search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுதந்திர தின விழா கலை நிகழ்ச்சிகள்
    X

    சுதந்திர தின விழா கலை நிகழ்ச்சிகள்

    • 2 ஆண்டுகளுக்கு பிறகு சுதந்திரதின விழாவில் கலை நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
    • மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டு அதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் ஆயுதப்படை மைதானத்தில் ஆண்டுதோறும் சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. கொடியேற்ற நிகழ்ச்சியின் போது பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளின் ஆடல், பாடல் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம்.

    ஆனால் கடந்த 2020, 2021-ம் ஆண்டுகளில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் கடைப்பிடிக்கப்பட்டதால் சுதந்திர, குடியரசு விழாவில் கலை நிகழ்ச்சிகள் நடை பெறவில்லை.

    தற்போது, 75-வது சுதந்திர தின விழாவை விமரிசையாக கொண்டாட மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டு அதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.

    சுதந்திர தின கொடி யேற்ற நிகழ்ச்சியில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி கள் மற்றும் தனியாா் பள்ளிக் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து மேற்பார்வையில் எட்டு கலை நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்துள்ளனர்.

    மாணவர்களை தேர்வு செய்து ஒத்திகை நிகழ்ச்சிகள் நடக்கிறது. இதே போல கலை பண்பாட்டு துறை சார்பில் சிலம்பம், தீப்பந்தம், பொய்க்கால் குதிரை ஆட்டம் உள்ளிட்ட சாகச விளையாட்டு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    Next Story
    ×