search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    காற்று மாசு அதிகரிப்பு: டெல்லியில் வரும் 10ம் தேதி வரை தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை
    X

    காற்று மாசு அதிகரிப்பு: டெல்லியில் வரும் 10ம் தேதி வரை தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை

    • காற்று மாசு காரணமாக டெல்லியில் தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
    • 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான பள்ளிகளை மூட கட்டாயமில்லை.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் சில நாட்களாக காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    பருவநிலை மாறுபாடு பிரச்சினையுடன், வாகனங்கள் வெளியிடும் புகை, பட்டாசுகள் வெடிப்பதால் ஏற்படும் புகை, அண்டை மாநிலங்களில் அறுவடைக்குப் பின் பயிர் கழிவுகள் எரிக்கப்படுவது, உச்சத்தில் இருக்கும் கட்டுமான பணிகள் உள்ளிட்டவை, புதுடெல்லியின் காற்று மாசை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    டெல்லியில் 3-வது நாளாக காற்றின் தரக் குறியீடு மிகவும் மோசமாக உள்ளது. இன்று காலை ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு 460-ஆக இருந்தது.பல இடங்களில் 400-க்கும் மேல் இருந்தது. காற்றின் தரக் குறியீடு ஆயா நகரில் 464-ஆகவும், துவாரகா செக்டாரில் 8-ல் 486, பவானாவில் 479, இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் 480, ஐ.டி.ஒவில் 410, ஜஹாங்கிர்புரியில் 463, லோதி சாலையில் 426, சிரி கோட்டையில் 475 ஆகவும் இருந்தது.

    இந்நிலையில், டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளதால் தொடக்க பள்ளிகளுக்கு 10-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.

    அதன்படி பள்ளிகளில் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. ஏற்கனவே 2 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில் 10-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான பள்ளிகளை மூட கட்டாயமில்லை. ஆனால் அவர்கள் விரும்பினால் ஆனலைன் வகுப்புகளை நடத்த முடிவுசெய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை டெல்லி மாநில கல்வி மந்திரி அதிஷி தெரிவித்தார்.

    Next Story
    ×