என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற தஞ்சை பள்ளி மாணவர்களுக்கு பரிசு
    X

    போட்டியில் வெற்றி பெற்ற மாணவனுக்கு பரிசு வழங்கப்பட்டது.

    பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற தஞ்சை பள்ளி மாணவர்களுக்கு பரிசு

    • போட்டி நிறைந்த உலகில் போட்டி போட மாணவர்கள் முன்வர வேண்டும்.
    • தஞ்சை விவசாயம் சார்ந்த மண்வாசத்தை கொண்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை தாமரை பன்னாட்டு பள்ளியின் 14-ம் ஆண்டு உயர்நிலை மற்றும் மேல்நிலை வகுப்புகளுக்கான ஆண்டு விழா மண்வாசனை எனும் தலைப்பில் நடைபெற்றது. விழாவிற்கு பள்ளித்தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார்.

    துணை தலைவர் நிர்மலா வெங்கடேசன், முதுநிலை முதல்வர் ஜெயஸ்ரீ பத்ரிநாத், கும்பகோணம் தாமரை பன்னாட்டு பள்ளி முதல்வர் விஜயாஸ்ரீதர், இடைநிலை ஒருங்கிணைப்பாளர் சர்மிளா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதுநிலை முதல்வர் ஜெயஸ்ரீ பத்ரிநாத் ஆண்டறிக்கை வாசித்தார்.

    பள்ளியின் தலைவர் வெங்கடேசன் தலைமை உரையாற்றினார். அவர் தஞ்சாவூரில் மேலும் பல பள்ளிகள் தோன்றும்.

    அதற்கு தாமரை பன்னாட்டு பள்ளி ஒரு தூண்டுதலாக இருக்கும் என்றார்.

    திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.

    போட்டி நிறைந்த உலகில் போட்டி போட மாணவர்கள் முன்வர வேண்டும். போட்டி தேர்வுகளை முழுமன துடனும், விருப்பத்துடனும் எதிர்கொள்ளளும் சூழலுக்கு மாணவர்களை இப்பள்ளி அழைத்து செல்கிறது.

    தஞ்சை விவசாயம் சார்ந்த மண்வாசத்தை கொண்டது. அதில் பல திறமைகள் கொண்ட மண்வாசமாக மாற்றிக்கொண்டி ருக்கிறார்கள் மாணவர்கள். பிறந்த மண்ணை மணக்கச் செய்ய வேண்டும்.

    தமிழ்மீது உண்மையான நேசம் கொள்ள வேண்டும் என்றார். முன்னதாக, மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

    Next Story
    ×