search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ration shps"

    • ரேஷன் கடைகளுக்கு புதிய கட்டிடம் அமைத்து தர வேண்டும் என்று இப்பகுதி மக்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வந்தனர்.
    • அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தனது தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து 2 ரேஷன் கடைகளுக்கும் சொந்தமாக புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்தார்.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி பேரூராட்சி பகுதியில் உள்ள ராஜமன்னியபுரம், மடத்துவிளை ஆகிய இடங்களில் ரேஷன் கடைகள் வாடகை கட்டிடங்களில் இயங்கி வருகின்றன. அதுவும் மடத்துவிளையில் உள்ள கட்டிடம் பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனால் ரேஷன் கடைகளுக்கு புதிய கட்டிடம் அமைத்து தர வேண்டும் என்று இப்பகுதி மக்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வந்தனர்.

    இந்த நிலையில் பேரூராட்சி நிர்வாகத்தின் பரிந்துரையை ஏற்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தனது தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து 2 ரேஷன் கடைகளுக்கும் சொந்தமாக புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்தார். இதற்கான அடிக்கல் நாட்டு விழா ராஜமன்னியபுரம் மற்றும் மடத்துவிளையில் நடைபெற்றது.

    விழாவிற்கு பேரூராட்சியின் துணைத் தலைவர் கல்யாணசுந்தரம் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் கணேசன் முன்னிலை வகித்தார். பொறியாளர் ஆவுடையப்பன் வரவேற்று பேசினார். பேரூராட்சி தலைவர் கலாவதி கல்யாணசுந்தரம் புதிய கட்டிடத்திற்காக அடிக்கல் நாட்டினார்.நிகழ்ச்சிகளில் ஏ.கே.எல். கூட்டுறவு சங்க தலைவரும் வார்டு கவுன்சிலருமான வெங்கடேஷ், வார்டு கவுன்சிலர்கள் தயாவதி, சிவக்குமார், தீபா, முன்னாள் கவுன்சிலர்கள் மகராஜன், சண்முகசுந்தரம், நகர தி.மு.க. செயலாளர் நவநீத பாண்டியன், நகர காங்கிரஸ் பொதுச் செயலாளர் பழனிவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×