search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காமராஜர் பிறந்தநாள்"

    • காமராஜர் சிலை இல்லாத இடங்களில் மறைந்த தலைவரின் அலங்கரிக்கப்பட்ட படத்தை வைத்து மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செய்யப்படும்.
    • மாணவ-மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை தலைவர் என். ஆர். தனபாலன் வழங்குகிறார்.

    சென்னை:

    பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 121 இடங்களில் தலா 121 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. இது குறித்து பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    காமராஜரின் 121-வது பிறந்த நாளையொட்டி பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் 121இடங்களில் தலைவரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து சர்க்கரை பொங்கல், அன்னதானம், மாணவ-மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள், நலிந்த மாணவ - மாணவிகளுக்கு கல்வி கட்டணம், கடந்த ஆண்டில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு ரொக்கப்பரிசு, பொது மக்களுக்கு இனிப்பு வழங்குதல், மாணவ-மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி போன்ற ஏராளமான நிகழ்ச்சிகளை நடத்தி வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு வழங்கப்படும்.

    காமராஜர் சிலை இல்லாத இடங்களில் மறைந்த தலைவரின் அலங்கரிக்கப்பட்ட படத்தை வைத்து மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செய்யப்படும்.

    பெருந்தலைவர் மக்கள் கட்சித்தலைவர் என்.ஆர்.தனபாலன் நாளை (15-ந்தேதி) தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு நாடார் பேரவையும் பெருந்தலைவர் மக்கள் கட்சியும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு காமராஜரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். காலை 9 மணி முதல் சேர்வைக்காரன் மடம், முக்கானி, திருச்செந்தூர், சாத்தான்குளம், பேய்குளம், ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி பெரிய காய்கறி மார்க்கெட், பழைய பஸ்ஸ்டாண்டு, வ.உசி. மார்க்கெட், தருவைகுளம், பனையூர், குளத்தூர் ஆகிய இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இலவச அரிசி, அன்னதானம், வேட்டி சேலை, தையல் இயந்திரங்கள், ஏழை மாணவர்களுக்கு கல்வி கட்டணம், பேச்சு போட்டி கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப்பரிசு, மாணவ-மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை தலைவர் என். ஆர். தனபாலன் வழங்குகிறார்.

    சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் மாநில இளைஞர் அணித்தலைவர் என் ஆர்.டி.பிரேம்குமார் தலைமையில் மாநில செயலாளர் எம்.வி.எம்.ரமேஷ் குமார், செய்தி தொடர்பாளர் ஜி.சந்தானம், மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு தி.நகர் காமராஜர் நினைவு இல்லத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள். பின்னர் சென்னை கோயம்பேடு, வானகரம். மதுரவாயல், விருகம்பாக்கம், எம்.ஜி.ஆர்.நகர் போன்ற இடங்களில் நடைபெறும் காமராஜர் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு அன்னதானம், சர்க்கரை பொங்கல், இலவச வேட்டி சேலை, பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள், ஸ்கூல் பேக் போன்ற கல்வி உபகரணங்களை வழங்குகிறார்கள்.

    இது போன்று தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பெருந் தலைவர் மக்கள் கட்சி சார்பில் காமராஜர் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வருகிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த மாவட்ட நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-1 தேர்வில் பள்ளி அளவில் முதல் 2 இடங்களை பெற்ற 500 மாணவ-மாணவி களுக்கு காமராஜர் விருது வழங்குகிறார்.
    • பொதுக் கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி கலந்து கொண்டு பேசுகிறார்.

    விருதுநகர்:

    விருதுநகரில் பெருந்தலைவர் காமராஜரின் 121-வது பிறந்த நாள் விழா நாளை நடக்கிறது. இதில் அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

    பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளான ஜூலை 15-ந் தேதி அவர் பிறந்த ஊரான விருதுநகரில் ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் நாளை அவரது 121-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி அவரது நினைவு இல்லம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மின்னொளியில் ஜொலிக்கிறது.

    விருதுநகர்-மதுரை ரோட்டில் உள்ள அவரது நூற்றாண்டு விழா மணிமண்டபமும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

    விருதுநகர் மாவட்ட செய்திதுறை சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு அவரது நினைவு இல்லத்தில் அமைச்சர்கள், கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு, அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர். பெண்களின் நூற்பு வேள்வியும் நடைபெறுகிறது.

    காமராஜர் பிறந்த நாளையொட்டி மாணிக்கம் தாகூர் எம்.பி., விருதுநகர் கல்வி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-1 தேர்வில் பள்ளி அளவில் முதல் 2 இடங்களை பெற்ற 500 மாணவ-மாணவி களுக்கு காமராஜர் விருது வழங்குகிறார். மேலும் சுகாதாரத்துறையில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவ அலுவலர், நகர்ப்புற, கிராம செவிலியர், சுகாதார ஆய்வாளர், மருத்துவ பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் ஆகியோருக்கு காமராஜர் விருது வழங்கப்பட உள்ளது.

    இதனை தொடர்ந்து நடைபெறும் பொதுக் கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி கலந்து கொண்டு பேசுகிறார். இந்நிகழ்ச்சியில் ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ. ஊர்வசி அமிர்தராஜ், காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் சிரஞ்சீவி ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை விருதுநகர் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் ஸ்ரீராஜாசொக்கர், ரங்கசாமி, சிவகாசி எம்.எல்.ஏ. அசோகன் ஆகியோர் செய்து வருகின்றனர். 

    • தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் ஆண்டுதோறும் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது.
    • பொதுக்கூட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள த.மா.கா.வினர் கலந்து கொள்கிறார்கள்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் ஆண்டுதோறும் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. அந்த வகையில் இந்த வருடம் பெருந்தலைவரின் 121-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் ஈரோடு மாநகரில் வருகிற 15-ந்தேதி மாலை 4 மணி முதல் 9 மணி வரை நடைபெறும்.

    பொதுக்கூட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள த.மா.கா. வினர் கலந்து கொள்கிறார்கள். இக்கூட்டத்தில் தமிழகத்தில் உள்ள பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • வருகிற 15-ந்தேதி த.மா.கா. சார்பில் ஈரோடு மாநகரில் காமராஜரின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
    • காமராஜர் பிறந்தநாள் பொதுக்கூட்டம் தொடர்பான சென்னை மண்டல ஆலோசனைக் கூட்டத்தில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டார்.

    சென்னை:

    வருகிற 15-ந்தேதி (சனிக்கிழமை), த.மா.கா. சார்பில் ஈரோடு மாநகரில் காமராஜரின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு இன்று (சனிக்கிழமை) காலை 10.30 மணியளவில், சென்னை, மயிலாப்பூர், சி.ஐ.டி காலனி, கவிக்கோ மன்றத்தில் நடைபெற்ற, காமராஜர் பிறந்தநாள் பொதுக்கூட்டம் தொடர்பான சென்னை மண்டல ஆலோசனைக் கூட்டத்தில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டார்.

    இக்கூட்டத்தில் த.மா.கா.வின் சென்னை மண்டல மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள், துணை அமைப்பு தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    • காமராஜரின் 121 வது பிறந்தநாள் விழாவை கொண்டாடுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
    • பகுதி வாரியாக நிர்வாகிகள் நியமனம் செய்வது என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

    திருப்பூர் :

    காமராஜர் மக்கள் மன்றம் சார்பில் காமராஜரின் 121 வது பிறந்தநாள் விழாவை கொண்டாடுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் தலைவர் அன்னை எம்.மாதவன் தலைமையில், தனியார் ஓட்டலில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் ஜூலை 15-ந்தேதி காமராஜர் பிறந்த நாள் விழாவில் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம், மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், மாணவர்களின் திறன்களை ஊக்குவிக்கும் வகையில் கட்டுரை போட்டி, பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டி, விளையாட்டுப்போட்டி நடத்துதல். ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குதல், மாபெரும் அன்னதானம் வழங்குவது,திருப்பூர் மாவட்டம் முழுவதும் பகுதி வாரியாக நிர்வாகிகள் நியமனம் செய்வது என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இந்த கூட்டத்தில் செயலாளர் அலெக்ஸ், பொருளாளர் பழனியப்பன், துணை தலைவர் பிரான்ஸிஸ், துணை செயலாளர் அந்தோணி, இணைசெயலாளர்கள் டி.எம். சுருளிராஜ், ரமேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக ரமேஷ்குமார், ஜெயக்குமார், சூர்யா,பரமசிவன், ரத்னா மனோகர், ஈஸ்வரன்,நெல்லை ராஜன், சின்னமணி, சரவணன், மகிஷா , மைக்கேல், ஆத்திசெல்வன், கண்ணன், லாலாகணேசன்,யோகராஜ் ஆகியோர் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.

    • ‘கண்ணியத் தலைவர் காமராஜரின் கதை’, ‘சரித்திரம் படைத்த சான்றோர்கள்’ ஆகிய 2 தலைப்பிலான புத்தகங்களை கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டார்.
    • வளர்ச்சியின் நாயகன் காமராஜர். ஒரு முதலமைச்சர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக அவர் திகழ்கிறார்.

    சென்னை:

    காமராஜர் பிறந்தநாள் விழாவையொட்டி 8 துறை சாதனையாளர்களுக்கு தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் விருது வழங்கி கவுரவித்தார்.

    இந்திய நாடார்கள் பேரமைப்பு சார்பில் காமராஜரின் 120-வது பிறந்தநாள் விழா சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மியூசிக் அகாடமி கலையரங்கத்தில் நடைபெற்றது. விழாவுக்கு இந்திய நாடார்கள் பேரமைப்பின் நிறுவனர்-தலைவர் ராகம் சவுந்தரபாண்டியன் தலைமை தாங்கினார்.

    சிறப்பு விருந்தினராக தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டார்.

    விழாவில் 'பொறையார் ராவ்பகதூர் ரத்தினசாமி நாடார் விருது' (பத்திரிகை மற்றும் ஊடகத்துறை) 'தினத்தந்தி' குழும இயக்குனர்கள் பா.சிவந்தி ஆதித்தன், பா.ஆதவன் ஆதித்தன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

    'பெருந்தலைவர் காமராஜர் விருது' (பொருளாதாரத்துறை) 'ஆடிட்டர்' டி.ஜி.ராஜன், 'தமிழர் தந்தை' சி.பா.ஆதித்தனார் விருது' (சமூகம் மற்றும் மகளிர் மேம்பாட்டுத்துறை) 'ரெப்கோ' வங்கியின் தலைமை நிர்வாக இயக்குனர் ஆர்.எஸ்.இசபெல்லா, 'பட்டிவீரன் பட்டி சவுந்தரபாண்டியன் நாடார் விருது' (மருத்துவத்துறை) பிவெல் மருத்துவமனை குழும தலைவர் டாக்டர் சி.ஜெ.வெற்றிவேல், 'எல்லைகாத்த மாவீரர் ம.பொ.சி. விருது' (நிதி நிர்வாகம் மற்றும் மேலாண்மை துறை) வருமான வரித்துறை (மும்பை கோட்டம்) இணை கமிஷனர் சுரேஷ் பெரியசாமி, 'கல்விப்பேரொளி செ.அரங்கநாயகம் நாடார் விருது' (கல்வித்துறை) தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை முன்னாள் இயக்குனர் ஆர்.இளங்கோவன், 'தியாகி பெ.சங்கரலிங்க நாடார் விருது' (சுற்றுலா-பண்பாடு சேவைத்துறை) கிராண்ட் எஸ்டான்ஷியா நிர்வாக இயக்குனர் ஏ.ரவிந்திரன், 'குமரி தந்தை மார்ஷல் நேசமணி நாடார் விருது' (புதுமை, பாரம்பரிய தொழில்துறை) எசன்ஷியல் டிரஷன்ஸ் நிர்வாக இயக்குனர் கயல்விழி ராஜா ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

    விழாவில், 'கண்ணியத் தலைவர் காமராஜரின் கதை', 'சரித்திரம் படைத்த சான்றோர்கள்' ஆகிய 2 தலைப்பிலான புத்தகங்களை கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டார். இதனை பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர். தனபாலன், டாக்டர் செந்தில் மா.பொ.சி. ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

    விழாவில் காமராஜருக்கு புகழாரம் செலுத்தி கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:-

    காமராஜரை பார்த்து வளர்ந்தவள் நான். புதுச்சேரியில் அவருடைய பிரமாண்ட சிலையை திறந்து வைக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. நான் சிறுவயதில் எனது தந்தையார் குமரி அனந்தனுடன் காரில் செல்லும்போது, தியாகராய நகரில் உள்ள காமராஜர் வீட்டை பார்த்தவுடன், மகளே 5 நிமிடம் இரு, தலைவரை பார்த்துவிட்டு வருகிறேன் என்று கூறி செல்வார்.

    ஆனால் 5 மணி நேரம் கழித்து தான் வருவார். நான் அவருடைய வீட்டின் வெளியே காத்திருப்பேன். அந்த காற்று பட்டதால்தான் எனக்கு அரசியல் ஆசை வந்தது. காமராஜர் உயிரோடு இருந்திருந்தால் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கொண்டு வந்ததற்காக என்னை பாராட்டி இருப்பார் என்று பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் செலுத்தி இருக்கிறார். வளர்ச்சியின் நாயகன் காமராஜர். ஒரு முதல்-அமைச்சர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக அவர் திகழ்கிறார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் தமிழக பா.ஜ.க. துணை தலைவர் எம்.என்.ராஜா, தொழில் அதிபர் வி.ஜி.சந்தோசம், சினிமா சண்டை பயிற்சியாளர் ஜாக்குவார் தங்கம், இந்திய நாடார்கள் பேரமைப்பு நிர்வாகிகள் தமயந்தி பன்னீர்செல்வம், மாதவன், அகர கட்டுலூர்து நாடார், சி.ராஜேந்திரன், எல்.வி.கந்தசாமி, ஜெயபாலன், ஜெயராம், மார்த்தாண் டன், காந்திசேகர், ராஜ்குமார், மகேஸ்வரி பாலு, ரமேஷ், வெங்கட்ராமன், ஆர்தர், பாலமுருகன், பேச்சியம்மாள், நவகோட்டீஸ்வரன், விஜி சேகர், ஆர்தர், வெங்கடேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர். செயலாளர் கே.எஸ்.மலர்மன்னன் வரவேற்றார். பொருளாளர் சிவக்குமார் நன்றி கூறினார்.

    • கிழக்கு கடற்கரை சாலை சாலவான்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் காமராஜர் பெயரில் புதிய நூலகம் திறக்கப்பட்டது.
    • மாமல்லபுரம் அரசு மேல்நிலை பள்ளியில் பேச்சு போட்டி நடத்தப்பட்டது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தில் உள்ள பள்ளிகளில் பெருந்தலைவர் காமராஜரின் 120-வது பிறந்தநாள் விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. மாமல்லபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் காமராஜரை பற்றி பேசிய அப்பள்ளி மாணவர், மாணவிகளுக்கு பரிசுகளும், இனிப்புகளும் வழங்கப்பட்டது.

    கிழக்கு கடற்கரை சாலை சாலவான்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் காமராஜர் பெயரில் புதிய நூலகம் திறக்கப்பட்டது. நூலகம் அருகில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

    இதையடுத்து மாணவ, மாணவிகள் கோலாட்டம், பரதநாட்டியம், சிலம்பம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு அவர்களுக்கு மாமல்லபுரம் வட்டார நாடார் சங்கம் சார்பில் பரிசு, நோட்டு, புத்தகங்கள் வழங்கப்பட்டது.

    தொடர்ந்து மாமல்லபுரம் அரசு மேல்நிலை பள்ளியில் பேச்சு போட்டி, நடத்தப்பட்டது. விழாவில் மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாந்தகன், திருப்போரூர் வட்டார கல்வி அலுவலர்கள் பாஸ்கரன், சிவசங்கரன், தலைமை ஆசிரியர் ஜாக்குலின் எஸ்தர், நாடார் சங்க நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கல்வியில் மட்டுமின்றி, தொழில்துறை, பாசனம் ஆகியவற்றிலும் தமிழகம் தலை நிமிர்ந்து நிற்கிறது என்றால் அதற்கு அடித்தளம் அமைத்தவர் காமராசர் தான்.
    • தமிழகத்திற்கு பொற்கால ஆட்சி வழங்கிய அவரது வழியில் தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் வழி நடத்துவதற்கு இந்த நாளில் உறுதியேற்போம்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    ஏழைகளுக்கு கல்வி எட்டாக்கனி என்ற நிலையை மாற்றி, அறிவுப்பசி தீர்க்க ஏழைகளுக்கு இலவசக் கல்வி உண்டு; வயிற்றுப்பசி போக்க இலவச உணவும் உண்டு என்று அறிவித்து ஏழைகளின் வாழ்வில் கல்வி ஒளி ஏற்றிய கர்மவீரர் காமராசருக்கு இன்று 120-ஆவது பிறந்தநாள். இது வரலாற்றில் பொன்னாள்.

    கல்வியில் மட்டுமின்றி, தொழில்துறை, பாசனம் ஆகியவற்றிலும் தமிழகம் தலை நிமிர்ந்து நிற்கிறது என்றால் அதற்கு அடித்தளம் அமைத்தவர் காமராசர் தான். தமிழகத்தின் வளர்ச்சிக்கு வித்திட்ட சிவகாமி மைந்தனின் தியாகத்தை அவரது 120-ஆவது பிறந்தநாளில் நினைவு கூர்ந்து போற்றுவோம்.

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் கல்விப்புரட்சி, தொழில் புரட்சி, வேளாண்புரட்சி ஆகிய அனைத்துக்கும் வித்திட்டவர் பெருந்தலைவர் காமராஜர். அவரின் 120-ஆவது பிறந்தநாள் இன்று. தமிழகத்திற்கு பொற்கால ஆட்சி வழங்கிய அவரது வழியில் தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் வழி நடத்துவதற்கு இந்த நாளில் உறுதியேற்போம்.

    உலக அரங்கில் தமிழகத்தை தலைநிமிர வைத்தவர் கர்மவீரர். ஆனால், சென்னை விமான நிலைய உள்நாட்டு முனையத்திலிருந்து நீக்கப்பட்ட அவரின் பெயர் இன்னும் மீண்டும் சூட்டப்படவில்லை. உள்நாட்டு முனையத்திற்கும், மீனம்பாக்கம் மெட்ரோ நிலையத்திற்கும் உடனடியாக காமராசர் பெயர் சூட்டப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காமராஜர் அவரது எளிமை, ஒருமைப்பாடு மற்றும் அடக்கத்திற்கு அடையாளமானவர்.
    • தேசத்திற்கு அவர் செய்த குறிப்பிடத்தக்க பங்களிப்பிற்காக நாங்கள் அவரை நினைவுக்கூறுகிறோம்.

    தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜரின் 120-வது பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுவதும் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், காமராஜரின் பிறந்தநாளையொட்டி காங்கிரஸ் கட்சி சார்பில் மரியாதை செலுத்தப்பட்டுள்ளது.

    மேலும், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது முகநூல் பதிவில், "தமிழகத்தின் முன்னாள் முதல்வர், பாரத ரத்னா, திரு காமராஜரின் பிறந்தநாளில் அவர்களுக்கு பணிவான அஞ்சலிகள்.

    ஒரு உயர்ந்த தலைவர், மக்களுக்கு சேவை செய்வதற்கான விருப்பத்தையும், நேர்மையையும் அவர் உருவகப்படுத்தினார். அவரது தொலைநோக்கு தலைமை தமிழகத்தின் வளர்ச்சியின் பொற்காலத்தை முன்னறிவித்தது" என்றார்.

    காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு அஞ்சலி செலுத்தினார். இவர் தனது டுவிட்டர் பக்கத்தில், " நமது தலைசிறந்த அரசியல் தலைவர்களில் ஒருவரான காமராஜரின் பிறந்தநாள் இன்று. பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக நலனில் தமிழகத்தின் சிறந்து விளங்குவதற்கு அடித்தளமிட்டவர். தேசிய அரசியலில் முக்கியப் பங்காற்றியவர். காமராஜர் அவரது எளிமை, ஒருமைப்பாடு மற்றும் அடக்கத்திற்கு அடையாளமானவர் " என்று குறிப்பிட்டார்.

    தொடர்ந்து, காங்கிரஸ் சார்பில் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில், "தென்னக தலைவர் குமாரசாமி காமராஜூக்கு மரியாதை செலுத்துகிறோம். முன்னாள் காங்கிரஸ் தலைவரும், பிரிக்கப்படாத சென்னை மாநில முதல்வருமான அவர், தமிழக அரசியலில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தார்.

    இன்று, தேசத்திற்கு அவர் செய்த குறிப்பிடத்தக்க பங்களிப்பிற்காக நாங்கள் அவரை நினைவுக்கூறுகிறோம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    • நாம் கல்வி பெற்றிட காமராஜர் முன்னெடுத்த திட்டங்களை தலைமுறைகள் தாண்டியும் எடுத்துக்கூறும்.
    • தரமான கல்வியும் மருத்துவமும் அனைவருக்கும் கிடைத்திடும் வகையில் நாம் செயல்படுத்தி வரும் திட்டங்களை இன்னும் செம்மைப்படுத்திட உறுதிகொள்வோம்.

    சென்னை:

    தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜரின் 120-வது பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுவதும் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    காமராஜரின் 120-வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் சார்பில் இன்று காலை 10 மணியளவில், சென்னை பல்லவன் இல்லம் எதிரில் அமைந்துள்ள அன்னாரின் உருவச்சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள உருவப்படத்துக்கு அமைச்சர்கள் கலந்துகொண்டு மலர்தூவி மரியாதை செலுத்த உள்ளார்கள்.

    இந்த நிலையில், காமராஜர் பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

    பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாள் எனத் தலைவர் கலைஞர் அறிவித்ததே, நாம் கல்வி பெற்றிட அவர் முன்னெடுத்த திட்டங்களைத் தலைமுறைகள் தாண்டியும் எடுத்துக்கூறும்!

    போராடிப் பெற்ற கல்வி உரிமையால், அறிவார்ந்த நற்சமுதாயமாய் விளங்கிடுவோம்!

    கல்வியும் மருத்துவமும் நமது அரசின் இரண்டு கண்கள்!

    தரமான கல்வியும் மருத்துவமும் அனைவருக்கும் கிடைத்திடும் வகையில் நாம் செயல்படுத்தி வரும் திட்டங்களை இன்னும் செம்மைப்படுத்திடப் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளில் உறுதிகொள்வோம்!

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • காமராஜரின் 120 வது பிறந்த நாளை காமராஜரின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கப்படுகிறது.
    • மங்களம் அரசு பள்ளிக்கு தேவையான உபகரண பொருட்கள் வழங்கப்படுகிறது.

    திருப்பூர் :

    காமராஜர் மக்கள் மன்ற தலைவர் எம்.மாதவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கல்வி கண் திறந்த பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் விழாவை காமராஜர் மக்கள் மன்றம் சார்பில் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.அதேபோல் இந்த ஆண்டும் காமராஜரின் 120 வது பிறந்த நாளை வருகிற 15ந்தேதி காமராஜர் மக்கள் மன்றம் சார்பில் ஜாதி மதம் கடந்து காமராஜர் வழியில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    அதன்படிதிருப்பூர் குமரன் காலேஜ் அருகில் பெரியாண்டிபாளையம்மங்கலம் மெயின் ரோட்டில் வருகிற 15-ந்தேதி காலை 7 மணிக்குகாமராஜர் மக்கள் மன்றம் சார்பில் பெருந்தலைவர் காமராஜர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. காலை8 மணிக்கு அனுப்பர்பாளையத்தில் உள்ள காமராஜரின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கப்படுகிறது.

    தொடர்ந்து ஏழை- எளிய மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளும், மங்களம் அரசு பள்ளிக்கு தேவையான உபகரண பொருட்கள் வழங்கப்படுகிறது.தொடர்ந்துபகல் 11.30 மணிக்கு காமராஜர் மக்கள் மன்றத்தின் சார்பில்எஸ்.எஸ்.டெக்ஸ்டைல்ஸ் வளாகத்தில் 5 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. மேற்கண்ட நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் திரளாக கலந்து சிறப்பித்து தரும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இவர் அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை காமராஜர்மக்கள் மன்ற தலைவர் எம்.மாதவன் தலைமையில் செயலாளர் எம்.அலெக்ஸ்,பொருளாளர் எல்.ஐ.சி. கே.பழனியப்பன், துணைத்தலைவர்ஏ.பிரான்சிஸ், துணை செயலாளர் ஜே.அந்தோணி மற்றும் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

    ×