search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கண்காட்சி"

    • வெள்ளிச்சந்தை அருகே மணவிளையில் அமைந்துள்ள அருணாச்சலா மகளிர் பொறியியல் கல்லூரியில்
    • புதிய தொழில் நுட்ப கண்காட்சி மற்றும் பயிற்சி வழங்கப்பட்டது

    நாகர்கோவில் :வெள்ளிச்சந்தை அருகே மணவிளையில் அமைந்துள்ள அருணாச்சலா மகளிர் பொறியியல் கல்லூரி யில் புதிய தொழில் நுட்ப கண்காட்சி மற்றும் பயிற்சி வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி செயற்கை தொழில் நுட்பம் மற்றும் தரவு அறிவியல் துறை சார்பாக நடத்தப்பட்டது. இதில் மாணவிகள் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய பல்வேறு மாதிரிகளை கண்காட்சிக்கு வைத்திருந்த னர்.இதனை பின்ஒஸ் மென் பொருள் நிறுவனத்தின் தலைவர் மற்றும் இயக்கு னரும் பொறியாளருமான அருண் ராஜிவ் சங்கரன் தொடங்கி வைத்து மாணவி களுக்கு புதிய தொழில் நுட்பங்களுடன் கூடிய புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் முறைகள் பற்றி பயிற்சியளித்தார்.

    கல்லூரியின் முதல்வர் ஜோசப் ஜவகர் தலைமை உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், நுண்ணறிவு தொழில் நுட்பம் எதிர் காலத்தில் அனைவராலும் பயன்படுத்த கூடிய தொழில் நுட்பமாகும். எனவே மாணவிகள் இந்த தொழில் நுட்பத்தில் திறமை யை வளர்த்து கொண்டால் எதிர் காலத்தில் சிறந்து விளங்கலாம் என கூறினார்.

    கல்லூரியின் தாளாளர் கிருஷ்ணசுவாமி வாழ்த்தி பேசினார். மேலும் இந்த கண்காட்சியில் முதல் 3 இடங்களை பெற்ற மாணவி களுக்கு கேடயமும், சான்றி தழ்களும் மற்றும் கலந்து கொண்ட அனை வருக்கும் சான்றி தழ்களும் வழங்கி னார். இந்த நிகழ்ச்சியில் கல்லூரியின் இயக்குனர் தருண் சுரத், துறை தலைவி சுனிதா, நிகழ்ச்சி ஒருங்கி ணைப்பாளர்கள் பேரா சிரியை செரினா மற்றும் பெனடிட் டோனா, பேரா சிரிய-பேராசிரியைகள் மற்றும் மாணவிகள் கலந்துகொண்டனர்.

    • தமுக்கம் மைதானத்தில் ஆட்டோ எக்ஸ்போ-2023 கண்காட்சி நாளை வரை நடக்கிறது
    • ஓர்க்ஷாப் டூல்ஸ் உள்ளிட்டவைகள் இடம் பெற்றுள்ளன.

    மதுரை

    தமிழ்நாடு ஆட்டோ மொபைல் மற்றும் அலைடு இன்டஸ்ட்ரீஸ் பெடரேஷன் மற்றும் தமிழ்நாடு மோட்டார் பார்ட்ஸ்டீலர்ஸ் அசோசியே சன் சார்பில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாநில அளவி லான ஆட்டோமொபைல்ஸ் கண்காட்சியை நடத்துகிறது.

    இந்த ஆண்டுக்கான கண் காட்சி மதுரை தமுக்கம் மைதானத்தில் நேற்று தொடங்கியது. கண்காட் சியை சுந்தரம் மோட்டார்ஸ் நிர்வாக இயக்குனர் சரத் விஜயராகவன் திறந்து வைத் தார்.

    இதில், மதுரை மோட் டார்ஸ் பார்ட்ஸ் வியாபாரி கள் சங்கத்தலைவர் சிதம்ப ரம், டி.ஏ.ஏ.ஐ.எப், தலைவர் ராஜேஸ்வரன், கண்காட்சி தலைவர் முருகேசன், செய லாளர் சிதம்பரம், துணை தலைவர் சதீஷ்குமார், பொருளாளர் சிதம்பர நாதன், டி.வி.எஸ். ஆட்டோ மொபைல்ஸ் சொலியூ ஷன்ஸ்மேலாண்மை இயக்கு னர் சீனிவாசராகவன், ரானோ ஆப்டர் மார்க்கெட் பிசினஸ் தலைவர் கிரி பிரசாத், ரூட் இன்டஸ்ட்ரீஸ் இந்தியா நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குனர் சரவணசுந்தரம், எம்.என். ஆட்டோ புராடெக்ட்சுந்தா ராஜன், கண்காட்சி ஒருங்கி ணைப்புகுழு உறுப்பினர் ரவி, லயன் சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த கண்காட்சியானது இன்றும், நாளையும் நடக்கிறது. இதில் முன்னணி இருசக்கர வாகன கார் மற்றும் நிறுவனங்கள், உதிரி பாகங் கள் தயாரிக்கும் முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 140 அரங்குகள் அமைத்துள்ளன.

    குறிப்பாக வாகனங்களின் உதிரி பாகங்கள், உயர், டியூப், பேட்டரி. பேரிங் கேபிள்கள், ஓர்க்ஷாப் டூல்ஸ் உள்ளிட்டவைகள் இடம் பெற்றுள்ளன.

    இந்த கண்காட்சி மெக்கா னிக்குகள் மட்டுமின்றி வாக னங்கள் ஓட்டுனர்கள். வாகன உரிமையாளர்க ளுக்கும் பயனுள்ளதாக இருக்கும். பார்வையா ளர்களுக்கு ஒவ்வொரு மணி நேரத்திற்கு ஒருமுறை குலுக்கல் முறையில் பரிசு கள் வழங்கப்படுகின்றன. கண் காட்சியை இலவசமாக காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை பார்வையிட லாம் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

    • குழந்தை வளர்ச்சி துறை சார்பில் நடந்தது
    • ஏராளமானோர் கலந்துகொண்டனர்

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் இயங்கி வரும் மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரியில் ஊட்டச்சத்து துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி துறை சார்பில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா கல்லூரி செயலர் சிலிக்மிசந்த் ஜெயின் தலைமையில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ம.இன்பவள்ளி வரவேற்புரை வழங்கினார்.

    சிறப்பு அழைப்பா ளர்களாக மாவட்ட திட்ட அலுவலர் செந்தில்குமார், சித்த மருத்துவர் விக்ரம்குமார், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் செல்வி ஆகியோர் கலந்து கொண்டு ஊட்டச்சத்து கண்காட்சியை பார்வை யிட்டனர்.

    இதில் துணை முதல்வர்கள், மக்கள் தொடர்பு அலுவலர் சக்திமாலா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    • திட்டங்கள் குறித்து புகைப்ப டங்கள் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் இடம்பெற்றிருந்தன.
    • இதனை கொட்டாம்பூண்டி ஊராட்சியினை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பார்வை யிட்டனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றியம், கொட்டாம்பூண்டி ஊராட்சியில் தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து பொது மக்கள் அறிந்துகொள்ளும் வகையில் செய்தி மக்கள் தொடர்பு த்துறை சார்பில் புகைப்ப டக்கண்காட்சி நடைபெற்றது. இக்கண்காட்சியில் தமி ழ்நாடு முதல்-அமைச்சரால் நடைமுறைப்படுத்திய திட்டங்கள் குறித்து புகைப்ப டங்கள் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் இடம்பெற்றிருந்தன.

    குறிப்பாக "மக்களை தேடி மருத்துவம்", "இல்லம் தேடிக் கல்வித்திட்டம்", "முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்", "புதுமைப்பெண் திட்டம்", "கள ஆய்வில் முதல்-அமைச்சர்" திட்டம், இருளர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு தேவையான நலத்திட்டங்கள், இலங்கை தமிழர்களுக்கான நலத்திட்ட ங்கள், அமைப்பு சாரா தொழிலாள ர்களுக்கான திட்டங்கள், தமிழ்நாடு முதல் -அமைச்சரின் கனமழை மற்றும் வெள்ள மீட்பு பணி ஆய்வு புகைப்படங்கள் உள்ளிட்ட தமிழக அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் பற்றிய புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தது. இதனை கொட்டாம்பூண்டி ஊராட்சியினை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பார்வை யிட்டனர்.

    • மகளிர் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி தொடங்குகிறது.
    • பாசிமணிமாலைகள் முதலியன விற்பனைக்கு வைக்கப்பட உள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கம், மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்கள் கண் காட்சி ஏ.பி.ஜே.அப்துல் கலாம் தேசிய நினைவி டத்தில் வருகிற 27-ந்தேதி தொடங்கி அக்டோபர் மாதம் 6-ந்தேதி வரை நடை பெற உள்ளது.

    இக்கண்காட்சியில் மகளிர் சுய உதவிக்குழுக்க ளால் தயாரிக்கப்பட்ட பனை ஓலை பொருட்கள், கடல் சிப்பி அலங்கார பொருட்கள், மசாலா பொருட்கள், சணல் பைகள், வீட்டு உபயோக பொருட்கள், சிறு தானிய உணவுகள் மற்றும் தின்பண்டங்கள், சேலைகள், நைட்டிகள், வயர் கூடைகள், உணவு பொருட்கள், பொம்மைகள், பேன்சி பொருட்கள், மண்பானைப்பொருட்கள், பனங்கருப்பட்டிகள், அப்பளம், வடகம், சோப் ஆயில், பினாயில் மற்றும் பாசிமணிமாலைகள் முதலியன விற்பனைக்கு வைக்கப்பட உள்ளது.

    பொதுமக்கள் இநத கண்காட்சியை பார்வை யிட்டு மகளிர் சுய உதவிக் குழு உற்பத்தி பொருட்களை வாங்கி அவர்களின் வாழ் வாதாரத்தை உயர்த்துமாறு கேட்்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சிறுவயதில் மோடி நீர் நிலையிலிருந்து முதலைக்குட்டியை கையில் எடுத்து தைரியமாக பிடித்து வைத்திருப்பது போன்ற படங்களும் அதில் இடம்பெற்றுள்ளன.
    • மோடி பிரதமராகி உலக அரங்கில் இந்தியா சரியான இடத்தை பிடிக்க உதவினார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநில பா.ஜ.க தலைவராக என்.டி. ராமராவ் மகள் புரந்தேஸ்வரி கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொறுப்பேற்றார்.

    அவர் மாநிலம் முழுவதும் பா.ஜ.க.வை வளர்க்க பல்வேறு புதிய ஏற்பாடுகளை செய்து வருகிறார்.

    அதன்படி பிரதமர் மோடியின் பிறந்த நாளை கடந்த 17-ந் தேதி முதல் வருகிற 2-ந் தேதி வரை கொண்டாட மாநிலம் முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் பிரதமர் மோடியின் வாழ்க்கை குறித்த புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

    இதனை பா.ஜ.க. மாநில தலைவர் புரந்தேஸ்வரி தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சியில் பிரதமர் மோடியின் வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்புமுனைகள் ஏராளமான புகைப்படங்கள் மற்றும் புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன.

    சிறுவயதில் மோடி ஒரு நீர் நிலையிலிருந்து முதலைக்குட்டியை கையில் எடுத்து தைரியமாக பிடித்து வைத்திருப்பது போன்ற படங்களும் அதில் இடம்பெற்றுள்ளன.

    இது போன்ற படங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.

    குஜராத்தில் பயங்கர பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட பிறகு மோடி எப்படி குஜராத்தை பொருளாதார சக்தியாக மாற்றினார் என்பது குறித்து படங்கள் இந்த கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன.

    மோடி பிரதமராகி உலக அரங்கில் இந்தியா சரியான இடத்தை பிடிக்க உதவினார்.

    அதற்காக அவர் முழு பாராட்டிற்கு தகுதியானவர். மோடியின் அடிச்சுவடுகளை பின்பற்ற இளைஞர்களை ஊக்குவிப்பதே இந்த கண்காட்சியின் நோக்கம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மேயர் மகேஷ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்
    • சுமார் 25 லட்சம் மக்கள் இதை பார்த்து மகிழ்ந்து உள்ளனர்.

    என்.ஜி.ஓ.காலனி :

    நாகர்கோவில் இந்து கல்லூரி அருகே உள்ள அனாதைமடம் மாநகராட்சி மைதானத்தில் மதுரை எம்.கே.சி. நிறுவனத்தாரின் ஆழ்கடல் குகை மீன்கள் பிரமாண்ட கண்காட்சி மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி நேற்று தொடங்கியது.

    திறப்பு விழாவில் எம்.கே.சி. நிறுவனத்தின் உரிமை யாளர்கள் சிட்டிபாபு, கனகராஜ் ஆகியோர் வரவேற்றனர். நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் பொருட்காட்சி அரங்கை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    தொடர்ந்து பொருட்கா ட்சி அரங்கத்தில் வைக்கப்ப ட்டிருந்த செல்பி பாயிண்டுகள், ஆழ்கடல் மீன்கள் கண்காட்சி அரங்கம், வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி மற்றும் கடைகள் பகுதி, பொழுதுபோக்கு ராட்டினம் பகுதி ஆகி யவற்றை பார்வையிட்டார்.

    விழாவில் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்சி லதா, மண்டல குழு தலைவர்கள் அகஸ்டினா கோகிலவாணி, ஐவகர், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் சதாசிவம், கவுன்சிலர்கள் ஜெயராணி, ரோசிட்டா திருமால், ரமேஷ் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    பொருட்காட்சி குறித்து அதன் உரிமையாளர்கள் சிட்டிபாபு, கனகராஜ் ஆகியோர் கூறியதாவது:-

    மதுரை எம்.கே.சி. நிறுவனம் தமிழ்நாடு முழுவதும் பொருட்காட்சிகளை பிரமாண்டமாக நடத்தி வருகிறது. இப்போது ஆழ்கடல் குகை மீன்கள் கண்காட்சி மற்றும் பொருட்காட்சியை 10 மாவட்டங்களில் சிறப்பாக நடத்தி உள்ளோம். சுமார் 25 லட்சம் மக்கள் இதை பார்த்து மகிழ்ந்து உள்ளனர்.

    இப்போது முதன்முறையாக கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோ விலில் பொருட்காட்சி தொடங்கி உள்ளது. தினமும்

    மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை பொதுமக்கள் கண்டு கழித்து மகிழலாம். அக்டோபர் 30-ந்தேதி வரை 45 நாட்கள் தொடர்ந்து நடைபெறுகிறது.

    ஆழ்கடல் குகை மீன்கள் கண்காட்சியில் ஆழ்கடலில் குகை இருப்பது போல 200 அடி நீளத்தில் செட்டிங் அமைத்து அதில் 50 வகைகளுக்கும் மேற்பட்ட ஆயிரக்கணக்கான கடல் மீன்கள் சுற்றி வரும் அழகு குழந்தைகள் முதல் அனை வரையும் பார்த்து குதூகலம் செய்யும் வகையில் அமைந்துள்ளது.

    கடலுக்கு அடியில் உள்ள மீன்களை நேரில் பார்த்து ரசிப்பது போல இந்த கண்கா ட்சி அமைக்க ப்பட்டுள்ளது. குகைக்குள் முழுவதும் ஏ.சி. வசதி செய்யப்பட்டுள்ளது.

    பொருட்காட்சி அரங்கிற்குள் ஏராளமான விளையாட்டு உபகரண பொருட்கள் கடைகள், குழந்தைகளை மகிழ்விக்கும் பொம்மை பொருட்கள் கடைகள், பேன்சி கடைகள், வீட்டிற்கு தேவையான பொருட ்களை வாங்கி செல்லும் வகையில் வீட்டு உபயோக பொருட்கள் கடைகள் ஆகியவையும் இடம் பெற்றுள்ளன.

    மேலும் ஜெயண்ட் வீல் ராட்டினம், பிரேக் டான்ஸ் ராட்டினம், கொலம்பஸ் மற்றும் டிராகன் ராட்டினம், குழந்தைகள், சிறுவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் சைனா டோரா டோரா, ஹனி பீ ராட்டினம் சன்மூன் ராட்டி னம் போன்ற வகைகளும், 3டி அரங்குகள், பேய் வீடு அர ங்கம் ஆகிய வையும் பிர மாண்ட அளவில் இடம்பெ ற்றுள்ளன.சுனாமி ராட்டினம் சிறுவர்களை குழந்தைகளை குதூகலப்படுத்தும் மேலும் இங்கே தின்பண்டங்கள் உணவகம், உணவு திருவிழா அரங்கமும், பொழுது போக்கு பூங்கா அரங்கமும் இடம்பெற்று ள்ளன.

    பார்க்கிங் வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்ப ட்டுள்ளன. பொது மக்கள் சிறுவர், சிறுமிகள், குழந்தை கள் என அனைவரும் ஆழ்கடல் குகை மீன்கள் கண்காட்சியை பார்த்து வீட்டு உபயோக பொருட்கள் வாங்கி பயனடை யும் படி எம்.கே.சி. நிர்வாகம் சார்பில் கேட்டு க்கொள்கிறோம்.

    • 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
    • அறிவியல் செயல்திட்டம், சிறுதானிய பயன்பாடு குறித்து கண்காட்சி வைத்திருந்தனர்.

    வேதாரண்யம்:

    வேதாரணியம் சி க .சு அரசு மேல்நிலைப் பள்ளியில் வேதாரண்யம் ஒன்றிய அளவிலான வானவில் மன்றம்அறிவியல் கண்காட்சி நடைபெற்றது அறிவியல் கண்காட்சியை பள்ளி தலைமை ஆசிரியர் அன்பழகன் துவக்கி வைத்தார்.

    வேதாரண்யம் ஒன்றியத்தில் உள்ள பன்னாள் ஆயக்காரன்புலம்பஞ்சநதிக்குளம் தகட்டூர் புஷ்பவனம் கோடியக்காடுஉள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட உயர்நிலை மற்றும் நடுநிலைப்பள்ளி சேர்ந்தநூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் மாணவர்கள் அறிவியல் கண்காட்சி அறிவியல் நாடகம் அறிவியல் செயல் திட்டம் சிறுதானிய பயன்பாடு குறித்துகண்காட்சி வைத்திருந்தனர் நிகழ்ச்சியின் நடுவர்களாக அறிவியல் ஆசிரியர் சிவகுமார் செந்தில்குமார் ராஜ்குமார் ரவி ஆகியோர் மாணவ மாணவிகளின் படைப்புகளை தேர்வு செய்து மாவட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    • காரிமங்கலம் அரசு மகளிர் கல்லூரியில் உணவு பாதுகாப்பு துறை சார்பில் சிறுதானிய கண்காட்சி நடைபெற்றது.
    • கண்காட்சியில் மாணவிகள் ஊட்டச்சத்து மற்றும் உணவு கட்டுப்பாட்டு துறையை சேர்ந்த மாணவிகள் சிறு தானியங்கள் மற்றும் சிறுதானியங்களால் செய்த உணவு வகைகளை காட்சிப்படுத்தினர்.

    காரிமங்கலம்

    தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கலை கல்லூரியில் ஊட்டச்சத்து மற்றும் உணவு கட்டுப்பாட்டுதுறை மற்றும் உணவு பாதுகாப்பு துறை சார்பாக சிறுதானிய கண்காட்சி மற்றும் உணவுப் பொருள்களின் பயன்பாடுகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் கீதா தலைமை வகித்தார். இதில் ஊட்டச்சத்து மற்றும் உணவு கட்டுப்பாட்டு துறை தலைவர் செந்தில்குமார், காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.

    நிகழ்ச்சியில் ஊட்டச்சத்து மற்றும் உணவு கட்டுப்பாட்டு துறையை சேர்ந்த மாணவிகள் சிறு தானியங்கள் மற்றும் சிறுதானியங்களால் செய்த உணவு வகைகளை காட்சிப்படுத்தினர். மேலும் கம்பு, திணை, வரகு, குதிரைவாலி, சாமை, கேழ்வரகு, சோளம் மற்றும் கொள்ளு உள்ளிட்ட சிறு தானியங்களில் இயற்கையாகவே புரதம், நார்சத்து, கால்சியம், இரும்பு சத்து, வைட்டமின்கள், தாது உப்புக்கள், காப்பர் போன்ற எண்ணற்ற ஊட்டச்சத் துக்கள் உள்ளன. இவற்றில் செய்யும் உணவு வகைகள் எளிதில் ஜீரணம் ஆகக் கூடியது.

    முக்கியமாக மனிதர்களை பாதிக்கும் பல நோய்களிலிருந்து பாதுகாக் கக்கூடிய தன்மையும் ஆரோக்கியமான உடலை பராமரிக்க சிறு தானியங்கள் முக்கிய பங்கு வகிப்பதாக கண்காட்சியில் எடுத்து ரைத்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஊட்டச்சத்து மற்றும் உணவு கட்டுப்பாட்டு கௌரவ விரிவுரை யாளர்கள் பிரியா, விஜயலட்சுமி, மதுவந்தி மற்றும் கல்லூரி மாணவிகள் ஆகியோர் செய்து இருந்தனர்.

    • கர்ப்பிணிகள், தாய்மார்கள், பிறந்த குழந்தைகளுக்கான காய்கறி, பழம், கீரை வகைகள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது
    • ஊட்டச்சத்து மாத உறுதிமொழியுடன் கையெழுத்து இயக்கம் தொடங்கி வைக்கப்பட்டது

    கோவை,

    தேசிய ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஊட்டச்சத்து குறித்தான விழிப்புணர்வு கண்காட்சியை மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா தொடங்கி வைத்தார்.

    செப்டம்பர் மாதம் தேசிய ஊட்டச்சத்து மாதமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு அந்தந்த மாவட்டங்களில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்படும். அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஊட்டச்சத்து மாதம் குறித்தான விழிப்புணர்வு கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

    இதனை மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா தொடங்கி வைத்து பார்வையிட்டார். இதில் ஊட்டச்சத்து நிறைந்த உணவு பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக கர்ப்பிணி பெண்கள், தாய்மார்கள், பிறந்த குழந்தைகளுக்கு வழங்க வேண்டிய காய்கறிகள் பழங்கள் கீரை வகைகள் என அனைத்தும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

    இந்நிகழ்ச்சியில் 50-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் கலந்து கொண்டனர். இதில் ஊட்டச்சத்து மாத உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டு கையெழுத்து இயக்கத்தை மாவட்ட வருவாய் அலுவலர் தொடங்கி வைத்தார்.

    இந்தமாதம் முழுவதும் அங்கன்வாடி மையங்களில் ஊட்டச்சத்து மாத விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்படுகிறது.

    • சுற்றுலா பயணிகள் கண்டுகளித்தனர்
    • கண்காட்சியை பொதுமக்கள், மாணவ-மாணவிகள் உள்பட பலர் பார்வையிட்டனர்.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரியில் உள்ள மாவட்ட அரசு அருங்காட்சிய கத்தில் ஏராளமான அரிய பொருட்கள் உள்ளன. இந்த பொருள்களின் முக்கியத்து வத்தை எடுத்துக்கூறும் விதமாக மாதம் ஒரு சிறப்பு பொருள் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்தமாதம் கலைநயம் மிக்க பாரம்பரிய விளக்குகள் கண்காட்சிகள் இடம்பெற்றன.

    கலை ஆர்வம் மிக்க நமது முன்னோர்கள் செம்பிலும், பித்தளையிலும் மிகுந்த கலை நுணுக்கத்துடன் வீட்டு உபயோக பொருள்களை வடித்துள்ளனர். அதிலும் குறிப்பாக விளக்குகளில் பல்வேறு வகையான விளக்குகளை பயன்படுத்தி உள்ளனர். இந்த கண்காட்சியை பொதுமக்கள், மாணவ-மாணவிகள் உள்பட பலர் பார்வை யிட்டனர். கண்காட்சியில் இடம் பெற்றுள்ள விளக்குகளை பார்ப்பவர்கள் காமாட்சி அம்மன் விளக்கு என்று கூறினர். ஆனால் உண்மையில் இவை கஜ லட்சுமி விளக்குகள் என்று சொல்லப்படுகின்றன.2 யானைகளுக்கு நடுவில் அம்மன் உள்ளது. கஜம் என்பது சமஸ்கிருதத்தில் யானையை குறிக்கும். 19-ம் நூற்றாண்டில் இந்த மாதிரியான விளக்குகள் பயன்பாட்டுக்கு வந்தன. இங்கு காட்சிப்படுத்தப் பட்டுள்ள விளக்குகள் சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை. நமது முன்னோர்கள் பயன்படுத்திய அரும் பொருட்களின் முக்கியத்துவத்தை இன்றைய தலைமுறையினர் அனைவருக்கும் தெரிவிப்பதே கண்காட்சியின் நோக்கம் என்று கன்னியாகுமரி மாவட்ட அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ.சத்திய வள்ளி தெரிவித்தார்.

    • அகில இந்திய நாய்கள் கண்காட்சி சேலம் நான்கு ரோடு சிறுமலர் பள்ளி வளாகத்தில் நடந்தது.
    • 45 வகையான 425 நாய்கள் கலந்து கொண்டன.

    சேலம்:

    அகில இந்திய நாய்கள் கண்காட்சி சேலம் நான்கு ரோடு சிறுமலர் பள்ளி வளாகத்தில் நடந்தது.

    இந்த கண்காட்சியில் பூனா, கோலாப்பூர், மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், போபால், கொல்கத்தா, மற்றும் பல மாநிலங்களில் இருந்து பொமோரியன், டேஸ் ஹவுண்ட், பீகிள், ராடுவில்லர், டால்மேசன், கேன் கார்சோ, செயின்ட், கிரேடன், ராஜபாளையம், புல்டாக், சலூகி, பூடுல், ஐரிஸ்டிடம் உள்பட 45 வகையான 425 நாய்கள் கலந்து கொண்டன.

    வெற்றி பெற்ற நாய்களுக்கு பழக்கம் வழங்கப்பட்டது. நடுவர்களாக டாசன், ஆண்டோனியா, ரஞ்சித், முன்ஜால் செயல்பட்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை தலைவர் விசு காளியப்பன் செயலாளர் சாந்தமூர்த்தி பொருளாளர் சீனிவாசன் துணைத் தலைவர்கள் நடராஜ், பிரகாஷ், இணைச் செயலாளர் மோகன்ராஜ், அண்ணாதுரை மற்றும் பலர் செய்திருந்தனர்.

    ×