search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காற்று மாசு"

    • அண்டை மாநிலங்களில் விவசாயக் கழிவுகள் எரிக்கப்படுவது முக்கிய காரணம்.
    • டெல்லியில் அதிகமான பேருந்துகள் இயக்கப்படுவதையும் மாநில அரசு கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

    டெல்லி காற்று மாசு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றம் டெல்லி அருகில் உள்ள பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்கள்தான் முக்கிய காரணம்'' என நேரடியாக குற்றம்சாட்டியது.

    மேலும் காற்று மாசு மக்களின் சுகாதாரத்தை கொலை செய்வதற்கு காரணமாகும். ஒவ்வொரு குளிர்காலத்தின்போதும் டெல்லியில் காற்று மாசு ஏற்பட, அண்டை மாநிலங்களான பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் விவசாய கழிவுகளை (கோதுமை, சோளம் பயிர்களின் காய்ந்த தண்டுகள்) எரிப்பது முக்கிய காரணம்.

    இதை நிறுத்த நாங்கள் விரும்புகிறோம். அதை எப்படி நீங்கள் செய்வீர்கள் என்று எங்களுக்குத் தெரியாது. அது உங்களுடைய வேலை. ஆனால், இது கட்டாயம் நிறுத்தப்பட வேண்டும். உடனடியாக ஏதாவது செய்தாக வேண்டும்.

    டெல்லி அரசும் இதற்கு பொறுப்பு ஏற்க வேண்டும். டெல்லியில் அதிக அளவில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அவைகளால் மாசு ஏற்படுவதோடு, பாதிக்கும்மேல் முழு அளவில பயணிகள் இல்லாமல் ஓடுகின்றன. இந்த பிரச்சினையில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். ஒற்றைப்படை, இரட்டைப்படை இலக்க எண் வாகன இயக்கம் நடைமுறை என்பது குறுகிய பார்வை போன்றது" எனவும் தெரிவித்துள்ளது.

    • சில நாட்களுக்கு முன்பு காற்றின் தர குறியீடு 480-க்கும் மேல் இருந்தது.
    • காற்றின் தரக் குறியீடு மிகவும் மோசமான பிரிவில் இருந்து வருகிறது.

    தலைநகர் டெல்லியில் காற்று மாசு இருந்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு காற்றின் தர குறியீடு 480-க்கும் மேல் இருந்தது. இது மிகவும் மோசமான நிலை ஆகும். இதனால் டெல்லி மக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள்.

    நேற்று டெல்லியில் ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு 437-ஆக இருந்தது. இந்த நிலையில் இன்று ஒட்டுமொத்த காற்றின் தர குறியீட்டில் சிறிது முன்னேற்றம் காணப்பட்டது. இன்று காலை 7 மணிக்கு டெல்லி யில் காற்றின் தரக் குறியீடு 396-ஆக பதிவானது. ஆனாலும் காற்றின் தரக் குறியீடு மிகவும் மோசமான பிரிவில் இருந்து வருகிறது. மேலும் டெல்லியை அடர்ந்த பனிமூட்டம் சூழ்ந்து இருந்தது.

    • டெல்லியில் 1ம் முதல் 9ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்டது.
    • 10ம், 12ம் வகுப்புகளை தவிர மற்ற வகுப்புகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்று மாசு அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் மாலை 4 மணிக்குப் பதிவுசெய்யப்பட்ட 24 மணி நேர சராசரி காற்றுத் தரக் குறியீடு சனிக்கிழமை 415ஆக இருந்து ஞாயிற்றுக்கிழமை 454 ஆக அதிகரித்து மோசமடைந்தது.

    இதன் எதிரொலியால், டெல்லியில் 1ம் முதல் 9ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், நவம்பர் 11ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 10ம், 12ம் வகுப்புகளை தவிர மற்ற வகுப்புகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    காற்று மாசுவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக வரும் நவம்பர் 13 முதல் 20 வரை டெல்லியில் வாகனங்களில் ஒற்றை- இரட்டை இலக்க திட்டம் அமல்படுத்தப்படும் என்று டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் அறிவித்துள்ளார்.

    மேலும், நவம்பர் 20ம் தேதிக்குப் பிறகு இந்தத் திட்டத்தை நீட்டிக்க முடிவு செய்யப்படும் என்றார்.

    ஒற்றைப்படை அல்லது இரட்டை எண் தகடுகளின் அடிப்படையில் மாற்று நாட்களில் கார்களை இயக்கப்படுவதே ஒற்றை- இரட்டை இலக்க திட்டம் ஆகும்.

    • மாவட்டந்தோறும் நிபுணர் குழு அமைத்து கணக்கிட வேண்டும்.
    • தலைமை நீதிபதி இந்த மனு குறித்து விசாரிக்க விருப்பமின்மை தெரிவித்ததால் மனு வாபஸ் பெறப்பட்டது.

    டெல்லியில காற்று மாசு மிக மோசமாகியுள்ளது. இதனால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகிறார்கள். மக்களும் சுவாசம் தொடர்பான பிரச்சனையால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனால் டெல்லி மாநில முதல்வர் கெஜ்ரிவால் தலைமையில் இன்று உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காற்று சூழல் மந்திரி கோபால்ராய் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இதற்கிடையே, காற்று மாசுபாட்டை தடுக்க மாவட்ட அளவில் நிரந்தர நிபுணர் குழுவை அமைக்க வேண்டும். இந்த குழு மூலம் காற்று மாசுபாட்டை கணக்கிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த பொதுநல மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரிக்க விருப்பம் இல்லை. சுய ஆதாயத்திற்கு போட்டப்பட்ட வழக்கு இது. நாங்கள் கமிட்டி அமைத்தால், காற்று மாசு ஒழிந்துவிடும் என நினைக்கிறீர்களா? என கேள்வி நீதிபதி கேள்வி எழுப்பினார்.

    இதனைத் தொடர்ந்து மனுவை வாபஸ் பெற்றுக்கொள்வதாக, மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவிக்க, மனு தள்ளுபடி செய்வதாக அறிவிக்கப்பட்டது.

    • டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு குறித்து முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இன்று அவசர ஆலோசனை நடத்தினார்.
    • ஆலோசனை கூட்டத்தில் காற்று சூழல் மந்திரி கோபால்ராய் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்று மாசு அதிகரித்து வருகிறது. தொடர்ந்து அதிகரித்து வருவது (488 தரக்குறியீடு) மோசமான நிலையை காட்டுகிறது. டெல்லியின் நியூ மோதி பாக் பகுதியில் காற்றின் தரக்குறியீடு 488 ஆக உள்ளது. பட்பர் கஞ்ச் பகுதியில் 471 ஆகவும், ஆர்.கே.புரத்தில் 466 ஆகவும் இருந்தது.

    டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு குறித்து முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இன்று அவசர ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் காற்று சூழல் மந்திரி கோபால்ராய் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • நாட்டிலேயே மிகவும் மாசுபட்ட நகரமாக தேசிய தலைநகர் மாறியுள்ளது.
    • டெல்லியில் காற்று மாசு இன்று நான்காவது நாளாக 500ஐ தாண்டியுள்ளது.

    டெல்லி முழுவதும் உள்ள அனைத்து காற்றின் தர கண்காணிப்பு நிலையங்களும் பிஎம்2.5 அளவு 450 மைக்ரான்களுக்கு மேல் இருப்பதாக தெரிவித்துள்ளன.

    டெல்லியின் காற்றின் தரம் மீண்டும் 'கடுமையான' பிரிவில் சரிந்து, இன்று நாட்டிலேயே மிகவும் மாசுபட்ட நகரமாக தேசிய தலைநகர் மாறியுள்ளது.

    நிகழ்நேர காற்றுத் தரக் குறியீடு (AQI) தலைநகரின் பல்வேறு பகுதிகளில் 500க்கு மேல் உள்ளது. நண்பகலில், டெல்லியில் உள்ள வஜிர்பூர் கண்காணிப்பு நிலையத்தில் அதிகபட்ச அளவு 859 ஆக பதிவாகியுள்ளது.

    டெல்லியில் பிஎம்2.5 செறிவு நிலை தற்போது உலக சுகாதார அமைப்பின் (WHO) காற்றின் தர வழிகாட்டுதல் மதிப்பை விட 96.2 மடங்கு அதிகமாக உள்ளது.

    டெல்லியில் மாசு அளவு உலக சுகாதார அமைப்பு அறிவித்த வரம்புகளை விட கிட்டத்தட்ட 100 மடங்கு அதிகம் எனவும் தொடர்ந்து நான்காவது நாளாக 500ஐ தாண்டியுள்ளது எனவும் தெரியவந்துள்ளது.

    • காற்று மாசு காரணமாக டெல்லியில் தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
    • 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான பள்ளிகளை மூட கட்டாயமில்லை.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் சில நாட்களாக காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    பருவநிலை மாறுபாடு பிரச்சினையுடன், வாகனங்கள் வெளியிடும் புகை, பட்டாசுகள் வெடிப்பதால் ஏற்படும் புகை, அண்டை மாநிலங்களில் அறுவடைக்குப் பின் பயிர் கழிவுகள் எரிக்கப்படுவது, உச்சத்தில் இருக்கும் கட்டுமான பணிகள் உள்ளிட்டவை, புதுடெல்லியின் காற்று மாசை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    டெல்லியில் 3-வது நாளாக காற்றின் தரக் குறியீடு மிகவும் மோசமாக உள்ளது. இன்று காலை ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு 460-ஆக இருந்தது.பல இடங்களில் 400-க்கும் மேல் இருந்தது. காற்றின் தரக் குறியீடு ஆயா நகரில் 464-ஆகவும், துவாரகா செக்டாரில் 8-ல் 486, பவானாவில் 479, இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் 480, ஐ.டி.ஒவில் 410, ஜஹாங்கிர்புரியில் 463, லோதி சாலையில் 426, சிரி கோட்டையில் 475 ஆகவும் இருந்தது.

    இந்நிலையில், டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளதால் தொடக்க பள்ளிகளுக்கு 10-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.

    அதன்படி பள்ளிகளில் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. ஏற்கனவே 2 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில் 10-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான பள்ளிகளை மூட கட்டாயமில்லை. ஆனால் அவர்கள் விரும்பினால் ஆனலைன் வகுப்புகளை நடத்த முடிவுசெய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை டெல்லி மாநில கல்வி மந்திரி அதிஷி தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • டெல்லியின் பல்வேறு பகுதிகளில் காற்று மாசுபாடு அதிகரித்து புகை மூட்டமாக காணப்படுகிறது.
    • காற்று மாசு காரணமாக அங்கு தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் கடந்த சில தினங்களாக வழக்கத்திற்கு அதிகமாக காற்று மாசுபாடு ஏற்படுகிறது. டெல்லியின் பல்வேறு பகுதிகளில் காற்று மாசுபாடு அதிகரித்து புகை மூட்டமாகக் காணப்படுகிறது.

    காற்றின் தரம் மிக மோசமான நிலையில் இருப்பதாகவும், காற்றின் ஒட்டுமொத்த தரக் குறியீடு (AQI)346 ஆக உள்ளதாகவும் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

    லோதி சாலை, ஜஹாங்கிர்புரி, ஆர்.கே.புரம் மற்றும் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் (மூன்றாவது முனையம்) ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் முறையே 438, 491, 486, 473 என்ற அளவில் உள்ளது.

    காற்றின் தரத்தை மேம்படுத்துவதற்காக டெல்லி மாநகராட்சி ஊழியர்கள் தண்ணீரை தெளித்து வருகிறார்கள். இதன்மூலம் காற்று மாசு சற்று குறையும் என கருதப்படுகிறது. மாசுபட்ட காற்றை சுவாசிப்பதால் பலர் மூச்சுத் திணறல், சுவாசக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்

    காற்று மாசு அதிகரிப்பால் டெல்லியில் தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வரும் 10-ம் தேதி வரை அனைத்து அரசு பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து டெல்லி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாடங்களை ஆன்லைன் வழியாக நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    காற்று மாசு எதிரொலியாக, நாளை நடைபெற உள்ள உலக கோப்பை போட்டிக்கான பயிற்சியில் இலங்கை, வங்காளதேசம் அணிகள் பங்கேற்கவில்லை.

    இந்நிலையில், திட்டமிட்டபடி நாளை உலக கோப்பை போட்டி நடைபெறுமா என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

    டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுவை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். வீரர்களின் நலனைக் கருத்தில் கொண்டு போட்டிக்கு முன்பு நிபுணர்களிடம் ஆலோசனை நடத்தப்படும் என ஐசிசி தெரிவித்துள்ளது.

    • டெல்லி அரசு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.
    • காற்று மாசு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவும் வலியுறுத்தி இருக்கிறார்.

    டெல்லியில் காற்று மாசை குறைக்க டெல்லி மற்றும் மத்திய அரசு போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்று டெல்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்தர் சிங் லவ்லி குற்றம்சாட்டி உள்ளார். மேலும் டெல்லியில் நிலவும் காற்று மாசு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவும் வலியுறுத்தி இருக்கிறார்.

    இந்த விவகாரம் தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அரவிந்தர் சிங் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் முக கவசம் மற்றும் வெங்காய மாலை அணிந்திருந்தனர். டெல்லியில் நிலவும் காற்று மாசு மற்றும் வெங்காய விலை உயர்வை குறிக்கும் வகையில், அவர்கள் இவ்வாறு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இது குறித்து பேசிய அரவிந்தர் சிங், "எதிர்கட்சி தலைவர்கள் பிரச்சினைகள் குறித்து பேசும் போது, டெல்லி அரசு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. நிலைமை மோசமான பிறகுதான் அவர்கள் நடவடிக்கை எடுக்கின்றனர், அதுவும் அவர்கள் தற்காலிக தீர்வுக்கான வழியை பின்பற்றுகின்றனர். காற்று மாசு விவகாரம் தொடர்பாக அரசாங்கம் ஆண்டு முழுக்க கவனம் செலுத்த வேண்டும்."

    "காற்று மாசு ஏற்பட முக்கிய காரணம் தூசிகள் தான். மெட்ரோ கட்டுமானங்கள் டெல்லியில் ஐந்து ஆண்டுகள் வரை தாமதமாகி இருக்கின்றன. இதே நிலைதான் மேம்பாலம் மற்றும் இதர உள்கட்டமைப்பு சார்ந்த கட்டுமான பணிகளின் போதும் தொடர்கிறது. பொது போக்குவரத்து முறை முற்றிலுமாக தகர்ந்துவிட்டது. வாகன போக்குவரத்து காரணமாக டெல்லியில் 40 சதவீத மாசு ஏற்படுவதாக சமீபத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது," என்று தெரிவித்தார்.

    • டெல்லியில் காற்று மாசு பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது.
    • மாநகரில் காற்று மாசுபாட்டால் ஏற்படும் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

    டெல்லியில் கடந்த சில தினங்களாக காற்று மாசு பாதிப்பு அதிகமாக இருந்து வருகிறது. இதனால் மக்கள் சிரமப்பட்டு வந்தனர்.

    இன்று 7-வது நாளாக தலைநகர் டெல்லியில் காற்று மாசு பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது.

    இந்நிலையில், டெல்லியில் காற்றின் தரக் குறியீடு 800ஐத் தாண்டியது. முடிந்தவரை மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லாமல் இருக்க வேண்டும் என டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    மேலும் அவர், " குறிப்பாக, குழந்தைகள், முதியவர்கள் வெளியே செல்ல வேண்டாம். மாநகரில் காற்று மாசுபாட்டால் ஏற்படும் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

    இதுதொடர்பாக, டெல்லி முதலமைச்சர், சுற்றுச்சூழல் அமைச்சரை ராஜ் நிவாஸில் சந்தித்து நிலைமையை ஆய்வு செய்ய உள்ளேன்" என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காற்று மாசு காரணமாக சென்னை மற்றும் டெல்லியில் வசிப்பவர்களுக்கு 'டைப் 2' நீரிழிவு நோய் ஏற்படும் என்றும் கூறியுள்ளனர்.
    • காற்று மாசுபாட்டிற்கும், நீரிழிவு நோய்க்கும் தொடர்பு இருப்பதை கண்டு பிடித்துள்ளனர்.

    சென்னை:

    சென்னை மற்றும் டெல்லியில் தற்போது காற்று மாசு அதிகரித்து வருகிறது. உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்த வரம்புகளை விட சென்னை மற்றும் காற்றின் தரம் மோசமாக உள்ளது.

    இந்த நிலையில் காற்று மாசு அதிகரிப்பதால் சர்க்கரை நோய் ஏற்படும் என்று சென்னை மக்களுக்கு ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். காற்று மாசு காரணமாக சென்னை மற்றும் டெல்லியில் வசிப்பவர்களுக்கு 'டைப் 2' நீரிழிவு நோய் ஏற்படும் என்றும் கூறியுள்ளனர்.

    சர்வதேச பத்திரிகைகளில் வெளியான 2 ஆய்வு முடிவுகள் இந்த அதிர்ச்சி தகவலை தெரிவிக்கின்றன. இது தொடர்பாக சென்னையில் 6,722 பேரிடமும், டெல்லியில் 5,342 பேரிடமும் ஆய்வு செய்து அவர்களின் ரத்த மாதிரிகளை சோதனை செய்தனர். 2010 முதல் 2016-ம் ஆண்டு வரை இந்த சோதனை நடத்தப்பட்டது.

    தெற்காசியாவின் கார்டியோ மெட்டபாலிக் ரிஸ்க் குறைப்பு மையம் இந்த ஆய்வை நடத்தியது. இந்த ஆய்வு முடிவின்படி அவர்கள் காற்று மாசுபாட்டிற்கும், நீரிழிவு நோய்க்கும் தொடர்பு இருப்பதை கண்டு பிடித்துள்ளனர். மேலும் காற்று மாசு காரணமாக இளைஞர்களும் அதிக அளவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

    மேலும் இந்த ஆய்வில் காற்று மாசு அதிகரிப்பதால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.

    • 5-வது நாளாக தலைநகர் டெல்லியில் காற்று மாசு பாதிப்பு அதிகமாக காணப்பட்டது.
    • ஆனந்தவிகார், பவானி மற்றும் ரோகினி போன்ற பகுதிகளில் காற்று மாசு பாதிப்பு அதிகமாக காணப்பட்டது.

    புதுடெல்லி:

    டெல்லியில் கடந்த சில தினங்களாக காற்று மாசு பாதிப்பு அதிகமாக இருந்து வருகிறது. இதனால் மக்கள் சிரமப்பட்டு வந்தனர்.

    இன்று 5-வது நாளாக தலைநகர் டெல்லியில் காற்று மாசு பாதிப்பு அதிகமாக காணப்பட்டது. மிகவும் மோசமான நிலையில் காற்று மாசு 372 ஆக இருந்தது. குறைந்தபட்ச வெப்பநிலை 16.4 டிகிரி செல்சியசாக பதிவாகி இருந்தது. காலை 8.30 மணியளவில் ஈரப்பதம் 85 சதவீதமாக இருந்தது. கடுமையான மூடுபனி காரணமாக மக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.

    ஆனந்தவிகார், பவானி மற்றும் ரோகினி போன்ற பகுதிகளில் காற்று மாசு பாதிப்பு அதிகமாக காணப்பட்டது. பகலில் தெளிவான வானம் காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. காற்று மாசு 301 முதல் 400 வரை என்பது மிகவும் மோசமானதாகும்.

    ×