search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தூத்துக்குடியில் பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா- என். ஆர். தனபாலன் பங்கேற்பு
    X

    தூத்துக்குடியில் பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா- என். ஆர். தனபாலன் பங்கேற்பு

    • காமராஜர் சிலை இல்லாத இடங்களில் மறைந்த தலைவரின் அலங்கரிக்கப்பட்ட படத்தை வைத்து மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செய்யப்படும்.
    • மாணவ-மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை தலைவர் என். ஆர். தனபாலன் வழங்குகிறார்.

    சென்னை:

    பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 121 இடங்களில் தலா 121 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. இது குறித்து பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    காமராஜரின் 121-வது பிறந்த நாளையொட்டி பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் 121இடங்களில் தலைவரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து சர்க்கரை பொங்கல், அன்னதானம், மாணவ-மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள், நலிந்த மாணவ - மாணவிகளுக்கு கல்வி கட்டணம், கடந்த ஆண்டில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு ரொக்கப்பரிசு, பொது மக்களுக்கு இனிப்பு வழங்குதல், மாணவ-மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி போன்ற ஏராளமான நிகழ்ச்சிகளை நடத்தி வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு வழங்கப்படும்.

    காமராஜர் சிலை இல்லாத இடங்களில் மறைந்த தலைவரின் அலங்கரிக்கப்பட்ட படத்தை வைத்து மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செய்யப்படும்.

    பெருந்தலைவர் மக்கள் கட்சித்தலைவர் என்.ஆர்.தனபாலன் நாளை (15-ந்தேதி) தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு நாடார் பேரவையும் பெருந்தலைவர் மக்கள் கட்சியும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு காமராஜரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். காலை 9 மணி முதல் சேர்வைக்காரன் மடம், முக்கானி, திருச்செந்தூர், சாத்தான்குளம், பேய்குளம், ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி பெரிய காய்கறி மார்க்கெட், பழைய பஸ்ஸ்டாண்டு, வ.உசி. மார்க்கெட், தருவைகுளம், பனையூர், குளத்தூர் ஆகிய இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இலவச அரிசி, அன்னதானம், வேட்டி சேலை, தையல் இயந்திரங்கள், ஏழை மாணவர்களுக்கு கல்வி கட்டணம், பேச்சு போட்டி கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப்பரிசு, மாணவ-மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை தலைவர் என். ஆர். தனபாலன் வழங்குகிறார்.

    சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் மாநில இளைஞர் அணித்தலைவர் என் ஆர்.டி.பிரேம்குமார் தலைமையில் மாநில செயலாளர் எம்.வி.எம்.ரமேஷ் குமார், செய்தி தொடர்பாளர் ஜி.சந்தானம், மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு தி.நகர் காமராஜர் நினைவு இல்லத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள். பின்னர் சென்னை கோயம்பேடு, வானகரம். மதுரவாயல், விருகம்பாக்கம், எம்.ஜி.ஆர்.நகர் போன்ற இடங்களில் நடைபெறும் காமராஜர் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு அன்னதானம், சர்க்கரை பொங்கல், இலவச வேட்டி சேலை, பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள், ஸ்கூல் பேக் போன்ற கல்வி உபகரணங்களை வழங்குகிறார்கள்.

    இது போன்று தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பெருந் தலைவர் மக்கள் கட்சி சார்பில் காமராஜர் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வருகிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த மாவட்ட நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×