என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "planecrash"

    • விமானம் ஹவாய் நோக்கி புறப்பட்ட 5 நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கியது.
    • சரக்கு விமானம் விழுந்து நொறுங்கியதில் அதில் பயணித்த மூவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    அமெரிக்காவின் கெண்டக்கி மாகாணத்தில் லூயிஸ்வில் விமான நிலையம் அருகே சரக்கு விமானம் விழுந்து நொறுங்கியதில் அதில் பயணித்த மூவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    UPS ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் சரக்கு விமானம், லூயிஸ்வில் விமான நிலையத்தில் இருந்து ஹவாய் நோக்கி புறப்பட்ட 5 நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கியதாக தகவல் வெளியானது.

    விமானம் கீழே விழுந்து தீப்பிடித்த வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • அகமதாபாத்தில் கடந்த 12-ம் தேதி நடந்த விமான விபத்தில் 279 பேர் உயிரிழந்தனர்.
    • இந்த விமான விபத்து இந்தியா மட்டுமின்றி உலக அளவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    அகமதாபாத்:

    குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கடந்த 12-ம் தேதி நடந்த விமான விபத்தில் 279 பேர் உயிரிழந்த சம்பவம் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    விமானத்தில் பயணம் செய்த 241 பேர் மற்றும் அகமதாபாத்தில் விமானம் விழுந்த பயிற்சி டாக்டர்கள் விடுதியில் தங்கியிருந்த மாணவர்களும் உயிரிழந்தனர்.

    இந்நிலையில், விமானம் விழுந்த நேரத்தில் விடுதியில் தங்கியிருந்த மாணவர்களில் சிலர் அங்கிருந்து தப்பிச் செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.

    சில மாணவர்கள் இரண்டாவது மாடியில் இருந்து பெட்ஷீட் மூலம் கீழே குதித்து தப்பிச் செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளது. தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

    • ஏர் இந்தியா விமானத்தின் ஒரு எஞ்சினில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது
    • தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் மும்பைக்கு புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது.

    சான் பிரான்சிஸ்கோவில் இருந்து கொல்கத்தா வழியாக மும்பை வந்துகொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தின் ஒரு எஞ்சினில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது

    கொல்கத்தா விமான நிலையத்தில் நள்ளிரவு 12.45 மணிக்கு தரையிறங்கிய விமானம் எஞ்சினில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மும்பைக்கு புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது.

    பின்னர் எஞ்சினின் தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்படத்தால் அதிகாலை 5 மணியளவில் பயணிகள் கொல்கத்தாவில் இறக்கிவிடப்பட்டனர்.

    முன்னதாக அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • விபத்து தொடர்பாக சர்வதேச தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
    • சீன பிரதமர் லி கியாங்கும் பிரதமர் மோடிக்கு இரங்கல் செய்தி அனுப்பி உள்ளார்.

    பீஜிங்:

    அகமதாபாத்தில் இருந்து நேற்று முன்தினம் லண்டன் கிளம்பிய விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தில் இருந்தவர்கள் உள்பட சுமார் 265 பேர் கொல்லப்பட்டனர்.

    இந்தியா மட்டுமின்றி உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள இந்த விபத்து தொடர்பாக சர்வதேச தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடிக்கு தனது அனுதாபத்தை தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக ஜி ஜின்பிங் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு சீன அரசு மற்றும் மக்கள் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவாக குணமடையவும் வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார்.

    மேலும், சீன பிரதமர் லீ கியாங்கும் பிரதமர் மோடிக்கு இரங்கல் செய்தி அனுப்பியுள்ளார்.

    • கோர விபத்து ஏற்பட்டதற்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை.
    • கருப்பு பெட்டியை கைப்பற்றும் முயற்சியில் மீட்புக்குழுவினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

    குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் காட்விக் விமான நிலையத்திற்கு நேற்று மதியம் ஏர் இந்தியாவின் ஏஐ 171 போயிங் விமானம் புறப்பட்டது. புறப்பட்ட சில நிமிடங்களில் மேகானி நகர் குடியிருப்பு பகுதி அருகே விழுந்து நொறுங்கி விபத்தில் சிக்கியது. விமானத்தில் 2 விமானிகள், 10 ஊழியர்கள் உள்பட 242 பேர் பயணம் செய்தனர்.

    விபத்தில் விமானத்தின் பெரும்பகுதி தீயில் முற்றிலும் எரிந்துவிட்டதால் 241 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கோர விபத்து ஏற்பட்டதற்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. விமானத்தில் இருக்கும் கருப்பு பெட்டியில் பதிவாகி இருக்கும் தகவல்களை ஆராய்ந்து பார்த்தால்தான், கடைசி நேரத்தில் என்ன நடந்தது என்பதும், விபத்துக்கான காரணமும் தெரியவரும். எனவே அந்த கருப்பு பெட்டியை கைப்பற்றும் முயற்சியில் மீட்புக்குழுவினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

    இந்த நிலையில், விமானத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவும், அவர்களுக்கு ஆதரவளிக்கவும், அகமதாபாத், மும்பை, டெல்லி மற்றும் கேட்விக் விமான நிலையங்களில் உதவி மையங்களை ஏர் இந்தியா அமைத்துள்ளது. இந்த மையங்கள் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் அகமதாபாத்திற்கு பயணிக்கு உதவும்.

    இந்தியாவிற்குள் இருந்து அழைப்பவர்களுக்கான பிரத்யேக பயணிகள் ஹாட்லைன் எண்: 1800 5691 444; மற்றும் வெளிநாடுகளில் இருந்து அழைப்பவர்களுக்கான பிரத்யேக பயணிகள் ஹாட்லைன் எண்: +91 8062779200.

    மேலும் (https://x.com/airindia) மற்றும் http://airindia.com ஆகியவற்றில் உடனடியாக தகவல்களை பெறலாம் என தெரிவித்துள்ளது. 



    • கடந்த 65 ஆண்டுகளில், நாட்டில் 19 விமான விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன.
    • தரையிறங்கும் போது பள்ளத்தில் விழுந்து தீப்பிடித்து எரிந்ததில் 158 பேர் கொல்லப்பட்டனர்.

    குஜராத்தின் அகமதாபாத், கடந்த ஐந்து ஆண்டுகளில் நாட்டில் நடந்த மிக மோசமான விமான விபத்தை நேற்று கண்டது.

    சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையத்திலிருந்து லண்டனுக்கு AI 171 ட்ரீம்லைனர் பயணிகள் விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் அருகில் இருந்த மருத்துவ மாணவர்கள் விடுதி மீது விழுந்து விபத்துக்குள்ளானது.

    இதில் 241 பேர் இறந்ததாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது. கறுப்புப்பெட்டி தகவல்களை வைத்தே விபத்துக்கான காரணம் தெரியவரும்.

    அகமதாபாத்தில் விமான விபத்து ஏற்படுவது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்பு அக்டோபர் 19, 1988 அன்று விபத்து நிகழ்ந்தது.

    அன்று, மும்பையிலிருந்து அகமதாபாத் சென்ற இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில் 164 பேர் உயிரிழந்தனர். பழைய விமானம் என்பதால் பழுதுபட்ட தன்மையே இந்த விபத்துக்கான காரணம்.

    கடந்த 65 ஆண்டுகளில், நாட்டில் 19 விமான விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன, இதன் விளைவாக 1000-த்திற்கும் உயிரிழந்துள்ளனர்.

    நாட்டையே உலுக்கிய பெரிய விமான விபத்துகள்:

    ஆகஸ்ட் 7, 2020 அன்று, ஏர் இந்தியா IX 344 துபாய்-கரிப்பூர் விமானம் கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும் போது 35 அடி உயரத்தில் விழுந்து 18 பேர் கொல்லப்பட்டனர்.

    மே 26, 2011 அன்று, அரியானாவின் ஹரிதாபாத்தில் ஒரு சிறிய விமானம் விபத்துக்குள்ளானதில் 10 பேர் கொல்லப்பட்டனர்.

    மே 22, 2010 அன்று, துபாயில் இருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் போயிங் 737-800 விமானம் மங்களூரின் பாஜ்பாய் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது பள்ளத்தில் விழுந்து தீப்பிடித்து எரிந்ததில் 158 பேர் கொல்லப்பட்டனர்.

    ஜூலை 17, 2000 அன்று, பீகாரின் பாட்னா விமான நிலையத்திற்கு அருகில் அலையன்ஸ் ஏர் போயிங் விமானம் விபத்துக்குள்ளானதில் 56 பேர் கொல்லப்பட்டனர்.

    நவம்பர் 1996, அரியானாவில் சர்கி தாத்ரி நகரின் மீது சவுதி அரேபிய ஏர்லைன்ஸ் விமானமும் கஜகஸ்தான் ஏர்லைன்ஸ் விமானமும் நடுவானில் நேருக்கு நேர் மோதியதில் சுமார் 350 பயணிகள் கொல்லப்பட்டனர்.

    ஏப்ரல் 1993, அவுரங்காபாத்தில் புறப்படும் போது இந்தியன் ஏர்லைன்ஸ் போயிங் 737 விபத்துக்குள்ளானதில் 55 பேர் கொல்லப்பட்டனர்.

    ஆகஸ்ட் 1991, கொல்கத்தாவிலிருந்து புறப்பட்ட இந்தியன் ஏர்லைன்ஸ் போயிங் 737 விமானம், மணிப்பூரின் தலைநகரான இம்பால் அருகே தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 69 பேரும் கொல்லப்பட்டனர்.

    ஜனவரி 1978, மும்பை கடற்கரையில், புறப்பட்டவுடன் விமானத்தின் கேப்டன் கட்டுப்பாட்டை இழந்து, அரபிக் கடலில் விழுந்ததில், ஏர் இந்தியா விமானத்தில் இருந்த 213 பயணிகளும் கொல்லப்பட்டனர். 

    • அகமதாபாத் விமான விபத்தில் 241 பேர் உயிரிழந்துள்ளனர்.
    • பலியானோர் குடும்பங்களுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

    அகமதாபாத்:

    அகமதாபாத் விமான விபத்தில் 241 பேர் உயிரிழந்துள்ளனர். விமான விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு பல்வேறு நாட்டுத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், அகமதாபாத்தில் விபத்தில் சிக்கிய லண்டன் விமானத்தில் பூமி சவுகான் என்ற பெண் பயணம் செய்ய டிக்கெட் எடுத்திருந்தார். இதற்காக அவர் வாகனத்தில் தனது வீட்டில் இருந்து சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையம் நோக்கி புறப்பட்டார்.

    ஆனால் வழியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக விமான நிலையத்துக்கு 10 நிமிடங்கள் தாமதமாக சென்றார். இதனால் அவர் உயிர் தப்பினார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், விமான விபத்தை அறிந்தவுடன் உடல் நடுங்கியது. அதிர்ச்சியில் இருந்து மீண்டு வர முடியவில்லை என தெரிவித்தார்.

    • அகமதாபாத் விமான விபத்தில் 200-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
    • விமான விபத்து குறித்து பல்வேறு நாட்டுத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    வாஷிங்டன்:

    அகமதாபாத் விமான விபத்தில் 200-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். விமான விபத்து குறித்து பல்வேறு நாட்டுத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:

    விமானப் போக்குவரத்து வரலாற்றில் மிக மோசமான ஒன்று. இந்தியாவுக்கு எந்தத் திறனிலும் உதவ அமெரிக்கா தயாராக உள்ளது.

    விமான விபத்து மிகவும் பயங்கரமானது. நான் ஏற்கனவே அவர்களிடம் (இந்தியா) சொல்லியிருக்கிறேன், நாம் என்ன செய்ய முடியும். இது ஒரு பெரிய நாடு, ஒரு வலிமையான நாடு, அவர்கள் அதைக் கையாளுவார்கள், நான் உறுதியாக நம்புகிறேன்.

    ரஷிய அதிபர் புதின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:

    விமான விபத்து குறித்து அதிபர் புதின் ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு இரங்கல் தெரிவித்தார் என கிரெம்ளின் மாளிகை தெரிவித்துள்ளது.

    விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது அனுதாபத்தையும் ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறேன். விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன் என தெரிவித்தார்.

    மேலும், இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், பிரான்ஸ் அதிபர் எம்மானுவல் மேக்ரான், கனடா பிரதமர் மார்க் கார்ட்னி உள்ளிட்ட பல்வேறு உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    • விமானத்தில் 2 விமானிகள், 10 ஊழியர்கள் உள்பட 242 பேர் பயணம் செய்தனர்.
    • இந்த விபத்தில் குஜராத்தின் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உயிரிழந்தார்.

    அகமதாபாத்:

    குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் காட்விக் விமான நிலையத்திற்கு நேற்று மதியம் ஏர் இந்தியாவின் ஏஐ 171 போயிங் விமானம் புறப்பட்டது. புறப்பட்ட சில நிமிடங்களில் மேகானி நகர் குடியிருப்பு பகுதி அருகே விழுந்து நொறுங்கி விபத்தில் சிக்கியது.

    விமானத்தில் 2 விமானிகள், 10 ஊழியர்கள் உள்பட 242 பேர் பயணம் செய்தனர். இதில் 169 பேர் இந்தியர்கள். 53 பேர் இங்கிலாந்தை சேர்ந்தவர்கள். 6 பேர் போர்ச்சுகலை சேர்ந்தவர்கள். ஒருவர் கனடா நாட்டைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. 14 குழந்தைகள் பயணம் செய்துள்ளனர். இந்த விபத்தில் குஜராத்தின் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உயிரிழந்தார்

    இந்த விபத்தில் 130 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியானது. தொடர்ந்து பலி எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

    இந்நிலையில், ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அகமதாபாத் விமான விபத்தில் பயணம் செய்த 241 பேரும் உயிரிழந்துள்ளனர் என தெரிவித்துள்ளது.

    • மத்திய மற்றும் மாநில அரசுத் துறைகள் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
    • குடும்ப உறுப்பினர்களின் டிஎன்ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன என்றார்.

    அகமதாபாத்:

    ஏர் இந்தியா விமான விபத்து நடந்த இடம் மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை உள்துறை மந்திரி அமித்ஷா நேரில் சந்தித்தார். அதன்பின், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

    இன்று மதியம் ஏர் இந்தியா விமானம் AI-171 விபத்தில் சிக்கியது. அதில் பல பயணிகள் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. நாடு முழுவதும் துக்கத்தில் ஆழ்ந்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் ஒன்றாக நிற்கிறது.

    விபத்து நடந்த 10 நிமிடங்களுக்குள் மத்திய அரசுக்கு தகவல் கிடைத்தது. குஜராத் முதல் மந்திரி, உள்துறை மந்திரி மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து மந்திரியை நான் தொடர்பு கொண்டேன். சிறிது நேரத்திலேயே பிரதமரும் அழைத்தார்.

    அனைத்து மத்திய மற்றும் மாநில அரசுத் துறைகளும் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. 230 பயணிகள் மற்றும் 12 ஊழியர்கள் இருந்தனர்.

    இந்த விபத்தில் ஒருவர் உயிர் பிழைத்துள்ளது நல்ல செய்தி. டிஎன்ஏ சரிபார்ப்புக்குப் பிறகு இறப்பு எண்ணிக்கை அறிவிக்கப்படும். உயிர் பிழைத்த ஒருவரை நான் சந்தித்தேன்.

    ஒவ்வொரு துறையும் ஒருங்கிணைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. விமானம் கிட்டத்தட்ட 1,25,000 லிட்டர் எரிபொருளை எடுத்துச் சென்றது. அதிக வெப்பநிலை காரணமாக யாரையும் காப்பாற்ற வாய்ப்பில்லை.

    நான் விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்டேன். இறந்தவர்களின் உடல்களை மீட்கும் பணி கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. குடும்ப உறுப்பினர்களின் டிஎன்ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. வெளிநாடுகளில் உள்ள குடும்ப உறுப்பினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறந்த உடல்களின் டி.என்.ஏ மாதிரிகளும் சேகரிக்கப்பட்டுள்ளன. டி.என்.ஏ சோதனைகளுக்குப் பிறகு உடல்கள் ஒப்படைக்கப்படும். மறுஆய்வுக் கூட்டத்தில், ஒவ்வொரு அம்சமும் விவாதிக்கப்பட்டது. விசாரணையை விரைவாக மேற்கொள்ளுமாறு விமானப் போக்குவரத்து மந்திரி அறிவுறுத்தியுள்ளார் என தெரிவித்தார்.

    • அகமதாபாத்தில் இருந்து லண்டன் காட்விக் விமான நிலையத்திற்கு இன்று மதியம் ஏர் இந்தியாவின் ஏஐ 171 போயிங் விமானம் புறப்பட்டது
    • விமானத்தில் 2 விமானிகள், 10 ஊழியர்கள் உள்பட 242 பேர் பயணம் செய்தனர்.

    குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் காட்விக் விமான நிலையத்திற்கு இன்று மதியம் ஏர் இந்தியாவின் ஏஐ 171 போயிங் விமானம் புறப்பட்டது. புறப்பட்ட சில நிமிடங்களில் மேகானி நகர் குடியிருப்பு பகுதி அருகே கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.

    மேகானி நகர் குடியிருப்பு பகுதியில் உள்ள பயிற்சி மருத்துவர் குடியிருப்பில் மோதியது. அங்கு இருந்த 60 பயிற்சி மருத்துவர்களின் கதி என்ன? என தெரியவில்லை.

    விமானத்தில் 2 விமானிகள், 10 ஊழியர்கள் உள்பட 242 பேர் பயணம் செய்தனர். இதில் 169 பேர் இந்தியர்கள். 53 பேர் இங்கிலாந்தை சேர்ந்வர்கள். ஒருவர் கனடா நாட்டைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது. 12 வயதிற்கு உட்பட்ட 14 குழந்தைகள் பயணம் செய்துள்ளனர். இந்த விபத்தில் குஜராத்தின் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உயிரிழந்தார்

    இந்த விபத்தில் 130 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியானது. தற்பொழுது பலி எண்ணிக்கை உயர்ந்துள்ளது. தற்பொழுது கிடைத்த தகவலின்படி 170 ஆக உயர்ந்துள்ளது.

    • அகமதாபாத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம்
    • 2016 முதல் 2021 வரை மாநில முதல்வராக ரூபானி பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

    அகமதாபாத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம் AI171- ல் பயணித்தவர்களில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் ஒருவர் என கூறப்பட்டது.

    குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி பிஸ்னஸ் கிளாஸ்-இல் பயணம் செய்த நிலையில் அவர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.

    2016 முதல் 2021 வரை மாநில முதல்வராக ரூபானி பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. 

    ×