search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடையநல்லூர் நகராட்சியில் ஓராண்டு சாதனைகள் குறித்த துண்டு பிரசுரங்கள்
    X

    நகராட்சி சேர்மன் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கிய காட்சி.

    கடையநல்லூர் நகராட்சியில் ஓராண்டு சாதனைகள் குறித்த துண்டு பிரசுரங்கள்

    • ஓராண்டில் ரூ.12 கோடியே 93 லட்சத்து 34 ஆயிரத்திற்கு பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
    • நிகழ்ச்சியில் நகராட்சி கமிஷனர் பாரி ஜான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கடையநல்லூர்:

    கடையநல்லூர் நகராட்சியில் தி.மு.க. சேர்மனாக மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் பதவி ஏற்று ஓராண்டு நிறைவு பெற்றதையடுத்து கடந்த ஓராண்டில் மட்டும் அனைத்து வார்டுகளுக்கும் ரூ.12 கோடியே 93 லட்சத்து 34 ஆயிரத்திற்கு பல்வேறு வளர்ச்சி பணிகளும், மக்களின் அத்தியாவசிய அடிப்படை சுகாதாரம் மற்றும் குடிநீர் பணிகள், கல்வி நிதி மற்றும் குடிநீர் பொது நிதியிலிருந்து ரூ.6 கோடியே 57 லட்சம் மதிப்பிலான பணிகள் என மொத்தம் ரூ.19 கோடியே 50 லட்சத்து 34 ஆயிரத்திற்கு வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இதுகுறித்து நகராட்சியின் சாதனைகளான 100 ஆண்டு பேசும் ஓராண்டு சாதனை, திராவிட மாடல் நல்லாட்சி, இதற்கு கடையநல்லூரே சாட்சி! பாகுபாடில்லாத வளர்ச்சிப்பணி, இதுவே தமிழின தலைவர் கற்றுத்தந்த ஆட்சிப்பணி கடையநல்லூர் நகராட்சி என்று அச்சடிக்கப்பட்ட துண்டு பிரசுரங்களை கடையநல்லூரில் பொதுமக்கள் அதிக கூடும் இடங்களான பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், தினசரி மார்க்கெட், அரசு மருத்துவமனை உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் நகராட்சி சேர்மன் பொதுமக்களுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் நகராட்சி கமிஷனர் பாரி ஜான், துணைத்தலைவர் ராசையா, சுகாதார அலுவலர் பிச்சையா பாஸ்கர், ஆய்வாளர்கள் சக்திவேல், சிவா, மேலாளர் சண்முகவேல், நகரமைப்பு அலுவலர் காஜாமைதீன், கவுன்சிலர்கள் முருகன், அக்பர்அலி, அப்துல் வஹாப், மாலதி, தனலட்சுமி, மாரி, முகைதீன் கனி, திவான் மைதீன், ராமகிருஷ்ணன், தங்கராஜ் உட்பட ஏராளமான கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×