search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாதனைகள்"

    • திட்டங்கள் குறித்து புகைப்ப டங்கள் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் இடம்பெற்றிருந்தன.
    • இதனை கொட்டாம்பூண்டி ஊராட்சியினை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பார்வை யிட்டனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றியம், கொட்டாம்பூண்டி ஊராட்சியில் தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து பொது மக்கள் அறிந்துகொள்ளும் வகையில் செய்தி மக்கள் தொடர்பு த்துறை சார்பில் புகைப்ப டக்கண்காட்சி நடைபெற்றது. இக்கண்காட்சியில் தமி ழ்நாடு முதல்-அமைச்சரால் நடைமுறைப்படுத்திய திட்டங்கள் குறித்து புகைப்ப டங்கள் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் இடம்பெற்றிருந்தன.

    குறிப்பாக "மக்களை தேடி மருத்துவம்", "இல்லம் தேடிக் கல்வித்திட்டம்", "முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்", "புதுமைப்பெண் திட்டம்", "கள ஆய்வில் முதல்-அமைச்சர்" திட்டம், இருளர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு தேவையான நலத்திட்டங்கள், இலங்கை தமிழர்களுக்கான நலத்திட்ட ங்கள், அமைப்பு சாரா தொழிலாள ர்களுக்கான திட்டங்கள், தமிழ்நாடு முதல் -அமைச்சரின் கனமழை மற்றும் வெள்ள மீட்பு பணி ஆய்வு புகைப்படங்கள் உள்ளிட்ட தமிழக அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் பற்றிய புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தது. இதனை கொட்டாம்பூண்டி ஊராட்சியினை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பார்வை யிட்டனர்.

    • டாக்டர் பிரவீன் அய்யப்பன் அனைவரையும் வரவேற்றார்.
    • பெண்கள் பொதுமக்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

    கடலூர்:

    முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் ஆண்டு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு தி.மு.க. திராவிட மாடல் அரசின் சாதனைகளின் முழக்கங்களுடன் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மகளிரின் மாபெரும் எழுச்சி பேரணி கடலூர் தொகுதி எம்.எல்.ஏ. அய்யப்பன் ஏற்பாட்டின் பேரில் நடைபெற்றது. இப் பேரணிக்கு லீமா அய்யப்பன் தலைமை தாங்கினார். டாக்டர் பிரவீன் அய்யப்பன் அனைவரையும் வரவேற்றார்.

    இப்பேரணி கடலூர் ஜவான்பவன் சாலையில் இருந்து தொடங்கப்பட்டு தமிழக அரசின் சாதனைகளை முழக்கங்களோடு அண்ணா மேம்பாலம், பாரதி சாலை வழியாக கடலூர் சுப்புராய ரெட்டியார் திருமண மண்டபத்தில் முடிவடைந்தது. மாநகராட்சி கவுன்சிலர்கள் கீதா குணசேகரன், சுமதி ரங்கநாதன், மகேஸ்வரி விஜயன், ராதிகா பிரேம்குமார், கீர்த்தனா ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் பேரணியில் மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் வி.எஸ்.எல். குணசேகரன், லட்சுமி செக்யூரிட்டி சர்வீஸ் கே.ஜி.எஸ் தினகரன், வக்கீல் சுந்தர், தொழிலதிபர் சித்ராலயா ரவிச்சந்திரன், கூட்டுறவு சங்க தலைவர்கள் ஆதி பெருமாள், ரவிச்சந்திரன், தொழிலதிபர் உமா சந்திரன், அரசு ஒப்பந்ததாரர் ராஜசேகர்,மாநகராட்சி கவுன்சிலர்கள் பிரகாஷ், தமிழரசன், சரத் தினகரன், பாருக் அலி, கர்ணன் மற்றும் நிர்வாகிகள் ஊராட்சி மன்ற தலைவர்கள் அனைத்து நிர்வாகிகள் மற்றும் பெண்கள் பொதுமக்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

    • தமிழகம் விளையாட்டுத்துறையில் வியத்தகு சாதனைகளை புரிகிறது என அமைச்சர் பெரியகருப்பன் பேசினார்.
    • சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    சிவகங்கை

    சிவகங்கையில் மாவட்ட அளவிலான முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. கலெக்டர் ஆஷா அஜித் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் மாங்குடி (காரைக்குடி), தமிழரசி(மானாமதுரை) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அமைச்சர் பெரிய கருப்பன் சிறப்பு விருந்தின ராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற 1638 விளை யாட்டு வீரர்-வீராங்கனை களுக்கு கேடயம், பாராட்டு சான்றிதழ், ஊக்கத்தொகை களை வழங்கினார். அப்போது அவர் பேசிய தாவது:-

    முதல்-அமைச்சர் எல்லோருக்கும் எல்லாமும் என்ற அடிப்படையில், அனைத்து மக்கள் நலத்திட்டங்களையும் தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தி, பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்து வருகிறார். அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றம் அடையும் வகையில், தமிழகத்தில் பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    அதில் குறிப்பாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கணையர்களை ஊக்குவிக்கும் பொருட்டும், தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலும், முதல்-அமைச்சரின் அறிவுரையின்படி, விளையாட்டுத்துறையில் வியத்தகு சாதனைகளை மேற்கொண்டு, 60 ஆண்டுகளாக செய்ய வேண்டிய வேலையை ஆறே மாதங்களில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு, இத்துறையை மேம்படுத்தி வருகிறார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில், கல்லல் ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் சொர்ணம் அசோகன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ரமேஷ்கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஓராண்டில் ரூ.12 கோடியே 93 லட்சத்து 34 ஆயிரத்திற்கு பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
    • நிகழ்ச்சியில் நகராட்சி கமிஷனர் பாரி ஜான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கடையநல்லூர்:

    கடையநல்லூர் நகராட்சியில் தி.மு.க. சேர்மனாக மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் பதவி ஏற்று ஓராண்டு நிறைவு பெற்றதையடுத்து கடந்த ஓராண்டில் மட்டும் அனைத்து வார்டுகளுக்கும் ரூ.12 கோடியே 93 லட்சத்து 34 ஆயிரத்திற்கு பல்வேறு வளர்ச்சி பணிகளும், மக்களின் அத்தியாவசிய அடிப்படை சுகாதாரம் மற்றும் குடிநீர் பணிகள், கல்வி நிதி மற்றும் குடிநீர் பொது நிதியிலிருந்து ரூ.6 கோடியே 57 லட்சம் மதிப்பிலான பணிகள் என மொத்தம் ரூ.19 கோடியே 50 லட்சத்து 34 ஆயிரத்திற்கு வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இதுகுறித்து நகராட்சியின் சாதனைகளான 100 ஆண்டு பேசும் ஓராண்டு சாதனை, திராவிட மாடல் நல்லாட்சி, இதற்கு கடையநல்லூரே சாட்சி! பாகுபாடில்லாத வளர்ச்சிப்பணி, இதுவே தமிழின தலைவர் கற்றுத்தந்த ஆட்சிப்பணி கடையநல்லூர் நகராட்சி என்று அச்சடிக்கப்பட்ட துண்டு பிரசுரங்களை கடையநல்லூரில் பொதுமக்கள் அதிக கூடும் இடங்களான பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், தினசரி மார்க்கெட், அரசு மருத்துவமனை உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் நகராட்சி சேர்மன் பொதுமக்களுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் நகராட்சி கமிஷனர் பாரி ஜான், துணைத்தலைவர் ராசையா, சுகாதார அலுவலர் பிச்சையா பாஸ்கர், ஆய்வாளர்கள் சக்திவேல், சிவா, மேலாளர் சண்முகவேல், நகரமைப்பு அலுவலர் காஜாமைதீன், கவுன்சிலர்கள் முருகன், அக்பர்அலி, அப்துல் வஹாப், மாலதி, தனலட்சுமி, மாரி, முகைதீன் கனி, திவான் மைதீன், ராமகிருஷ்ணன், தங்கராஜ் உட்பட ஏராளமான கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர்.

    • தி.மு.க. நாகை வடக்கு மாவட்ட இளைஞரணி சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் நடந்தது.
    • தி.மு.க அரசின் சாதனைகளையும், கட்சி வளர்ந்து வந்த விதத்தையும் எடுத்துக்கூறி சிறப்புரையாற்றினார்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தி.மு.க. நாகை வடக்கு மாவட்ட இளைஞரணி சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் நடைபெற்றது. நிவேதா முருகன் எம்.எல்.ஏ தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ, நகர செயலாளர் சுப்ராயன் மற்றும் சீர்காழி, கொள்ளிடங்களை சேர்ந்த ஒன்றிய செயலாளர்கள் பிரபாகரன், சசிக்குமார், செல்.சேது ரவிக் குமார், மலர் விழி முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மகா அலெக்சாண்டர் வரவேற்றார்.

    இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ எழிலன், திராவிட இயக்க சொற்பொழிவாளர் சூர்யா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு இளைஞர்களிடையே தி.மு.க அரசின் சாதனைகளையும், திமுக கட்சி வளர்ந்து வந்த விதத்தையும் எடுத்துக்கூறி சிறப்புரையாற்றினார். மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் ஜெ.கே. செந்தில் மற்றும் திமுக நகர்மன்ற உறுப்பினர்கள், இளைஞர் அணி அமைப்பாளர்கள் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.நகர இளைஞரணி அமைப்பாளர் ராஜசேகரன் நன்றிக் கூறினார்.

    • இந்திய சுதந்திர போராட்ட வரலாறு மற்றும் மத்திய அரசின் 8 ஆண்டுகால சாதனைகள் குறித்த புகைப்பட கண்காட்சி கன்னியாகுமரி பழைய பஸ் நிலைய ரவுண்டானா சந்திப்பு அருகே உள்ள பழைய பேரூராட்சி அலுவலக மைதானத்தில் வருகிற 13-ந்தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது. இந்தப் புகைப்படக் கண்காட்சியின் தொடக்க விழா நேற்று மாலை நடந்தது.
    • நிகழ்ச்சியில் குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த், கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.தளவாய்சுந்தரம், நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.எம்.ஆர்.காந்தி, திருவனந்தபுரம் கோட்ட ரெயில்வே பொதுமேலாளர் பி.ஜி.மல்லையா, கீல்தொண்டு நிறுவன இயக்குனர் சிலுவைவஸ்தியான்உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரி,

    இந்தியாவின்75-வது சுதந்திர திருவிழாவையொட்டி இந்திய சுதந்திர போராட்ட வரலாறு மற்றும் மத்திய அரசின் 8 ஆண்டுகால சாதனைகள் குறித்த புகைப்பட கண்காட்சி கன்னியாகுமரி பழைய பஸ் நிலைய ரவுண்டானா சந்திப்பு அருகே உள்ள பழைய பேரூராட்சி அலுவலக மைதானத்தில் வருகிற 13-ந்தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது. இந்தப் புகைப்படக் கண்காட்சியின் தொடக்க விழா நேற்று மாலை நடந்தது.

    இந்த நிகழ்ச்சிக்கு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சகத்தின் தென்மண்டல இயக்குநர் ஜெனரல் எஸ்.வெங்கடேஸ்வர் தலைமை தாங்கினார். சென்னை மண்டல மக்கள் தொடர்பு அலுவலக கூடுதல் இயக்குனர் ஜெனரல் எம். அண்ணாதுரை வரவேற்று பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் மத்திய ரெயில்வே, நிலக்கரி, மற்றும் சுரங்க அமைச்சகத்தின் இணை மந்திரி ராவ்சாகேப் பாட்டீல் தன்வே சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இந்திய சுதந்திர போராட்ட வரலாறு குறித்த புகைப்பட கண்காட்சி அரங்கத்தை திறந்து வைத்து பார்வையிட்டார். அதன் பிறகு மத்திய மந்திரி ராவ்சாகேப் பாட்டீல் தன்வே குத்துவிளக்குஏற்றி 5 நாள் புகைப்படகண்காட்சியை தொடங்கி வைத்துபேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    இன்னும் 25 ஆண்டு களுக்குப் பின்னர் நம்நாடு எப்படி இருக்கும் என்பதை கருத்தில் கொண்டு பிரதமர் மோடி நிதிநிலை அறிக்கையை தயாரித்துள்ளார். 2014-ம்ஆண்டில் நாட்டின் பிரதமராக மோடி பதவியேற்றபோது ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்தார். இந்த 8 ஆண்டு கால ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை பிரதமர் மோடி அடுத்த 25 ஆண்டுகளை கணக்கில் கொண்டு தயாரித்திருக்கிறார்.

    25 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா எப்படி இருக்கவேண்டும் என்று அடிப்படையில் மோடியின் தொலை நோக்கு பார்வையில் அந்த திட்டங்களை தொடர்ந்துசெயல்படுத்தி வருகிறார். 130 கோடி மக்களில் 80 கோடி மக்கள் வறுமை கோட்டுக்கு கீழ் இருக்கிறார்கள். அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தி மேம்படுத்த வீடு இல்லாத ஏழைகளுக்கு வீடுகள், கழிப்பறைகள், மின்சார வசதி, எரிவாயு இணைப்புகள் என்று மக்களின் அடிப்படைத் தேவைகளை அறிந்து சிறந்த முறையில் பிரதமர்மோடி செயலாற்றி வருகிறார். கொரோனா காலகட்டத்தி ல் மக்களுக்கு தடுப்பூசி, மாத்திரை, மருந்துகளை உலகத்திலேயே இலவசமாக வழங்கிய ஒரே பிரதமர் மோடி மட்டும்தான். இந்தியா முழுதும் 130 கோடி மக்களுக்கு இலவச தடுப்பூசி போடவைத்தபெருமை பிரதமர் மோடியை சேரும்.

    ஜன்தன் திட்டத்தின் மூலம் 45 கோடி மக்கள் வங்கிக்கணக்கு தொடங்கும் திட்டத்தை செயல்படுத்திஉள்ளார். கடந்த 8 ஆண்டுகளில் உலகத் தலைவர்களை திரும்பிப் பார்க்க வைத்த பிரதமராக மோடி திகழ்கிறார். 8 ஆண்டுகளில் பிரதமர்மோடி செய்த சாதனைகளை ஒரு நாளில் சொல்ல முடியாது.

    இவ்வாறு மத்திய மந்திரி ராவ்சாகேப் பாட்டீல் தன்வே பேசினார்.

    இந்தநிகழ்ச்சியில் குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த், கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.தளவாய்சுந்தரம், நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.எம்.ஆர்.காந்தி, திருவனந்தபுரம் கோட்ட ரெயில்வே பொதுமேலாளர் பி.ஜி.மல்லையா, கீல்தொண்டு நிறுவன இயக்குனர் சிலுவைவஸ்தியான்உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் வங்கிகள் மூலம் ஏழைகளுக்கு கடன் உதவியாக ரூ.15 கோடியே 60 லட்சத்துக்கான காசோலையை மத்திய மந்திரி ராவ்சாகேப் பாட்டீல் தன்வே வழங்கினார். மகளிர் சுய உதவி குழுவைச்சேர்ந்த பெண்களுக்கும் நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார். முடிவில் சென்னை மண்டல மக்கள் தொடர்பு அலுவலக இயக்குனர் காமராஜ் நன்றி கூறினார். நிகழ்ச்சிகளை கள விளம்பர துணை இயக்குனர் சிவகுமார் தொகுத்து வழங்கினார்.

    ×