குடிமங்கலத்தில் ஓவியப்போட்டி

உலக மக்கள் தொகை தினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கொண்டாடப்பட்டது.வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

குடிமங்கலம் :

குடிமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் உலக மக்கள் தொகை தினம், அரசு மேல்நிலைப்பள்ளியில் கொண்டாடப்பட்டது.பள்ளித்தலைமையாசிரியர் பழனிசாமி தலைமை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர் சுந்தரபாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்த தினத்தையொட்டி ஓவியப்போட்டி நடத்தப்பட்டது.தொடர்ந்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன. உதவித்தலைமை ஆசிரியர்கள் பத்மகீதா, சக்திவேல்ராஜா, ஓவிய ஆசிரியர்கள் தியாகராஜன், மாசிலாமணி, சுகாதார ஆய்வாளர் உட்பட பலர் பங்கேற்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com