என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Foundation"

    • ராஜபாளையத்தில் மாவட்ட அளவிலான பண்பாட்டுப் போட்டிகள் நடந்தன.
    • அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் விவேகானந்த கேந்திரமும், என்.ஏ. ராமச்சந்திரராஜா அறக்கட்டளையின் சார்பில் இயங்கும் விவேகானந்த கேந்திர கிளையும் இணைந்து விருதுநகர் மாவட்ட அளவிலான நகர்ப்புறப் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான பண்பாட்டுப்போட்டிகளை அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப்பள்ளியில் நடத்தியது. கேந்திர கிளை தலைவர் என்.ஆர்.கிருஷ்ணமூர்த்திராஜா தலைமை தாங்கினார். ராமச்சந்திரராஜா குருகுல தாளாளர் மஞ்சுளா கிருஷ்ணமூர்த்திராஜா குத்து விளக்கேற்றி போட்டிகளை தொடங்கி வைத்தார். கிளை பொருளாளரும். தலைமையாசிரியருமான ரமேஷ் வரவேற்றார். விவேகானந்த கேந்திர மாவட்ட பொறுப்பாளர் பேச்சியப்பன் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்புவரை மாணவர்களுக்கு ஒப்பித்தல், பேச்சு, ஓவியம், நினைவாற்றல், இசை, வினாடி-வினா போட்டிகளின் விவரங்களை கூறி நடுவர்களை அறிமுகப்படுத்தினார்.

    இதில் 32 பள்ளிகளில் இருந்து 350 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடந்தது. மஞ்சம்மாள் தொழில்நுட்பக் கல்லூரி இயக்குநர் கே.ஆர்.விஸ்வநாதன், தங்கமயில் ஜூவல்லரி மேலாளர் பாலாஜி, பாபு ஆகியோர் மாணவ- மாணவிகளுக்கு பரிசு வழங்கினர். முதலிடம் பிடித்த மாணவர்கள் கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்தில் அடுத்த மாதம் (நவம்பர்) நடைபெறவிருக்கும் 2 நாள் முகாமில் கலந்துகொண்டு மாநில அளவில் நடைபெறவிருக்கும் போட்டிகளில் கலந்து கொள்கிறார்கள். அறக்கட்டளை உறுப்பினர்கள் என்.கே.ராம்விஷ்ணு ராஜா, ராகஜோதி, என்.கே.ராம்வெங்கட் ராஜா ஆகியோர் கலந்துகொண்டனர். கிளை செயலர் மாரியப்பன் நன்றி கூறினார்.

    • பகவான் ஸ்ரீ விஸ்வகர்மா காயத்ரி தேவி கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளது.
    • விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைக்க அழைப்பு விடுத்துள்ளோம்.

    தஞ்சாவூர்:

    ஸ்ரீவிஸ்வகர்மா காயத்ரி தேவி கோவில் நிறுவனரும் ஓம் ஸ்ரீ நாகம்மாள் அறக்கட்டளை, அகில இந்திய சாதுக்கள் இயக்கம் மாநிலத் தலைவருமான டாக்டர் ஸ்ரீராம ரெங்கசாமி சுவாமிகள் வெளியிட்டுள்ள தீபாவளி வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது :-

    தரணி போற்றும் தஞ்சாவூரில் விரைவில் பகவான் ஸ்ரீ விஸ்வகர்மா காயத்ரி தேவி கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளது.

    இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைக்க அழைப்பு விடுத்துள்ளோம்.

    அனைவருக்கும் பகவான் ஸ்ரீ விஸ்வகர்மா காயத்ரி தேவி கோவில் சார்பில் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ரேஷன் கடைகளுக்கு புதிய கட்டிடம் அமைத்து தர வேண்டும் என்று இப்பகுதி மக்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வந்தனர்.
    • அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தனது தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து 2 ரேஷன் கடைகளுக்கும் சொந்தமாக புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்தார்.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி பேரூராட்சி பகுதியில் உள்ள ராஜமன்னியபுரம், மடத்துவிளை ஆகிய இடங்களில் ரேஷன் கடைகள் வாடகை கட்டிடங்களில் இயங்கி வருகின்றன. அதுவும் மடத்துவிளையில் உள்ள கட்டிடம் பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனால் ரேஷன் கடைகளுக்கு புதிய கட்டிடம் அமைத்து தர வேண்டும் என்று இப்பகுதி மக்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வந்தனர்.

    இந்த நிலையில் பேரூராட்சி நிர்வாகத்தின் பரிந்துரையை ஏற்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தனது தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து 2 ரேஷன் கடைகளுக்கும் சொந்தமாக புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்தார். இதற்கான அடிக்கல் நாட்டு விழா ராஜமன்னியபுரம் மற்றும் மடத்துவிளையில் நடைபெற்றது.

    விழாவிற்கு பேரூராட்சியின் துணைத் தலைவர் கல்யாணசுந்தரம் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் கணேசன் முன்னிலை வகித்தார். பொறியாளர் ஆவுடையப்பன் வரவேற்று பேசினார். பேரூராட்சி தலைவர் கலாவதி கல்யாணசுந்தரம் புதிய கட்டிடத்திற்காக அடிக்கல் நாட்டினார்.நிகழ்ச்சிகளில் ஏ.கே.எல். கூட்டுறவு சங்க தலைவரும் வார்டு கவுன்சிலருமான வெங்கடேஷ், வார்டு கவுன்சிலர்கள் தயாவதி, சிவக்குமார், தீபா, முன்னாள் கவுன்சிலர்கள் மகராஜன், சண்முகசுந்தரம், நகர தி.மு.க. செயலாளர் நவநீத பாண்டியன், நகர காங்கிரஸ் பொதுச் செயலாளர் பழனிவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 10 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி கட்டிட பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
    • ஷா நவாஸ் எம்.எல்.ஏ, தமிழ்நாடு மீன் வளர்ச்சிக்கழக தலைவர் கவுதமன் ஆகியோர் முன்னிலை வகித்து அடிக்கல் நாட்டினர்.

    நாகப்பட்டினம், அக்.5-

    நாகப்பட்டினம் நகராட்சியில் டாடா நகர் மற்றும் சேவா பாரதி பகுதிகளில், தலா ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி கட்டிடங்கள் கட்டுவதற்கு, நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.20 லட்சம் ஒதுக்கப்பட்டு கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

    விழாவில் ஷா நவாஸ் எம்.எல்.ஏ, தமிழ்நாடு மீன் வளர்ச்சிக்கழக தலைவர் கவுதமன் ஆகியோர் முன்னிலை வகித்து அடிக்கல் நாட்டினர்.

    இதில் நாகப்பட்டினம் நகர்மன்ற தலைவர் மாரிமுத்து, துணைத்தலைவர் செந்தில் குமார், நகராட்சி ஆணையர் ஸ்ரீதேவி, நகர்மன்ற உறுப்பினர்கள் ஞானமணி, கமலநாதன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் ரவிச்சந்திரன், நகர செயலாளர் முத்துலிங்கம், நகராட்சி பொறியாளர் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • குட்டம் பஞ்சாயத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான பணிகளுக்கும், ஆனைகுடி பஞ்சாயத்து பகுதிகளில் ரூ.34 லட்சத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளுக்கும், மகாதேவன்குளம் பஞ்சாயத்தில் ரூ.32 லட்சத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன.
    • குட்டம் பள்ளிக்கு ரூ.36 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் பல்நோக்கு கட்டிடம் மற்றும் கழிப்பறை வசதிக்காக நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் விரைவில் முடிந்து பயன்பாட்டுக்கு வரும் என வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ் தெரிவித்தார்.

    திசையன்விளை:

    ராதாபுரம் ஒன்றியம் மகாதேவன்குளம், குட்டம் மற்றும் ஆனைகுடி ஆகிய பகுதிகளில் பல்வேறு நிதிகளின் கீழ் மக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர் வசதி, சாலை வசதி மற்றும் பள்ளிகளுக்கு தேவையான கட்டிடம் ஆகியவற்றுக்கு நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ் அடிக்கல் நாட்டினார்.

    குட்டம் பஞ்சாயத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான பணிகளுக்கும், ஆனைகுடி பஞ்சாயத்து பகுதிகளில் ரூ.34 லட்சத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளுக்கும், மகாதேவன்குளம் பஞ்சாயத்தில் ரூ.32 லட்சத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன.

    குறிப்பாக குட்டம் பள்ளிக்கு ரூ.36 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் பல்நோக்கு கட்டிடம் மற்றும் கழிப்பறை வசதிக்காக நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் விரைவில் முடிந்து பயன்பாட்டுக்கு வரும் என வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ் தெரிவித்தார்.

    இந்நிகழ்ச்சியில் ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி, ராதாபுரம் யூனியன் தலைவர் இளையபெருமாள், வட்டார வளர்ச்சி அலுவலர் புளோரன்ஸ் விமலா மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள் நடராஜன், இசக்கிபாபு, ஜெஸி பொண்கலன், ஊராட்சி மன்ற தலைவர்கள் முருகன், ராதிகா சரவணகுமார், வைகுண்டம் பொன் இசக்கி, பஞ்சவர்ணம் ஜெயகுமார், ஆனந்த், திசையன்விளை பேரூராட்சி கவுன்சிலர் கண்ணன், பொன்மணி நடராஜன் மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • கோவில்பட்டி வட்டார ராகவேந்திரா சேவா அறக்கட்டளை 2-ம் ஆண்டு தொடக்க விழா பழனியாண்டவர் கோவில் தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
    • சங்க வரவு,செலவு கணக்குகளை பொருளாளர் கார்த்திகேயன் படித்துக் காண்பித்தார். சங்க செயல்பாடுகள் குறித்து செயலாளர் ஜோதி காமாட்சி பேசினார்

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி வட்டார ராகவேந்திரா சேவா அறக்கட்டளை 2-ம் ஆண்டு தொடக்க விழா பழனியாண்டவர் கோவில் தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    அறக்கட்டளை தலைவர் ஜெயக்கொடி தலைமை தாங்கினார். நிர்வாக குழு உறுப்பினர் செல்வம் வரவேற்று பேசினார். நிர்வாக குழு உறுப்பினர்கள் கதிரேசன், சண்முகசுந்தரம், காளிராஜ், மாரிமுத்து, முத்து மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சங்க வரவு,செலவு கணக்குகளை பொருளாளர் கார்த்திகேயன் படித்துக் காண்பித்தார். சங்க செயல்பாடுகள் குறித்து செயலாளர் ஜோதி காமாட்சி பேசினார். சங்கரேஸ்வரி, ஜெயக்கொடி, ராஜ ராஜேஸ்வரி பாண்டியன், சத்தியபாமா அசோக்குமார், பிச்சை மாரியம்மாள் தங்கராஜ், ஹேமலதா ஜெயக்குமார் ஆகியோர் குத்து விளக்கேற்றி கலை நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தனர்.

    சிறப்பு அழைப்பாளராக கோவில்பட்டி கோட்டாட்சியர் மகாலட்சுமி, நகர் மன்ற தலைவர் கருணாநிதி, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழிய பாண்டியன், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை முதுநிலை குடிமை மருத்துவர் கமல வாசன், குழந்தைகள் நல மருத்துவர் பிரபு, கே. என். சுப்புராஜ் நினைவுக் கல்வியியல் கல்லூரி செயலாளர் ராமச்சந்திரன், நிறுவனத் தலைவர் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவ- மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினர்.

    நிகழ்ச்சியில் நிர்வாக குழு உறுப்பினர் நடராஜன், லவ ராஜா, பாலமுருகன், பாண்டியன், முருகன் , சுடலைமுத்து, விக்னேஷ் என்டர்பிரைசஸ் அசோக், அருண் பேக்கரி மாடசாமி, காமாட்சி அம்மன் டிரேடிங் அசோக் மாறன், சண்முகவேல், தனபால், சக்திவேல், கருப்பசாமி, மாரிமுத்து, குமார், சக்தி மேட்ச் வொர்க் கிருஷ்ணமூர்த்தி, சேகர், கணபதி ,சூடாமணி, கண்ணன் ஜீவ அனுக்கிரக பொதுநல அறக்கட்டளை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • இளைஞரணி அறக்கட்டளைக்கு ரூ. 1 கோடிக்கான நிதியை உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது.
    • மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் வழங்கப்பட்டது.

    திருமங்கலம்

    தி.மு.க. இளைஞரணி அறக்கட்டளைக்கு கல்வி மற்றும் மருத்துவசேவை பணிகளுக்காக ரூ.1 கோடி வழங்க தெற்குமாவட்ட தி.மு.க. முடிவுசெய்தது.

    இதையடுத்து தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதிஸ்டாலின் எம்.எல்.ஏ.விடம் மதுரை தெற்குமாவட்ட செயலாளர் மணிமாறன் ரூ.1 கோடிக்கான வரைவோலை வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் தெற்குமாவட்ட இளைஞரணி செயலாளர் மதன்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் ஏர்போர்ட்பாண்டியன், மாவட்ட துணை சேர்மன் முத்துராமன், பொதுக்குழு உறுப்பினர் பி.எஸ்.என்.எல். செல்வம், இளைஞரணி துணைஅமைப்பாளர்கள் விமல், சுரேஷ்குமார், பகுதி அமைப்பாளர் காளிதாஸ், ஒன்றிய துணை அமைப்பாளர் தனசேகர், கிளைசெயலாளர் ராதாகிருஷ்ணன், நாகேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • திட்டக்குடி அருகே ரூ. 15 லட்சம் செலவில் புதிய ரேசன் கடை அமைச்சர் கணேசன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
    • ரூ. 15 லட்சம் செலவில் புதிய ரேசன் கடை கட்ட அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    திட்டக்குடி:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே இறையூர் கிராமத்தில் உள்ள காலனி மக்கள் அரிசி கோதுமை பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வாங்க ரேசன் கடைக்கு சென்று வருவதற்கு சுமார் 4 மணி நேரத்திற்கு மேல் ஆகிறது. இதனால் நாங்கள் வேறு எந்த வேலைக்கும் செல்ல முடிவதில்லை எனவே எங்கள் பகுதியில் புதிய ரேசன் கடை வேண்டி அமைச்சரிடம் மனு அளித்தனர். இதைத் தொடர்ந்து இறையூர் காலனி பகுதியில் சுமார் ரூ. 15 லட்சம் செலவில் புதிய ரேசன் கடை கட்ட அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ. கணேசன் புதிய ரேசன் கடை கட்ட அடிக்கல் நாட்டினார். மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசும்போது விரைவில் கட்டிடம் கட்டப்பட்டு புதிய பகுதி நேர ரேசன் கடை விரைவில் திறக்கப்படும் என தெரிவித்தார்.

    • ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் உள்ள திருவாடானை பஞ்சாயத்து யூனியன் மேற்கு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியை சாந்தி முருகானந்தம் தலைமையில் காமராஜர் பிறந்த நாள் விழா நடந்தது.
    • அறக்கட்டளையின் தலைவர் பாலா, செயலாளர் குணா ஜோதிலிங்கம் ஆகியோர்சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். தலைமை ஸ்டெல்லா மேரி நன்றி கூறினார்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் உள்ள திருவாடானை பஞ்சாயத்து யூனியன் மேற்கு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியை சாந்தி முருகானந்தம் தலைமையில் காமராஜர் பிறந்த நாள் விழா நடந்தது. கிழக்கு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியர் லியோ ஜெரால்டு எமர்சன் தலைமையில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

    தொண்டி அருகே உள்ள திருவெற்றியூரில் நண்பர்கள் அறக்கட்டளை சார்பாக புனித நார்ப்பட் மேல்நிலைப்பள்ளியில் 650 மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார். வேல்டு விசன் இந்தியா தொண்டு நிறுவனத்தை சேர்ந்த சந்திரன், எபினேசர் முன்னிலை வகித்தனர். அறக்கட்டளையின் தலைவர் பாலா, செயலாளர் குணா ஜோதிலிங்கம் ஆகியோர்சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். தலைமை ஸ்டெல்லா மேரி நன்றி கூறினார்.

    • மதுரையில் 10 ஆயிரம் பேருக்கு கண் பார்வை கிடைத்துள்ளது என டிரஸ்டி சவுமியா விஜயகுமார் தகவல் தெரிவித்துள்ளார்.
    • குடும்ப பிரச்சினை, வாழ்க்கையில் விரக்தியடைந்த பெண்களுக்கு பிரம்மகுமாரிகள் அமைப்புடன் இணைந்து இலவசமாக கவுன்சிலிங்கும் வழங்கப்பட்டு வருகிறது.

    மதுரை

    மதுரை விளாங்குடி பகுதியில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவின் மகன் நினைவாக தொடங்கப்பட்ட ஆர்.ஜெ.தமிழ்மணி அறக்கட்டளை சார்பில் இலவச பொது மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது.

    இந்த மருத்துவ முகாமில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மற்றும் அறக்கட்டளை தலைவர் ஜெயந்தி ராஜூ, டிரஸ்டிகள் சவுமியா விஜயகுமார், கணேஷ்பிரபு, ரம்யா ஆகியோர் பங்கேற்றனர். அறக்கட்டளையின் செயல்பாடுகள் குறித்து டிரஸ்டி சவுமியா விஜயகுமார் கூறியதாவது:-

    எனது சகோதரன் ஆர்.ஜெ. தமிழ்மணி நினைவாக கடந்த 2014-ம் ஆண்டு முதல் அறக்கட்டளை தொடங்கப்பட்டு மதுரையில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு மருத்துவ முகாம்கள், நலத்திட்ட உதவிகள் செய்து வருகிறோம். 27-வது பொது மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த முகாம்களில் அரவிந்த் கண் மருத்துவமனை, பிரீத்தி மருத்துவமனை, ராதா பல் மருத்துவமனைகளை சேர்ந்த சிறந்த மருத்துவ நிபுணர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு பரிசோதனை செய்து அதில் பாதிப்பு உள்ளவர்களை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    குறிப்பாக கண் பார்வை தொடர்பான அறுவை சிகிச்சைகள், கண் கண்ணாடிகள் மற்றும் பல் தொடர்பான பிரச்சினைகள், முடநீக்கியல், காது-மூக்கு-தொண்டை சிகிச்சைகள், எலும்பு தொடர்பான சிகிச்சைகள் அனைத்தும் அறக்கட்டளை சார்பில் இலவசமாக செய்து தரப்படுகிறது.

    இந்த மருத்துவ முகாம்கள் மூலம் 10 ஆயிரம் பேர் கண் பார்வை பெற்றுள்ளனர். 1000 பேருக்கு அறுவை சிகிச்சைகளின் மூலம் பார்வை கிடைத்துள்ளது. 3 ஆயிரம் பேருக்கு கண் கண்ணாடிகளை வழங்கியுள்ளோம்.

    மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் இந்த மருத்துவ முகாம்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கிராமப்புற ஏழை, எளிய மக்கள் பயனடையும் வகையில் இந்த முகாம் தொடர்ந்து நடத்தப்படும்.

    மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள ஏழைகள் அனைவருக்கும் உரிய மருத்துவ வசதிகளை செய்து முடித்தவுடன் மற்ற பகுதிகளிலும் அறக்கட்டளை சார்பில் மருத்துவ முகாம்களை நடத்த உள்ளோம்.

    மேலும் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் கம்ப்யூட்டர், தையல், எம்பிராய்டரி ஆகிய மூன்று மாத இலவச பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இந்த பயிற்சியின் மூலம் 1,200 பெண்கள் பயனடைந்துள்ளனர். மேலும் குடும்ப பிரச்சினை, வாழ்க்கையில் விரக்தியடைந்த பெண்களுக்கு பிரம்மகுமாரிகள் அமைப்புடன் இணைந்து இலவசமாக கவுன்சிலிங்கும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த கவுன்சிலிங்கில் ஏராளமான பெண்கள் பங்கேற்று பயன் அடைந்துள்ளனர்.

    இவ்வாறு சவுமியா விஜயகுமார் கூறினார்.

    ஐக்கிய அரபு அமீரக நாடுகளின் தலைமையகமான அபுதாபியில் கட்டப்படும் முதல் இந்து கோவிலுக்கு அடிக்கல் நாட்டும் விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. #Indiansrejoice #firstHindutemple #AbuDhabiHindutemple
    துபாய்:

    பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2015-ம் ஆண்டில் அபுதாபி வந்திருந்தபோது இங்கு இந்து மக்கள் வழிபட ஒரு கோவில் கட்ட அனுமதிக்குமாறு அந்நாட்டு அரசிடம் கேட்டுக் கொண்டார். இதற்கு அபுதாபி அரசு சம்மதம் அளித்தது. பின்னர், அபுதாபி-துபாய் நெடுஞ்சாலை அருகே புதிய இந்து கோவிலை கட்ட 14 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது.

    இந்த இடத்தில் 7 கோபுரங்களை கொண்ட மிகப்பெரிய கோவிலை கட்ட போச்சாசன்வாசி ஸ்ரீ அக்‌ஷர் புரிஷோத்தம் ஸ்வாமிநாராயண் சன்ஸ்த்தா அமைப்பு முன்வந்தது. உலகம் முழுவதும் சுமார் 1200 கோவில்கள் மற்றும் 4 ஆயிரத்துக்கும் அதிகமான ஆன்மிக வழிப்பாட்டு மன்றங்களை இந்த அமைப்பு நிறுவி, பராமரித்து வருகிறது.

    இந்நிலையில், இந்த கோவிலின் கர்ப்பக்கிரகத்துக்கான அடிக்கல் நாட்டும் விழா இன்று நடைபெற்றது. சுமார் 4 மணிநேரம் வேத மந்திரங்கள் முழங்க நடைபெற்ற சிறப்பு பூஜைக்கு போச்சாசன்வாசி ஸ்ரீ அக்‌ஷர் புரிஷோத்தம் ஸ்வாமிநாராயண் சன்ஸ்த்தா அமைப்பின் தலைமை பூசாரி மஹந்த் ஸ்வாமி மஹாராஜ் தலைமை தாங்கினார்.

    இவ்விழாவில் பங்கேற்ற ஐக்கிய அரபு அமீரகத்துக்கான இந்திய தூதர் நவ்தீப் சுரி, பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்த்து கடிதத்தை வாசித்தார்.

    ‘அபுதாபியின் பட்டத்து இளவரசர் எனது அருமை நண்பர் ஷேக் மொஹம்மத் பின் ஸயெத் அல் நஹ்யான் அவர்களுக்கு 130 கோடி இந்திய மக்களின் சார்பில் எனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இன்று அடிக்கல் நாட்டப்படும் இந்த கோவில் கட்டி முடிக்கப்பட்ட பின்னர், இந்தியாவுக்கும்  ஐக்கிய அரபு அமீரகத்துக்குமான கலாசார தொடர்புகளையும், உலகளாவிய மனித மாண்புகளையும் பிரதிபலிக்கும் ஆன்மிக அடையாளச் சின்னமாக விளங்கும்.

    ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் வாழும் சுமார் 33 லட்சம் இந்தியர்களுக்கும் இதர கலாசாரங்களை பின்பற்றி வாழும் மக்களுக்கும் இந்த கோவில் ஒரு ஊக்கசக்தியாக திகழும் என நம்புகிறேன்’ என தனது வாழ்த்து கடிதத்தில் பிரதமர் மோடி குறிப்பிட்டிருந்தார்.

    இந்த அடிக்கல் நாட்டு விழாவில் ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் வசிக்கும் பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். #Indiansrejoice #firstHindutemple #AbuDhabiHindutemple
    அரூர் அருகே சித்தேரியில் ரூ.50 லட்சம் மதிப்பில் திருமண மண்டபத்திற்கு அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது. விழாவில் அன்புமணி எம்.பி. கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். #anbumani
    அரூர்:

    தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் அரூர் சட்டமன்ற தொகுதி சித்தேரியில் நவீன வசதிகளுடன் கூடிய திருமண மண்படத்திற்கு அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது. விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். 

    பின்னர் அவர் பேசியதாவது, இப்பகுதி மக்களின் வசதிக்காக நவீன வசதிகளுடன் கூடிய திருமண மண்டபம் கட்டப்பட உள்ளது. மக்கள் அதனை பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என பேசினார். மேலும் அப்பகுதி மக்கள் இம்மலை பகுதியில் உள்ள குக்கிராமங்களுக்கு சாலை வசதி செய்து தர வேண்டும், மேலும் செல்போன் டவர் இல்லாததால் சில கிராமங்களில் போன் வசதி பெற இயலாமல் உள்ளது எனவே செல்போன் டவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுத்தனர்.

    செல்போன் டவர் அமைப்பது குறித்து ஏற்கனவே பி.எஸ்.என்.எல். அதிகாரிகளிடம் முறையிடப்பட்டுள்ளது. உடனடியாக அமைத்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். சேலம் சென்னை 8 வழி சாலையால் இப்பகுதி வளர்ச்சி அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது உண்மைக்கு புறம்பானது.இதனால் எவ்வித வளர்ச்சியும் ஏற்படாது. சேலத்திலிருந்து சென்னை செல்வதற்கு ஏற்கனவே 3 தேசிய சாலைகளும் விமான, ரயில் வசதியும் உள்ளது. இதையெல்லாம் விடுத்து புதியதாக 8 வழி சாலை அமைக்க வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்தார். 

    விழாவில் கோட்டாட்சியர் புண்ணியகோடி, மாநில துணை பொது செயலாளர் வெங்கடேஸ்வரன், மாவட்ட செயலாளர் இமயவர்மன், உள்பட பலர் கலந்து கொண்டனர். #anbumani
    ×