search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுதந்திரதினம்"

    • விக்டோரியா மகாராணி வழங்கிய விளக்குத்தூண் அருகே தேசியக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • கோவில் அர்ச்சகர்கள் தேசியக்கொடிக்கு சிறப்பு பூஜைகள் செய்து மகா தீபாராதனை செய்தனர்.

    நெல்லை:

    சுதந்திர தினவிழாவையொட்டி தமிழகத்தில் இருக்கும் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட ஒரு சில கோவில்களில் மட்டும் கோவிலில் உள்ள பூஜை முறைப்படி தேசியக் கொடி ஏற்றுவது வழக்கம். அதன்படி தமிழகத்தின் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் சுதந்திர தினம் விமர்சையாக கொண்டாடப்பட்டது. சுவாமி நெல்லையப்பர் கோவில் முன்பு அமைந்துள்ள விக்டோரியா மகாராணி வழங்கிய விளக்குத்தூண் அருகே தேசியக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோவில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி தேசிய கொடியை ஏற்றினார்.

    அதனை தொடர்ந்து கோவில் யானை காந்திமதி தேசிய கொடிக்கு மரியாதை செய்தது.தொடர்ந்து கோவில் அர்ச்சகர்கள் தேசியக்கொடிக்கு சிறப்பு பூஜைகள் செய்து மகா தீபாராதனை செய்தனர். தொடர்ந்து அங்கிருந்தவர்களுக்கு விபூதி பிரசாதம் வழங்கப்பட்டு இனிப்புகளும் கொடுக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கோவில் ஊழியர்கள் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

    • ஒவ்வொரு மாதமும், 15-ந் தேதி, பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம், காரைக்கால் மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது.
    • வாய்ப்பினை பயன்படுத்தி தங்கள் குறைகளுக்கு தீர்வு காணவேண்டுகிறோம்.

    புதுச்சேரி:

    காரைக்கால் மாவட்ட கலெக்டரின் செயலர் பக்கிரிசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோர் அறிவுறுத்தல்படி, ஒவ்வொரு மாதமும், 15-ந் தேதி, பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம், காரைக்கால் மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. இம்மாதம் நாளை 15-ந் தேதி சுதந்திரதினம் விடுமுறை என்பதால், அன்றைய தினம் நடைபெறவேண்டிய மக்கள் குறைதீர்ப்பு முகாம், இம்மாதம் 17-ந் தேதி நடைபெறும். முகாமில், வழக்கம் போல், அனைத்து அரசுத்துறை அதிகாகள் முன்னிலையில், கலெக்டர் குலோத்துங்கன் காலை 9.30 மணி முதல், பிற்பகல் 10 மணி வரை மக்கள் குறைகளை கேட்பார். பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்கள் குறைகளுக்கு தீர்வு காணவேண்டுகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழகத்தில் உள்ள அனைத்து ரெயில் நிலையங்கள், வழிபாட்டுத்தலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
    • மலைக்கோவிலில் உள்ள தங்க கோபுரத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணிக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.

    பழனி:

    நாட்டின் 77-வது சுதந்திர தின விழா நாளை உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் உள்ள அனைத்து ரெயில் நிலையங்கள், வழிபாட்டுத்தலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து ரெயில் நிலையங்களிலும் பயணிகளை போலீசார் மெட்டல் டிடக்டர் கொண்டு சோதனை நடத்தி வருகின்றனர். தண்டவாள பகுதிகளில் மோப்பநாய் கொண்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    ரெயில் நிலையங்களுக்கு வரும் பார்சல்கள் அனைத்தும் கடுமையான பரிசோதனைக்கு பிறகே அனுப்பப்பட்டு வருகின்றன. இதேபோல் ரெயில் பெட்டிகளிலும் தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது. பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு ஆண்டுதோறும் பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும். தற்போது தொடர் விடுமுறை காரணமாக பக்தர்கள் குடும்பத்துடன் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்களும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு சந்தேகப்படும்படியான நபர்கள் யாரேனும் வருகின்றனரா? என ஆய்வு நடத்தி வருகின்றனர். மலைக்கோவிலில் உள்ள தங்க கோபுரத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணிக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். இதே போல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களிலும் மசூதி, தேவாலயங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வணிக வளாகங்கள், திரையரங்குகள், பஸ் நிலையம் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் சீருடை அணியாத போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். லாட்ஜூகள், தங்கும் விடுதிகளில் எவ்வித காரணமும் இன்றி வெளியூர் நபர்கள் தங்கியுள்ளனரா? என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • மதுபானக்கடைகள், மதுபானக்கூடங்கள், மனமகிழ் மன்றங்கள் அனைத்தும் மூடப்படும்.
    • தவறும் பட்சத்தில் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிககை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் வருகிற 15-ந்தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் கீழ் இயங்கி வரும் மதுபானக்கடைகள், அவற்றுடன் செயல்படும் மதுபானக்கூடங்கள், மனமகிழ் மன்றங்கள் மற்றும் உணவு விடுதிகளுடன் இணைந்து செயல்பட்டு வரும் அரசு உரிமம் பெற்ற மதுபான க்கூடங்கள் ஆகியவை 15.8.2023 அன்று நாள் முழுவதும் மூடப்பட்டு மதுபானங்கள் விற்பனை செய்வதை நிறுத்தம் செய்யப்பட வேண்டுமென உத்தரவிடப் பட்டுள்ளது.

    தவறும் பட்சத்தில் தொடர்புடையவர்கள் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார். 

    • காவல் துறை தலைமை இயக்குநரின் பரிந்துரைக்கேற்ப கீழ்கண்ட காவல் அதிகாரிகள், ஆளுநர்களுக்கு முதலமைச்சரின் பதக்கம் வழங்கப்படுகிறது.
    • விருதுகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் சுதந்திரதின விழாவில் வழங்கப்படும்.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    "தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 9.5.2022 அன்று சட்டப்பேரவையில் உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மானியக் கோரிக்கையிலன் போது "சமூகத்தில் போதைப் பொருளை ஒழிப்பதற்காக கடுமையாகவும், உண்மையாகவும் உழைக்கும் அதிகாரிகள், காவலர்களை ஊக்குவிப்பதற்கென முதலமைச்சரின் பதக்கம் புதிதாக வழங்கப்படும் என அறிவித்தார்.

    அதனை தொடர்ந்து அரசாணை 3.8.2022 அன்று வெளியிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக காவல் துறை தலைமை இயக்குநரின் பரிந்துரைக்கேற்ப கீழ்கண்ட காவல் அதிகாரிகளுக்கு முதலமைச்சரின் பதக்கம் வழங்கப்படுகிறது.

    வெ.பத்ரிநாராயணன் (காவல் கண்காணிப்பாளர், கோவை மாவட்டம்), டோங்கரே பிரவின் உமேஷ் (காவல் கண்காணிப்பாளர், தேனி மாவட்டம்), மா. குணசேகரன், (காவல் துணை கண்காணிப்பாளர், இருப்பு பாதை, சேலம் உட்கோட்டம்), சு.முருகன் (காவல் சார்பு ஆய்வாளர், நாமக்கல் மாவட்டம்), இரா.குமார், (முதல் நிலை காவலர்-1380, நாமக்கல் மாவட்டம்)

    போதைப்பொருள் உற்பத்தி மற்றும் சட்ட விரோத கடத்தலை ஒழிப்பதில் அஸ்ரா கர்க், (காவல் துறைத் தலைவர், தென் மண்டலம், மதுரை) சீரிய பணியை அங்கீகரித்து  ரொக்கப் பரிசு இல்லாமல், இந்த "சிறப்பு பதக்கம்" தனி நேர்வாக வழங்கப்படுகிறது.

    அஸ்ரா கர்க்கின் தனிப்பட்ட முயற்சிகள் மற்றும் அர்ப்பணிப்பு மிகுந்த கண்காணிப்பின் மூலம் போதை மருந்துகள் மற்றும் மனநோய் பொருள்கள் சட்டத்தின் கீழ் குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளின் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.

    மூத்த அதிகாரிகளுக்கு அவர் பயிற்சி அளித்துள்ளார் மற்றும் 2022-2023-ல் 1843 நபர்கள் பிணைக்கப்பட்டு உள்ளனர். இது சமூகத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை உருவாக்கியது.

    விருதுகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் சுதந்திரதின விழாவில் வழங்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நீரின் இன்றியமையாமையினை விளக்கும் விழிப்புணா்வு நாடகம், சுதந்திர தின நடனமும் நடைபெற்றது.
    • சுற்றுலா பயணிகள் இதனை கண்டு ரசித்து மகிழ்ந்தனர்.

    ஊட்டி:

    75-வது சுதந்திர தினம் நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக நேற்று முதல் நாளை வரை 3 தினங்கள் மக்கள் தங்கள் வீடுகள் தோறும் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என மத்திய அரசு கேட்டு கொண்டது. இதனை ஏற்றும் நேற்று நாடு முழுவதும் மக்கள் வீடுகளில் தேசிய கொடி ஏற்றினர்.

    மேலும் 75-வது சுதந்திர தின விழா குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக குன்னூரில் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான சிம்ஸ் பூங்கா படகு இல்லத்தில் குன்னூா் பிராவிடன்ஸ் மகளிா் கல்லூரி மாணவிகள், தேசிய மாணவா்படை சாா்பில் உன்னத் பாரத் அபியான் என்ற நீரின் இன்றியமையாமையினை விளக்கும் விழிப்புணா்வு நாடகம், சுதந்திர தின நடனமும் நடைபெற்றது. மாணவிகள் நடனமாடிய படி தேசிய கொடியை ‌ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    சுற்றுசூழல் பாதுகாப்பு, தேசப்பற்று குறித்து மாணவிகளின் எடுத்துரைத்தனர். இது அங்கு வந்திருந்த சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது. சுற்றுலா பயணிகள் இதனை கண்டு ரசித்து மகிழ்ந்தனர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தேசிய மாணவா் படை அதிகாரி லெப்டெனென்ட் சிந்தியா ஜாா்ஜ் செய்திருந்தாா்.

    • பாஜக சார்பில் கிணத்துக்கடவில் டிராக்டர் பேரணி,டிராக்டர் அணி வகுப்பு நடைபெற்றது.
    • டிராக்டர் 75 என்ற வடிவில் அணி வகுத்துநிறுத்தப்பட்டது.

    பொள்ளாச்சி:

    75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பாஜக சார்பில் கிணத்துக்கடவில் டிராக்டர் பேரணி,டிராக்டர் அணி வகுப்பு நடைபெற்றது. 75 டிராக்டர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றன.

    75வது சுதந்திர தினத்தை குறிக்கும் டிராக்டர் 75 என்ற வடிவில் அணி வகுத்துநிறுத்தப்பட்டது. நிகழ்ச்சியை மாநில பொதுச்செயலாளர் ஏ.பி.முருகானந்தம்தொடங்கி வைத்தார். மாவட்டத்தலைவர் வசந்தராஜன் தலைமை வகித்தார்.

    விவசாய அணி மாவட்டத்தலைவர் தர்மபிரகாஷ் வரவேற்றார். மாவட்ட பார்வை யாளர்மோகன்மந்தராச்சலம், நிர்வாகிகள் குமரேசன், ஆனந்த், மகேஷ், ரவி உட்பட பலர்பங்கேற்றனர்.

    • 2 ஆண்டுகளுக்கு பிறகு சுதந்திரதின விழாவில் கலை நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
    • மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டு அதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் ஆயுதப்படை மைதானத்தில் ஆண்டுதோறும் சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. கொடியேற்ற நிகழ்ச்சியின் போது பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளின் ஆடல், பாடல் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம்.

    ஆனால் கடந்த 2020, 2021-ம் ஆண்டுகளில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் கடைப்பிடிக்கப்பட்டதால் சுதந்திர, குடியரசு விழாவில் கலை நிகழ்ச்சிகள் நடை பெறவில்லை.

    தற்போது, 75-வது சுதந்திர தின விழாவை விமரிசையாக கொண்டாட மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டு அதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.

    சுதந்திர தின கொடி யேற்ற நிகழ்ச்சியில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி கள் மற்றும் தனியாா் பள்ளிக் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து மேற்பார்வையில் எட்டு கலை நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்துள்ளனர்.

    மாணவர்களை தேர்வு செய்து ஒத்திகை நிகழ்ச்சிகள் நடக்கிறது. இதே போல கலை பண்பாட்டு துறை சார்பில் சிலம்பம், தீப்பந்தம், பொய்க்கால் குதிரை ஆட்டம் உள்ளிட்ட சாகச விளையாட்டு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    • 75 மாணவர்கள் கலந்து கொள்ளும் ஓவிய போட்டி நடைபெறுகிறது.
    • 75 மாணவ மாணவிகள் தொடர் வாசிப்பை மேற்கொள்ள உள்ளனர்.

    உடுமலை :

    பாரத திருநாட்டின் 75 -வது சுதந்திர தின விழா நிறைவை ஒட்டி உடுமலை உழவர் சந்தை எதிரே உள்ள கிளை நூலகம் எண் இரண்டில் 75 மாணவர்கள் கலந்து கொள்ளும் ஓவிய போட்டி நடைபெறுகிறது. வருகிற 13, 14-ந்தேதி ஆகிய 2 நாட்கள் ஒரே சமயத்தில் 75 மாணவ மாணவிகள் தேசத் தலைவர்களின் படங்களை வரையும் இந்த நிகழ்ச்சியில் உடுமலை மகாத்மா காந்தி உண்டு உறைவிடப் பள்ளி மாணவர்கள் மற்றும் அரசு மகளிர் இல்ல மாணவிகள் கலந்து கொண்டு இந்த போட்டியில் ஓவியங்களை வரைய உள்ளனர்.

    இதில் வெற்றி பெறும் மாணவ மாணவிகளுக்கு உடுமலை 75 வது சுதந்திர தின அமுதப் பெருவிழா குழுவினர் சார்பில் சான்றிதழ்கள் வழங்கப்படும். அதைத்தொடர்ந்து தொடர்ச்சியாக ஒரே நேரத்தில் வாசிப்பின் அவசியத்தையும் உணர்த்தும் வகையில் 75 மாணவ மாணவிகள் தொடர் வாசிப்பை மேற்கொள்ள உள்ளனர். இரு நிகழ்ச்சிகளை உடுமலை ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் நாகராஜ் துவக்கி வைக்கிறார்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நூலக வாசகர் வட்ட தலைவர் இளமுருகு ,துணைத்தலைவர் சிவகுமார் ,நூலக வாசகர்வட்டஆலோசகர் அய்யப்பன், பேராசிரியர் கண்டி முத்து, ஓவியர் வீரமணி, நூலகர் கணேசன், மகளிர் வாசகர் வட்ட தலைவர் நல்லாசிரியர் விஜயலட்சுமி ,நூலகர்கள் மகேந்திரன், பிரமோத் ,அஷ்ரப் சித்திகா, மற்றும் நூலக வாசகர் வட்டத்தினர் செய்து வருகின்றனர். ஓவிய போட்டி மற்றும் வாசிப்பு நிகழ்ச்சிகளை உடுமலை பாரதியார் நூற்றாண்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியரும் மகளிர் வாசகர் வட்ட தலைவருமான விஜயலட்சுமி ஒருங்கிணைக்கிறார் .

    • 75 இடங்களில் 75 நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிட்டு வருகின்றனர்.
    • மாணவர்களிடையே நாட்டுப்பற்று உணர்வை ஏற்படுத்தும் நோக்கில் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    உடுமலை :

    நாடு முழுவதும் 75-வது சுதந்திர தினம், அமிர்த விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அவ்வகையில், உடுமலையில் அனைத்து தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து 75 இடங்களில் 75 நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிட்டு வருகின்றனர். குறிப்பாக, சுதந்திர போராட்ட தலைவர்களை நினைவு கூறும் வகையிலும் மாணவர்களிடையே நாட்டுப்பற்று உணர்வை ஏற்படுத்தும் நோக்கிலும் இந்த நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    அந்த வரிசையில் கலிலியோ அறிவியல் கழகம், சுற்றுச்சூழல் சங்கம் மற்றும் ஸ்ரீ விசாலாட்சி மகளிர் கலைக் கல்லூரி சார்பில், 75 பள்ளிகள், 75 மாணவர்கள், 75 நிமிடங்கள் என்ற தலைப்பில் ஒரே நேரத்தில் 75 அறிவியல் பரிசோதனைகளை மேற்கொள்ளும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.தவிர வருகிற 8-ந்தேதி முதல் 15ந் தேதி வரை இரவு வான் நோக்கும் நிகழ்ச்சி, உடுமலை தேஜஸ் அரங்கில் இரவு 7 மணி முதல் 9 மணி வரை நடத்தப்பட உள்ளது. இந்திய விஞ்ஞானிகள், விடுதலைப் போராட்ட தியாகிகள் மற்றும் தலைவர்கள் குறித்த பட கண்காட்சியும் இடம்பெறுகிறது.

    மேலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இந்தியாவை 2047-ல் வல்லரசாக்க என் பங்கு' என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டி,கனவு இந்தியா 2047 என்ற தலைப்பில் ஓவியப் போட்டி,2047 ல் இந்தியாவை வல்லரசாக்க என் முழக்கம் என்ற தலைப்பில் ஸ்லோகன் எழுதுதல் போட்டியானது வருகிற 10-ந்தேதி மதியம் ம2ணிக்கு நடத்தப்படுகிறது. பங்கேற்க விரும்புவோர் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரை 8778201926 என்ற செல்போன் எண் மற்றும் udt75eventsceleb@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான் தெரிவித்துள்ளார்.   

    ×