search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காசிமேட்டில் செல்போனில் ஆர்டர் பெற்று வீடுகளுக்கு கஞ்சா சப்ளை செய்த 2 இளம்பெண்கள் கைது
    X

    காசிமேட்டில் செல்போனில் 'ஆர்டர்' பெற்று வீடுகளுக்கு கஞ்சா சப்ளை செய்த 2 இளம்பெண்கள் கைது

    • வீட்டில் சோதனை நடத்தியபோது ஏராளமான கஞ்சா பாக்கெட்டுகள் இருந்தன.
    • கஞ்சா கிடைப்பது எப்படி? தொடர்பில் உள்ள கூட்டாளிகள் குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ராயபுரம்:

    காசிமேடு பள்ளம் பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக காசிமேடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து போலீசார் அந்தப் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக சந்தேகத்திற்கிடமாக வந்த 2 இளம்பெண்களை நிறுத்தி சோதனை செய்தனர்.

    அவர்கள் கஞ்சாவை மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது. விசாரணையில் அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த சுபா (வயது 37), சுதா (38) என்பது தெரிந்தது.

    அவர்கள் வீட்டில் சோதனை நடத்தியபோது ஏராளமான கஞ்சா பாக்கெட்டுகள் இருந்தன. அவற்றை போலீசார் கைப்பற்றினர். இதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் ராஜேஷ் வழக்குப்பதிவு செய்து சுபா, சுதாவை கைது செய்தார்.அவர்கள், செல்போன் மூலம் கஞ்சா ஆர்டர் பெற்று வாடிக்கையாளர்கள் இருக்கும் வீடுகளுக்கே சென்று கஞ்சாவை டோர் டெலிவரி செய்து வந்தது தெரியவந்தது.

    அவர்களுக்கு கஞ்சா கிடைப்பது எப்படி? தொடர்பில் உள்ள கூட்டாளிகள் குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×