search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    இது உங்களுடைய வேலை: காற்று மாசு விவகாரத்தில் டெல்லியின் அண்டை மாநிலங்களுக்கு உத்தரவிட்ட உச்சநீதிமன்றம்
    X

    இது உங்களுடைய வேலை: காற்று மாசு விவகாரத்தில் டெல்லியின் அண்டை மாநிலங்களுக்கு உத்தரவிட்ட உச்சநீதிமன்றம்

    • அண்டை மாநிலங்களில் விவசாயக் கழிவுகள் எரிக்கப்படுவது முக்கிய காரணம்.
    • டெல்லியில் அதிகமான பேருந்துகள் இயக்கப்படுவதையும் மாநில அரசு கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

    டெல்லி காற்று மாசு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றம் டெல்லி அருகில் உள்ள பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்கள்தான் முக்கிய காரணம்'' என நேரடியாக குற்றம்சாட்டியது.

    மேலும் காற்று மாசு மக்களின் சுகாதாரத்தை கொலை செய்வதற்கு காரணமாகும். ஒவ்வொரு குளிர்காலத்தின்போதும் டெல்லியில் காற்று மாசு ஏற்பட, அண்டை மாநிலங்களான பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் விவசாய கழிவுகளை (கோதுமை, சோளம் பயிர்களின் காய்ந்த தண்டுகள்) எரிப்பது முக்கிய காரணம்.

    இதை நிறுத்த நாங்கள் விரும்புகிறோம். அதை எப்படி நீங்கள் செய்வீர்கள் என்று எங்களுக்குத் தெரியாது. அது உங்களுடைய வேலை. ஆனால், இது கட்டாயம் நிறுத்தப்பட வேண்டும். உடனடியாக ஏதாவது செய்தாக வேண்டும்.

    டெல்லி அரசும் இதற்கு பொறுப்பு ஏற்க வேண்டும். டெல்லியில் அதிக அளவில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அவைகளால் மாசு ஏற்படுவதோடு, பாதிக்கும்மேல் முழு அளவில பயணிகள் இல்லாமல் ஓடுகின்றன. இந்த பிரச்சினையில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். ஒற்றைப்படை, இரட்டைப்படை இலக்க எண் வாகன இயக்கம் நடைமுறை என்பது குறுகிய பார்வை போன்றது" எனவும் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×