என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேலூர் கோட்டை அருங்காட்சியகத்தில் நாளை ஓவியப்போட்டி
- காலை 10 மணி முதல் 12.30 மணி வரை நடக்கிறது
- பள்ளி மாணவிகள் முன் பதிவு செய்து பங்கேற்கலாம்
வேலூர்:
குழந்தைகள் தினமான நவம்பர் 14-ந் தேதியை முன்னிட்டு வேலூர் அரசு அருங்காட்சியகம் சார்பில் 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியருக்காக, நாளை சனிக்கிழமை காலை 10 மணி முதல் 12.30 மணி வரை ஓவியப்போட்டி வேலூர் கோட்டையில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில், நடத்தப்பட உள்ளது.
ஒவியப்போட்டியின் தலைப்பு வேலூர் மாவட்ட நினைவுச்சின்னங்கள்.
பள்ளி மாணவர்களின், கலைத்திறனை ஊக்கப்படுத்தும் வகையில் ஒவியப்போட்டியானது 6 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்காக நடத்தப்படவுள்ளது
ஓவியத்தில் ஆர்வமுள்ள 6 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்கள். இன்று மாலைக்குள் தங்களது பெயரை வேலூர் அரசு அருங்காட்சியகத்தில் பதிவு செய்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. பெயரை பதிவு செய்த மாணவர்கள் மட்டுமே ஒவியப்போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள்.
பள்ளி ஒன்றுக்கு 3 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கபடுவார்கள். ஒவியப்போட்டிக்கான ஓவிய தாள் மட்டுமே அருங்காட்சியகத்தில் வழங்கப்படும் ஏனைய பொருட்களை மாணவர்களே கொண்டு வரவேண்டும் என தெரிவித்தனர்.






