பாரத சாரணர் இயக்க வைரவிழா: கலைநிகழ்ச்சிகள் வாயிலாக பண்பாட்டை வெளிப்படுத்திய மாணவர்கள்

உதயநிதி ஸ்டாலின் கடந்த 28-ந்தேதி கொடியேற்றி தொடங்கி வைத்தார்.சாரணர்கள் கம்பீரமாக அணி வகுத்து மரியாதை செய்தனர்.
பாரத சாரணர் இயக்க வைரவிழா: கலைநிகழ்ச்சிகள் வாயிலாக பண்பாட்டை வெளிப்படுத்திய மாணவர்கள்
Published on

திருச்சி மாவட்டம் மணப்பாறை சிப்காட் வளாகத்தில் பாரத சாரண - சாரணியர் இயக்க வைரவிழா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு பெருந்திரளணி விழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த 28-ந்தேதி கொடியேற்றி தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழா வரலாற்று சிறப்பு புகைப்பட கண்காட்சியையும் உதயநிதி ஸ்டாலின் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.

அதன்பிறகு இலங்கை, மலேஷியா, சவுதி அரேபியா, நேபால், மற்றும் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநில பாரத சாரண - சாரணியர் கம்பீரமாக அணி வகுத்து மரியாதை செய்தனர்.

சாரணியர் இயக்க வைரவிழாவின் இரண்டாம் நாளான நேற்று தமிழ்நாடு பாரத சாரண - சாரணியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு தங்கள் கலாச்சாரம், பண்பாடு குறித்த செயல்பாடுகளை நிகழ்த்தி காட்டும் வகையில் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

X

Maalai Malar
www.maalaimalar.com