search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கஞ்சா கடத்தல்"

    • கஞ்சா கடத்தி வந்து அம்பத்தூர் தொழிற்பேட்டையில் பணிபுரியும் வட மாநில வாலிபர்களை குறிவைத்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
    • கைதானவர்களிடம் இருந்து 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    அம்பத்தூர்:

    அம்பத்தூர் அடுத்த பட்டரவாக்கம் ரெயில் நிலையத்தில் ரெயிலில் கஞ்சா கடத்தி வந்த வடமாநில வாலிபர்கள் 2 பேரை அம்பத்தூர் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் தனம்மாள் மற்றும் போலீசார் கைது செய்தனர்.

    விசாரணையில் அவர்கள் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த முன்னா நாயக் (34) பிதம்பரநாயக் (28) என்பதும் ஒடிசா மாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தி வந்து அம்பத்தூர் தொழிற்பேட்டையில் பணிபுரியும் வட மாநில வாலிபர்களை குறிவைத்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

    அவர்களிடம் இருந்து 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    • ரெயில் கருப்பூர் ரெயில் நிலையம் அருகே வந்த போது எஸ்.1 கோச்சில் கழிவறை அருகில் சோதனை செய்தபோது கருப்பு கலர் சோல்டர் பேக் தனியாக கிடந்தது.
    • போலியாக சப்-இன்ஸ்பெக்டர் என்று அடையாள அட்டை தயாரித்து ரெயிலில் கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது.

    சேலம்:

    சேலம் வழியாக செல்லும் ரெயில்களில் அதிக அளவில் கஞ்சா உள்பட போதை பொருட்கள் கடத்தப்படுவதும் அதனை தடுக்க ரெயில்வே போலீசார் சோதனை மேற்கொண்டு கைது செய்வதும் வாடிக்கையாகி வருகிறது.

    அதன் தொடர்ச்சியாக சேலம் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தங்கராஜு மற்றும் போலீசார் முனுசாமி, பிரபாகரன், ஆகியோர் ரெயிலில் போதைப் பொருள்கள் கடத்தப்படுகிறதா? என தன்பாத் விரைவு ரெயிலில் காட்பாடி ரெயில் நிலையத்திலிருந்து சேலம் வரை இன்று அதிகாலை சோதனை செய்தனர்.

    அப்போது ரெயில் கருப்பூர் ரெயில் நிலையம் அருகே வந்த போது எஸ்.1 கோச்சில் கழிவறை அருகில் சோதனை செய்தபோது கருப்பு கலர் சோல்டர் பேக் தனியாக கிடந்தது. அதை திறந்து பார்த்த போது அதில் 5 கிலோ கஞ்சா இருந்தது. இதையடுத்து அதன் அருகில் இருந்த நபரை பிடித்து போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்குப்பின் முரணாக கூறினார்.

    இதையடுத்து போலீசார் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது அவர் கஞ்சா கடத்தி வந்ததை ஒத்துக்கொண்டார். மேலும் அவர் தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அருகே உள்ள நடூர் திரிஞ்சிப்பட்டியைச் சேர்ந்த ஜப்ரில் என்பவரது மகன் அப்துல் முஷீத் (24) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

    மேலும் அவரை சோதனை செய்தபோது ஒரு அடையாள அட்டை இருந்தது. அதில் அப்துல் முஷீத் சப்-இன்ஸ்பெக்டர் என்று இருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரிடம் கேட்டதற்கு போலியாக சப்-இன்ஸ்பெக்டர் என்று அடையாள அட்டை தயாரித்து ரெயிலில் கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 228 கிலோ கஞ்சாவும், கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட 2 கார்கள் மற்றும் ஒரு இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்தனர்.
    • கலெக்டர் டாக்டர் செந்தில்ராஜ் 13 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய இன்று உத்தரவிட்டார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதூர்பாண்டியாபுரம் சுங்கசாவடி அருகே 2 கார்களில் 228 கிலோ கஞ்சா கடத்தி வந்த வழக்கில் 13 பேர் கைது செய்யப்பட்டனர்.

    தூத்துக்குடி திரேஸ்புரம், மாதவநாயர் காலனியை சேர்ந்த ஆரோன் (வயது 31), பாரதி நகரை சேர்ந்த இசக்கி கணேஷ் (29), கடலூர் மாவட்டம் தேவானம்பட்டினம் சரவணன் (45), தூத்துக்குடி அண்ணாநகரை சேர்ந்தவர்களான மூக்காண்டி என்ற ராஜா (30), அருண்குமார் (27), காளீஸ்வரன் (24), விக்னேஷ்வரன் (29), திருமேனி (29), கன்னியாகுமரி மாவட்டம் இணையம் பகுதியை சேர்ந்த சஜின்ரெனி (35), தூத்துக்குடி வி.எம்.எஸ் நகர் திருமணிகுமரன் (27), சென்னை புனித தாமஸ் மவுண்ட் பகுதி தயாளன் (45), சாத்தான்குளம் ஆசிர்வாதபுரம் மணிகண்டன் (39) சென்னை மயிலாப்பூரர் சம்பத்குமார் (50) மற்றும் சிலரை தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 228 கிலோ கஞ்சாவும், கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட 2 கார்கள் மற்றும் ஒரு இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்தனர்.

    இந்த வழக்கில் ஆரோன், இசக்கி கணேஷ், சரவணன், மூக்காண்டி (எ) ராஜா, சஜின் ரெனி, திருமணிகுமரன், அருண்குமார், தயாளன், மணிகண்டன், காளீஸ்வரன், விக்னேஷ்வரன், திருமேனி மற்றும் சம்பத்குமார் ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மதுவிலக்கு அமலாக்க பிரிவு டி.எஸ்.பி. சிவசுப்பு தூத்துக்குடி மாவட்ட சூப்பிரண்டிடம் அறிக்கை தாக்கல் செய்தார்.

    இதனைத் தொடர்ந்து மாவட்ட போலீஸ் எஸ்.பி.பாலாஜி சரவணன் தூத்துக்குடி மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில் மாவட்ட கலெக்டர் டாக்டர் செந்தில்ராஜ் 13 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய இன்று உத்தரவிட்டார்.

    அவரது உத்தரவின் பேரில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு டி.எஸ்.பி. சிவசுப்பு ஆரோனை மதுரை மத்திய சிறையிலும், மற்ற 12 பேரையும் பாளையங்கோட்டை மத்திய சிறையிலும் அடைத்தார்.

    இந்த ஆண்டு இதுவரை போக்சோ வழக்குகளில் சம்பந்தப்பட்ட 13 பேர் மற்றும் போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 25 பேர் உட்பட 137பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    • போலீசார் ஆட்டோ ஒன்றை சந்தேகத்தின் பேரில் மடக்கிப்பிடித்து சோதனை மேற்கொண்டனர்.
    • 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இருவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

    சென்னை:

    சென்னை மெரினா காமராஜர் சாலையில் நேற்று இரவு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோ ஒன்றை சந்தேகத்தின் பேரில் மடக்கிப்பிடித்து சோதனை மேற்கொண்டனர்.

    சோதனையில் ஆட்டோவில் கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இருவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்த ராகுல் மகரனா (வயது 18) மற்றும் 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. மேலும் இவர்கள் விஜயவாடாவில் இருந்து ரெயில் மூலம் சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு கஞ்சாவை கடத்தி வந்து பின்னர் ஆட்டோ மூலம் கேளம்பாக்கத்தில் உள்ள பிரபல கஞ்சா வியாபாரி சிவாவிடம் ஒப்படைக்க வேண்டி ஆட்டோவில் சென்றது தெரியவந்தது.

    • போலீசார் தகவல் வந்த இடத்துக்கு விரைந்து சென்றனர்.
    • போலீசார் இவர்கள் 5 பேரிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது.

    கோவை:

    கோவை சரவணம்பட்டி துடியலூர் ரோட்டில் சிலர் கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து போலீசார் தகவல் வந்த இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    அப்போது அங்கு கஞ்சாவை பதுக்கி விற்ற காளப்பட்டி ரைஸ்மில் ரோட்டை சேர்ந்த கால் டாக்சி டிரைவர் ஜனார்த்த னன் (வயது21), மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த கல்லூரி மாணவர் சபரீஷ் (19), கோவில்பாளையம் பாலாஜி நகரை சேர்ந்த லோகேஷ்வரி (23), சரவணம்பட்டி ஜனதா நகரை சேர்ந்த ஆசினா (21), கோவில்பாளையத்தை சேர்ந்த கல்லூரி மாணவி சந்தியா (20) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். போலீசார் இவர்கள் 5 பேரிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது.

    கல்லூரி மாணவியான சந்தியா தனியார் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வருகிறார். இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கஞ்சா விற்பனை செய்வதற்காக தனியாக லிங்கை உருவாக்கி உள்ளார். இதன் மூலம் அவர் கஞ்சா கிடைக்கும் இடம், நேரம் உள்ளிட்ட தகவல்களை கல்லூரி மாணவர்கள் மற்றம் இளைஞர்களுக்கு அனுப்பி கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாணவியை 100-க்கும் மேற்பட்டோர் பின் தொடர்ந்து வந்ததும் தெரிய வந்தது. மேலும் கைது செய்யப்பட்ட லோகேஸ்வரி, ஆசினா ஆகியோர் பட்டப்படிப்பை படித்து முடித்து உள்ளனர்.

    இவர்கள் ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை செய்து உள்ளனர்.

    கைது செய்யப்பட்ட கல்லூரி மாணவி உள்பட 5 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். இவர்களிடம் இருந்து விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 1.2 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • அடுக்குமாடி குடியிருப்பில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.
    • கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

    போரூர்:

    சென்னை கே.கே நகர் பொப்பிலி ராஜா சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.

    சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜ் மற்றும் போலீசார் விரைந்து சென்று கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஆந்திர மாநிலத்தை சேர்ந்த கணேஷ் உள்பட 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 7 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. ஆந்திர மாநிலத்தில் இருந்து ரெயில் மூலம் கஞ்சா கடத்தி வந்து அவரது தந்தை காவலாளியாக வேலை பார்த்து வரும் கே.கே.நகர் அடுக்குமாடி குடியிருப்பில் வைத்து கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

    • ரெயில்களில் கஞ்சா போன்ற போதை பொருட்கள் கடத்தப்படுகிறா? என அடிக்கடி சோதனை செய்வது வழக்கம்.
    • மொரப்பூர் அருகே ரெயில் வந்தபோது பொதுபெட்டியில் இருந்த 2 பைகளை போலீசார் திறந்து பார்த்தனர்.

    சேலம்:

    சேலம் ரெயில்வே போலீஸ் நிலைய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் ரெயில்களில் கஞ்சா போன்ற போதை பொருட்கள் கடத்தப்படுகிறா? என அடிக்கடி சோதனை செய்வது வழக்கம்.

    அதன்படி ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்திற்கு வந்த பிலாஸ்பூர் - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் விரைவு வண்டியில் சேலம் ரெயில்வே போலீசார் சோதனை நடத்தினர். இதில் மொரப்பூர் அருகே ரெயில் வந்தபோது பொதுபெட்டியில் இருந்த 2 பைகளை போலீசார் திறந்து பார்த்தனர். அதில் 16 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதனை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த பைகளை கொண்டு வந்த சேலம் சிவதாபுரம் பகுதியை சேர்ந்த சிவா (50) என்பவரிடம் விசாரணை நடத்தினர். இதில் விஜயவாடாவில் இருந்து கஞ்சா கடத்தி வந்ததாக அவர் தெரிவித்தார். இதையடுத்து அவரை சேலம் ரெயில்வே போலீஸ் நிலையம் அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் தண்டையார்பேட்டை காலரா ஆஸ்பத்திரி அருகில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
    • காசிமேட்டைச் சேர்ந்த ரவுடி ரவி என்கிற பவுடர் ரவி கஞ்சா கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது.

    ராயபுரம்:

    ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து ரெயில் மூலம் சென்னை தண்டையார்பேட்டைக்கு கஞ்சா கடத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து போலீசார் தண்டையார்பேட்டை காலரா ஆஸ்பத்திரி அருகில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது ஆட்டோவில் கஞ்சா கடத்திய 4 பேர் பிடிபட்டனர்.

    விசாரணையில் காசிமேட்டைச் சேர்ந்த ரவுடி ரவி என்கிற பவுடர் ரவி கஞ்சா கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது. இவர் மீது 2 கொலை, 2 ஏ.டி.எம். கொள்ளை என மொத்தம் 62 வழக்குகள் உள்ளது. மேலும் எண்ணூர் வ.உ.சி. நகரைச் சேர்ந்த பிரசாந்த், திருவொற்றியூர் கார்கில் நகரைச் சேர்ந்த சம்சுதீன், புதுவண்ணாரப்பேட்டை தனபால் நகரை சேர்ந்த குணா என்கிற குணசேகரன் ஆகியோர் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு கைதானார்கள். அவர்களிடமிருந்து 10 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இதுபோன்று ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட தாய்-மகளான பூங்கொடியும், அவரது மகளும் பிடிபட்டனர்.

    • ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி ராஜமுந்திரி பகுதியில் இருந்து கன்டெய்னர் லாரியில் கஞ்சாவை கடத்தி வந்துள்ளனர்.
    • தூத்துக்குடிக்கு கொண்டு சென்று அங்கிருந்து படகு மூலம் இலங்கைக்கு கடத்த முயன்றது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.

    கயத்தாறு:

    தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு சுங்கச்சாவடி அருகே தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ரவிக்குமார், ராஜபிரபு, பிரெட்ரிக் ராஜன் ஆகியோர் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த கன்டெய்னர் லாரியை சோதனை செய்தனர். அதில் இருந்த 3 பேரும் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் கன்டெய்னரை திறந்து சோதனை செய்தனர். அப்போது கன்டெய்னரின் மேல் பகுதியில் ஒரு ரகசிய அறை 300 பிளாஸ்டிக் பைகளில் 600 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு சுமார் ரூ. 1 கோடி ஆகும். இதையடுத்து லாரியில் இருந்தவர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

    அதில், லாரி டிரைவர் புதுச்சேரி ஏனாம் பகுதியை சேர்ந்த சத்திபாபு (வயது 39), தூத்துக்குடி ஸ்டேட் பேங்க் காலனியை சேர்ந்த விஜயகுமார் (36), தூத்துக்குடி ஆரோக்கியபுரம் கோவில் பிள்ளைவிளையைச் சேர்ந்த மத போதகர் ஜான் அற்புதபாரத் (33) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் ரூ.1 கோடி மதிப்பிலான கஞ்சா மற்றும் லாரியை பறிமுதல் செய்தனர்.

    கைது செய்யப்பட்ட 3 பேரையும், பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மற்றும் லாரியையும் போலீசார் கோவில்பட்டி மதுவிலக்கு மற்றும் அமலாக்கத்துறை போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக மது விலக்கு பிரிவு துணை சூப்பிரண்டு சிவசுப்பு, இன்ஸ்பெக்டர் சாந்தி ஆகியோர் விசாரணை நடத்தினர். அப்போது கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

    ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி ராஜமுந்திரி பகுதியில் இருந்து கன்டெய்னர் லாரியில் கஞ்சாவை கடத்தி வந்துள்ளனர். அதனை தூத்துக்குடிக்கு கொண்டு சென்று அங்கிருந்து படகு மூலம் இலங்கைக்கு கடத்த முயன்றது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.

    மேலும் தூத்துக்குடியை சேர்ந்த ஒருவர் கூறியதன் பேரில் ஆந்திராவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்ததாக தெரிவித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். அவரை பிடித்தால் தான் இதில் மேலும் யார்-யாருக்கு தொடர்பு உள்ளது என்பது தெரியவரும் என்பதால் அவரை கைது செய்யும் பணியில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    • நவீன் குமாரை போலீசார் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
    • புதுக்கோட்டையைச் சேர்ந்த பாலாஜி என்ற கைதியிடம் 10 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    செங்குன்றம்:

    புழல் சிறையில் தண்டனை கைதிகள் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் கஞ்சா வழக்கில் கைதாகி தண்டனை சிறையில் இருக்கும் கைதி ஒருவரை சந்திக்க, சென்னை, அண்ணாநகரை சேர்ந்த நவீன் குமார்(24) என்பவர் வந்தார். அப்போது அவர் தின்பண்டங்களை பையில் கொண்டு வந்தார். சந்தேகம் அடைந்த சிறை போலீசார் அந்தப் பையை சோதனை செய்தனர். அதில் 10 கிராம் கஞ்சாவை மறைத்து வைத்து கடத்தி வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    விசாரணையில் நவீன் குமார் அந்த கஞ்சாவை தண்டனை சிறையில் இருக்கும் நண்பரான கோபி நாத் என்பவருக்கு கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து நவீன் குமாரை போலீசார் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    இதுகுறித்து புழல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். புழல் சிறையில் சிறை காவலர்கள் 20-க்கும் மேற்பட்டோர் திடீர் சோதனை செய்தனர். அப்போது சோதனை செய்தபோது உயர் பாதுகாப்பு பிரிவு அறை அருகே கேட்பாரற்று கிடந்த செல்போனை பறிமுதல் செய்தனர். மேலும் திருட்டு வழக்கில் கைதாகி 5 ஆண்டு சிறை தண்டனை பெற்ற செங்குன்றத்தை அடுத்த எடப்பாளையம் பகுதியைச் சேர்ந்த திவசந்தகுமார் என்பவரிடம் 10 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    இதேபோல் புதுக்கோட்டையைச் சேர்ந்த பாலாஜி என்ற கைதியிடம் 10 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இவர்களுக்கு ஜெயிலுக்குள் கஞ்சா, செல்போன் கிடைத்தது எப்படி என்பது குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வீட்டில் சோதனை நடத்தியபோது ஏராளமான கஞ்சா பாக்கெட்டுகள் இருந்தன.
    • கஞ்சா கிடைப்பது எப்படி? தொடர்பில் உள்ள கூட்டாளிகள் குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ராயபுரம்:

    காசிமேடு பள்ளம் பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக காசிமேடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து போலீசார் அந்தப் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக சந்தேகத்திற்கிடமாக வந்த 2 இளம்பெண்களை நிறுத்தி சோதனை செய்தனர்.

    அவர்கள் கஞ்சாவை மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது. விசாரணையில் அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த சுபா (வயது 37), சுதா (38) என்பது தெரிந்தது.

    அவர்கள் வீட்டில் சோதனை நடத்தியபோது ஏராளமான கஞ்சா பாக்கெட்டுகள் இருந்தன. அவற்றை போலீசார் கைப்பற்றினர். இதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் ராஜேஷ் வழக்குப்பதிவு செய்து சுபா, சுதாவை கைது செய்தார்.அவர்கள், செல்போன் மூலம் கஞ்சா ஆர்டர் பெற்று வாடிக்கையாளர்கள் இருக்கும் வீடுகளுக்கே சென்று கஞ்சாவை டோர் டெலிவரி செய்து வந்தது தெரியவந்தது.

    அவர்களுக்கு கஞ்சா கிடைப்பது எப்படி? தொடர்பில் உள்ள கூட்டாளிகள் குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கஞ்சா கடத்தி வந்த கேரள மாநிலம் பத்தினம்திட்டா பகுதியை சார்ந்த பிபின் மோன் பிஜி என்பரை கைது செய்தனர்.
    • கஞ்சாவை கடத்தி வந்து அம்பத்தூர் தொழிற்பேட்டையில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களுக்கு விற்று வந்ததும் தெரிந்தது.

    அம்பத்தூர்:

    அம்பத்தூரை அடுத்த பட்டரவாக்கம் ரெயில்நிலையத்தில் அம்பத்தூர் மதுவிலக்கு பிரிவு ஆய்வாளர் தனம்மாள் மற்றும் அதிகாரிகள் இன்று காலை கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    அப்போது 10 கிலோ கஞ்சா கடத்தி வந்த கேரள மாநிலம் பத்தினம்திட்டா பகுதியை சார்ந்த பிபின் மோன் பிஜி (21)என்பரை கைது செய்தனர். அவர் ஒடிசாவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து அம்பத்தூர் தொழிற்பேட்டையில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களுக்கு விற்று வந்ததும் தெரிந்தது.

    ×