search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சித்தேரியில் ரூ.50 லட்சம் மதிப்பில் திருமண மண்டபம்- அன்புமணி அடிக்கல் நாட்டினார்
    X

    சித்தேரியில் ரூ.50 லட்சம் மதிப்பில் திருமண மண்டபம்- அன்புமணி அடிக்கல் நாட்டினார்

    அரூர் அருகே சித்தேரியில் ரூ.50 லட்சம் மதிப்பில் திருமண மண்டபத்திற்கு அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது. விழாவில் அன்புமணி எம்.பி. கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். #anbumani
    அரூர்:

    தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் அரூர் சட்டமன்ற தொகுதி சித்தேரியில் நவீன வசதிகளுடன் கூடிய திருமண மண்படத்திற்கு அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது. விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். 

    பின்னர் அவர் பேசியதாவது, இப்பகுதி மக்களின் வசதிக்காக நவீன வசதிகளுடன் கூடிய திருமண மண்டபம் கட்டப்பட உள்ளது. மக்கள் அதனை பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என பேசினார். மேலும் அப்பகுதி மக்கள் இம்மலை பகுதியில் உள்ள குக்கிராமங்களுக்கு சாலை வசதி செய்து தர வேண்டும், மேலும் செல்போன் டவர் இல்லாததால் சில கிராமங்களில் போன் வசதி பெற இயலாமல் உள்ளது எனவே செல்போன் டவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுத்தனர்.

    செல்போன் டவர் அமைப்பது குறித்து ஏற்கனவே பி.எஸ்.என்.எல். அதிகாரிகளிடம் முறையிடப்பட்டுள்ளது. உடனடியாக அமைத்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். சேலம் சென்னை 8 வழி சாலையால் இப்பகுதி வளர்ச்சி அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது உண்மைக்கு புறம்பானது.இதனால் எவ்வித வளர்ச்சியும் ஏற்படாது. சேலத்திலிருந்து சென்னை செல்வதற்கு ஏற்கனவே 3 தேசிய சாலைகளும் விமான, ரயில் வசதியும் உள்ளது. இதையெல்லாம் விடுத்து புதியதாக 8 வழி சாலை அமைக்க வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்தார். 

    விழாவில் கோட்டாட்சியர் புண்ணியகோடி, மாநில துணை பொது செயலாளர் வெங்கடேஸ்வரன், மாவட்ட செயலாளர் இமயவர்மன், உள்பட பலர் கலந்து கொண்டனர். #anbumani
    Next Story
    ×