சுதந்திர தினத்தையொட்டி 15-ந்தேதி மதுக்கடைகள் மூடல்

மதுபானக்கடைகள், மதுபானக்கூடங்கள், மனமகிழ் மன்றங்கள் அனைத்தும் மூடப்படும்.தவறும் பட்சத்தில் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிககை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் வருகிற 15-ந்தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் கீழ் இயங்கி வரும் மதுபானக்கடைகள், அவற்றுடன் செயல்படும் மதுபானக்கூடங்கள், மனமகிழ் மன்றங்கள் மற்றும் உணவு விடுதிகளுடன் இணைந்து செயல்பட்டு வரும் அரசு உரிமம் பெற்ற மதுபான க்கூடங்கள் ஆகியவை 15.8.2023 அன்று நாள் முழுவதும் மூடப்பட்டு மதுபானங்கள் விற்பனை செய்வதை நிறுத்தம் செய்யப்பட வேண்டுமென உத்தரவிடப் பட்டுள்ளது.

தவறும் பட்சத்தில் தொடர்புடையவர்கள் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார். 

X

Maalai Malar
www.maalaimalar.com