என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட்

ஹர்திக் பாண்ட்யா கேப்டன்ஷிப் டோனி போல உள்ளது- சுனில் கவாஸ்கர்

- கடந்த ஆண்டு முதல்முறையாக கேப்டன்சி செய்தபோதே ஹர்திக் பாண்ட்யா மிரட்டிவிட்டார்.
- டோனியை போலவே அணியை அமைதியான சூழலில் பாண்ட்யா வைத்திருக்கிறார்.
ஐபிஎல் 16-வது சீசன் நாளையுடன் முடிவடைகிறது. இந்த சீசனின் இறுதி போட்டிக்கு சிஎஸ்கே மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. முதல் தகுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்சை வீழ்த்தி சிஎஸ்கே அணி இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது.
எலிமினேட்டரில் ஜெயித்த மும்பை இந்தியன்சும், குஜராத் டைட்டன்சும் 2-வது குவாலிபையர் சுற்றில் மோதின.
இதில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவரில் 233 ரன்களை குவித்தது. இதனையடுத்து ஆடிய மும்பை இந்தியன்ஸ் 171 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் 62 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் டோனியை போலவே அணியை அமைதியான சூழலில் பாண்ட்யா வைத்திருக்கிறார் என கவாஸ்கர் புகழ்ந்துள்ளார்.
இது குறித்து ஹர்திக் பாண்ட்யாவின் கேப்டன்சி குறித்து சுனில் கவாஸ்கர் கூறியதாவது:-
ஹர்திக் பாண்ட்யா டோனியை முன்மாதிரியாக பின்பற்றுகிறார். டாஸ் போடும்போது டோனி எதிரணியுடன் நட்புடன் தான் இருப்பார். முகத்தில் சிரிப்பெல்லாம் இருக்கும். ஆனால் போட்டியின்போது சூழலே வேறு மாதிரி இருக்கும். ஹர்திக் பாண்ட்யா மிக விரைவில் கேப்டன்சியை கற்றுக்கொண்டுவிட்டார்.
கடந்த ஆண்டு முதல்முறையாக கேப்டன்சி செய்தபோதே ஹர்திக் பாண்ட்யா மிரட்டிவிட்டார். டோனியை போலவே அணியை அமைதியான சூழலில் பாண்ட்யா வைத்திருக்கிறார். சிஎஸ்கே அணியை போலவே ஹர்திக் பாண்ட்யா கேப்டன்சி செய்யும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மகிழ்ச்சியான அணியாக உள்ளது. அதற்கான முழு கிரெடிட்டும் ஹர்திக் பாண்ட்யாவுக்கே.
என்று சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.