search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கண்காணிப்பு கேமரா"

    • அகரம்தென் சந்திப்பு சாலை, பொன்மார் சாலை உள்ளிட்ட 100 இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் தொடங்கி வைத்தார்.
    • ஆயுதப்படை பயிற்சி மையத்திற்காக ஒதுக்கப்பட்ட 25 ஏக்கர் இடத்தில் ஆக்கிரமிப்புகள் பெருகி வருகிறது.

    வண்டலூர்:

    வண்டலூரை அடுத்த வேடமங்கலத்தில் புறகாவல் நிலையம் மற்றும் குற்றச்செயல்களை தடுக்கும் வகையில் கண்டிகை சாலை, அகரம்தென் சந்திப்பு சாலை, பொன்மார் சாலை உள்ளிட்ட 100 இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் தொடங்கி வைத்தார்.

    இதில் ஊராட்சி தலைவர் கல்யாணிரவி, திருப்போரூர் ஒன்றிய குழு தி.மு.க. தலைவர் இதயவர்மன், காட்டாங்கொளத்தூர் ஒன்றிய முன்னாள் தலைவர் சம்பத்குமார், மாவட்ட கவுன்சிலர் கஜேந்திரன், போலீஸ் துணை கமிஷனர் ஜோஷ்தங்கையா, உதவி கமிஷனர் ரவிக்குமார், ஊராட்சி மன்ற தலைவர்கள் நெடுங்குன்றம் வனிதா ஸ்ரீசீனிவாசன், நல்லம்பாக்கம் லட்சுமணன், ஒன்றிய கவுன்சிலர் கார்த்தி, கீரப்பாக்கம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அரிகிருஷ்ணன், முன்னாள் ஊராட்சி தலைவர் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    அப்போது ஊராட்சி மன்ற தலைவர் கல்யாணிரவி போலீஸ் கமிஷனரிடம் அளித்த கோரிக்கை மனுவில், புதிய புறக்காவல் நிலையத்தில் நிரந்தரமாக சப்-இன்ஸ்பெக்டர் உட்பட 2 போலீசாரை பணியமர்த்த வேண்டும், ஆயுதப்படை பயிற்சி மையத்திற்காக ஒதுக்கப்பட்ட 25 ஏக்கர் இடத்தில் ஆக்கிரமிப்புகள் பெருகி வருகிறது. எனவே அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.

    • பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையம் விநாயகர் கோவில் தெருவில் வீடு கட்டி வாடகைக்கு விட்டுள்ளோம்.
    • சேதப்படுத்திய 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

      பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையம் வாய்க்கால் மேடு தோட்டத்தைச் சேர்ந்த முத்துசாமி மனைவி காந்திமதி பல்லடம் போலீஸ் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது:- பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையம் விநாயகர் கோவில் தெருவில் வீடு கட்டி வாடகைக்கு விட்டுள்ளோம். இந்த நிலையில் கடந்த 17ஆம் தேதி இரவு அங்கு வந்த மர்ம நபர்கள் 6 பேர் வீட்டின் முன்பு பொறுத்தி இருந்த 3 கண்காணிப்பு கேமராக்களை உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். கேமராக்களை உடைக்கும் முன்பு அதில் 6 பேர் உள்ளதாக தெரிகிறது. எனவே கண்காணிப்பு கேமராக்களை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் .இவ்வாறு அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகாரின் பேரில் சுமார் 26 ஆயிரம் மதிப்புள்ள 3 கண்காணிப்பு கேமராக்களை சேதப்படுத்திய 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • வருகிற 17-ந்தேதி முதல் கன்னியாகுமரியில் சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன் தொடங்க இருக்கிறது
    • ஒரு லாட்ஜில் சமீபத்தில் ஒரு கும்பல் அறை எடுத்து தங்கி இருந்து பணம் இரட்டிப்பு மோசடியில் ஈடுபட்டது உங்கள் அனைவருக்கும் தெரியும்

    கன்னியாகுமரி, நவ.9-

    கன்னியாகுமரியில் உள்ள ஒரு லாட்ஜில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையை சேர்ந்த ஒரு கும்பல் அறை எடுத்து தங்கி இருந்து பலரிடம் பணம் இரட்டிப்பு மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து கன்னியாகுமரியில் உள்ள லாட்ஜ்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் வருகிற 17-ந்தேதி முதல் கன்னியாகுமரியில் சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன் தொடங்க இருக்கிறது. இதைத் தொடர்ந்து கன்னியாகுமரியில் உள்ள லாட்ஜ்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுப்பது குறித்து ஆலோசிப்பதற்காக லாட்ஜ் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்களின் ஆலோசனைக் கூட்டம் கன்னியாகுமரியில் உள்ள சிங்கார் இன்டர்நேஷனல் ஓட்டலில் நேற்று இரவு நடந்தது.

    கூட்டத்துக்கு குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

    கன்னியாகுமரியில் 100-க்கும் மேற்பட்ட லாட்ஜ்கள் உள்ளன. இதில் ஒரு லாட்ஜில் சமீபத்தில் ஒரு கும்பல் அறை எடுத்து தங்கி இருந்து பணம் இரட்டிப்பு மோசடியில் ஈடுபட்டது உங்கள் அனைவருக்கும் தெரியும். எனவே இனி வரும் காலங்களில் லாட்ஜ்களில் அறை எடுக்க வருபவர்கள் பற்றி முழுமையாக அவர்களை பற்றிய விவரங்களை தெரிந்த பிறகு அறை கொடுக்க வேண்டும். அவர்கள் கொடுக்கும் செல்போன் எண்கள் உண்மையிலேயே அவர்களுடையதுதானா? என்று பரிசோதித்துப் பார்க்க வேண்டும். ஆதார்அட்டை, வாக்காளர் அடையாள அட்டை போன்ற அடையாள அட்டைகள் இல்லாமல் எந்த ஒரு நபருக்கும் லாட்ஜ்களில் தங்குவதற்கு அறை கொடுக்கக் கூடாது.

    சந்தேகப்படும் படியான நபர்கள் யாராவது லாட்ஜூகளில் தங்கி இருந்தால் உடனடியாக போலீசுக்கு தெரியப்படுத்த வேண்டும். அதேபோல நீண்ட நாட்களாக தொடர்ந்து அதே லாட்ஜில் யாராவது தங்கி இருந்தால் அவர்களைப் பற்றிய விவரங்களையும் உடனடியாக போலீசுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

    ஒரு சில லாட்ஜூகளில் நிறைய சமூக விரோத செயல்கள் நடந்து கொண்டிருப்பதாக போலீசுக்கு தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. அவற்றை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். சபரிமலை சீசன் தொடங்குவதற்கு முன் அனைத்து லாட்ஜ்களிலும் சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமரா கட்டாயம் பொருத்தப்பட வேண்டும்.

    இது ஒன்றுதான் குற்றங்களை தடுக்க நிரந்தர தீர்வாகும். எனவே கண்காணிப்பு கேமரா இல்லாத லாட்ஜ்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குறைந்தபட்சம் 90 நாட்களாவது கண்காணிப்பு கேமராவில் பதிவுகள் ஸ்டோர் ஆகி இருக்க வேண்டும். அதேபோல ஒவ்வொரு லாட்ஜூகளிலும் காவலாளிகளை நியமிக்க வேண்டும்.

    இவ்வாறு போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் பேசினார். இந்தக் கூட்டத்தில் கன்னியாகுமரி போலீஸ் டி.எஸ்.பி. ராஜா, கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தகுமாரி, கன்னியாகுமரி லாட்ஜ் உரிமையாளர்கள், சங்க செயலாளர் வக்கீல் ராஜேஷ், துணைத் தலைவர் தாமஸ், பொருளாளர் ஜாண் கென்னடி, மற்றும் 100-க்கும் மேற்பட்ட லாட்ஜ் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்கள் கலந்து கொண்டனர்.

    • உடுமலை வழியாக 4 ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
    • தினமும் நூற்றுக்கணக்கான ரெயில் பயணிகள் பல்வேறு நகரங்களுக்கு சென்று வருகின்றனர்.

    உடுமலை:

    கோவை திண்டுக்கல் வழித்தடத்தில் உடுமலை ரெயில்வே நிலையம் உள்ளது. உடுமலை வழியாக 4 ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தினமும் நூற்றுக்கணக்கான ரெயில் பயணிகள் பல்வேறு நகரங்களுக்கு சென்று வருகின்றனர். இங்கு வரும் பணிகளின் பாதுகாப்பை கருதியும் குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலும் கண்காணிப்பு கேமரா வைக்க ெரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கண்காணிப்பு கேமராக்கள் இயக்கத்தை பல்லடம் நகராட்சி தலைவர் கவிதாமணி ராஜேந்திரகுமார் தொடங்கி வைத்தார்.
    • போலீசார் மற்றும் நகராட்சி நிர்வாகத்தினர் பல்லடம் பஸ் நிலையத்தில் அதிக அளவில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த முடிவுசெய்தனர்.

    பல்லடம்:

    பல்லடம் பகுதியில், நடைபெறும் விபத்துக்கள் மற்றும் குற்றச் சம்பவங்களை கண்காணிக்க பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் அந்த கண்காணிப்பு கேமராக்கள் பழுதடைந்த நிலையில் உள்ளது குறித்தும், பஸ் நிலையத்தில் கண்காணிப்பு கேமராக்களை அதிகளவில் நிறுவவேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த 18ந்தேதி" மாலைமலர் "நாளிதழில் விரிவாக செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து போலீசார் மற்றும் நகராட்சி நிர்வாகத்தினர் பல்லடம் பஸ் நிலையத்தில் அதிக அளவில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த முடிவுசெய்தனர். அதன்படி பல்லடம் பஸ் நிலையம் மற்றும் அம்மா உணவகம் பகுதியில் ரூ.1லட்சத்து15 ஆயிரம் மதிப்பில் 13 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் நடமாட்டத்தை 24 மணி நேரமும் போலீசார்,நகராட்சி நிர்வாகம் மூலம் கண்காணிக்கப்படவுள்ளது.

    இதற்கிடையே கண்காணிப்பு கேமராக்கள் இயக்கத்தை பல்லடம் நகராட்சி தலைவர் கவிதாமணி ராஜேந்திரகுமார் தொடங்கி வைத்தார். இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி, நகர தி.மு.க. செயலாளர் ராஜேந்திரகுமார், திமுக. நிர்வாகிகள் ஜெகதீஷ்,நடராஜ் மற்றும் போலீசார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • குற்றச் சம்பவங்களை கண்காணிக்க பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
    • பல்லடம் பஸ் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் பழுதடைந்து உள்ளது.

    பல்லடம் :

    பல்லடம் நகரில் நடைபெறும் விபத்துக்கள் மற்றும் குற்றச் சம்பவங்களை கண்காணிக்க பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் அந்த கண்காணிப்பு கேமராக்கள் பழுதடைந்த நிலையில் உள்ளதாகவும் அதனை சரி செய்ய போலீசார் நடவடிக்கையை எடுக்க வேண்டுமென தன்னார்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து அவர்கள் கூறியதாவது:- பல்லடம் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் பழுதடைந்து உள்ளன. குறிப்பாக பல்லடம் பஸ் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் பழுதடைந்து உள்ளது. இதனால் குற்றசம்பவங்கள், விபத்துகளை ஏற்படுத்தி விட்டுச் செல்லும் வாகனங்களை கண்டறிய முடியாத நிலை உள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்கும் நேரத்தில், கண்காணிப்பு கேமராக்களின் உதவியால் பல்வேறு இடங்களை போலீசார் கண்காணிக்கலாம். எனவே உடனடி நடவடிக்கை எடுத்து பழுதாகி உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் சரி செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • எடை சரியாக இருக்குமா? என்ற சந்தேகத்தில் வீட்டின் அருகே உள்ள மளிகை கடையில் எடை போட்டு பார்த்தால் அளவு குறைவாகத்தான் இருக்கிறது.
    • அனைத்து ரேஷன் கடைகளிலும் மின்சார தராசை நோக்கி கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும்.

    சென்னை:

    தமிழ்நாடு அரசின் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் ஏழை-எளிய மக்களுக்கு அத்தியாவசிய உணவு பொருட்கள் மலிவு விலையில் கிடைக்கும் வகையில் பொது வினியோக திட்டம் அமலில் இருந்து வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 34 ஆயிரத்து 790 ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. இதன் மூலம் தகுதி உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா புழுங்கல் அரிசி, பச்சரிசி, மானிய விலையில் சர்க்கரை ஒரு கிலோ ரூ.25, துவரம் பருப்பு ஒரு கிலோ ரூ.30, பாமாயில் ஒரு லிட்டர் ரூ.25-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள ஏழை-எளிய மக்களின் பட்டினியை போக்கும் இந்த திட்டத்தில் முறைகேடு நடைபெற்று விடக்கூடாது என்பதில் தமிழக அரசு மிகவும் கவனமாக இருந்து வருகிறது. எனவே ரேஷன் கடையில் எவ்வளவு பொருட்கள் இருப்பு இருக்கிறது? என்ற விவரங்கள் நுகர்பொருள் வாணிப கழகத்தின் இணையதளத்தில் (tnpds) அன்றாடம் பதிவேற்றம் செய்யப்படுகிறது. ரேஷன் கடையின் வெளியே உள்ள தகவல் பலகையில் தினமும் பொருட்கள் இருப்பு விவரங்களை குறிப்பிட வேண்டும் என்று ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. ஆனால் சில ஊழியர்கள் இதனை கடைபிடிப்பது கிடையாது. 'பயோ- மெட்ரிக்' (கை ரேகை பதிவு) முறையும் அமல்படுத்தப்பட்டது. அட்டைதாரர்கள் பொருட்கள் வாங்கியவுடன் அவர்களுடைய செல்போன் எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பப்படுகிறது.

    ரேஷன் கடைகளில் எடைக்கல் தராசு மூலம் அரிசி, சர்க்கரை, பருப்பு போன்ற பொருட்கள் வினியோகம் நடைபெற்ற போது, எடை குறைவு பிரச்சினை எழுந்தது. எனவே எடைக்கல் தராசுக்கு பதில் மக்கள் எடை அளவை சரிபார்த்து வாங்கி கொள்ளும் வகையில் மின்சார தராசு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு தற்போது நடைமுறையில் இருந்து வருகிறது.

    ஆனால் மின்சார தராசிலும் ஒரு சில ஊழியர்கள் முறைகேட்டில் ஈடுபட்டு வருகின்றனர். மக்கள் எடை அளவு சரியாக இருக்கிறதா? என்பதை உற்று நோக்குவதற்குள் கண்ணிமைக்கும் நேரத்தில் சட்டென்று எடையை போட்டு விடுகின்றனர். எடை அளவு முழுமை அடைவதற்குள் கையை வைத்து எடையை ஈடு செய்து பொருட்களை பையில் போடுகின்றனர்.

    இந்த பாணியை பின்பற்றி ஒவ்வொரு அட்டைதாரரிடமும் சர்க்கரை, துவரம் பருப்பில் தலா 50 கிராம் முதல் 100 கிராம் வரையிலும், அரிசியில் கால் கிலோ முதல் அரை கிலோ வரையிலும் எடுத்து விடுகின்றனர் என்பது அட்டைதாரர்களின் ஆதங்கமாக இருக்கிறது.

    ரேஷன் கடைகளில் உள்ள எடை குறைவு பிரச்சினை தொடர்பாக அட்டைதாரர்கள் சிலர் வேதனையுடன் கூறியதாவது:-

    ரேஷன் கடையில் மின்சார தராசில் ஊழியர்கள் பொருட்களை எடை போடும்போது உன்னிப்பாக கவனிப்போம். எடை அளவு நெருங்கும் சமயத்தில் கண்கட்டி வித்தை காட்டுவது போன்று ஊழியர்கள் பொருளை போடுவதும், எடுப்பதும் என்று சில நொடிகளில் குழப்பி விடுகின்றனர்.

    எடை சரியாக இருக்குமா? என்ற சந்தேகத்தில் வீட்டின் அருகே உள்ள மளிகை கடையில் எடை போட்டு பார்த்தால் அளவு குறைவாகத்தான் இருக்கிறது. இது பற்றி ஊழியர்களிடம் கேட்டால், அதெல்லாம் சரியாகத்தான் இருக்கும் என்று வசைபாடுகிறார்கள். இதனால் வேறு வழியின்றி அவர்கள் போடும் எடை அளவை வாங்கி செல்லும் நிர்ப்பந்தம் ஏற்படுகிறது.

    பொது வினியோக திட்டத்தை வெளிப்படை தன்மையுடன் செயல்படுத்தி வரும் தமிழக அரசு, ரேஷன் கடைகளில் உள்ள எடை குறைவு பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே அனைத்து ரேஷன் கடைகளிலும் மின்சார தராசை நோக்கி கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும்.

    இதன் மூலம் முறைகேட்டில் ஈடுபட்டால் கண்காணிப்பு கேமரா காட்டி கொடுத்து விடும் என்ற அச்சம் ஊழியர்கள் மத்தியில் ஏற்படும். இதையடுத்து அனைத்து அட்டைதாரர்களுக்கும் சரியான எடையில் பொருட்கள் கிடைக்கும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • செல்போன் வாங்குவது போல் நடித்து, ஒரு செல்போனை திருடிய 2 பெண்களை, கண்காணிப்பு கேமரா உதவியுடன் ஊழியர்கள் பிடித்து, போலீசில் ஒப்படைத்தனர்.
    • பெண்களையும் பிடித்து விசாரித்தபோது, 2 பெண்களும் செல்போனை திருடவில்லையென கூறினர்.

    புதுச்சேரி:

    காரைக்கால் திருநள்ளாறு சாலையில் உள்ள செல்போன் கடையில், செல்போன் வாங்குவது போல் நடித்து, ஒரு செல்போனை திருடிய 2 பெண்களை, கண்காணிப்பு கேமரா உதவியுடன் ஊழியர்கள் பிடித்து, போலீசில் ஒப்படைத்தனர். காரைக்கால் திருநள்ளாறு சாலையில் உள்ள, தனியார் செல்போன் கடையில், 2 பெண்கள், செல்போன்கள் வாங்குவதாகக் கூறி பல செல்போன்களை எடுத்து காட்டச்சொல்லி பார்த்துள்ளனர். அப்போது கடையின் ஊழியர் கவனிக்காத நேரத்தில், ரூ.8 ஆயிரம் மதிப்பிலான செல்போனை ஒரு பெண் எடுத்து மற்றொரு பெண்ணிடம் கொடுப்பதையும், அந்த செல்போனை அந்தப்பெண் தனது புடவையில் மறைத்து வைப்பதையும், கடையின் மேலாளர் முகமது பக்ருதீன் கண்காணிப்பு கேமராவில் பார்த்துள்ளார்.

    தொடர்ந்து, கடை மேலாளர், ஊழியர்கள் உதவியுடன், 2 பெண்களையும் பிடித்து விசாரித்தபோது, 2 பெண்களும் செல்போனை திருடவில்லையென கூறினர். பின்னர், செல்போனை திருடுவது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது என எடுத்து கூறியதும், 2 பெண்களும் செல்போன் திருடியதை ஒப்புகொண்டனர். தொடர்ந்து, கண்காணிப்பு கேமரா பதிவுகளையும், 2 பெண்களையும், காரைக்கால் நகர போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதன்பேரில், போலீசார் விசாரணை செய்ததில், அந்த 2 பெண்களும், நாகப்பட்டினம் ெரயிலடி தெருவைச் சேர்ந்த பழனியம்மாள் (வயது60) மற்றும் அவரது மகள் மணிமேகலை (36) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து கடை மேலாளர் கொடுத்தப் புகாரின் பேரில், போலீசார் 2 பெண்கள் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    • நேற்று இரவு பள்ளியில் படிக்கும் 4 மாணவர்கள் 4 சி.சி.டி.வி. கேமராக்களை உடைத்துள்ளனர்.
    • மாணவர்கள் பள்ளி சுவர் ஏறி குதித்து 2 வகுப்பறைக்கு பூட்டு போட்டுள்ளனர்.

    தக்கலை:

    தக்கலை அருகே திருவிதாங்கோடு அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு சில அசம்பாவிதங்கள் நிகழ்ந்த காரணத்தால் இங்கு 11 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. மேலும் பள்ளி தலைமை ஆசிரியர் தலைமையில் ஒவ்வொரு வகுப்பிற்கும் ஒவ்வொரு பூட்டு போடப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று இரவு இந்த பள்ளியில் படிக்கும் 4 மாணவர்கள் 4 சி.சி.டி.வி. கேமராக்களை உடைத்துள்ளனர். பின்னர் பள்ளி சுவர் ஏறி குதித்து 2 வகுப்பறைக்கு பூட்டு போட்டுள்ளனர். இன்று பள்ளி சென்ற மாணவர்கள் வகுப்பறைக்கு செல்ல முடியாமல் அவதி அடைந்தனர்.

    இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த மாணவர்களின் பெற்றோர் ஆசிரியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் இதுசம்பந்தமாக தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் நெப்போலியன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் மற்ற கேமராக்களை ஆய்வு செய்தபோது இந்த பள்ளியில் படிக்கும் 4 மாணவர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. உடனே அவர்களை தலைமை ஆசிரியர் அறைக்கு வரவழைத்து விசாரணை செய்தனர்.

    மேலும் இதுசம்பந்தமாக மாவட்ட கல்வி அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×