என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

சிராஜ் ஆர்சிபி அணிக்கு பதிலடி கொடுக்கவில்லை இந்திய அணிக்கு- சேவாக்
- என்னை தேர்வு செய்யாத உங்களுக்குத் எனது திறமையைக் காண்பிக்கிறேன் என்ற வகையில் அவர் செயல்படுகிறார்.
- இதே வேகத்தில் அவர் சிறப்பாக விளையாடி இந்திய அணிக்குள் கம்பேக் கொடுப்பார் என்று நம்புகிறேன்.
ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் அணி வீழ்த்தியது. இந்த போட்டியில் முன்னாள் ஆர்சிபி வீரரும் தற்போது குஜராத் அணியின் வீரரான முகமது சிராஜ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இந்நிலையில் சிராஜ் உண்மையில் பெங்களூரு அணிக்கு பதிலடி கொடுக்கவில்லை இந்திய அணிக்கு கொடுத்துள்ளதாக முன்னாள் ஜாம்பவான் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் இடம் கிடைக்காததால் ஏதோ ஒரு வகையில் அவர் மனதளவில் காயத்தைச் சந்தித்துள்ளார். அதனால் அவருக்குள் நெருப்பு உருவாகியுள்ளது. அந்த நெருப்பை நான் பார்த்தேன். ஒரு இளம் வேகப்பந்து வீச்சாளரிடமிருந்து நாங்கள் எதிர்பார்ப்பது இதுதான்.
என்னை தேர்வு செய்யாத உங்களுக்குத் தற்போது எனது திறமையைக் காண்பிக்கிறேன் என்ற வகையில் அவர் செயல்படுகிறார். இதே வேகத்தில் அவர் சிறப்பாக விளையாடி இந்திய அணிக்குள் கம்பேக் கொடுப்பார் என்று நம்புகிறேன்.
சின்னசாமி மைதானத்தில் புதிய பந்தில் அவர் தனது சாதனையைத் தக்க வைத்துக் கொண்டார். தனது முதல் 3 ஓவர்களில் அவர் 12 - 13 ரன்கள் மட்டுமே கொடுத்தார். அதே சமயத்தில் 4-வது ஓவரை வீசியிருந்தால் அவர் 4-வது விக்கெட்டை எடுத்திருப்பார். பிட்ச்சில் கிடைத்த உதவியைப் பயன்படுத்தி அவர் புதிய பந்தை ஸ்விங் செய்து அசத்தினார்.
என சேவாக் கூறினார்.






