search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kamarajar Birthday"

    • காமராஜரின் 121-வது பிறந்தநாள் விழா கோயம்பேடு மார்கெட்டில் நாளை மாலை 5 மணிக்கு நடக்கிறது.
    • விழாவில் வியாபாரி சங்கங்களின் நிர்வாகிகள், தொழில் அதிபர்கள், கோயம்பேடு வியாபாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கிறார்கள்.

    போரூர்:

    கோயம்பேடு, மதுரவாயல் வட்டார நாடார் ஐக்கிய சங்கம் சார்பில் காமராஜரின் 121-வது பிறந்தநாள் விழா கோயம்பேடு மார்கெட்டில் நாளை (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு நடக்கிறது. விழாவுக்கு சங்க கவுரவ தலைவர்கள் எல்.சி.ராஜேந்திரன், பெப்சி வி.எஸ்.பாலமுரளி ஆகியோர் தலைமை தங்குகிறார்கள். சங்க தலைவர் எல்.கே.என் ராஜா நாடார், மார்கெட் ஜெ.முத்து, பழக்கடை டி.கனகராஜ், மு.வைகுண்ட ராஜா, ஜெ.பால்ராஜ், வ.பெ.ரா.பால்பாண்டியன், கே.முத்துராமன், செ.துரைமாணிக்கம், தங்கம் ஏ.ராமச்சந்திரன், பி.ராஜேஷ் பாண்டியன், பி.கருணாநிதி, ஆர்.எஸ்.பாண்டியன், ஆர்.அழகுநிதி, எஸ்.ஜவகர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். சங்க செயலாளர் ரஸ்னா என்.ராமசந்திரன் வரவேற்றுப் பேசுகிறார்.

    விழாவில் தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம். பி. கலந்து கொண்டு 1521 மாணவ-மாணவிகளுக்கு நோட்டு புத்தகம், ஏழை பெண்களுக்கு புடவை உள்ளிட்ட பல்வேறு நலதிட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார். இதில் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர் தனபாலன், சமத்துவ மக்கள் கழக நிறுவன தலைவர் எர்ணாவூர் ஏ.நாராயணன், தமிழ்நாடு வணிகர் சங்கங் களின் பேரவை தலைவர் த.வெள்ளையன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா, பிரபாகர ராஜா எம். எல். ஏ. , தமிழ் நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் கொளத்தூர் த.ரவி, தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை ஒருங்கிணைப்பாளர் அருண் குமார், நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் மின்னல் ஸ்டீபன், தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் ஜெ.முத்துரமேஷ், இந்திய நாடார் பேரவை தலைவர் ராகம் சவுந்திரபாண்டியன், காமராஜர் ஆதித்தனார் கழக செயலாளர் மின்னல் அந்தோணி, நாடார் மகாஜன சபை தலைவர் கே.எஸ்.எம். கார்த்திகேயன், கோயம்பேடு அனைத்து வியாபாரிகள் சங்க கூட்டமைப்பு தலைவர் ஜி.டி. ராஜசேகரன், பல்வேறு நாடார் சங்கங்கள் மற்றும் வியாபாரி சங்கங்களின் நிர்வாகிகள், தொழில் அதிபர்கள், கோயம்பேடு வியாபாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கிறார்கள்.

    முடிவில் எஸ்.செல்வகுமார் நாடார் நன்றி கூறுகிறார். விழாவுக்கு வரும் அனைவரையும் சிறு மொத்த வியாபாரிகள் சங்க நிர்வாகிகளான எஸ். எஸ். முத்துக்குமார், சி.பி.ரமேஷ், ஆர்.ரத்தினசாமி, ஏ.செல்வ குமார், எஸ்.ஆர்.சி. ரமேஷ் ஆகியோர் வரவேற்கிறார்கள்.

    • விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கும் விழா சாம்பவர்வடகரை இந்து நாடார் உறவின்முறை திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
    • தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் தலைவர் அகரகட்டு லூர்து நாடார் தலைமை தாங்கினார்.

    சாம்பவர் வடகரை:

    தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் சார்பில் பெருந்தலைவர் காமராஜர் 121-வது பிறந்தநாள் விழா, பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா, விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கும் விழா சாம்பவர்வடகரை இந்து நாடார் உறவின்முறை திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    சாம்பவர்வடகரை இந்து நாடார் உறவின்முறை கமிட்டி நிர்வாகிகள் தலைமை தாங்கினார். தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் தலைவர் அகரகட்டு லூர்து நாடார் தலைமை தாங்கினார். சுப்ரமணியன், ஹரிஹர செல்வன், பந்தல் சேர்மன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுச்செயலாளர் ஆனந்த் காசிராஜன் வரவேற்று பேசினார்.

    நிகழ்ச்சியில் மதுரை தமிழ் இலக்கிய மன்ற தலைவர் அவனி மாடசாமி சிறப்புரை ஆற்றினார். தட்சணமாற நாடார் சங்க தலைவர் ஆர்.கே. காளிதாசன் நாடார், வேலன் காபி காமராஜ், ஜெயச்சந்திரன், திருமலைசாமி, சேவியர் ராஜன், அம்மையப்பன் மற்றும் தேவைப்பட்டணம், ராயகிரி, கொட்டாக்குளம், குத்துக்கல்வலசை, பால மார்த்தாண்டபுரம், அய்யாபுரம், சுரண்டை, சிவகிரி, தெற்குசத்திரம், கடையநல்லூர், விந்தங்கோட்டை ஆகிய நாடார் உறவின்முறைகள் நிர்வாகிகள் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.

    முடிவில் தமிழ்நாடு நாடார் உறவின் உறவினர்கள் கூட்டமைப்பின் தலைவர் லூர்து நாடார் நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் நிர்வாகிகள் முருகேசன், மோகன், மாரியப்பன், பரமசிவன், விஜயன் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • வினாடி வினா நிகழ்ச்சியை ஆரணி பேரூராட்சிமன்ற தலைவர் ராஜேஸ்வரி துவக்கி வைத்தார்.
    • முன்னதாக அனைவரையும் உதவி தலைமை ஆசிரியர் பாஸ்கர்பாபு வரவேற்றார்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணியில் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில், பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜரின் 121-வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் பொன்னேரியில் இயங்கி வரும் தமிழாலயா இலக்கிய அமைப்பின் சார்பில் மாணவிகளுக்கான வினாடி-வினா நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில், கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கும், பங்கேற்ற மாணவிகளுக்கும் சான்றிதழ்கள்,நினைவு பரிசு, பதக்கம் உள்ளிட்டவை வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் இ.காவேரி தலைமை தாங்கினார். தமிழாலயா அமைப்பின் நிறுவனரும், அமைப்பாளருமான பொன்.தாமோதரன் முன்னிலை வகித்தார்.வினாடி வினா நிகழ்ச்சியை ஆரணி பேரூராட்சிமன்ற தலைவர் ராஜேஸ்வரி துவக்கி வைத்தார். வெற்றி பெற்ற அணிகளுக்கு ஆரணி பேரூர் திமுக செயலாளர் பி.முத்து நினைவு பரிசு, சான்றிதழ், பதக்கம் உள்ளிட்டவர்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், தமிழாலயா நிர்வாகிகள் கவிஞர்கள் சிவலிங்கம், தனுஷ்கோடி, நாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக அனைவரையும் உதவி தலைமை ஆசிரியர் பாஸ்கர்பாபு வரவேற்றார்.

    முடிவில், உதவி தலைமை ஆசிரியர் தர்மலட்சுமி நன்றி கூறினார்.

    • சிறப்பு விருந்தினர்களாக குமரி எம்.பி விஜய்வசந்த், குளச்சல் எம்.பி ஜே.ஜி.பிரின்ஸ் கலந்துக் கொண்டனர்.
    • பிறந்த நாள் முன்னிட்டு 121 மாணவ மாணவிகளுக்கு நோட்டு, புத்தகங்கள் வழங்கப்பட்டது.

    பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 121 வது பிறந்தநாளை முன்னிட்டு, குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் கே.டி.உதயம் தலைமையில் பிறந்த நாள் விழா நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த், குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் ஜே.ஜி.பிரின்ஸ் ஆகியோர் கலந்துகொண்டு கேக் வெட்டியும், 121 மாணவ மாணவிகளுக்கு நோட்டு, புத்தகங்கள் வழங்கியும் சிறப்பித்தனர்.

    காங்கிரஸ் பேரியக்க மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள், மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள், நகர நிர்வாகிகள், வட்டார நிர்வாகிகள், பேரூராட்சி நிர்வாகிகள், ஊராட்சிமன்ற நிர்வாகிகள், காங்கிரஸ் பேரியக்க துணை அமைப்புகளின் நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

    • காமராஜர் அரங்கில் நிறுத்தப்பட்டிருந்த கார், பராமரிப்பின்றி சேதமடைந்து காணப்பட்டது.
    • தொழிலாளர்களின் கடின உழைப்பால் 30 நாட்களுக்குள் 40 ஆண்டு காலம் சிதலமடைந்து நின்ற கார் தற்பொழுது பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

    பெருந்தலைவர் காமராஜர் எம்.டி.டி.2727 என்ற எண் கொண்ட 1952-ல் அறிமுகப்படுத்தப்பட்ட செவர்லட் கருப்பு நிற காரை பயன்படுத்தி வந்தார். தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்தபோது காமராஜர் பயன்படுத்தி வந்த இந்த காரை முதலமைச்சர் ஆன பிறகும் தொடர்ந்து பயன்படுத்தி வந்தார்.

    3 முறை தமிழக முதலமைச்சராகவும், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவராகவும் பதவி வகித்தாலும் தனது வாழ்நாள் முழுவதும் வாடகை வீட்டில் தான் வசித்து வந்தார் காமராஜர்.

    காமராஜரின் இறப்புக்கு பின்பு அவரது எளிமையான வாழ்க்கையை இளைய தலைமுறையினர் தெரிந்து கொள்ளும் வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி அறக்கட்டளை சார்பில் சென்னை தேனாம்பேட்டையில் காமராஜர் அரங்கம் நிறுவப்பட்டது. அங்கு அவர் பயன்படுத்திய பொருட்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்று தான், அவர் பயன்படுத்திய 'செவர்லட்' கார்.

    அமெரிக்க நாட்டின் தயாரிப்பான செவர்லட் காரை காமராஜர் முதலமைச்சராக இருந்தபோது அவர் பயன்படுத்துவதற்காக டி.வி.எஸ். கம்பெனி நிறுவனர் சுந்தரம் ஐயங்கார் இலவசமாக வழங்கினார். இந்த காரை தான் காமராஜர் தனது வாழ்நாள் இறுதிவரை பயன்படுத்தி வந்தார். காமராஜர் அரங்கில் நிறுத்தப்பட்டிருந்த அந்த கார், பராமரிப்பின்றி சேதமடைந்து காணப்பட்டது. இதனை புனரமைக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியினர் திட்டமிட்டனர்.

    கடந்த ஜூன் ஒன்றாம் தேதி சென்னையில் இருந்து எடுத்துவரப்பட்ட அந்த கார் கிருஷ்ணகிரியில் உள்ள பழுது பார்க்கும் ஆலையில் வைத்து புனரமைக்கப்பட்டது.

    அமெரிக்க நாட்டின் தயாரிப்பான செவர்லட் கார் 1952 ஆம் ஆண்டு மாடல் கொண்டதாகும். காரின் கதவுகள், இருக்கைகள், என்ஜின் போன்றவை ஒவ்வொன்றாக அகற்றப்பட்டு துருப்பிடித்த பாகங்கள் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டது. காரின் கதவுகளுக்கு இடையே வரும் சில்வர் கிரில் சில நாட்களுக்கு முன்பு அமெரிக்காவில் ஆர்டர் செய்து பெறப்பட்டு பொருத்தப்பட்டுள்ளது. ஓடாமல் இருந்த கார் என்ஜின் சரி செய்யப்பட்டு மீண்டும் இயங்கும் வகையில் மாற்றப்பட்டுள்ளது.

    தற்போது புதுப்பொலிவுடன் காமராஜர் பயன்படுத்திய கார் அவரை போலவே கம்பீரமாக தோற்றமளிக்கிறது. தொழிலாளர்களின் கடின உழைப்பால் 30 நாட்களுக்குள் 40 ஆண்டு காலம் சிதலமடைந்து நின்ற கார் தற்பொழுது பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

    பெருந்தலைவர் காமராஜர் வலம் வந்த செவர்லட் கார் கிருஷ்ணகிரியில் மறுசீரமைப்பு செய்யப்பட்டு, சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் பொதுமக்கள் பார்வையிட வைக்கப்பட உள்ளது.

    • முள்ளக்காடு கிங் மேக்கர் காமராஜர் மக்கள் சங்கம் சார்பில் பெருந்தலைவர் காமராஜரின் 121 வது பிறந்த நாள் விழா முள்ளக்காடு நூலக கட்டிடம் அருகே நடைபெற்றது.
    • தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு ரத்ததானம் வழங்கும் நிகழ்ச்சி முள்ளக்காடு பஸ் நிறுத்தம் அருகே உள்ள சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி முள்ளக்காடு கிங் மேக்கர் காமராஜர் மக்கள் சங்கம் சார்பில் பெருந்தலைவர் காமராஜரின் 121 வது பிறந்த நாள் விழா முள்ளக்காடு நூலக கட்டிடம் அருகே நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு உப்பு உற்பத்தியாளர் எல்.ஆர். சிவாகர் தலைமை தாங்கினார். வக்கீல் எம் சொக்கலிங்கம், தர்மகர்த்தாக்கள் சேகர்(என்ற) சந்திரசேகர் ரகுபதி என்ற சின்னராஜ் முன்னில வகித்தனர், முத்தையாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார்,சப் இன்ஸ்பெக்டர் ராஜபிரபு, காமராஜ் கல்லூரி வரலாற்று துறை தலைவர் தேவராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

    நிர்வாகிகள் கோகுல், லிங்க பிரதீஷ், சரத் சரவணன், ரத்தத்தான அணி பொறுப்பாளர்கள் விக்னேஷ், செல்லத்துரை, சமூக வலைதள அணி பொறுப்பாளர் ராபர்ட் ஜெயம், சங்க சட்ட ஆலோசகர் ஸ்ரீநாத் ஆனந்த் ஆகியோர் வரவேற்றனர்,

    பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு ரத்ததானம் வழங்கும் நிகழ்ச்சி முள்ளக்காடு பேருந்து நிறுத்தம் அருகே உள்ள சமுதாய நலக்கூடத்தில் இன்று காலை நடைபெற்றது, இதில் அரசு மருத்துவர்கள் கலந்து கொண்டனர்,முகாமை உப்பு உற்பத்தியாளர்கள் முகேஷ் சண்முகவேல், எல்.ஆர்.சிவகர்,மாநில இளைஞர் காங்கிரஸ் முன்னாள் பொதுச் செயலாளர் எஸ் எம் சகாயராஜ்,ஆகியோர் தொடங்கிவைத்தனர்.

    • ஆலங்குளத்தில் கர்ம வீரர் காமராஜரின் வெண்கல சிலை திறக்கப்படும் செய்தியை டி.பி.வி. கருணாகராஜா வாயிலாக அறிந்தேன்.
    • காமராஜர் எனும் மகத்தான மனிதரை அறிந்து கொள்ளவும் போற்றிப்புகழவும் செய்யக்கூடிய எந்த முயற்சியும் பாராட்டுக்குரியதே.

    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஆலங்குளத்தில் கர்ம வீரர் காமராஜரின் வெண்கல சிலை திறக்கப்படும் செய்தியை டி.பி.வி. கருணாகராஜா வாயிலாக அறிந்தேன். மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். 50 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட மண் சிலை இந்த இடத்தில் இருந்தது.

    சிலையின் முன்பு பிரசாரம் செய்தது நினைவுக்கு வருகிறது. காமராஜர் எனும் மகத்தான மனிதரை அறிந்து கொள்ளவும் போற்றிப்புகழவும் செய்யக்கூடிய எந்த முயற்சியும் பாராட்டுக்குரியதே. இன்றைய தலைமுறைக்கு அவரை கொண்டு சேர்ப்பது நம் கடமை. அதை சரியாக செய்யும் ஆலங்குளம் பகுதி மக்கள் அனைவரையும் மனதார பாராட்டி வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு கமல்ஹாசன் கூறிஉள்ளார்.

    • எம் கருப்புத் தலைவனோ... எங்களுக்கு பாதுகாப்பான... கூரையைத் தந்தான்...
    • பெருந்தலைவனே.. கருப்பாயிருந்தாலும் நீ விளக்கு... நீ வெளிச்சம்...

    எங்கள் பூட்டன் பாட்டன்களின் சரித்திரம்

    புராதன அழுக்கைக் கொண்டது

    சிமினி விளக்கை ஏற்றியும்

    லாந்தரைக் கொளுத்தியும் அகலாதது

    அவர்களைச் சூழ்ந்த இருள்

    புழுதியும் சேறும்தான்

    அவர்களுடைய பகல்

    அத்தைகளைக் கட்டிக்கொடுக்க

    வாங்கிய ஆயிரம் ரூபாய்க்கு

    அவர்களது இடக்கை பெருவிரல்

    வண்டிப்பசை பூசியது

    தெருவுக்கு வந்த வெளிச்சத்திலும்

    அவர்கள் கண்கள் மூடியேக் கிடந்தது

    போய்ச் சேர பேருந்தின்

    வண்ணங்களை ஒடுக்குகளை

    அடையாளம் கண்டவர்கள்

    பாட்டிகள் அத்தைகளின் கதையோ

    இன்னும் மோசம்

    விறகுப் புகையில் இருமி

    பிள்ளைப் பேற்றில்

    செத்துப் போனார்கள்

    குக்கிராமங்களில்

    விலங்குகளைப்போல்

    வாழ்ந்த

    இவர்களைச் சிந்தித்தான்

    ஒரு தலைவன்

    அவனும் படிக்காதவன்

    ஏழை பாழைகளின்..

    பஞ்சைப் பராரிகளின்..

    ஏக்கங்களை..

    பெருமூச்சை..

    கண்ணீரை..

    குருதியைப்

    படித்த மா மேதை

    மண்சுவர் கொண்டு

    கூரை வேய்ந்து

    ஒரு கோவில் செய்தான்

    அதில் ஒரு தண்டவாளத்

    துண்டை மாட்டினான்

    வயிற்றுத் தீயை

    இரண்டு உருண்டை

    சோற்றுப் பருக்கைகளால்

    அணைத்து வைத்தான்

    ஒவ்வொரு குடிசையிலும்

    ஔவைப் பாட்டி

    வலதுகாலெடுத்து வைத்தாள்

    வள்ளுவர் வந்தார்

    கம்பர் வந்தார்

    ஷேக்ஸ்பியர் வந்தார்

    அல்ஜிப்ரா வந்தது

    நியூட்டன் வந்தார்

    குடிசையிலிருந்து

    அப்பா ஆசிரியராய்

    வெளிவந்தார்

    அக்காக்களுக்கு

    டீச்சர் ட்ரைனிங் கனவு

    மருமகள்களுக்கு

    மருத்துவக் கனவு

    எங்களை தெய்வங்கள்கூட

    சற்று தூரத்தில்

    இடுப்பில் துண்டைக் கட்டி

    நிற்க வைத்தது

    எம் கருப்புத் தலைவனோ

    எங்களுக்கு பாதுகாப்பான

    கூரையைத் தந்தான்

    ஆண்களோடு பெண்கள்

    சமமாக அமர

    நாற்காலி தந்தான்

    சாதியைக் காட்டி

    பிடுங்கிக் கொண்ட

    பாடப் புத்தகங்களை

    அவனே மீட்டுக் கொடுத்தான்

    வேறெப்படி சொல்லமுடியும்

    பெருந்தலைவனே..

    கருப்பாயிருந்தாலும்

    நீ விளக்கு

    நீ வெளிச்சம்

    சுயமரியாதை கூடிய

    இத்தலைமுறை

    வாழ்வு நீ தந்தது!

    -கவிஞர் கரிகாலன்

    • தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் ஆண்டுதோறும் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது.
    • பொதுக்கூட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள த.மா.கா.வினர் கலந்து கொள்கிறார்கள்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் ஆண்டுதோறும் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. அந்த வகையில் இந்த வருடம் பெருந்தலைவரின் 121-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் ஈரோடு மாநகரில் வருகிற 15-ந்தேதி மாலை 4 மணி முதல் 9 மணி வரை நடைபெறும்.

    பொதுக்கூட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள த.மா.கா. வினர் கலந்து கொள்கிறார்கள். இக்கூட்டத்தில் தமிழகத்தில் உள்ள பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • வருகிற 15-ந்தேதி த.மா.கா. சார்பில் ஈரோடு மாநகரில் காமராஜரின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
    • காமராஜர் பிறந்தநாள் பொதுக்கூட்டம் தொடர்பான சென்னை மண்டல ஆலோசனைக் கூட்டத்தில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டார்.

    சென்னை:

    வருகிற 15-ந்தேதி (சனிக்கிழமை), த.மா.கா. சார்பில் ஈரோடு மாநகரில் காமராஜரின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு இன்று (சனிக்கிழமை) காலை 10.30 மணியளவில், சென்னை, மயிலாப்பூர், சி.ஐ.டி காலனி, கவிக்கோ மன்றத்தில் நடைபெற்ற, காமராஜர் பிறந்தநாள் பொதுக்கூட்டம் தொடர்பான சென்னை மண்டல ஆலோசனைக் கூட்டத்தில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டார்.

    இக்கூட்டத்தில் த.மா.கா.வின் சென்னை மண்டல மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள், துணை அமைப்பு தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    • தாடிக்கொம்பு காமராஜர் வித்யாலயா நர்சரி -பிரைமரி பள்ளியில் காமராஜரின் 120-வது பிறந்தநாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது.
    • கலை நிகழ்ச்சிகள் மற்றும் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.

    தாடிக்கொம்பு:

    தாடிக்கொம்பு ரோட்டில் உள்ள காமராஜர் வித்யாலயா நர்சரி -பிரைமரி பள்ளியில் காமராஜரின் 120-வது பிறந்தநாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது.

    பின்னர் காமராஜர் உருவபடத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஆடிட்டர் சிற்றம்பல நடராஜன் தலைமை தாங்கினார். காந்திகிராம கிராமிய பல்கலைக்கழக தேர்வாணையர் டாக்டர் சிவராமன் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் அருணாசேம்பர் மணிகண்டன், பள்ளியின் முதல்வர் ஜெர்த்நவநீதம் மற்றும் பள்ளி மாணவ- மாணவிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியின் முடிவில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    • தேனி மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர் சங்கரநாராயணன் தலைமையில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.
    • பள்ளி மாணவ-மாணவிகளுக்கு காமராஜர் வரலாறு, சாதனை பட்டியல் சிறப்பு தொகுப்பாக வழங்கப்பட்டது.

    தேனி:

    காமராஜர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தேனி மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர் சங்கரநாராயணன் தலைமையில் காமராஜ் பவனில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. மதுரை பேராசிரியர் அசோக்ராஜ், வடுகபட்டிபேரூராட்சி துணைத்தலைவர் அழகர் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    அதன்பின் கருணை இல்ல குழந்தைகளுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள், ஏழைப்பெண்களுக்கு சேலைகள், போர்வைகள் வழங்கப்பட்டன.

    காமராஜரால் திறந்து வைக்கப்பட்ட அல்லிநகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு காமராஜர் வரலாறு, சாதனை பட்டியல் சிறப்பு தொகுப்பாக வழங்கப்பட்டது. தேனி நாடார் பள்ளியில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து உறவின்முறை தலைவர் ராஜ்மோகனிடம் சாதனை பட்டியல் வழங்கப்பட்டது.

    சுக்காங்கால்பட்டி, ஓடைப்பட்டி ஆகிய கிராமபள்ளிகளுக்கும் நேரடியாக சென்று காமராஜர் சாதனைபட்டியல் தொகுப்புகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கம்பம் மனோகரன், கண்ணுச்சாமி, மெல்வின், கணேஷ்மிஷ்ரா, முருகன், கஜேந்திரன், வசந்தம் சுப்புராமன், ஈஸ்வரன், ஹக்கீம், ஆரோக்கியராஜ், ராமகிருஷ்ணன், மகாராஜன், போடி ஹரிகரன், பாலையா, ராஜேந்திர பிரசாத் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×