75-வது சுதந்திரதினம்-கிணத்துக்கடவில் டிராக்டர் பேரணி

பாஜக சார்பில் கிணத்துக்கடவில் டிராக்டர் பேரணி,டிராக்டர் அணி வகுப்பு நடைபெற்றது. டிராக்டர் 75 என்ற வடிவில் அணி வகுத்துநிறுத்தப்பட்டது.
75-வது சுதந்திரதினம்-கிணத்துக்கடவில் டிராக்டர் பேரணி
Published on

பொள்ளாச்சி:

75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பாஜக சார்பில் கிணத்துக்கடவில் டிராக்டர் பேரணி,டிராக்டர் அணி வகுப்பு நடைபெற்றது. 75 டிராக்டர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றன.

75வது சுதந்திர தினத்தை குறிக்கும் டிராக்டர் 75 என்ற வடிவில் அணி வகுத்துநிறுத்தப்பட்டது. நிகழ்ச்சியை மாநில பொதுச்செயலாளர் ஏ.பி.முருகானந்தம்தொடங்கி வைத்தார். மாவட்டத்தலைவர் வசந்தராஜன் தலைமை வகித்தார்.

விவசாய அணி மாவட்டத்தலைவர் தர்மபிரகாஷ் வரவேற்றார். மாவட்ட பார்வை யாளர்மோகன்மந்தராச்சலம், நிர்வாகிகள் குமரேசன், ஆனந்த், மகேஷ், ரவி உட்பட பலர்பங்கேற்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com