search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    32 அடி உயர அத்தி விநாயகர் சிலை ஊர்வலம்
    X

    விநாயகர் சிலை ஊர்வலம்.

    32 அடி உயர அத்தி விநாயகர் சிலை ஊர்வலம்

    • இந்தியாவிலேயே முதல்முறையாக அத்தி மரத்தில் செய்யப்பட்ட அத்தி விநாயகர் ஊர்வலம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
    • கண்கவர் கலை நிகழ்ச்சிகள் அங்கிருந்தவர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.

    நாகப்பட்டினம்:

    நாகையில் ஒவ்வொரு ஆண்டும் 32 அடியில் அட்டையினால் செய்யப்பட்ட விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறுவது வழக்கம்.

    35 ஆண்டுகள் நிறைவு பெற்றதை அடுத்து இந்த ஆண்டு விஸ்வரூப விநாயகர் குழு சார்பாக 32 அடியில் இந்தியாவிலேயே முதல்முறையாக அத்தி மரத்தில் செய்யப்பட்ட அத்தி விநாயகர் ஊர்வலம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

    திருச்சியில் 17 லட்சம் ரூபாய் மதிப்பில் 12 டன் எடையில் பிரத்யேகமாக செய்யப்பட்ட வாகனத்தில், 3200 கன அடி அத்தி மரத்தில் 4 டன் எடையில் செய்யப்பட்ட அத்தி விநாயகர் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டார். நாகை நீலாய தாட்சி அம்மன் ஆலயத்தில் இருந்து புறப்பட்ட அத்தி விநாயகர் ஊர்வலத்தில் பங்கேற்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

    விநாயகர் ஊர்வலத்தில் மங்கள வாத்தியங்கள், தப்பாட்டம், மயிலாட்டம், காளியாட்டம், செண்டை மேளம், கேரளத்து கதகளி, பேண்டு வாத்தியங்கள் என கண்கவர் கலை நிகழ்ச்சிகள் அங்கிருந்தவர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. நாகையில் இருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக விடியற்காலை நாகூர் வந்தடைந்ததை அடுத்து, நாகூர் வெட்டாறில் பிரதிஷ்டை செய்யப்பட்ட களிமண் விநாயகர் கரைக்கப்பட உள்ளது.

    32 அடி அத்தி விநாயகர் மற்றும் நாகை மாவட்டத்தில் 290 விநாயகர் ஊர்வலம் நடைபெறுவதால் எஸ்.பி ஜவஹர் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×