மாணவ- மாணவிகளுக்கு ஊக்கத்தொகை

மதுரை மேட்டுநீரேத்தான் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு ஊக்கத்தொகை கிராம பொதுமக் கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
மாணவ- மாணவிகளுக்கு ஊக்கத்தொகை
Published on

சோழவந்தான்

மதுரை மாவட்டம் மேட்டு நீரேத்தான் கிராமத்தில் அமைந்துள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது.

கடந்த கல்வியாண்டில் பள்ளியில். முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம், ரூ.7 ஆயிரம், ரூ.5 ஆயிரம் என ஊக்கத் தொகை வழங்கப்பட்டது.

வாடிப்பட்டி பேரூராட்சி கவுன்சிலரும், அ.தி.மு.க. நகர செயலாளருமான அசோக் மற்றும் அப்பகுதியை சேர்ந்த அருணா அம்மா அறக்கட்டளை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நலத்திட்ட நிகழ்ச்சியில் ஏராளமான மாணவ, மாணவிகள் பயனடைந்தனர்.

இதில் பள்ளியின் தலைமையாசிரியர் தமயேந்தி, வாடிப்பட்டி பேரூராட்சி கவுன் சிலர்கள் இளங்கோவன், கீதா சரவணன், சூர்யா அசோக்குமார், பிரியதர்ஷினி, பஞ்சம்மாள், வெங்கடேஸ்வரி, கிராம பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com