search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐபிஎல் 2023"

    • டோனியை காண்பதற்காகவே இவ்வளவு தூரம் பயணித்து வந்ததாக ரசிகர்கள் கூறியுள்ளனர்.
    • நேற்றைய போட்டிக்கான டிக்கெட்டுகள் இன்று செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டது.

    நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி நேற்று அகமதாபாத்தில் நடைபெற இருந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோத இருந்தன. கனமழை தொடர்ந்து பெய்து வந்ததால் போட்டி ஒத்திவைக்கப்பட்டு இன்று நடைபெறம் என அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் இறுதிப்போட்டியை காண வெளி மாநிலங்களில் இருந்து அகமதாபத்துக்கு வந்த ரசிகர்களுக்கு மழையால் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. நேற்றைய போட்டிக்கான டிக்கெட்டுகள் நாளை (இன்று) செல்லுபடியாகும். டிக்கெட்டுகளை பாதுகாப்பாக வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டது.

    அதனால் இறுதிப்போட்டியை பார்த்து விட்டுதான் ஊருக்கு செல்வதாக முடிவெடுத்த ரசிகர்கள், நள்ளிரவில் அகமதாபாத் ரெயில் நிலையத்தில் உறங்கினர். இந்த புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    டோனியை காண்பதற்காகவே இவ்வளவு தூரம் பயணித்து வந்ததாக ரசிகர்கள் கூறியுள்ளனர்.

    • மழையால் மைதானத்தில் தண்ணீர் குளம்போல் தேங்கியது.
    • 16 ஆண்டுகால ஐ.பி.எல். கிரிக்கெட் வரலாற்றில் இறுதிப்போட்டி மாற்றுநாளுக்கு தள்ளிவைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

    அகமதாபாத்:

    16-வது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மகுடத்துக்கான இறுதிஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்சும், ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்சும் அகமதாபாத்தில் நேற்றிரவு 7.30 மணிக்கு மோதுவதாக இருந்தது.

    ஆனால் ஆட்டம் தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக திடீரென மழை பெய்தது. இடி, மின்னலுடன் இடைவிடாது கொட்டித்தீர்த்த மழையால் மைதானத்தில் தண்ணீர் குளம்போல் தேங்கியது.

    இந்நிலையில் மழை பெய்து கொண்டிருந்த போது மைதானத்தில் இருந்த ரசிகர்கள் மழை நிற்க வேண்டும் என ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட்டனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    தொடர்ந்து மழை நீடித்ததால் நேற்று போட்டி நடைபெறாமல் போனது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். இதனை தொடர்ந்து மாற்றுநாளான இன்று இரவு 7.30 மணிக்கு இறுதிப்போட்டி நடைபெறும் என்று ஐ.பி.எல். நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டது.

    16 ஆண்டுகால ஐ.பி.எல். கிரிக்கெட் வரலாற்றில் இறுதிப்போட்டி மாற்றுநாளுக்கு தள்ளிவைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

    • மிகவும் முக்கியமான போட்டிகளில் அதிக ரன்கள் குவிக்க சரியான தருணத்தில் அபாரமாக ஆட வேண்டும்.
    • குறிப்பாக அவரது இரண்டு சதங்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

    மும்பை:

    இந்த ஐ.பி.எல். தொடரில் அதிக ரன் குவித்த வீரராக சுப்மன்கில் இருக்கிறார்.

    குஜராத் அணியின் தொடக்க வீரரான அவர் 16 ஆட்டத்தில் விளையாடி 851 ரன் குவித்துள்ளார். 3 சதமும், 4 அரை சதமும் அடித்துள்ளார். பெங்களூர் அணிக்கு எதிரான சதமும், மும்பைக்கு எதிரான 2-வது தகுதி சுற்றில் அடித்த செஞ்சுரியும் மிகவும் முக்கியத்துவம் பெற்று இருந்தது.

    இந்த நிலையில் சுப்மன் கில் ஆட்டம் தன்னை மிகவும் கவர்ந்ததாக கிரிக்கெட்டின் சகாப்தமான டெண்டுல்கர் பாராட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    சுப்மன்கில்லின் ஆட்டம் இந்த சீசனில் மறக்க முடியாத ஒன்றாகும். குறிப்பாக அவரது இரண்டு சதங்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ஒரு சதம் மும்பை இந்தியன்சுக்கு நம்பிக்கையை கொடுத்தது. மற்றொன்று மும்பைக்கு தோல்வியை கொடுத்தது. இதுதான் கிரிக்கெட் விளையாட்டின் இயல்பு.

    சுப்மன்கில்லின் குணம், அமைதி, ரன் குவிக்க வேண்டும் என்ற ஆர்வம், விக்கெட்டுகளுக்கு இடையில் ரன் எடுக்க ஓடுவது போன்ற கள செயல்பாடு என்னை கவர்ந்தது.

    மிகவும் முக்கியமான போட்டிகளில் அதிக ரன்கள் குவிக்க சரியான தருணத்தில் அபாரமாக ஆட வேண்டும். அதை சுப்மன்கில் மும்பை இந்தியன்சுக்கு எதிராக 12-வது ஓவர் முதல் செய்திருக்கிறார். அது அணிக்கு நம்பிக்கை கொடுக்கும்.

    குஜராத் அணி வலிமை யானது. சுப்மன்கில், ஹார்திக் பாண்டயா, மில்லர் விக்கெட்டுகள் சென்னை சூப்பர் கிங்சுக்கு முக்கியமானது. அதேபோல சென்னை அணியும் பலமான பேட்டிங் வரிசையை கொண்டுள்ளது. 8-வது பேட்ஸ்மேனாக டோனி களம் இறங்குகிறார்.

    இந்த இறுதிப்போட்டி சுவாரஸ்யமானதாக இருக்கும்.

    இவ்வாறு டெண்டுல்கர் கூறியுள்ளார்.

    • தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டம் கைவிடுவதாக இரவு 10.55 மணியளவில் நடுவர்கள் அறிவித்தனர்.
    • இன்றும் மழையால் பாதிக்கப்பட்டால் குஜராத் டைட்டன்ஸ் அணி ஐ.பி.எல் கோப்பையை கைப்பற்றும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

    16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் 31-ந் தேதி தொடங்கியது. லீக் போட்டிகள் மே 21-ந் தேதியுடன் முடிந்தது. இதன் முடிவில் குஜராத், சென்னை, லக்னோ, மும்பை அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றன. 'பிளே ஆப்' சுற்று கடந்த 23-ந் தேதி தொடங்கியது.

    சேப்பாக்கத்தில் நடந்த முதல் தகுதி சுற்றில் (குவாலிபையர்-1) சென்னை சூப்பர் கிங்ஸ் 15 ரன் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றது. 24-ந் தேதி சேப்பாக்கத்தில் நடந்த வெளியேற்றுதல் சுற்றில் (எலிமினேட்டர்) மும்பை அணி 81 ரன் வித்தியாசத்தில் லக்னோவை வீழ்த்தி வெளியேற்றியது.

    26-ந் தேதி அகமதாபாத்தில் நடந்த 'குவாலிபையர்-2' போட்டியில் குஜராத் அணி 62 ரன் வித்தியாசத்தில் மும்பையை தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

    சென்னை சூப்பர் கிங்ஸ்-குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதும் ஐ.பி.எல். இறுதிப்போட்டி அகமதாபாத்தில் நேற்று இரவு 7.30 மணிக்கு தொடங்க இருந்தது. ஆனால் மழையால் இறுதிப்போட்டி பாதிக்கப்பட்டது. இதனால் ஆட்டத்தை கைவிடுவதாக இரவு 10.55 மணியளவில் நடுவர்கள் அறிவித்தனர்.

    இந்நிலையில் மைதானத்தில் ராட்சத திரையில் 'ரன்னர் அப் சென்னை சூப்பர் கிங்ஸ்' என்று எழுதியிருந்தது. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது. ஒருவேளை ஐபிஎல் போட்டிகள் சொல்லி வைத்து ஆடுவது போல என்று நினைக்கும் ரசிகர்களுக்கு, உண்மையிலேயே அப்படிதான் நடக்கிறதோ என்பது போல இருந்தது இந்த புகைப்படம்.

    போட்டி டாஸ் கூட போடாத நிலையில் ராட்சத திரையில் இப்படி வந்தது சிஎஸ்கே ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

    ஒவ்வொரு போட்டிக்கு முன்பும் திரை சோதனை, வழக்கமான பயிற்சியாக இருந்திருக்கலாம் என்று சிலர் கூறியுள்ளனர். குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும் இதேபோன்ற சோதனை நடத்தப்பட்டுள்ளது எனவும் கூறி வருகின்றனர்.

    இன்றைய இறுதிப் போட்டியும் ஒரு வேளை மழையால் பாதிக்கப்பட்டால் குஜராத் டைட்டன்ஸ் அணி ஐ.பி.எல் கோப்பையை கைப்பற்றும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மழையால் இரவு 9.40 மணிக்கு முன்பு ஆட்டம் தொடங்கினால் ஓவர்கள் குறைக்கப்படாமல் விளையாடப்படும்.
    • நள்ளிரவு 12.30 மணிக்குள்ளாக ஆட்டம் தொடங்க வாய்ப்பு கிடைத்தால் ஒரு அணிக்கு தலா 5 ஓவர்கள் வீதம் ஆடப்படும்.

    அகமதாபாத்:

    16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் 31-ந் தேதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்தப் போட்டியின் 'லீக்' ஆட்டம் கடந்த 21-ந் தேதி முடிவடைந்தது.

    இதன் முடிவில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் முறையே முதல் 4 இடங்களை பிடித்து 'பிளே ஆப்' சுற்றுக்கு தகுதி பெற்றன.

    ராஜஸ்தான், பெங்களூரு, கொல்கத்தா, பஞ்சாப், டெல்லி, ஐதராபாத் ஆகிய அணிகள் 5 முதல் 10-வது இடங்களை பிடித்து வெளியேறின.

    'பிளே ஆப்' சுற்று கடந்த 23-ந் தேதி தொடங்கியது. சேப்பாக்கத்தில் நடந்த முதல் தகுதி சுற்றில் (குவாலிபையர்-1) சென்னை சூப்பர் கிங்ஸ் 15 ரன் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றது.

    24-ந் தேதி சேப்பாக்கத்தில் நடந்த வெளியேற்றுதல் சுற்றில் (எலிமினேட்டர்) மும்பை அணி 81 ரன் வித்தியாசத்தில் லக்னோவை வீழ்த்தி வெளியேற்றியது.

    26-ந் தேதி அகமதாபாத்தில் நடந்த 'குவாலிபையர்-2' போட்டியில் குஜராத் அணி 62 ரன் வித்தியாசத்தில் மும்பையை தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

    சென்னை சூப்பர் கிங்ஸ்-குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதும் ஐ.பி.எல். இறுதிப்போட்டி அகமதாபாத்தில் நேற்று இரவு 7.30 மணிக்கு தொடங்க இருந்தது. ஆனால் மழையால் இறுதிப்போட்டி பாதிக்கப்பட்டது. தொடர்ந்து பெய்த பலத்த மழையால் குறைந்த அளவு ஓவர்கள் வைத்து கூட நடத்த இயலாமல் போனது.

    இதனால் ஆட்டத்தை கைவிடுவதாக இரவு 10.55 மணியளவில் நடுவர்கள் அறிவித்தனர். மாற்றுதினமான இன்று ஐ.பி.எல். இறுதிப்போட்டி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

    இன்றைய இறுதிப் போட்டியும் ஒரு வேளை மழையால் பாதிக்கப்பட்டால் குஜராத் டைட்டன்ஸ் அணி ஐ.பி.எல் கோப்பையை கைப்பற்றும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

    மழையால் இரவு 9.40 மணிக்கு முன்பு ஆட்டம் தொடங்கினால் ஓவர்கள் குறைக்கப்படாமல் விளையாடப்படும்.

    9.45 மணிக்கு தொடங்கினால் 19 ஓவர்களாக குறைக்கப்படும். 10 மணிக்கு 17 ஓவர்களாவும், 10.30 மணிக்கு 15 ஓவர்களாகவும் குறைக்கப்படும்.

    நள்ளிரவு 12.30 மணிக்குள்ளாக ஆட்டம் தொடங்க வாய்ப்பு கிடைத்தால் ஒரு அணிக்கு தலா 5 ஓவர்கள் வீதம் ஆடப்படும்.

    அதுவும் முடியாவிட்டால் போட்டி சூப்பர் ஓவருக்கு செல்லும். நள்ளிரவு 1.20 மணிக்குள் ஆடுகளம் விளையாட தயாராக இருந்தால் சூப்பர் ஓவர் நடைபெறும்.

    சூப்பர் ஓவரும் நடத்த இயலாமல் போனால் புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்து இருந்ததால் குஜராத் அணி ஐ.பி.எல். கோப்பையை வெல்லும். அந்த அணி 'லீக்' முடிவில் 10 வெற்றி, 4 தோல்வியுடன் 20 புள்ளிகள் பெற்று இருந்தது. சி.எஸ்.கே. 8 வெற்றி, 5 தோல்வி, ஒரு முடிவில்லை ஆகியவற்றுடன் 17 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தை பிடித்தது.

    இன்று மழை பெய்ய 10 சதவீதம் மட்டுமே வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மைய தகவல் தெரிவிக்கின்றன.

    மழையால் முழுவதுமாக பாதிக்கப்பட்டால் டோனியால் 5-வது ஐ.பி.எல். கோப்பை கனவு நனவாகாமல் போய்விடும். தனது கடைசி தொடரில் கோப்பையுடன் விடைபெறும் ஆர்வத்தில் டோனி உள்ளார்.

    போட்டி முழுமையாக நடைபெற்று சிறப்பாக ஆடி அணி கோப்பையை வெல்வதே நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் விரும்புகின்றனர்.

    • டோனிக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் 2 கிலோ பிரியாணியை கொண்டு டோனியின் உருவம் உருவாக்கப்பட்டுள்ளது.
    • ஐ.பி.எல். கோப்பையையும் வரைந்து அசத்தியுள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை மாநிலம் முருங்கப்பாக்கத்தைச் சேர்ந்தவர் அறிவழகி.

    ஓவியரான இவர் தேச தலைவர்களின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாளின் போது அவர்களுடைய உருவத்தை தத்ரூபமாக கோலமாவுகளைக் கொண்டு வரைந்து அசத்தியுள்ளார். காந்தியடிகள், டாக்டர் அப்துல் கலாம், டெண்டுல்கர், டோனி ஆகியோரின் உருவங்களையும் ரங்கோலியிலும் வரைந்துள்ளார்.

    அந்த வகையில் இன்று நடைபெற உள்ள ஐ.பி.எல் போட்டி இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன. 

    பிரியாணியில் வரையப்பட்ட தோனி ஓவியம்.

    பிரியாணியில் வரையப்பட்ட தோனி ஓவியம்.

    இதில் சென்னை அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கில் டோனிக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் அறிவழகி 2 கிலோ பிரியாணியை கொண்டு 2 அடியில் டோனியின் உருவத்தை தத்ரூபமாக உருவாக்கியுள்ளார்.

    இதில் ஐ.பி.எல். கோப்பையையும் வரைந்து அசத்தியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    • ஐபிஎல் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.
    • மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    அகமதாபாத்:

    ஐ.பி.எல். தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டது. அகமதாபாத்தில் நடைபெறும் ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டியில் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன.

    இந்நிலையில், மழை காரணமாக களத்தில் ஈரப்பதம் அதிகமாக உள்ளதால் டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    • சென்னை சூப்பர் கிங்ஸ் 4 முறையும், குஜராத் டைட்டன்ஸ் 1 முறையும் ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளன
    • குஜராத்தில் இன்று மாலையில் சுமார் 2 மணி நேரம் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி விளையாட்டு மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு இறுதிப்போட்டி நடக்கிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    சென்னை சூப்பர் கிங்ஸ் 4 முறையும், குஜராத் டைட்டன்ஸ் 1 முறையும் ஐபிஎல் கோப்பையை வென்றுள்ள நிலையில் இன்றைய ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆனால் குஜராத்தில் தற்போது நிலவும் வானிலை ரசிகர்களுக்கு சற்று கவலையை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் இடையேயான குவாலிஃபையர்- 2 போட்டியின் போதும் மழை பெய்தது.

    இன்று மதிய நிலவரப்படி வானம் ஓரளவு தெளிவாக இருந்தது. ஆனாலும் மழைக்கான வாய்ப்பு அதிகம் உள்ளது என தனியார் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. மாலையில் சுமார் 2 மணி நேரம் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மழைக்குப் பிறகு போட்டி தொடங்கி குறைந்தபட்சம் 5 ஓவர்களை முடிக்க முடியாவிட்டால், போட்டியை நடத்த மற்றொரு நாள் (ரிசர்வ் நாள்) ஒதுக்கப்படும். ஆனால், சில கூடுதல் நிபந்தனைகளும் விதிக்கப்படும். இன்று குறைந்தபட்சம் ஒரு பந்தாவது வீசப்பட்டால், ரிசர்வ் நாள் போட்டி முந்தைய நாள் விட்ட இடத்தில் இருந்து தொடங்கி நடைபெறும். இன்று டாஸ் போடப்பட்டாலும், ஆட்டம் நடக்காத சூழ்நிலையில், நாளை இரு தரப்புக்கும் 20 ஓவர் விளையாட வாய்ப்பு வழங்கப்பட்டு போட்டி தொடங்கும். ரிசர்வ் நாளில் மீண்டும் டாஸ் போடப்படும். அணிகளில் மாற்றம் செய்ய கேப்டன்களுக்கு அனுமதி அளிக்கப்படும்.

    • கடந்த ஆண்டு முதல்முறையாக கேப்டன்சி செய்தபோதே ஹர்திக் பாண்ட்யா மிரட்டிவிட்டார்.
    • டோனியை போலவே அணியை அமைதியான சூழலில் பாண்ட்யா வைத்திருக்கிறார்.

    ஐபிஎல் 16-வது சீசன் நாளையுடன் முடிவடைகிறது. இந்த சீசனின் இறுதி போட்டிக்கு சிஎஸ்கே மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. முதல் தகுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்சை வீழ்த்தி சிஎஸ்கே அணி இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது.

    எலிமினேட்டரில் ஜெயித்த மும்பை இந்தியன்சும், குஜராத் டைட்டன்சும் 2-வது குவாலிபையர் சுற்றில் மோதின.

    இதில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவரில் 233 ரன்களை குவித்தது. இதனையடுத்து ஆடிய மும்பை இந்தியன்ஸ் 171 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் 62 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில் டோனியை போலவே அணியை அமைதியான சூழலில் பாண்ட்யா வைத்திருக்கிறார் என கவாஸ்கர் புகழ்ந்துள்ளார்.

    இது குறித்து ஹர்திக் பாண்ட்யாவின் கேப்டன்சி குறித்து சுனில் கவாஸ்கர் கூறியதாவது:-

    ஹர்திக் பாண்ட்யா டோனியை முன்மாதிரியாக பின்பற்றுகிறார். டாஸ் போடும்போது டோனி எதிரணியுடன் நட்புடன் தான் இருப்பார். முகத்தில் சிரிப்பெல்லாம் இருக்கும். ஆனால் போட்டியின்போது சூழலே வேறு மாதிரி இருக்கும். ஹர்திக் பாண்ட்யா மிக விரைவில் கேப்டன்சியை கற்றுக்கொண்டுவிட்டார்.

    கடந்த ஆண்டு முதல்முறையாக கேப்டன்சி செய்தபோதே ஹர்திக் பாண்ட்யா மிரட்டிவிட்டார். டோனியை போலவே அணியை அமைதியான சூழலில் பாண்ட்யா வைத்திருக்கிறார். சிஎஸ்கே அணியை போலவே ஹர்திக் பாண்ட்யா கேப்டன்சி செய்யும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மகிழ்ச்சியான அணியாக உள்ளது. அதற்கான முழு கிரெடிட்டும் ஹர்திக் பாண்ட்யாவுக்கே.

    என்று சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.

    • மும்பை அணிக்கு எதிராக சுப்மன் கில் அதிரடியாக ஆடி 129 ரன்கள் எடுத்தார்.
    • இறுதிப் போட்டியில் சதம் அடித்தால் விராட் கோலியின் சாதனையை கில் சமன் செய்வார்.

    ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த 2-வது குவாலிபையர் போட்டியில் மும்பை மற்றும் குஜராத் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச்சு தேர்வு செய்தார்.

    அதன்படி முதலில் ஆடிய குஜராத் அணிக்கு சுப்மன் கில் அதிரடியாக ஆடி 129 ரன்கள் எடுத்துக் கொடுத்ததன் மூலமாக அந்த அணி 233 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய மும்பை அணி 171 ரன்கள் மட்டுமே எடுத்து 62 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

    இந்தப் போட்டியில் 129 ரன்கள் எடுத்ததன் மூலமாக ஐபிஎல் கிரிக்கெட்டில் ரிஷப் பண்ட் எடுத்த 128 ரன்கள் (நாட் அவுட்) சாதனையை கில் முறியடித்துள்ளார்.

    இதற்கு முன்னதாக ஆர்சிபி அணிக்கு எதிராக சுப்மன் கில் 104 ரன்கள் (நாட் அவுட்), சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக 101 ரன்கள் எடுத்துள்ளார். இப்படி ஒரே சீசனில் 3 முறை சதம் அடித்து அசத்தியுள்ளார்.

    நாளை சென்னைக்கு எதிராக நடக்கும் இறுதிப் போட்டியில் சதம் அடித்தால் ஒரு சீசனில் 4 சதங்கள் அடித்த விராட் கோலியின் சாதனையை சமன் செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்கள்:-

    132* - கேஎல் ராகுல் (பஞ்சாப்) ஆர்சிபிக்கு எதிராக (துபாய்) 2020

    129 - சுப்மன் கில் (குஜராத்) மும்பைக்கு எதிராக (அகமதாபாத்) 2023

    128* - ரிஷப் பண்ட் (டெல்லி) ஐதராபாத்க்கு எதிராக (டெல்லி மைதானம்) 2018

    127 - முரளி விஜய் (சிஎஸ்கே) ராஜஸ்தானுக்கு எதிராக (சென்னை) 2010

    • குஜராத் வீரர்கள் 25 ரன்கள் அதிகமாக அடித்து விட்டனர்.
    • இஷான் கிஷனுக்கு இப்படி ஆனது எதிர்பாராத ஒன்று.

    16-வது ஐபிஎல் சீசனின் குவாலிஃபையர் 2-வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸை எதிர்கொண்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட்டு இழப்பிற்கு 233 ரன்கள் எடுத்தது.

    இதனையடுத்து 234 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி 18.2 ஓவரில் 171 ரன்களில் சுருண்டது. இதன் மூலம் மும்பை அணி தொடரிலிருந்து வெளியேறியது. குஜராத் அணி வீரர் மோஹித் சர்மா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    பவர் பிளேயில் 2 விக்கெட்டுகளை இழந்தது பெரிய இழப்பாக இருந்தது என மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    சுப்மன் கில் சிறப்பாக பேட்டிங் செய்தார். அடித்து ஆடுவதற்கு ஏற்ற ஆடுகளம். குஜராத் வீரர்கள் 25 ரன்கள் அதிகமாக அடித்து விட்டனர். கிரீன், சூர்யகுமார் யாதவ் சிறப்பாக விளையாடினார்கள். பவர் பிளேவில் 2 விக்கெட்டுகளை இழந்ததால் மொமண்டம் கிடைக்கவில்லை.

    சுப்மன் கில் மாதிரி யாராவது ஒரு பேட்டர் கடைசிவரை விளையாடி இருந்தால் எது வேண்டுமானாலும் நடந்திருக்கலாம். ஏனெனில் இது விளையாடுவதற்கு நல்ல மைதானம். இஷான் கிஷனுக்கு இப்படி ஆனது எதிர்பாராத ஒன்று. கடந்த போட்டியில் சிறப்பாக பந்து விசிய பவுலர்கள் இந்தப் போட்டியில் சரியாக பந்து வீசவில்லை. இன்று விளையாடியதை வைத்து எதையும் மதிப்பிட முடியாது. குஜராத் அணி நன்றாக விளையாடியது. சுப்மன் கில் இனிவரும் போட்டிகளிலும், அவரது இந்த ஃபார்ம் தொடரும் என நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நான் அதிகப்படியான தொடக்க ஆட்டக்காரர்களை தேர்வு செய்யவில்லை.
    • ஒரு வெளிநாட்டு வீரர் இந்தியாவில் சுழற்பந்து வீச்சை திறம்பட ஆடுவதை எப்போதாவது தான் பார்க்க முடியும்.

    மும்பை:

    16வது ஐபிஎல் தொடர் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இறுதி ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியும் நாளை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோத உள்ளன.

    சென்னையை வீழ்த்தி குஜராத் கோப்பையை தக்க வைக்குமா அல்லது குஜராத்தை வீழ்த்தி 5-வது முறையாக சென்னை கோப்பையை வெல்லுமா என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டுள்ளனர்.

    இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடியதாக தனக்கு தெரிந்த 5 டாப் பேட்ஸ்மேன்களை தேர்வு செய்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறும் போது நான் அதிகப்படியான தொடக்க ஆட்டக்காரர்களை தேர்வு செய்யவில்லை. ஏனெனில் அவர்களுக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கின்றன.

    நான் முதலாவதாக ரிங்கு சிங்கை தேர்வு செய்கிறேன். நான் இவரை முதலில் ஏன் தேர்வு செய்தேன் என யாரும் கேள்வி எழுப்ப மாட்டார்கள் என நினைக்கிறேன். ஏனெனில் இதற்கு முன்னர் 5 சிக்சர்களை அடித்து யாரும் அணியை வெற்றி பெறச்செய்யவில்லை என நினைக்கிறேன்.

    இரண்டாவதாக மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஷிவம் துபேவை தேர்வு செய்கிறேன். அவர் 33 சிக்சர்களை அடித்துள்ளார். மேலும், அவரது ஸ்டிரைக் ரேட் 160 ஆக உள்ளது. அவருக்கு கடந்த சில சீசன்கள் எதிர்பார்த்த படி அமையவில்லை. ஆனால் இந்த வருடம் அருமையாக செயல்பட்டுள்ளார். மூன்றாவதாக தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால். அவரது அருமையான பேட்டிங் திறமை என்னை அவரை எடுக்க வைத்தது.

    இதையடுத்து 4-வதாக சூர்யகுமார் யாதவ். ஏனெனில் அவர் ஐபிஎல் தொடங்கும் போது சிறந்த பார்மில் இல்லை. சர்வதேச போட்டிகளில் அடுத்தடுத்து டக் அவுட் ஆனார். ஐபிஎல் தொடரில் கூட தொடக்கத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அதற்கடுத்து தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இறுதியாக நான் யாரை வேண்டுமானாலும் தேர்வு செய்யலாம்.

    ஏனெனில் அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் நான் மற்றொரு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனை தேர்வு செய்கிறேன். அது ஹென்ரிச் க்ளாசென் . ஒரு வெளிநாட்டு வீரர் இந்தியாவில் சுழற்பந்து வீச்சை திறம்பட ஆடுவதை எப்போதாவது தான் பார்க்க முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×