search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊக்கத்தொகை"

    • வினாடி-வினா எழுத்துத்தேர்வு வருகிற அக்டோபர் மாதம் 5-ந் தேதி அகில இந்திய அளவில் நடத்தப்பட உள்ளது.
    • வெற்றி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.500 வீதம் ஒரு வருடத்துக்கு ரூ.6 ஆயிரம் அஞ்சல் சேமிப்பு கணக்கில் சேர்க்கப்படும்.

    திருப்பூர்:

    இந்திய தபால் துறை சார்பாக பள்ளி மாணவ-மாணவிகள் மத்தியில் அஞ்சல் தலை சேகரிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் தீன்தயாள் ஸ்பர்ஷ் யோஜனா என்ற ஊக்கத்தொகை திட்டம் அகில இந்திய அளவில் அறிமுகப்படுத்தப்பட்டது. அஞ்சல் தலை சேகரிப்பு கணக்கு வைத்துள்ள 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

    இந்த ஊக்கத்தொகை திட்டத்துக்கு விண்ணப்பித்தவர்களுக்கு முதல்கட்டமாக வினாடி-வினா எழுத்துத்தேர்வு வருகிற அக்டோபர் மாதம் 5-ந் தேதி அகில இந்திய அளவில் நடத்தப்பட உள்ளது. விண்ணப்பிக்க வருகிற 6-ந் தேதி கடைசிநாளாகும். தகுதியான மாணவ-மாணவிகள் அருகில் உள்ள தபால் நிலையத்தை தொடர்பு கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு dotirupur.tn@indiapost.gov.in என்ற இணையதளத்திலும் 0421 2239785 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    இதில் வெற்றி பெற்றவர்கள் தபால் தலை தொடர்பான ஏதேனும் ஒரு தலைப்பின் கீழ் புராஜக்ட் சமர்ப்பிக்க வேண்டும். வெற்றி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.500 வீதம் ஒரு வருடத்துக்கு ரூ.6 ஆயிரம் அவர்களுடைய அஞ்சல் சேமிப்பு கணக்கில் சேர்க்கப்படும். இந்த தொகை அவர்களின் 9-ம் வகுப்பு பள்ளி படிப்பு முடியும் வரை வழங்கப்படும். இந்த தகவலை திருப்பூர் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் விஜயதனசேகர் தெரிவித்துள்ளார்.

    • கொரோனா காலங்களில் பணியாற்றிய செவிலியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும்.
    • ஆர்ப்பாட்டத்தில் 14 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கம் சார்பில் 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் கீதா தலைமை வகித்தார்.

    துணைத் தலைவர் தமிழ்ச்செல்வி செயலாளர் நிர்மலா, பொருளாளர் ஜெயசுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டத்தில் செவிலியர்களுக்கு பணிச்சுமையை குறைக்க வேண்டும், முற்றிலும் பழுதடைந்த துணை மைய கட்டிடத்தில் தங்கியுள்ள செவிலியர்களுக்கு வாடகை பிடித்தம் செய்வதை நிறுத்தவும், ஏற்கனவே பிடித்தம் செய்த தொகையை திரும்ப தரவும் வலியுறுத்தியும், ஐந்து வருடங்கள் பணி முடித்தவர்களுக்கு கிரேட் 2 மற்றும் 10 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு கிரேடு 1 ஆகவும் அடுத்த கட்ட ஊதிய விகிதத்தில் நிர்ணயம் செய்திட போடப்பட்ட அரசாணையை அமல்படுத்த வேண்டும்.

    கொரோனா காலங்களில் பணிபுரிந்த செவிலியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வலியுறுத்தி உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் கிராமப்புற சுகாதார செவிலியர்கள், துணை செவிலியர்கள், பகுதி சுகாதார செவிலியர்கள், சமுதாய சுகாதார செவிலியர்கள் என சுமார் 100 பேர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

    • நான் முதல்வன் திட்டத்தின் ஓராண்டு வெற்றி விழாவில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
    • 25,000 ரூபாய் ஊக்கத்தொகை நேரடியாக மாணவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக நான் முதல்வன் (போட்டித் தேர்வுகள் பிரிவு) சிறப்புத் திட்ட இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

    தமிழ் நாடு அரசின் 2023-24க்கான பட்ஜெட் உரையில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் (TNSDC), அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியுடன் இணைந்து, ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குடிமைப் பணிகள் தேர்வுகளுக்காகப் பயின்று வரும் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு சிறந்த பயிற்சி மற்றும் இதர தேவையான வசதிகளைச்செய்து உதவும் வகையில் ஒரு திட்டத்தை செயல்படுத்தும் என்று அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின்படி யு.பி.எஸ்.சி குடிமைப் பணிகள் முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு 25,000 ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.

    இத்திட்டத்தின் தொடக்கமாக. 07.08.2023, அன்று நடைபெற்ற நான் முதல்வன் திட்டத்தின் ஓராண்டு வெற்றி விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால், 2023ஆம் ஆண்டுக்கான யு.பி.எஸ்.சி முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 மாணவர்களுக்கு முதன்மைத் தேர்வுக்குப் பயிற்சி மேற்கொள்ள ஏதுவாக தலா 25,000 ரூபாய்க்கான காசோலைகள் வழங்கி யு.பி.எஸ்.சி முதன்மைத் தேர்வுக்கான ஊக்கத்தொகைத் திட்டம் தொடங்கிவைக்கப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் கீழ் இயங்கிவரும் நான் முதல்வன் போட்டித் தேர்வுகள் பிரிவின் வாயிலாக 2023-ஆம் ஆண்டுக்கான 28.05.2023 அன்று நடைபெற்ற யு.பி.எஸ்.சி முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து மாணவர்களுக்கும் முதன்மைத் தேர்வுக்குப் பயிற்சி மேற்கொள்ள ஏதுவாக 25,000 ரூபாய் ஊக்கத்தொகை நேரடியாக மாணவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த ஊக்கத்தொகையைப் பெறுவதற்கு யு.பி.எஸ்.சி முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள். https://www.naanmudhalvan.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அறிவிக்கையைப் படித்து பார்த்து, 11.08.2023 முதல் 22.08.2023 வரை விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 9 மற்றும் 10-ம் வகுப்புகளின் கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடப்புத்தகத்திலிருந்து கேள்விகள் தேர்ந்தெடுக்கப்பட்டு தேர்வு நடத்தப்படும்.
    • கல்வியாண்டுக்கு 10 ஆயிரம் ரூபாய் இளநிலை பட்டப்படிப்பு வரை வழங்கப்படும்.

    திருப்பூர்:

    அரசு பள்ளி மாணவ, மாணவிகளின் திறனை கண்டறிந்து அவர்களை ஊக்கப்படுத்த நடப்பு (2023 - 24) கல்வியாண்டு முதல் தமிழக முதல்வர் திறனாய்வுத் தேர்வு நடத்தப்பட உள்ளது.9 மற்றும் 10-ம் வகுப்புகளின் கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் உள்ள பாடத்திட்டங்களின் அடிப்படையில் இரு தாள்களாக தேர்வு நடத்தப்படும்.

    ஒவ்வொரு தாளிலும் 60 கேள்விகள் இடம் பெறும், முதல் தாளில் கணிதம் தொடர்புடைய வினாக்கள் 60 இடம் பெறும். இரண்டாம் தாளில் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் தொடர்புடைய வினாக்கள் 60 இடம் பெறும்.முதல் தாள் காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரையும், இரண்டாம் தாள் மதியம் 2மணி முதல் மாலை 4 மணி வரையும் நடக்கும். நடைமுறையில் உள்ள இடஒதுக்கீடை பின்பற்றி 500 மாணவர்கள், 500 மாணவிகள் வீதம் ஆயிரம் பேர் தேர்வு செய்யப்படுவர். இவர்களுக்கு ஊக்கத்தொகையாக மாதம் ஆயிரம் வீதம், கல்வியாண்டுக்கு 10 ஆயிரம் ரூபாய் இளநிலை பட்டப்படிப்பு வரை வழங்கப்படும்.

    நடப்பாண்டுக்கான தேர்வு செப்டம்பர் 23-ந் தேதி தேர்வு நடக்கும். பிளஸ் 1 வகுப்பு பயிலும் மாணவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வருகிற 18-ந் தேதி வரை பதிவிறக்கம் செய்யலாம்.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வு கட்டண தொகையாக 50 ரூபாய் சேர்த்து மாணவர் பயிலும் பள்ளித்தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   

    • இடுபொருட்கள் தயாரிக்கும் மையம் நிறுவ ரூ.1 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும்.
    • கலன்கள், மண்புழு உரம் தயாரிக்கும் படுக்கை, பேக்கேஜிங், லேபிலிங் மற்றும் மூல பொருட்கள் வாங்க பயன்படுத்தலாம்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வெளியி ட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருவாரூர் மாவட்டத்தில் அங்கக வேளாண்மையை உழவர்களிடையே பிரபலபடுத்தி ஊக்குவிக்கவும், அங்கக இடுபொருட்களை உழவர் குழுக்கள் மூலம் உற்பத்தி செய்யவும், 2023-24-ம் ஆண்டு மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    இயற்கை விவசாயம் செய்திடும் அல்லது செய்திட ஆர்வமுள்ள விவசாயிகள் குழுவாக இணைந்து இயற்கை இடுபொருட்கள் தயாரிக்கும் மையம் நிறுவ ரூ.1 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும்.

    இதன்மூலம் இயற்கை இடுபொருட்கள் உற்பத்திக்கான கலன்கள், மண்புழு உரம் தயாரிக்கும் படுக்கை, பேக்கேஜிங், லேபிலிங் மற்றும் மூல பொருட்கள் வாங்க பயன்படுத்தலாம்.

    இத்திட்டத்தின்கீழ் பயன்பெறும் குழுக்களுக்கு தங்கள் பொருட்களை உழவர் சந்தையில் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற விருப்பமுள்ள உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் உழவன் செயலியின் கீழ் பதிவு செய்ய வேண்டும். மேலும் தகவ லுக்கு தங்கள் வட்டார வேளாண்மை உதவி இயக்குனரை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நடப்பாண்டுக்கான சொத்து வரியை அக்டோபா் 31 -ந் தேதிக்குள் செலுத்தினால் போனஸ் வழங்கப்படும்
    • செலுத்த வேண்டிய கட்டணத்தில் 5 சதவீதம் ஊக்கத் தொகை வழங்கப்படும்.

    வெள்ளகோவில்:

    வெள்ளக்கோவில் நகராட்சியில் நடப்பாண்டுக்கான சொத்து வரியை அக்டோபா் 31 -ந் தேதிக்குள் செலுத்தினால் போனஸ் வழங்கப்படும் என்று நகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

    இது தொடா்பாக நகராட்சி ஆணையா் (பொறுப்பு) எஸ்.வெங்கடேஷ்வரன் கூறியதாவது:- வரிவசூல் செய்வதில் நகராட்சி நிா்வாகம் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. 2023 - 24 ஆம் ஆண்டுக்கான சொத்து வரியினை அக்டோபா் 31 ஆம் தேதிக்குள் செலுத்தினால், 5 சதவீதம் ஊக்கத் தொகை வழங்கப்படும். எனவே இந்த வாய்ப்பினை மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    மக்கள் நலப் பணிகளைச் சிறப்பாகச் செயல்படுத்த நகராட்சிக்குச் செலுத்த வேண்டிய குடிநீா்க் கட்டணம், இதர வரியினங்களை பொதுமக்கள் முறையாகச் செலுத்தி ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா்.

    • மதுரை மேட்டுநீரேத்தான் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு ஊக்கத்தொகை
    • கிராம பொதுமக் கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம் மேட்டு நீரேத்தான் கிராமத்தில் அமைந்துள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது.

    கடந்த கல்வியாண்டில் பள்ளியில். முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம், ரூ.7 ஆயிரம், ரூ.5 ஆயிரம் என ஊக்கத் தொகை வழங்கப்பட்டது.

    வாடிப்பட்டி பேரூராட்சி கவுன்சிலரும், அ.தி.மு.க. நகர செயலாளருமான அசோக் மற்றும் அப்பகுதியை சேர்ந்த அருணா அம்மா அறக்கட்டளை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நலத்திட்ட நிகழ்ச்சியில் ஏராளமான மாணவ, மாணவிகள் பயனடைந்தனர்.

    இதில் பள்ளியின் தலைமையாசிரியர் தமயேந்தி, வாடிப்பட்டி பேரூராட்சி கவுன் சிலர்கள் இளங்கோவன், கீதா சரவணன், சூர்யா அசோக்குமார், பிரியதர்ஷினி, பஞ்சம்மாள், வெங்கடேஸ்வரி, கிராம பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    • 10, 12-ம் வகுப்பு தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
    • முடிவில், மதுரை நாடார் உறவின் முறை பொதுச் செயலாளர் வி.பி.மணி நன்றி கூறினார்.

    மதுரை

    மதுரை நாடார் உறவின் முறை சார்பில் பெருந்த–லைவர் காமராஜரின் 121-வது பிறந்தநாளை முன் னிட்டு கல்வி மேற்படிப்பு ஊக்கத்தொகை வழங்கும் விழா ம.நா.உ.சுப்புராஜ நாடார் கிருஷ்ணம்மாள் மன்றத்தில் நடைபெற்றது. விழாவுக்கு மதுரை நாடார் உறவின்முறை துணைத் தலைவர் ஆர்.முத்தரசு தலைமை தாங்கினார்.

    பொதுச்செயலாளர் எஸ்.கே.மோகன் வரவேற் றார். ஜெயராஜ் நாடார் மேல் நிலைப்பள்ளி கே.பி.எஸ்.வி.டி. மாணவர் விடுதி செயலாளர் ப.குமார், பாரத பெருந்தலைவர் காமராஜர் அறநிலைய தலைவர் ஜெமினி எஸ்.பால்பாண்டி–யன், துணைத்தலைவர் எம்.எஸ்.சோமசுந்தரம், பொதுச் செயலாளர் கே.பி.எம்.எம்.காசிமணி, டி.பாலசுப்பிரம–ணியன்,

    ஜெயராஜ் அன்னபாக்கி–யம் மெட்ரிக்குலேசன் மேல் நிலைப்பள்ளி இணைச் செயலாளர் ஒய்.சூசை அநா் தோணி ஆகியோர் வாழ்த் துரை வழங்கினர். தனியார் தொலைக்காட்சி புகழ் பட்டிமன்ற நடுவர் அவனி மாடசாமி சிறப்புரையாற்றி–னார்.

    சாக்ஸ் எம்.ஏ.வி.எம்.எம். பொறியியல் கல்லூரி செயலாளர் ஜி.கணேசன் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 450 மதிப்பெண்க–ளுக்கு மேல் பெற்ற 25 மாணவ, மாணவிகளுக்கு ரூ.1 லட்சத்து 25 ஆயிரமும்,

    12-ம் வகுப்பு பொதுத் ேதர்வில் 500 மதிப்பெண்க–ளுக்கு மேல் பெற்ற 61 மாணவ, மாணவிகளுக்கு ரூ.6 லட்சத்து 10 ஆயிரமும் என மொத்தம் ரூ.7 லட்சத்து 35 ஆயிரம் கல்வி மேற்ப–டிப்பு ஊக்கத்தொகையாக வழங்கினார். முடிவில், மதுரை நாடார் உறவின் முறை பொதுச் செயலாளர் வி.பி.மணி நன்றி கூறினார்.

    • பால் உற்பத்தியாளர்களுக்கு கலெக்டர் ஜெயசீலன் ஊக்கத்தொகை வழங்கினார்.
    • காசோலைகளை மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் வழங்கி கவுரவித்தார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் ஆர்56 ராஜபாளையம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க பால் உற்பத்தி யாளர்களுக்கு 2022-2023ம் ஆண்டு நான்காம் ஆண்டு காலாண்டுக்கான ஆதர வாளர்களுக்கு ஊக்கத் தொகை லிட்டர் ஒன்றுக்கு ரூ.2.90 வீதம் 579 பால் உற்பத்தியாளர்களுக்கு முதன்முறையாக வழங்கப்பட்டது.

    விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆர்56-ராஜபாளையம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் முதல் மூன்று இடங்களை பிடித்த பால் உற்பத்தியாளர்கள் ராம் கணேஷ் (49,392), சிவக்குமார் (21,103), வெங்கடசாமி(11,846) ஆகியோருக்கு ஊக்கத் தொகைக்கான காசோலைகளை மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் வழங்கி கவுரவித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் கணேஷ் குமார், ஆர்56-ராஜபாளையம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க செயல் அலுவலர், இணை பதிவாளர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    முதல் 3 இடங்களை பிடித்த 3 நபர்கள் போக மீதமுள்ள 576 பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகை அவரவர் வங்கி கணக்குக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    ஆர்-56 ராஜபாளையம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க வரலாற்றிலேயே உற்பத்தியாளர்களை உற்சாகப்படுத்தும் விதமாக முதன்முறையாக ஊக்கத்தொகை வழங்கியிருப்பது சங்கத்தை வளர்ச்சி பாதைக்கு அழைத்து செல்ல உதவும் என பால் உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

    • இவர்களுக்கான ஊக்கத்தொகை வழங்கு வதில் சிக்கல் எழுந்துள்ளது
    • வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணை க்க வேண்டியதும் அவசியமாகும்.

    ஈரோடு, 

    பிரதமரின் கிசான் சம்மான் நிதி (பி.எம்.கிசான்) திட்டத்தின் கீழ் நிலம் உள்ள விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2,000 வீதம் ஆண்டிற்கு ரூ.6,000 வேளாண் இடுபொருட்கள் வாங்கும் வகையில் ஊக்கத்தொகை மத்திய அரசின் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.

    திட்டம் தொடங்கப்பட்ட காலகட்டத்தில் விண்ண ப்பித்த பெரும்பா லான விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. அதன்பின்னா் திட்டத்தை ஒழுங்கு படுத்தும் வகையில்,

    ஆதார் மூலம் விப ரங்களை புதுபிக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்தது. ஆதார் மூலம் புதுப்பித்தால் மட்டுமே பி.எம்.கிசான் திட்டத்தில் அடுத்த (14 வது) தவணைத்தொகை பெற முடியும் என மத்திய அரசு தெளிவாக விளக்கி உள்ளது.

    மேலும் பிரதமரின் கிசான் நிதி உதவி பெற்று வரும் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டியதும் அவசியமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் தற்போது 10,300 விவசாயிகள் தங்களது ஆதார் எண்ணை சரிபார்த்து உறுதி செய்யாமலும், 8000 விவசாயிகள் வங்கி கணக்கு டன் ஆதார் எண்ணை இணைக்காமலும் உள்ள தாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே இவர்களுக்கான ஊக்கத்தொகை வழங்கு வதில் சிக்கல் எழுந்துள்ளது.

    இது குறித்து வேளா ண்மை இணை இயக்குநர் வெங்கடேசன் கூறியதாவது:- பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் நிலம் உள்ள விவசாயிகளுக்கு ஆண்டிற்கு ரூ.6,000 வேளாண் இடுபொருட்கள் வாங்கும் வகையில் ஊக்கத்தொகை ஒன்றிய அரசின் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.

    இத்திட்டத்தின் கீழ் பயன்பெற வேண்டுமெனில் ஆதார் மூலம் விபரங்களை புதுபிக்க வேண்டும். மேலும் பிரதமரின் கிசான் நிதி உதவி பெற்று வரும் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டியதும் அவசியமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இப்பணிகளை செய்தால் மட்டுமே அடுத்த தவணை ஊக்கத்தொகை வழங்கப்படும். ஈரோடு மாவட்டத்தில் 18 ஆயிரம் பேர் ஆதார் விபரங்களை இணைக்காமல் உள்ளனர். எனவே இதுவரை பதிவை புதுப்பிக்காத விவசாயிகள் உடனடியாக தங்களது ஆதார் எண்ணை சரிபார்த்து உறுதிப்படுத்த வேண்டும்.

    ஆதார் எண்ணுடன் செல்பேசி எண்ணை ஏற்கனவே இணைத்துள்ள விவசாயிகள் www.pmkisan.gov.in என்ற பி.எம்.கிசான் வலைதளத்தில் தங்களின் ஆதார் எண் விவரத்தினை உள்ளீடு செய்தால், ஓடிபி எண், தங்களது செல்பேசிக்கு அனுப்பப்படும். அந்த ஓடிபி எண்ணை உள்ளீடு செய்து ஆதார் விவரங்களை சரிபார்த்து உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.

    இதுநாள் வரை ஆதார் எண்ணுடன் செல்பேசி எண்ணை இணைக்காத விவசாயிகள், அருகில் உள்ள பொது சேவை மையங்களுக்கு சென்று பிரதமரின் கிசான் திட்ட வலைதளத்தில் தங்களது ஆதார் எண் விவரங்களை உள்ளீடு செய்து, தங்களின் விரல் ரேகையினை பதிவு செய்து விவரங்களை சரிபார்த்து உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும்.

    இதுவரை பிரதமரின் கிசான் பதிவை புதுப்பிக்கா தவர்கள தங்கள் பகுதி அஞ்சல் அலுவலகம் மூல மும் ஆதார் எண்ணுடன் மொபைல் போன் எண்ணை இணைத்து விவரங்களை புதுப்பித்து கொள்ளலாம். மேலும் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தினை அணுகி விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அதிக மதிப்பெண் பெற்ற கிராமபுற மாணவ-மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
    • இந்த விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கை அருகே குன்னங்கோட்டை, கீழப்பங்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இந்த கல்வி ஆண்டில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயின்று அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் குன்னங்கோட்டை கள்ளர் பேரவை அறக்கட்டளை சார்பில் கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

    முதல் மதிப்பெண் எடுத்த காளீஸ்வரன் என்ற மாணவனுக்கும், 2-வது மதிப்பெண் பெற்ற திருவிளங்கை கிராமத்தைச் சேர்ந்த சுபாஷ் என்ற மாணவனுக்கும், மாலைகண்டனைச் சேர்ந்த தமிழரசனுக்கும், தேவபட்டு சசிகலா என்ற மாணவிக்கும் ஊக்கத்தொகை வழங்கபட்டது.

    இந்த விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ. 3000 வழங்கப்பட்டது.
    • கல்வி ஊக்கத்தொகை மறைந்த அவிநாசியப்பகவுண்டர் நினைவாக மணிவேலுச்சாமியால் வழங்கப்பட்டு வருகிறது.

    மங்கலம் :

    திருப்பூர் மாவட்டம்,சாமளாபுரம் பகுதியில் உள்ள வாழைத்தோட்டத்து அய்யன் கோயில் மேல்நிலைப் பள்ளியில் 10,11, மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு ஆண்டுதோறும் கல்வி ஊக்கத்தொகை மறைந்த அவிநாசியப்பகவுண்டர் நினைவாக மணிவேலுச்சாமியால் வழங்கப்பட்டு வருகிறது.அதன்படி இந்த கல்வியாண்டில் (2022-2023) பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ரூ 10,000 ,இரண்டாம் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ரூ.7500,மூன்றாம் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ரூ.5000, பொருளியல் ,கணக்குப்பதிவியல் வரலாறு பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு தலா ரூ. 3000 மும் ஆக மொத்தம் ரூ. 60 ஆயிரம் வழங்கப்பட்டது.

    இந்நிகழ்வில் ஏ.வி.ஏ.டி. பள்ளியின் தலைமை ஆசிரியர் ரா. செல்வகுமார் வரவேற்புரையாற்றினார், சாமளாபுரம் பேரூராட்சி தலைவர் விநாயகாபழனிச்சாமி , சாமளாபுரம் பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் குட்டிவரதராஜன், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் ரத்தின சபாபதி , பள்ளியின் முன்னாள் மாணவர்கள் மோகன்குமார், ஆடிட்டர் தெய்வசிகாமணி உள்பட பலர் கலந்துக்கொண்டு வாழ்த்துரை வழங்கி மாணவ மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கினார்கள். ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    ×