search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீரேந்தர் சேவாக்"

    • இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபாரமாக விளையாடி வெற்றி பெற்றது.
    • இந்த போட்டியில் ஜெய்ஸ்வால் இரட்டை சதம் அடித்து அசத்தினார்.

    இங்கிலாந்துக்கு எதிராக விசாகப்பட்டினத்தில் நடந்த 2-டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.

    இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் 22 வயதான இளம் துவக்க வீரர் யசஸ்வி ஜெய்ஸ்வால் (209) இரட்டை சதம் அடித்து இந்திய அணி கெளரவமான ஸ்கோர் வருவதற்கு உதவினார். மற்ற வீரர்கள் 35 ரன்கள் கூட அடிக்காத போது இரட்டை சதமடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையும் அவர் படைத்தார்.

    இதே போல 2-வது இன்னிங்சில் இந்திய வீரர்கள் தடுமாற்றமாக விளையாடிய போது 24 வயதான சுப்மன் கில் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதமடித்து (104) ரன்கள் குவித்து கடினமான இலக்கு வைப்பதற்கு உதவினார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே போட்டியில் 25 வயதுக்குட்பட்ட 2 வீரர்கள் சதமடித்த அரிதான நிகழ்வு இந்திய கிரிக்கெட்டில் இரண்டாவது முறையாக நடந்தது. இதற்கு முன் 1996-ம் ஆண்டு ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் சச்சின் மற்றும் கங்குலி ஆகியோர் 25 வயதுக்குள் சதமடித்திருந்தனர். 

    இந்நிலையில் சச்சின் -கங்குலி போல 25 வயதுக்குள் அசத்தியுள்ள கில் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் உலக கிரிக்கெட்டில் அபாரமாக விளையாடி இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுப்பார்கள் என்று இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் சேவாக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இந்த 2 இளம் வீரர்களை பார்ப்பது மகிழ்ச்சியை கொடுக்கிறது. 25 வயதிற்குட்பட்ட அந்த இருவரும் இக்கட்டான நேரத்தில் உயர்ந்து நின்றனர். இந்த இருவரும் அடுத்த தசாப்தம் மற்றும் அதையும் தாண்டி உலக கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்த வாய்ப்புள்ளது.

    என்று சேவாக் கூறினார்.

    • பாகிஸ்தானுக்கு இலக்காக 402 ரன்கள் நியூசிலாந்து நிர்ணயித்தது
    • அசராத சேவாக் தனது பதிலில் 2 காரணங்களுக்கு நன்றி கூறுங்கள் என்றார்

    ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலக கோப்பை 2023 போட்டித்தொடரில் பாகிஸ்தானுக்கும் நியூசிலாந்துக்கும் இடையே பெங்களூரூவில் நேற்று போட்டி நடைபெற்றது.

    முதலில் ஆடிய நியூசிலாந்து அணி, பாகிஸ்தானுக்கு 402 ரன்களை இலக்காக நிர்ணயித்திருந்தது.

    பிறகு பாகிஸ்தான் ஆடிய போது மழையின் காரணமாக டக்வர்த்-லூயிஸ்-ஸ்டர்ன் (Duckworth-Lewis-Stern) முறைப்படி இலக்குகள் மாற்றப்பட்டது. அப்போது புதிய இலக்கை அடைய ஃபகர் ஜமான் 81 பந்துகளில் 126 ரன்களை விளாசி பாகிஸ்தானின் வெற்றிக்கு வழிவகுத்தார்.

    சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாகிஸ்தானின் தொடக்க வீரர் ஃபகர் ஜமானின் திறமையை பல மூத்த கிரிக்கெட் வீரர்கள் புகழ்ந்தனர்.

    இந்தியாவின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேனும் சாதனையாளருமான வீரேந்தர் சேவாக், தனது அதிகாரபூர்வ எக்ஸ் வலைதள கணக்கில் ஜமானின் ஆட்டத்தை பாராட்டி கருத்து பதிவிட்டிருந்தார். அவரது பதிவில் "ஜமான் பேட்டிங்கில் 'ஜஜ்பே' (வெல்லும் வெறி) குறையவே இல்லை" என குறிப்பிட்டிருந்தார்.

    "ஜஸ்பே" என்பதை "ஜஜ்பே" என சேவாக் குறிப்பிட்டுள்ளதாக கூறிய ஒரு பாகிஸ்தானியர் "நாங்கள் ஜின்னாவிற்கு நன்றி சொல்ல 'ஜஸ்பே' ஒரு 13-ஆவது காரணமாகும்" என பதிலளித்தார்.

    இதன் மூலம் மறைமுகமாக சேவாக்கை கிண்டல் செய்து விட்டதாகவும், இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்கு காரணமான ஜின்னாவிற்கு நன்றி தெரிவித்ததாகவும் அந்த பாகிஸ்தானியர் கருதினார்.

    ஆனால், '13 முறை நன்றி' பதிலுக்கு அசராத சேவாக், "தொடர்ந்து கடனிலேயே வாழ்வதற்கு முதல் நன்றியா? இந்தியாவிடம் 8-0 என தோற்று கொண்டே இருப்பதற்கு இரண்டாவது நன்றியா?" என கேள்வி எழுப்பினார்.

    இதுவரை ஐசிசி ஆண்கள் உலக கோப்பை போட்டிகளில் இந்தியாவிடம் 8 முறை தோற்ற பாகிஸ்தான் ஒரு முறை கூட வென்றது கிடையாது. அதே போல் சில வருடங்களாக பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தான், பல நிதி அமைப்புகளிடம் கடன் பெறுவதும் தொடர்கதையாகி விட்டது.

    இரண்டையும் குறிப்பிட்டு தனது நடுநிலையான பாராட்டை கிண்டல் செய்தவருக்கு பதிலடி கொடுத்த சேவாக்கின் பதிலை சமூக வலைதளங்களில் பலரும் "சேவாக்கின் அதிரடி" என பாராட்டி வருகின்றனர்.

    • பவர் பிளேயில் சேவாக் ஆட்டத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த காலம் அது.
    • சேவாக் பிறந்தாளுக்கு சச்சின் டெண்டுல்கர் வித்தியாசமான முறையில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இந்திய அணியின் நட்சத்திர வீரர்களாக வலம் வந்தவர்கள் சச்சின், சேவாக். இருவரும் களத்தில் நின்றால் அனல் பறக்கும். தொடக்க ஆட்டக்காரர்களாக இருவரும் பல சாதனைகளை படைத்துள்ளனர். பவர் பிளேயில் சேவாக் ஆட்டத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த காலம் அது.

    இரட்டை சதத்தை இன்று பலர் அடித்தாலும் அதனை முதலில் தொடங்கி வைத்தவர்கள் இவர்கள் இரண்டு பேரும்தான். முதல் இரட்டை சதத்தை தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சச்சின் தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து சேவாக் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இரட்டை சதம் அடித்து அசத்தினார்.

    இந்நிலையில் அதிரடி நாயகனாக சேவாக் பிறந்தாளுக்கு சச்சின் டெண்டுல்கர் வித்தியாசமான முறையில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    அதில் கூறியிருப்பதாவது:-

    நான் ஒருமுறை பொறுமையாக விளையாடும்படி கூறினேன். "சரி" என்று சொல்லிவிட்டு அடுத்த பந்தை பவுண்டரிக்கு அடித்தார். நான் சொல்வதற்கு நேர்மாறாக செய்ய விரும்பும் மனிதருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். எனவே, தயவுசெய்து ஒரு சலிப்பான பிறந்தநாளைக் கொண்டாடுங்கள் விரு.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நாம் பாரதியர்கள் என சேவாக் கூறியுள்ளார்.
    • சேவாக்கின் இந்த பதிவிற்கு தமிழ் நடிகர் விஷ்ணு விஷால் பதிலடி கொடுத்துள்ளார்.

    இந்திய பாராளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடர் இம்மாதம் 18 தொடங்கி 22 வரை நடக்க இருக்கிறது. நமது நாட்டின் பெயரை "இந்தியா" என்பதற்கு பதிலாக "பாரத்" என மாற்றுவது குறித்து மசோதா தாக்கல் செய்யப்படலாம் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த முடிவுக்கு பல தரப்பினர் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் பாரத் என மாற்றுவதற்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சேவாக் ஆதரவு தெரிவிக்கும் விதத்தில் டுவிட் செய்திருந்தார். அதில், ஒரு பெயர் நமக்கு பெருமை சேர்க்கும் ஒன்றாக இருக்க வேண்டும் என எப்போதும் நம்புகிறவன் நான். நாம் பாரதியர்கள். இந்தியா என்பது ஆங்கிலேயர்கள் வழங்கிய பெயர். எங்களது உண்மையான பெயரான பாரத்தை அதிகாரப்பூர்வமாக திரும்பப் பெறுவதற்கு நீண்ட காலம் ஆகிவிட்டது என கூறியிருந்தார்.

    சேவாக்கின் இந்த பதிவிற்கு தமிழ் நடிகர் விஷ்ணு விஷால் பதிலடி கொடுத்துள்ளார். அதில் ஏன் இத்தனை ஆண்டுகளாக இந்தியா என்ற பெயர் உங்களுக்கு பெருமை சேர்க்கவில்லையா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

    விஷ்ணு விஷால் கிரிக்கெட் மீது மிகவும் ஆர்வம் கொண்டவர். அவர் ஜீவா என்ற படத்தில் கிரிக்கெட்டராக நடித்திருந்தார். இந்த படம் தமிழக அளவில் வெற்றி கண்டது. ஏன் தமிழக கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் நீங்காத ஒரு படமாக இருந்தது என்றே கூறலாம்.

    • ராகுல் டிராவிட்டிற்கு பந்து வீசுவது மிகவும் கடினம்.
    • 14 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்திய சேவாக் 104 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

    லாகூர்:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி தொடக்க வீரர் வீரேந்திர சேவாக். டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து தொடர்களிலும் சேவாக் பல்வேறு சாதனைகள் படைத்துள்ளார்.

    இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் தொடங்க வீரர் சேவாக்கின் விக்கெட்டை வீழ்த்துவது மிகவும் சுலபம் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ரானா நவீத் உல் ஹசன் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    (டெஸ்ட்டில்) சேவாக்கின் விக்கெட்டை வீழ்த்துவது மிகவும் சுலபம். ஆனால், ராகுல் டிராவிட்டிற்கு பந்து வீசுவது மிகவும் கடினம். என்றார். 14 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்திய சேவாக் 104 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8 ஆயிரத்து 586 ரன்கள் குவித்துள்ளார்.

    251 ஒருநாள் போட்டிகளில் ஆடிய சேவாக் 8 ஆயிரத்து 273 ரன்கள் குவித்துள்ளார். அதேபோல், 19 டி20 கிரிக்கெட்டில் விளையாடிய சேவாக் 394 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்த சீசனில் அதிக ரன் எடுத்த வீரர்களில் முதல் இடத்தில் இருந்த டு பிலிசிசை அவர் முந்தினார்.
    • லோகோஷ் ராகுல் 2020-ம் ஆண்டு பெங்களூருக்கு எதிராக 132 ரன்களை குவித்தது முதல் நிலையாக இருக்கிறது.

    அகமதாபாத்:

    குஜராத் அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில் இந்த ஐ.பி.எல். சீசனில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

    23 வயதான பஞ்சாபை சேர்ந்த அவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக அகமதாபாத்தில் நேற்று நடந்த 'குவாலிபையர் 2' ஆட்டத்தில் சதம் அடித்தார். சுப்மன் கில் 60 பந்தில் 7 பவுண்டரி, 10 சிக்சர்களுடன் 129 ரன்கள் குவித்தார்.

    இந்த தொடரில் அவர் அடித்த 3-வது செஞ்சூரியாகும். கடந்த 21-ந் தேதி பெங்களூர் அணிக்கு எதிராக 104 ரன்னும் (அவுட் இல்லை), 15-ந் தேதி சன்ரைசர்ஸ் ஐதராபாத்துக்கு எதிராக 101 ரன்னும் அடித்திருந்தார்.

    129 ரன் எடுத்ததன் மூலம் 'பிளேஆப் சுற்றின் ஒரு ஆட்டத்தில் அதிக ரன் எடுத்த வீரேந்தர் சேவாக் சாதனையை சுப்மன் கில் முறியடித்தார். 2014 ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்சுக்கு எதிரான 'குவாலிபையர்-2' ஆட்டத்தில் வீரேந்தர் சேவாக் 122 ரன் எடுத்தார். தற்போது சுப்மன் கில் அவரை கடந்தார்.

    மேலும் ஐ.பி.எல். போட்டியில் ஒரு ஆட்டத்தில் அதிகமான ரன் எடுத்த 2-வது இந்திய வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றார். லோகோஷ் ராகுல் 2020-ம் ஆண்டு பெங்களூருக்கு எதிராக 132 ரன்களை குவித்தது முதல் நிலையாக இருக்கிறது.

    மேலும் இந்த சீசனில் அதிக ரன் எடுத்த வீரர்களில் முதல் இடத்தில் இருந்த டுபெலிசிசை அவர் முந்தினார். இந்த தொடரில் 851 ரன்களை குவித்து உள்ளார். இந்த சீசனில் 800 ரன்னை எடுத்த முதல் வீரர் சுப்மன் கில் ஆவார்.

    சுப்மன் கில் ஆட்டத்தை முன்னாள் வீரர்கள் பலரும் பாராட்டி உள்ளனர். விராட் கோலி, டிவில்லியர்ஸ், யுவராஜ்சிங், ரெய்னா, ரிஷப்பண்ட், மைக்கேல் வாகன், வீரேந்தர் சேவாக் உள்ளிட்டோர் பாராட்டி உள்ளனர்.

    • நான் அதிகப்படியான தொடக்க ஆட்டக்காரர்களை தேர்வு செய்யவில்லை.
    • ஒரு வெளிநாட்டு வீரர் இந்தியாவில் சுழற்பந்து வீச்சை திறம்பட ஆடுவதை எப்போதாவது தான் பார்க்க முடியும்.

    மும்பை:

    16வது ஐபிஎல் தொடர் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இறுதி ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியும் நாளை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோத உள்ளன.

    சென்னையை வீழ்த்தி குஜராத் கோப்பையை தக்க வைக்குமா அல்லது குஜராத்தை வீழ்த்தி 5-வது முறையாக சென்னை கோப்பையை வெல்லுமா என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டுள்ளனர்.

    இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடியதாக தனக்கு தெரிந்த 5 டாப் பேட்ஸ்மேன்களை தேர்வு செய்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறும் போது நான் அதிகப்படியான தொடக்க ஆட்டக்காரர்களை தேர்வு செய்யவில்லை. ஏனெனில் அவர்களுக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கின்றன.

    நான் முதலாவதாக ரிங்கு சிங்கை தேர்வு செய்கிறேன். நான் இவரை முதலில் ஏன் தேர்வு செய்தேன் என யாரும் கேள்வி எழுப்ப மாட்டார்கள் என நினைக்கிறேன். ஏனெனில் இதற்கு முன்னர் 5 சிக்சர்களை அடித்து யாரும் அணியை வெற்றி பெறச்செய்யவில்லை என நினைக்கிறேன்.

    இரண்டாவதாக மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஷிவம் துபேவை தேர்வு செய்கிறேன். அவர் 33 சிக்சர்களை அடித்துள்ளார். மேலும், அவரது ஸ்டிரைக் ரேட் 160 ஆக உள்ளது. அவருக்கு கடந்த சில சீசன்கள் எதிர்பார்த்த படி அமையவில்லை. ஆனால் இந்த வருடம் அருமையாக செயல்பட்டுள்ளார். மூன்றாவதாக தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால். அவரது அருமையான பேட்டிங் திறமை என்னை அவரை எடுக்க வைத்தது.

    இதையடுத்து 4-வதாக சூர்யகுமார் யாதவ். ஏனெனில் அவர் ஐபிஎல் தொடங்கும் போது சிறந்த பார்மில் இல்லை. சர்வதேச போட்டிகளில் அடுத்தடுத்து டக் அவுட் ஆனார். ஐபிஎல் தொடரில் கூட தொடக்கத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அதற்கடுத்து தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இறுதியாக நான் யாரை வேண்டுமானாலும் தேர்வு செய்யலாம்.

    ஏனெனில் அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் நான் மற்றொரு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனை தேர்வு செய்கிறேன். அது ஹென்ரிச் க்ளாசென் . ஒரு வெளிநாட்டு வீரர் இந்தியாவில் சுழற்பந்து வீச்சை திறம்பட ஆடுவதை எப்போதாவது தான் பார்க்க முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ரஷித் கான் பார்ட்னர்ஷிப்புகளை முறியடிக்க விரும்புகிறார்.
    • இந்த சீசனின் வெற்றிகரமான பந்துவீச்சாளராக ரஷித்கான் மாறியுள்ளார்.

    மும்பை:

    ஐபிஎல் தொடரின் பிளே ஆப் சுற்று ஆட்டங்கள் இன்று சென்னையில் தொடங்குகின்றன. இன்று நடைபெறும் முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஹர்த்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன.

    சென்னை அணியில் பேட்டிங் வரிசை தரமாக அமைந்தாலும் பந்துவீச்சு சொல்லுபடியாக இல்லை. அதே வேளையில் பேட்டிங், பந்துவீச்சு என அனைத்து பகுதிகளிலும் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் குஜராத் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் முனைப்பில் உள்ளது.

    குஜராத் அணியின் பேட்டிங்குக்கு முக்கியமாக கருதப்படுவர் சுப்மன் கில். இந்த தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சுப்மன் கில் 14 இன்னிங்சில் 680 ரன்கள் குவித்து அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கிறார். பந்து வீச்சில் ரஷித்கான் மற்றும் முகமது சமி சிறப்பாக பந்து வீசி அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர்களில் அவர்கள் இருவரும் முதல் 2 இடங்களில் உள்ளனர்.

    இந்நிலையில் குஜராத் அணியின் துருப்பு சீட்டு ரஷித் கான் தான் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    குஜராத் அணிக்கு ரஷித் கான் தான் துருப்புச்சீட்டு. குஜராத் அணிக்கு விக்கெட் வீழ்த்த வேண்டும் என்றால் ரஷித் கானை தான் அழைத்து வருகிறார்கள். ஹர்த்திக் பாண்ட்யா ரஷித் கானை பயன்படுத்தும் விதம் பாராட்டுக்குரியது. ரஷித் கான் பார்ட்னர்ஷிப்புகளை முறியடிக்க விரும்புகிறார்.

    அவரது சிறப்பான ஆட்டத்தின் மூலம் தற்போது இந்த சீசனின் வெற்றிகரமான பந்துவீச்சாளராக மாறியுள்ளார். அதுபோல சென்னை அணிக்கு எதிராகவும் சிறப்பாக செயல்படுவார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சென்னை பிட்ச் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருப்பதால் சிஎஸ்கே பேட்ஸ்மேன்களுக்கு அவர் அதிக அளவில் நெருக்கடி கொடுப்பார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

    • ரோகித் களத்தில் பந்து வீச்சாளர்களுடன் பலப்பரீட்சை நடத்தவில்லை. மாறாக தமக்கு தாமே போட்டியிட்டு வருகிறார்.
    • அவருடைய பேட்டிங்கில் டெக்னிக்கல் அளவில் எந்த பிரச்சனையும் இருப்பதாக தெரியவில்லை.

    மும்பை இந்தியன்ஸ் இதுவரை பங்கேற்ற 10 போட்டிகளில் 5 வெற்றிகளையும் 5 தோல்விகளையும் பதிவு செய்து தடுமாறி வருகிறது. இதுவரை பதிவு செய்த 5 வெற்றிகளுமே பேட்ஸ்மேன்களின் போராட்டத்தால் கிடைத்து என்றால் மிகையாகாது.

    இந்த சீசனில் நடந்த 10 போட்டிகளில் ரோகித் சர்மா ஒரு அரை சதம் மட்டுமே அடித்து எஞ்சிய 9 போட்டிகளில் சொதப்பலாக செயல்பட்டார். மேலும் ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை டக் அவுட்டான வீரர் (16) மற்றும் கேப்டன் (10) ஆகிய இரட்டை மோசமான சாதனைகளை படைத்துள்ளார்.

    இந்நிலையில் டெக்னிக்கல் அளவில் எந்த தடுமாற்றமும் இல்லாத நிலைமையில் மனதளவில் பிரச்சனை இருப்பதே ரோகித் சர்மா இப்படி தருமாறுவதற்கு காரணம் என்று முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ரோகித் சர்மா களத்தில் பந்து வீச்சாளர்களுடன் பலப்பரீட்சை நடத்தவில்லை. மாறாக தமக்கு தாமே போட்டியிட்டு வருகிறார். அவரிடம் மனதளவில் ஏதோ ஒரு தேக்கம் இருக்கிறது. ஏனெனில் தற்போது அவருடைய பேட்டிங்கில் டெக்னிக்கல் அளவில் எந்த பிரச்சனையும் இருப்பதாக தெரியவில்லை.

    ஆனால் அவருடைய மனதுக்குள் ஏதோ ஒரு குழப்பம் இருந்து கொண்டே இருக்கிறது. எனவே அதற்கு ஒரே தீர்வாக ஒரு சில போட்டிகளில் ஓய்வெடுத்துக் கொண்டு புத்துணர்ச்சியுடன் களமிறங்கினால் பெரிய ரன்களை எடுத்து முந்தைய போட்டிகளில் செய்த சொதப்பலை அவரால் ஈடு செய்ய முடியும்.

    என்று சேவாக் கூறினார். 

    • விராட் கோலி - கம்பீர் இடையே களத்தில் நடந்த மோதல் சரியல்ல.
    • தோற்றவர்கள் அமைதியாக தோல்வியை ஏற்றுக்கொண்டு வெளியேற வேண்டும்.

    புதுடெல்லி:

    சமீபத்தில், லக்னோவில் நடந்த ஐ.பி.எல். போட்டியின் முடிவில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை சேர்ந்த விராட் கோலிக்கும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை சேர்ந்த கவுதம் கம்பீருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது. இந்த மோதல் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    மைதானத்தில் நடந்த சம்பவத்தை அங்கேயே மறந்து விட்டு நாகரீகமாக கைகுலுக்குவதை விடுத்து வீரர்கள் ஆட்டம் முடிந்த பிறகு மோதல் போக்கை கடைப்பிடித்த சம்பவம் ரசிகர்களை மட்டுமின்றி போட்டி அமைப்பாளர்களையும் அதிர்ச்சிக்கும், அதிருப்திக்கும் ஆளாக்கி இருக்கிறது.

    இந்த நிலையில், மைதானத்தில் விராட் கோலி - கம்பீர் இடையேயான மோதல் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்தர் சேவாக் கருத்து தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறுகையில்:-

    விராட் கோலி - கம்பீர் இடையே களத்தில் நடந்த மோதல் சரியல்ல. தோற்றவர்கள் அமைதியாக தோல்வியை ஏற்றுக்கொண்டு வெளியேற வேண்டும்.

    வெற்றி பெற்ற அணி கொண்டாட வேண்டும். ஏன் வார்த்தை போரில் ஈடுபட வேண்டும்?. இவர்கள் இருவரும் இந்தியாவின் அடையாளங்கள். இது போன்ற செயல்களால் இவர்களை பின் தொடரும் பல கோடி இளைஞர்கள், சிறார்களுக்கு ஒரு தவறான முன்னுதாரணமாக அமைந்து விடும்.

    என்று சேவாக் தெரிவித்துள்ளார்.

    • சேவாக் இதே நாளில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் முச்சதம் அடித்தார்.
    • இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    புகழ்பெற்ற இந்திய கிரிக்கெட் வீரரும் சிறந்த ஆல்ரவுண்டருமான வீரேந்தர் சேவாக் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 2008-ம் ஆண்டு இதே நாளில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முச்சதம் அடித்தார்.


    அதனை நினைவு கூறும் வகையில் சிஎஸ்கே அணியின் டுவிட்டர் பக்கத்தில் அவர் முச்சதம் அடித்த வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில் அன்புடென்-ல் சேவாக் கர்ஜித்த தருணம் என்று தலைப்பிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்தபடியாக சேவாக் ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×