என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சரக்கு விமானம்"

    • விமானம் ஹவாய் நோக்கி புறப்பட்ட 5 நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கியது.
    • சரக்கு விமானம் விழுந்து நொறுங்கியதில் அதில் பயணித்த மூவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    அமெரிக்காவின் கெண்டக்கி மாகாணத்தில் லூயிஸ்வில் விமான நிலையம் அருகே சரக்கு விமானம் விழுந்து நொறுங்கியதில் அதில் பயணித்த மூவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    UPS ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் சரக்கு விமானம், லூயிஸ்வில் விமான நிலையத்தில் இருந்து ஹவாய் நோக்கி புறப்பட்ட 5 நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கியதாக தகவல் வெளியானது.

    விமானம் கீழே விழுந்து தீப்பிடித்த வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • ஓரே நேரத்தில் 47 டன் எடை சரக்குகளை ஏற்றி செல்லும் திறன் உடையது.
    • உலகிலேயே மிகப்பெரிய சரக்கு விமானம் சென்னை விமான நிலையத்திற்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    சென்னை:

    உலகத்திலேயே மிகப் பெரிய சரக்கு விமானமான திமிங்கலம் வடிவிலான, "ஏா்பஸ் பெலுகா"என்ற சரக்கு விமானம், சென்னை விமானநிலையத்திற்கு, நேற்று இரவு 9.30 மணிக்கு வந்தது.

    இந்த விமானம் குஜராத் தில் இருந்து, தாய்லாந்து செல்லும் வழியில், எரிபொருள் நிரப்புவதற்காக சென்னையில் தரையிறங்கி, எரி பொருள் நிரப்பியது.

    இந்த சரக்கு விமானம் ஓரே நேரத்தில் 47 டன் எடை சரக்குகளை ஏற்றி செல்லும் திறன் உடையது. உலகிலேயே மிகப்பெரிய "ஏர் பஸ் பெலுகா" சரக்கு விமானம் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை 11-ந்தேதி, இதைப்போல் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து, சென்னை விமான நிலையம் வந்து, எரிபொருள் நிரப்பியது. பின்னர் சென்னையில் இருந்து தாய்லாந்து நாட்டிற்கு புறப்பட்டுச் சென்றது.

    தற்போது 2-வது முறையாக மீண்டும் அதே ஜூலை மாதம், உலகிலேயே மிகப்பெரிய சரக்கு விமானம் சென்னை விமான நிலையத்திற்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • முன் தரையிறங்கும் கியர் செயலிழந்ததால் இஸ்தான்புல் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
    • இது சம்பந்தமான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானது.

    சரக்கு விமானம் ஒன்று அதன் முன் தரையிறங்கும் கியர் செயலிழந்ததால் இஸ்தான்புல் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

    பெட்எக்ஸ் (FedEx) எக்ஸ்பிரஸ் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 767 விமானம் பின் தரையிறங்கும் கியரை மட்டுமே பயன்படுத்தி தரையிறங்கியதால் விமானத்தின் முன்பகுதி தரையுடன் மோதி தீப்பொறி பறந்தது.

    இது சம்பந்தமான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானது.

    இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை, விமான ஊழியர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர் என்று துருக்கியின் போக்குவரத்து அமைச்சர் அப்துல்காதிர் தெரிவித்தார்.

    விபத்துக்குள்ளான விமானத்தை அகற்றும் பணியின் போது விமானம் தரையிறங்கிய ஓடுபாதை தற்காலிகமாக மூடப்பட்டது.

    • துபாய் உள்ளிட்ட ஐக்கிய அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டிய சரக்குகளையும் துரிதமாக ஏற்றி இறக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.
    • சர்வதேச சரக்கு விமான போக்கு வரத்தில், சென்னைக்கு மேலும் பெருமை சேர்க்கக்கூடியது என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஆலந்தூர்:

    அமெரிக்காவை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் நேஷ்னல் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் சரக்கு விமானங்களை இயக்கி வருகிறது. இந்த நிறுவனத்தைச் சேர்ந்த, பெரிய ரக சரக்கு விமானங்களில் ஒன்றான 747-400 ரக சரக்கு விமானம், ஜோர்டான் நாட்டின் அம்மான் விமான நிலையத்தில் இருந்து, சுமார் 124 டன் சரக்குகளுடன் புறப்பட்டு, சென்னை சர்வதேச விமான நிலைய சரக்ககம் பகுதிக்கு வந்து தரை இறங்கியது.

    வானத்தின் இளவரசி என்று அழைக்கப்படும் இந்த மிகப்பெரிய சரக்கு விமானம் சென்னையில் தரை இறங்கியது சென்னை விமான நிலைய சரக்கக பகுதியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது. உடனடியாக சரக்கக பகுதி ஊழியர்கள் விரைந்து செயல்பட்டு, விமானத்தில் வந்த சரக்குகளை இறக்கினர்.

    மேலும் சென்னையில் இருந்து துபாய் உள்ளிட்ட ஐக்கிய அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டிய சரக்குகளையும் துரிதமாக ஏற்றி இறக்கும் பணிகளில் ஈடுபட்டனர். பின்னர் அந்த சரக்கு விமானம் சென்னையில் இருந்து துபாய் வழியாக ஐக்கிய அரபு நாடுகளுக்கு புறப்பட்டு சென்றது.

    இந்த சரக்கு விமானம் சுமார் 125 டன் சரக்குகளை ஒரே நேரத்தில் கையாளக்கூடியது.

    அதுமட்டுமின்றி இது பயணிகள் விமானமாகவும் இயக்கக்கூடியது. பயணிகள் விமானமாக இயங்கும் போது, ஒரே நேரத்தில் 660 பயணிகள் செல்ல கூடிய விமானமாக இது இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

    சென்னை விமான நிலையம் சரக்குகளை திறம்பட கையாளுவதில் தற்போது உலக அளவில் சிறந்த சரக்கக விமான நிலையமாக செயல்படுவதால் இதைப்போல் வெளிநாடுகளில் இருந்து, மிகப்பெரிய ரக சரக்கு விமானங்கள், சென்னைக்கு வந்து செல்கின்றன. இது சர்வதேச சரக்கு விமான போக்கு வரத்தில், சென்னைக்கு மேலும் பெருமை சேர்க்கக்கூடியது என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×