search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    நாடார் வித்தியாசாலை பள்ளிகளில் குடியரசு தினவிழா கொண்டாட்டம்
    X

    நாடார் வித்தியாசாலை பள்ளிகளில் நடந்த குடியரசு தினவிழாவில் பங்கேற்ற முக்கிய பிரமுகர்கள்.

    நாடார் வித்தியாசாலை பள்ளிகளில் குடியரசு தினவிழா கொண்டாட்டம்

    • மதுரை நாடார் வித்தியாசாலை பள்ளிகளில் குடியரசு தினவிழா கொண்டாட்டம்.
    • 2 பள்ளிகளிலும் மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது.

    மதுரை

    மதுரை தெற்குவாசல் நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட நாடார் மேல்நிலைப்பள்ளியில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. பள்ளிக்குழு தலைவர் பார்த்திபன் தலைமை தாங்கினார். தெற்குவாசல் நாடார் சங்கத்தலைவர் கணபதி, செயலாளர் மயில்ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நாடார் பள்ளிகள் செயலா ளர் குணசேகரன் வர வேற்றார். வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி செயற்குழு உறுப்பினர் அன்பரசன், தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். கவுரவ தலைவர்கள் ராஜன், முனிராஜன், பொருளாளர் என்.எல்.ராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

    இதேபோல் நாடார் வித்யாசாலை நடுநிலைப்பள்ளியிலும் குடியரசு தினவிழா கொண்டாடப் பட்டது. தலைமை யாசிரியர் நாகநாதன் தொடக்கவுரை யாற்றினார்.

    நாடார் வித்யாபிவிருத்தி சங்க அறப்பணிக்குழு தலைவர் உத்தண்டன் தேசியக்கொடி ஏற்றினார். சிறப்பு விருந்தினர்களாக துணைத்தலைவர் ரமேஷ்பாபு, துணைச் செயலாளர் அருஞ்சுனைராஜன் ஆகியோர் கலந்து கொண்ட னர். நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை காந்திபாய் சுவாமி அடியார் நன்றி கூறினார்.

    2 பள்ளிகளிலும் மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது.

    Next Story
    ×