search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Performances"

    • மதுரை நாடார் வித்தியாசாலை பள்ளிகளில் குடியரசு தினவிழா கொண்டாட்டம்.
    • 2 பள்ளிகளிலும் மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது.

    மதுரை

    மதுரை தெற்குவாசல் நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட நாடார் மேல்நிலைப்பள்ளியில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. பள்ளிக்குழு தலைவர் பார்த்திபன் தலைமை தாங்கினார். தெற்குவாசல் நாடார் சங்கத்தலைவர் கணபதி, செயலாளர் மயில்ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நாடார் பள்ளிகள் செயலா ளர் குணசேகரன் வர வேற்றார். வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி செயற்குழு உறுப்பினர் அன்பரசன், தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். கவுரவ தலைவர்கள் ராஜன், முனிராஜன், பொருளாளர் என்.எல்.ராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

    இதேபோல் நாடார் வித்யாசாலை நடுநிலைப்பள்ளியிலும் குடியரசு தினவிழா கொண்டாடப் பட்டது. தலைமை யாசிரியர் நாகநாதன் தொடக்கவுரை யாற்றினார்.

    நாடார் வித்யாபிவிருத்தி சங்க அறப்பணிக்குழு தலைவர் உத்தண்டன் தேசியக்கொடி ஏற்றினார். சிறப்பு விருந்தினர்களாக துணைத்தலைவர் ரமேஷ்பாபு, துணைச் செயலாளர் அருஞ்சுனைராஜன் ஆகியோர் கலந்து கொண்ட னர். நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை காந்திபாய் சுவாமி அடியார் நன்றி கூறினார்.

    2 பள்ளிகளிலும் மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது.

    • போட்டி நிறைந்த உலகில் போட்டி போட மாணவர்கள் முன்வர வேண்டும்.
    • தஞ்சை விவசாயம் சார்ந்த மண்வாசத்தை கொண்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை தாமரை பன்னாட்டு பள்ளியின் 14-ம் ஆண்டு உயர்நிலை மற்றும் மேல்நிலை வகுப்புகளுக்கான ஆண்டு விழா மண்வாசனை எனும் தலைப்பில் நடைபெற்றது. விழாவிற்கு பள்ளித்தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார்.

    துணை தலைவர் நிர்மலா வெங்கடேசன், முதுநிலை முதல்வர் ஜெயஸ்ரீ பத்ரிநாத், கும்பகோணம் தாமரை பன்னாட்டு பள்ளி முதல்வர் விஜயாஸ்ரீதர், இடைநிலை ஒருங்கிணைப்பாளர் சர்மிளா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதுநிலை முதல்வர் ஜெயஸ்ரீ பத்ரிநாத் ஆண்டறிக்கை வாசித்தார்.

    பள்ளியின் தலைவர் வெங்கடேசன் தலைமை உரையாற்றினார். அவர் தஞ்சாவூரில் மேலும் பல பள்ளிகள் தோன்றும். 

    அதற்கு தாமரை பன்னாட்டு பள்ளி ஒரு தூண்டுதலாக இருக்கும் என்றார்.

    திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.

    போட்டி நிறைந்த உலகில் போட்டி போட மாணவர்கள் முன்வர வேண்டும். போட்டி தேர்வுகளை முழுமன துடனும், விருப்பத்துடனும் எதிர்கொள்ளளும் சூழலுக்கு மாணவர்களை இப்பள்ளி அழைத்து செல்கிறது.

    தஞ்சை விவசாயம் சார்ந்த மண்வாசத்தை கொண்டது. அதில் பல திறமைகள் கொண்ட மண்வாசமாக மாற்றிக்கொண்டி ருக்கிறார்கள் மாணவர்கள். பிறந்த மண்ணை மணக்கச் செய்ய வேண்டும்.

    தமிழ்மீது உண்மையான நேசம் கொள்ள வேண்டும் என்றார். முன்னதாக, மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

    • இந்தியாவிலேயே முதல்முறையாக அத்தி மரத்தில் செய்யப்பட்ட அத்தி விநாயகர் ஊர்வலம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
    • கண்கவர் கலை நிகழ்ச்சிகள் அங்கிருந்தவர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.

    நாகப்பட்டினம்:

    நாகையில் ஒவ்வொரு ஆண்டும் 32 அடியில் அட்டையினால் செய்யப்பட்ட விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறுவது வழக்கம்.

    35 ஆண்டுகள் நிறைவு பெற்றதை அடுத்து இந்த ஆண்டு விஸ்வரூப விநாயகர் குழு சார்பாக 32 அடியில் இந்தியாவிலேயே முதல்முறையாக அத்தி மரத்தில் செய்யப்பட்ட அத்தி விநாயகர் ஊர்வலம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

    திருச்சியில் 17 லட்சம் ரூபாய் மதிப்பில் 12 டன் எடையில் பிரத்யேகமாக செய்யப்பட்ட வாகனத்தில், 3200 கன அடி அத்தி மரத்தில் 4 டன் எடையில் செய்யப்பட்ட அத்தி விநாயகர் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டார். நாகை நீலாய தாட்சி அம்மன் ஆலயத்தில் இருந்து புறப்பட்ட அத்தி விநாயகர் ஊர்வலத்தில் பங்கேற்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

    விநாயகர் ஊர்வலத்தில் மங்கள வாத்தியங்கள், தப்பாட்டம், மயிலாட்டம், காளியாட்டம், செண்டை மேளம், கேரளத்து கதகளி, பேண்டு வாத்தியங்கள் என கண்கவர் கலை நிகழ்ச்சிகள் அங்கிருந்தவர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. நாகையில் இருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக விடியற்காலை நாகூர் வந்தடைந்ததை அடுத்து, நாகூர் வெட்டாறில் பிரதிஷ்டை செய்யப்பட்ட களிமண் விநாயகர் கரைக்கப்பட உள்ளது.

    32 அடி அத்தி விநாயகர் மற்றும் நாகை மாவட்டத்தில் 290 விநாயகர் ஊர்வலம் நடைபெறுவதால் எஸ்.பி ஜவஹர் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • 2 ஆண்டுகளுக்கு பிறகு சுதந்திரதின விழாவில் கலை நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
    • மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டு அதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் ஆயுதப்படை மைதானத்தில் ஆண்டுதோறும் சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. கொடியேற்ற நிகழ்ச்சியின் போது பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளின் ஆடல், பாடல் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம்.

    ஆனால் கடந்த 2020, 2021-ம் ஆண்டுகளில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் கடைப்பிடிக்கப்பட்டதால் சுதந்திர, குடியரசு விழாவில் கலை நிகழ்ச்சிகள் நடை பெறவில்லை.

    தற்போது, 75-வது சுதந்திர தின விழாவை விமரிசையாக கொண்டாட மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டு அதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.

    சுதந்திர தின கொடி யேற்ற நிகழ்ச்சியில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி கள் மற்றும் தனியாா் பள்ளிக் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து மேற்பார்வையில் எட்டு கலை நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்துள்ளனர்.

    மாணவர்களை தேர்வு செய்து ஒத்திகை நிகழ்ச்சிகள் நடக்கிறது. இதே போல கலை பண்பாட்டு துறை சார்பில் சிலம்பம், தீப்பந்தம், பொய்க்கால் குதிரை ஆட்டம் உள்ளிட்ட சாகச விளையாட்டு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    • புத்தக திருவிழாவில் இந்தியா முழுவதிலும் இருந்து கொண்டு வரப்பட்ட 110 பதிப்பகங்களின் புத்தகங்கள் குவிக்கப்பட்டிருந்தது.
    • வருகிற 4-ம் தேதி வரை நடைபெறும் புத்தக கண்காட்சியில் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    நாகப்பட்டினம்:

    தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் நாகை யில் நடைபெறும்புத்தக திருவிழாவில், பொன்னி யின் செல்வன், பாரதியார் கவிதைகள், நீதிநூல் கஞ்சியம், சிறுகதைகள் என இந்தியா முழுவதிலும் இருந்து கொண்டுவரப்பட்ட 110 பதிப்பகங்களின் புத்தகங்கள் குவிக்கப்பட்டி ருந்தது.

    கடந்த 24ம் தேதி துவங்கிய புத்தக கண்காட்சி ஜூலை 4-ம் தேதி வரை 10, நாட்கள் நடைபெறும் புத்தகக் திருவிழாவின் நிகழ்ச்சியில் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்ற தனியார் நர்சிங் கல்லூரி மாணவிகளுக்கு நாகை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினர். ஆண்டவர் கல்வி நிறுவனங்களின் முதல்வர் எஸ்.நடராஜனன் உடன் உள்ளார்.

    ×