என் மலர்
இந்தியா

வேலியே பயிரை மேய்ந்த கொடூரம்: 11ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த போலீஸ் கான்ஸ்டபிள்
- பள்ளிக்கு சென்ற போது கான்ஸ்டபிள் கடத்தி சென்றுள்ளார்.
- நீண்ட நேரம் வீட்டிற்கு திரும்பாததால், குடும்பத்தினர் தேடும்போது கான்ஸ்டபிள் பிடிபட்டார்.
பாதுகாப்பு வழங்கக் கூடிய போலீஸ் கான்ஸ்பிடபிள், 11ஆம் வகுப்பு மாணவியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் உத்தர பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது.
நவப்கஞ்ச் என்ற இடத்தில் வசித்து வரும் 11ஆம் வகுப்பு மாணவி வழக்கம்போல் நேற்று பள்ளிக்குச் சென்றுள்ளார். பள்ளிக்கு செல்லும் வழியில் போலீஸ் கான்ஸ்டபிள் வினய் சவுகான் என்பவர், அந்த மாணவியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
பள்ளிக்கு சென்ற பெண் நீண்ட நேரம் வீட்டிற்கு திரும்பாததால், உறவினர்கள் மாணவியை தேட ஆரம்பித்துள்ளனர். அப்போதுதான் மாணவியின் தந்தை, கான்ஸ்டபிள் காரில் தனது மகளை பார்த்துள்ளார். உடனடியான மகளை மீட்டு, கான்ஸ்டபிளை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைந்துள்ளார்.
கான்ஸ்டபிள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். உடனடியாக அவரை சஸ்பெண்ட் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






