search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாலைமலர் செய்தி எதிரொலி -  பல்லடம் பஸ் நிலையத்தில் கண்காணிப்பு கேமரா அமைப்பு
    X
    பல்லடம் பஸ் நிலையத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்ட காட்சி. 

    மாலைமலர் செய்தி எதிரொலி - பல்லடம் பஸ் நிலையத்தில் கண்காணிப்பு கேமரா அமைப்பு

    • கண்காணிப்பு கேமராக்கள் இயக்கத்தை பல்லடம் நகராட்சி தலைவர் கவிதாமணி ராஜேந்திரகுமார் தொடங்கி வைத்தார்.
    • போலீசார் மற்றும் நகராட்சி நிர்வாகத்தினர் பல்லடம் பஸ் நிலையத்தில் அதிக அளவில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த முடிவுசெய்தனர்.

    பல்லடம்:

    பல்லடம் பகுதியில், நடைபெறும் விபத்துக்கள் மற்றும் குற்றச் சம்பவங்களை கண்காணிக்க பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் அந்த கண்காணிப்பு கேமராக்கள் பழுதடைந்த நிலையில் உள்ளது குறித்தும், பஸ் நிலையத்தில் கண்காணிப்பு கேமராக்களை அதிகளவில் நிறுவவேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த 18ந்தேதி" மாலைமலர் "நாளிதழில் விரிவாக செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து போலீசார் மற்றும் நகராட்சி நிர்வாகத்தினர் பல்லடம் பஸ் நிலையத்தில் அதிக அளவில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த முடிவுசெய்தனர். அதன்படி பல்லடம் பஸ் நிலையம் மற்றும் அம்மா உணவகம் பகுதியில் ரூ.1லட்சத்து15 ஆயிரம் மதிப்பில் 13 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் நடமாட்டத்தை 24 மணி நேரமும் போலீசார்,நகராட்சி நிர்வாகம் மூலம் கண்காணிக்கப்படவுள்ளது.

    இதற்கிடையே கண்காணிப்பு கேமராக்கள் இயக்கத்தை பல்லடம் நகராட்சி தலைவர் கவிதாமணி ராஜேந்திரகுமார் தொடங்கி வைத்தார். இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி, நகர தி.மு.க. செயலாளர் ராஜேந்திரகுமார், திமுக. நிர்வாகிகள் ஜெகதீஷ்,நடராஜ் மற்றும் போலீசார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×