search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓவியப்போட்டி"

    • காலை 10 மணி முதல் 12.30 மணி வரை நடக்கிறது
    • பள்ளி மாணவிகள் முன் பதிவு செய்து பங்கேற்கலாம்

    வேலூர்:

    குழந்தைகள் தினமான நவம்பர் 14-ந் தேதியை முன்னிட்டு வேலூர் அரசு அருங்காட்சியகம் சார்பில் 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியருக்காக, நாளை சனிக்கிழமை காலை 10 மணி முதல் 12.30 மணி வரை ஓவியப்போட்டி வேலூர் கோட்டையில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில், நடத்தப்பட உள்ளது.

    ஒவியப்போட்டியின் தலைப்பு வேலூர் மாவட்ட நினைவுச்சின்னங்கள்.

    பள்ளி மாணவர்களின், கலைத்திறனை ஊக்கப்படுத்தும் வகையில் ஒவியப்போட்டியானது 6 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்காக நடத்தப்படவுள்ளது

    ஓவியத்தில் ஆர்வமுள்ள 6 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்கள். இன்று மாலைக்குள் தங்களது பெயரை வேலூர் அரசு அருங்காட்சியகத்தில் பதிவு செய்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. பெயரை பதிவு செய்த மாணவர்கள் மட்டுமே ஒவியப்போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள்.

    பள்ளி ஒன்றுக்கு 3 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கபடுவார்கள். ஒவியப்போட்டிக்கான ஓவிய தாள் மட்டுமே அருங்காட்சியகத்தில் வழங்கப்படும் ஏனைய பொருட்களை மாணவர்களே கொண்டு வரவேண்டும் என தெரிவித்தனர்.

    • சிறைவாசிகளுக்கு ஓவியப்போட்டி நடந்தது
    • தேசிய நூலக வார விழாவினை முன்னிட்டு

    கரூர்:

    பொது நூலகத்துறை கரூர் மாவட்டம் 55-வது தேசிய நூலக வார விழாவினை முன்னிட்டு, சிறைவாசிகளுக்கான ஓவியப்போட்டி கரூர் தாசில்தார் அலுவலக வளாகத்தில் உள்ள கிளை சிறையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட மைய நூலகர் சிவக்குமார் தலைமை வகித்தார். ஓவிய ஆசிரியர் துரைராஜ், ஓவிய போட்டி கருத்துறை வழங்கி நடுவராக செயல்பட்டார். கிளை சிறை கண்காணிப்பாளர் அருணாச்சலம் ஓவியப்போட்டி துவக்கி வைத்து பேசினார். இந்த ஓவிய போட்டியில் 51 சிறைவாசிகள் கலந்து கொண்டு ஆர்வத்துடன் ஓவியம் வரைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

    • எனது வாக்கு எனது உரிமை’ குறித்த ஓவியப்போட்டி நடைபெற்றது
    • அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.

    புதுக்கோட்டை

    இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி எனது வாக்கு எனது உரிமை ஒரு வாக்கின் சக்தி என்ற கருவினை மையமாக கொண்டு விராலிமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இலுப்பூர் தாலுகா அளவிலான ஓவியப்போட்டி இலுப்பூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. போட்டியினை இலுப்பூர் தாசில்தார் வெள்ளைச்சாமி தொடங்கி வைத்தார். இதில் திரளான மாணவிகள் கலந்துகொண்டு ஓவியங்கள் வரைந்தனர். இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் துணை தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்"

    • குழந்தைகள் நல மாதத்தையொட்டி பள்ளி மாணவர்களுக்கு ஓவியப்போட்டி நடைபெற்றது.
    • வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.

    திருப்பூர் :

    திருப்பூர் ஸ்மார்ட்சிட்டி ரோட்டரி சங்கம் மற்றும் ஓ.எம்.எஸ். மருத்துவமனை சார்பில் குழந்தைகள் நல மாதத்தையொட்டி பள்ளி மாணவர்களுக்கு ஓவியப்போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ரோட்டரி மாவட்ட ஆளுனர் இளங்குமரன் கலந்து கொண்டார். கவுரவ விருந்தினராக திருப்பூர் ஸ்மார்ட்சிட்டி ரோட்டரி சங்க பட்டைய தலைவர் பாலசுப்பிரமணியம், மாவட்ட ரத்ததான முகாம் தலைவர் கணேசமூர்த்தி , மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜ், மண்டல ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம், துணை ஆளுனர் கவிதாலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ஓ.எம்.எஸ். மருத்துவமனை நிறுவனர் டாக்டர் ரவிச்சந்திரன், தலைமை கதிரியக்க நிபுணர் டாக்டர் சரோஜா, தலைமை காயம் மற்றும் எலும்பு முறிவு அறுவை சிகிச்சை நிபுணர் அருள்ஜோதி, ேராட்டரி நிர்வாகிகளான தலைவர் ஜெயராமன், செயலாளர் பாலகணேசன், பொருளாளர் பால்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.   

    • 75 நிகழ்வுகள் 75 இடங்களில் நடத்தப்பட்டு வருகிறது.
    • தன்னம்பிக்கை என்பது பள்ளி மாணவர்களுக்கு மிகவும் அவசியம்.

    மடத்துக்குளம் :

    75 வது சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழாவாக உடுமலையில் கொண்டாட பல்வேறு தன்னார்வ அமைப்புகள் இணைந்து 75 நிகழ்வுகள் 75 இடங்களில் நடத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் உடுமலை கலிலியோ அறிவியல் கழகம் மற்றும் உடுமலை சுற்றுச்சூழல் சங்கத்தின் சார்பாக உடுமலை ஆர்.ஜி.எம். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஸ்ரீ விசாலாட்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ,பெத்தேல் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி, என்.வி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் கணக்கும் இனிக்கும் என்ற தலைப்பில் கணிதம் பற்றிய அறிவையும், கணித பாடம் மிகவும் எளிது என்பதை எடுத்துரைக்கும் விதமாகவும் மாயசதுரங்களை எவ்வாறு அமைப்பது என்பது பற்றியும், தங்களது பிறந்த தேதியை கூட எவ்வாறு மாய சதுரமாக மாற்றுவது என்பது பற்றியும் ஓய்வு பெற்ற ரயில்வே நிலைய மேலாளர் ஜோதிலிங்கம் மிகச் சிறப்பாக மாணவர்களுக்கு எடுத்துக்காட்டினார்.

    மேலும் அறிவியல் என்றாலே, ஏன் எதற்கு எப்படி என்ற கேள்விகளை கேட்பது அத்தகைய அறிவியல் விழிப்புணர்வு நிகழ்வினை அறிவியல் தன்னார்வலர் பிரபாகரன் செய்து காண்பித்தார். அதனைத் தொடர்ந்து ஓய்வு பெற்ற மதுரை ரயில்வே நிலையம் பாலசுப்பிரமணியன் தன்னம்பிக்கை என்பது பள்ளி மாணவர்களுக்கு மிகவும் அவசியம். எதிர்காலத்தில் பல்வேறு சாதனைகளை நீங்கள் நிகழ்த்த வேண்டும் என்று தன்னம்பிக்கை கருத்தை வலியுறுத்தி 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். பள்ளி மாணவர்களுக்கு ஓவியப்போட்டி, கட்டுரை போட்டி மற்றும் ஸ்லோகன் எழுதும் போட்டி ஆகியவை உடுமலை தேஜஸ் மஹாலில் நடைபெற்றது. உடுமலை மற்றும் மடத்துக்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சுமார் 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். கனவு இந்தியா 2047 என்பதை கருத்தாக கொண்டு நடத்தப்பட்ட இப் போட்டிகளில் ஐந்தாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கின்ற மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

    இந்நிகழ்ச்சியில் உடுமலை சுற்றுச்சூழல் சங்கத் தலைவர் மணி, செயற்குழு உறுப்பினர் சசிகுமார், மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர் பெருமக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியினை கலிலியோ அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான் ஒருங்கிணைத்தார். நாளை முதல் 14 ந் தேதி வரை உடுமலை தளி ரோட்டில் உள்ள தேஜஸ் மஹாலில் அறிவியல் விஞ்ஞானிகள், தபால் தலை, ஆயுத கண்காட்சிகள் , விடுதலைப் போராட்ட வீரர்களின் கண்காட்சி மற்றும் ரோபோடிக்ஸ் செயற்கை நுண்ணறிவு பற்றிய செயல் விளக்கம், இரவு வான் நோக்கும் நிகழ்ச்சி ஆகியவை நடைபெற உள்ளது. மாணவர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு கண்காட்சியையும் வான்நோக்கும் நிகழ்ச்சியையும் கண்டு களிக்கலாம்.தொடர்புக்கு கண்ணபிரான் 8778201926 என்பவரை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • உலக மக்கள் தொகை தினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கொண்டாடப்பட்டது.
    • வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

    குடிமங்கலம் :

    குடிமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் உலக மக்கள் தொகை தினம், அரசு மேல்நிலைப்பள்ளியில் கொண்டாடப்பட்டது.பள்ளித்தலைமையாசிரியர் பழனிசாமி தலைமை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர் சுந்தரபாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    இந்த தினத்தையொட்டி ஓவியப்போட்டி நடத்தப்பட்டது.தொடர்ந்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன. உதவித்தலைமை ஆசிரியர்கள் பத்மகீதா, சக்திவேல்ராஜா, ஓவிய ஆசிரியர்கள் தியாகராஜன், மாசிலாமணி, சுகாதார ஆய்வாளர் உட்பட பலர் பங்கேற்றனர்.

    • 75 மாணவர்கள் கலந்து கொள்ளும் ஓவிய போட்டி நடைபெறுகிறது.
    • 75 மாணவ மாணவிகள் தொடர் வாசிப்பை மேற்கொள்ள உள்ளனர்.

    உடுமலை :

    பாரத திருநாட்டின் 75 -வது சுதந்திர தின விழா நிறைவை ஒட்டி உடுமலை உழவர் சந்தை எதிரே உள்ள கிளை நூலகம் எண் இரண்டில் 75 மாணவர்கள் கலந்து கொள்ளும் ஓவிய போட்டி நடைபெறுகிறது. வருகிற 13, 14-ந்தேதி ஆகிய 2 நாட்கள் ஒரே சமயத்தில் 75 மாணவ மாணவிகள் தேசத் தலைவர்களின் படங்களை வரையும் இந்த நிகழ்ச்சியில் உடுமலை மகாத்மா காந்தி உண்டு உறைவிடப் பள்ளி மாணவர்கள் மற்றும் அரசு மகளிர் இல்ல மாணவிகள் கலந்து கொண்டு இந்த போட்டியில் ஓவியங்களை வரைய உள்ளனர்.

    இதில் வெற்றி பெறும் மாணவ மாணவிகளுக்கு உடுமலை 75 வது சுதந்திர தின அமுதப் பெருவிழா குழுவினர் சார்பில் சான்றிதழ்கள் வழங்கப்படும். அதைத்தொடர்ந்து தொடர்ச்சியாக ஒரே நேரத்தில் வாசிப்பின் அவசியத்தையும் உணர்த்தும் வகையில் 75 மாணவ மாணவிகள் தொடர் வாசிப்பை மேற்கொள்ள உள்ளனர். இரு நிகழ்ச்சிகளை உடுமலை ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் நாகராஜ் துவக்கி வைக்கிறார்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நூலக வாசகர் வட்ட தலைவர் இளமுருகு ,துணைத்தலைவர் சிவகுமார் ,நூலக வாசகர்வட்டஆலோசகர் அய்யப்பன், பேராசிரியர் கண்டி முத்து, ஓவியர் வீரமணி, நூலகர் கணேசன், மகளிர் வாசகர் வட்ட தலைவர் நல்லாசிரியர் விஜயலட்சுமி ,நூலகர்கள் மகேந்திரன், பிரமோத் ,அஷ்ரப் சித்திகா, மற்றும் நூலக வாசகர் வட்டத்தினர் செய்து வருகின்றனர். ஓவிய போட்டி மற்றும் வாசிப்பு நிகழ்ச்சிகளை உடுமலை பாரதியார் நூற்றாண்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியரும் மகளிர் வாசகர் வட்ட தலைவருமான விஜயலட்சுமி ஒருங்கிணைக்கிறார் .

    • உணவு திருவிழாவில் சுகி சிவத்தின் அறுசுவை பட்டிமன்றம் நடக்கிறது.
    • ஓவியப்போட்டிகளுக்கு வருகிற 4-ந் தேதிக்குள் படைப்புகளை அனுப்பி வைக்கலாம்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை சார்பில் 'திருப்பூர் உணவுத்திருவிழா -2022' காங்கயத்தில் வருகிற 7-ந்தேதி நடக்கிறது.விழாவின் ஒரு பகுதியாக காங்கயம் ஒன்றிய அலுவலகத்தில் இருந்து காலை 8 மணிக்கு, 'வாக்கத்தான்' விழிப்புணர்வு பேரணி நடக்கிறது. மேலும், சலங்கையாட்டம், ஒயிலாட்டம், வள்ளி கும்மி ஆட்டத்துடன் விழா களைகட்ட போகிறது.உணவுத்திருவிழாவில் சுகி சிவத்தின் அறுசுவை பட்டிமன்றம் நடக்கிறது.

    முன்னதாக பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கான போட்டிகளும் நடக்கின்றன.உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வாசகம், ஓவியப்போட்டிகளுக்கு வருகிற 4-ந் தேதிக்குள் படைப்புகளை அனுப்பி வைக்கலாம்.சிறந்த படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்படும். படைப்புகளை, eatrighttiruppur@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவும், உணவு பாதுகாப்பு அலுவலகத்துக்கு நேரில் வந்தும் சமர்ப்பிக்கலாம். விவரங்களுக்கு 78711 33777 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இதுகுறித்து உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை கூறியதாவது:-

    உணவு திருவிழாவின் ஒரு பகுதியாக 7-ந் தேதி காலை 10மணிக்கு, காங்கயம் என்.எஸ்.என்., திருமண மண்டபத்தில் சமையல் போட்டி நடக்கிறது.

    ஆரோக்கிய சமையல், அதிவேக சமையல், அடுப்பில்லா சமையல், குழந்தைகள் சமையல், பாரம்பரிய சமையல், தென்னிந்திய சமையல், சிறுதானிய சமையல், பால்வகை சமையல், மறந்து போன உணவகள், சமையல் அலங்காரம் ஆகிய தலைப்புகளில், சமையல் செய்யலாம்.போட்டியில், 'செப்' தாமு மற்றும் 'செப்' அனிதா ஆகியோர் நடுவர்களாக பங்கேற்கின்றனர்.

    சமையல் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு, 'திருப்பூரின் அறுசுவை அரசி' என்ற பட்டமும், பரிசுகளும் வழங்கப்படும். போட்டியாளர் விரும்பிய உணவுகளை வீட்டில் தயாரித்தும் எடுத்துவரலாம். ஒவ்வொரு போட்டியிலும் முதலிடம் பெறுபவர், இறுதிப்போட்டிக்கு தேர்வு செய்யப்படுவர். இறுதிப்போட்டி சமையல் கலைஞர் முன்னிலையில் மண்டபத்தில் நடக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

    செங்கல்பட்டு மண்டலத்தில் உள்ள 18 நகராட்சிகளை சேர்ந்த பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ஓவிய போட்டி நடைபெற்றது.

    வண்டலூர்:

    தூய்மை பணிகள் தொடர்பாக செங்கல்பட்டு மண்டலத்தில் உள்ள 18 நகராட்சிகளை சேர்ந்த பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ஓவிய போட்டி நடைபெற்றது.

    இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா மறைமலை நகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது. நகர மன்ற தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார்.

    நகராட்சி ஆணையர் லட்சுமி, நகர மன்ற துணைத் தலைவர் சித்ரா கமலக் கண்ணன், முன்னிலை வகித்தனர். நகராட்சி பொறியாளர் வெங்கடேசன் வரவேற்புரை ஆற்றினார்.

    சிறப்பு விருந்தினராக வரலட்சுமி மதுசூதனன் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். இதில் நகராட்சி சுகாதார ஆய்வாளர் சிவமுருகன், டாக்டர் மீராபாய், மறைமலை நகர் சுகாதார ஆய்வாளர் ஹனிபா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • “என் குப்பை என் பொறுப்பு” என்ற தலைப்பில் பள்ளி குழந்தைகளுக்கு ஓவியப்போட்டியும் நடத்தப்பட்டது.
    • இம்முகாமில் சுமார் 100 தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டு காய்ச்சல், போன்ற நோய்களுக்கும், ரத்த அழுத்த பரிசோதனையும் செய்துக்கொண்டனர்.

    பட்டுக்கோட்டை:

    பட்டுக்கோட்டை நகரம் புனித தாமஸ் பள்ளியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின் சார்பில் நகராட்சி ஆணையர் குமார் உத்தரவின் பெயரில் பள்ளி குழந்தைகளுக்கு, "என் குப்பை என் பொறுப்பு" என்பதை நடைமுறை படுத்தும் பொருட்டும், குப்பைகளைமக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிப்பதன் அவசியம் குறித்தும் பொது இடங்களில் குப்பை கொட்டாமல் இருப்பது, பொது இடங்களில் எச்சில் துப்பாமல்இருப்பது, நெகிழி பயன்பாட்டினை தவிர்ப்பது, துணிப்பை பயன்படுத்துவது, சமுதாயமற்றும் பொது கழிப்பறை தூய்மையாக பராமரிப்பது குறித்தும், உரை நிகழ்த்தப்பட்டது.

    மேலும் பான் செக்ர்ஸ் மேல்நிலைப்பள்ளியில் "என் குப்பை என் பொறுப்பு" என்ற தலைப்பில்பள்ளி குழந்தைகளுக்கு ஒவியப்போ ட்டியும் நடத்த ப்பட்டது. இதில் சுமார் 150 குழந்தைகள் கலந்து கொண்டனர். சிறப்பாக வரையப்பட்ட மூன்று ஓவியங்களுக்கு நகராட்சி சார்பில் பரிசும், சான்றிதழும் எதிர்வரும் 13.7.22 அன்று வழங்கப்படும் என்றும்.

    மேலும் அந்த ஒவியங்கள் நகராட்சிக்கு சொந்தமான கட்டிடங்களில் ஒவியமாக வரைய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும். இப்பணியில்துப்புரவு அலுவலர் நெடுமாறன் மற்றும் துப்புரவு ஆய்வர்கள் ரவிச்சந்திரன், அறிவழகன், ஆரோக்கியசாமி, தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர்கள்ரோஜா, சாரதபிரியா மற்றும் பரப்புரையாளர்கள் விழிப்புணர்வு நடவடி க்கையினை மேற்கொ ண்டனர்.இதுபற்றி பட்டுக்கோ ட்டை ஆணையர் குமார் கூறும் போது இது போன்றவிழிப்புணர்வுபணிகள் அனைத்து அரசுமற்றும் தனியார் பள்ளிகளில் தொ டர்ந்து செயல்படுத்தப்படும் வரும் 13.07.2022. புதன்கி ழமையன்று காலை 7.30 மணியளவில பட்டு கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து பழனியப்பன் தெரு, மணிக்கூண்டு.

    அறந்தாங்கி முக்கம், தஞ்சை சாலை, கடை தெரு மேல் பாகம், கடை தெரு கீழ்பாகம் வழியாக நடத்தப்பட்டு பெண்கள் மேல் நிலைப்பள்ளி வரை விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடத்தப்பட உள்ளது. பொது மக்கள் மற்றும் ஆர்வமுள்ள தன்னா ர்வளர்கள் மேற்காணும் சைக்கிள் விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொள்ளுமாறு தெரிவித்தார்.மேலும், அதனை தொடர்ந்து நகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் நலன் கருதி தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் மூலம் நடத்தப்பட்டது. இம்முகாமில் சுமார் 100 தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டு காய்ச்சல், போன்ற நோய்களுக்கும், ரத்த அழுத்த பரிசோதனையும் செய்துக்கொண்டனர்.

    ×