search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    காற்று மாசு அதிகரிப்பு எதிரொலி: டெல்லியில் திட்டமிட்டபடி நாளை போட்டி நடைபெறுமா?
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    காற்று மாசு அதிகரிப்பு எதிரொலி: டெல்லியில் திட்டமிட்டபடி நாளை போட்டி நடைபெறுமா?

    • டெல்லியின் பல்வேறு பகுதிகளில் காற்று மாசுபாடு அதிகரித்து புகை மூட்டமாக காணப்படுகிறது.
    • காற்று மாசு காரணமாக அங்கு தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் கடந்த சில தினங்களாக வழக்கத்திற்கு அதிகமாக காற்று மாசுபாடு ஏற்படுகிறது. டெல்லியின் பல்வேறு பகுதிகளில் காற்று மாசுபாடு அதிகரித்து புகை மூட்டமாகக் காணப்படுகிறது.

    காற்றின் தரம் மிக மோசமான நிலையில் இருப்பதாகவும், காற்றின் ஒட்டுமொத்த தரக் குறியீடு (AQI)346 ஆக உள்ளதாகவும் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

    லோதி சாலை, ஜஹாங்கிர்புரி, ஆர்.கே.புரம் மற்றும் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் (மூன்றாவது முனையம்) ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் முறையே 438, 491, 486, 473 என்ற அளவில் உள்ளது.

    காற்றின் தரத்தை மேம்படுத்துவதற்காக டெல்லி மாநகராட்சி ஊழியர்கள் தண்ணீரை தெளித்து வருகிறார்கள். இதன்மூலம் காற்று மாசு சற்று குறையும் என கருதப்படுகிறது. மாசுபட்ட காற்றை சுவாசிப்பதால் பலர் மூச்சுத் திணறல், சுவாசக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்

    காற்று மாசு அதிகரிப்பால் டெல்லியில் தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வரும் 10-ம் தேதி வரை அனைத்து அரசு பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து டெல்லி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாடங்களை ஆன்லைன் வழியாக நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    காற்று மாசு எதிரொலியாக, நாளை நடைபெற உள்ள உலக கோப்பை போட்டிக்கான பயிற்சியில் இலங்கை, வங்காளதேசம் அணிகள் பங்கேற்கவில்லை.

    இந்நிலையில், திட்டமிட்டபடி நாளை உலக கோப்பை போட்டி நடைபெறுமா என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

    டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுவை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். வீரர்களின் நலனைக் கருத்தில் கொண்டு போட்டிக்கு முன்பு நிபுணர்களிடம் ஆலோசனை நடத்தப்படும் என ஐசிசி தெரிவித்துள்ளது.

    Next Story
    ×