search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    நாங்கள் குழு அமைத்தால் மாசு ஒழிந்துவிடும் என நினைக்கிறீர்களா? மனுதாரரிடம் கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம்
    X

    நாங்கள் குழு அமைத்தால் மாசு ஒழிந்துவிடும் என நினைக்கிறீர்களா? மனுதாரரிடம் கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம்

    • மாவட்டந்தோறும் நிபுணர் குழு அமைத்து கணக்கிட வேண்டும்.
    • தலைமை நீதிபதி இந்த மனு குறித்து விசாரிக்க விருப்பமின்மை தெரிவித்ததால் மனு வாபஸ் பெறப்பட்டது.

    டெல்லியில காற்று மாசு மிக மோசமாகியுள்ளது. இதனால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகிறார்கள். மக்களும் சுவாசம் தொடர்பான பிரச்சனையால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனால் டெல்லி மாநில முதல்வர் கெஜ்ரிவால் தலைமையில் இன்று உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காற்று சூழல் மந்திரி கோபால்ராய் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இதற்கிடையே, காற்று மாசுபாட்டை தடுக்க மாவட்ட அளவில் நிரந்தர நிபுணர் குழுவை அமைக்க வேண்டும். இந்த குழு மூலம் காற்று மாசுபாட்டை கணக்கிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த பொதுநல மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரிக்க விருப்பம் இல்லை. சுய ஆதாயத்திற்கு போட்டப்பட்ட வழக்கு இது. நாங்கள் கமிட்டி அமைத்தால், காற்று மாசு ஒழிந்துவிடும் என நினைக்கிறீர்களா? என கேள்வி நீதிபதி கேள்வி எழுப்பினார்.

    இதனைத் தொடர்ந்து மனுவை வாபஸ் பெற்றுக்கொள்வதாக, மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவிக்க, மனு தள்ளுபடி செய்வதாக அறிவிக்கப்பட்டது.

    Next Story
    ×