூபாய் நோட்டுகள் சிதறின.
இந்த விபத்து மோசமான வானிலை காரணமாக நிகழ்ந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த விபத்து காரணமாக எல் ஆல்டோ சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
பொலிவியாவில் 1980களில் அர்ஜென்டினாவைச் சேர்ந்த ஒரு சிறுமி ஆட்கடத்தல் கும்பலால் கடத்தப்பட்டார். இதுபற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். ஆனால் அவரைப் பற்றிய எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்நிலையில் கடத்தப்பட்ட பெண் தெற்கு பொலிவியான் பெர்மிஜோ பகுதியில் இருப்பதாக இந்த ஆண்டின் துவக்கத்தில் காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து பொலிவியா மற்றும் அர்ஜென்டினா போலீசார் இணைந்து, அந்த பெண் குறித்த விவரங்கள் மற்றும் அங்க அடையாளங்களை வைத்து தெற்கு பொலிவியாவில் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட முயற்சிக்குப் பிறகு அந்த பெண்ணை போலீசார் கண்டுபிடித்தனர். ஆட்கடத்தல் கும்பலில் சிக்கியிருந்த அந்த பெண்ணையும், அவரது மகனையும் இந்த மாத துவக்கத்தில் மீட்டு குடும்பத்தினருடன் சேர்த்து வைத்துள்ளனர். தற்போது அந்த பெண்ணுக்கு 45 வயது ஆகிறது.
கடத்தப்பட்ட பெண் 32 ஆண்டுகளுக்குப் பிறகு மீட்கப்பட்டு, மார் டெல் பிளாட்டா பகுதியில் உள்ள அவரது குடும்பத்தினருடன் சேர்த்து வைத்திருப்பதாக அர்ஜென்டினா காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆனால், அந்தப் பெண்ணை கடத்திச் சென்ற நபர் குறித்த எந்த தகவலையும் வெளியிடவில்லை. #ArgentineWoman #PeopleTraffickers
தென் அமெரிக்க நாடான பொலிவியாவின் போட்டோசி அருகே நெடுஞ்சாலையில் நேற்று 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பேருந்து சென்றுகொண்டிருந்தது. அப்போது பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி, பெரிய பாறையில் மோதியது. இதில் பஸ்சின் முன்புறம் நொறுங்கியது.
விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதிவேகத்தில் பேருந்தை ஓட்டிச் சென்றதால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. #BoliviaBusCrash






