search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Raghavendra"

    • ஒவ்வொரு வியாழக்கிழமையும் ராகவேந்திரரை விரதமிருந்து வேண்டிக்கொள்ளுங்கள்.
    • பக்தர்கள் கேட்காததையும் தந்து அருள்பாலிக்கிறார் மகான்.

    கேட்டதும் பக்தர்களுக்கு அருளும் கற்பக விருட்சமாகத் திகழ்பவர் மகான் ஸ்ரீ ராகவேந்திரர். சுவாமிகள் தன் தவ பலத்தால் பல்வேறு அற்புதங்களைச் செய்தார். இதன் மூலம் அநேகர் அவரை நோக்கி வரத் தொடங்கினர். அன்பு ஒன்றையே தன் கொள்கையாகக் கொண்டு உபதேசம் செய்தார். துங்கபத்ரா நதிக்கரையில் அமைந்த மாஞ்சாலி கிராமமே இன்று மந்திராலயமாகப் போற்றப்படுகிறது. இங்குதான் மகான் ராகவேந்திரரின் பிருந்தாவனம் அமைந்துள்ளது. 700 ஆண்டுகள் அந்த பிருந்தாவனத்தில் சூட்சுமமாய்த் தங்கியிருந்து பக்தர்களுக்கு அருள்வேன் என்ற சுவாமிகள் இன்றும் தன்னை வேண்டிக்கொள்ளும் பக்தர்களுக்கு அற்புதங்கள் நிகழ்த்தி வருகிறார்.

    ராகவேந்திரா சுவாமிகளை விஷ்ணு பக்தரான பிரகலாதரின் அவதாரமாக கருதப்படுகிறார். ராகவேந்திரா சுவாமிகளை பின்பற்றவர்கள் ராகவேந்திரா சுவாமிகள் தனது பக்தர்களுக்கும் ஆசியும் அருளும் புரிந்து கொண்டே இருக்கின்றார் என்று நம்புகிறார்கள்.

    இத்தகைய சிறப்பு வாய்ந்த ராகவேந்திர மகானை குருவாரத்தில், வியாழக்கிழமைகளில் விரதம் இருந்து வணங்கித் துதித்தால், சகல செளபாக்கியங்களும் கிடைக்கப் பெறலாம் என்கிறார்கள் மகான் ராகவேந்திரரின் பக்தர்கள்.

    மந்திராலய மகான் என்று போற்றப்படுகிறார் ஸ்ரீராகவேந்திரர். அமைதியும் தயாள குணமுமே பக்திக்கான எளிய வழிமுறைகள் என்பதை மக்களுக்கு எடுத்துரைத்தார். அமைதியாக இருக்க இருக்க அதுவே ஆன்மிகம் என்றும் அதுவே இறைவனை அடைவதற்கான வழி என்றும் நமக்குச் சொல்லி வழிகாட்டினார் பகவான் ஸ்ரீராகவேந்திரர்.

    'என்னை நாடி வரும் பக்தர்களுக்கு எல்லா வரங்களையும் நான் தருவேன்' என்பது ராகவேந்திரர் வாக்கு. இந்த அருள் நிறைந்த பொருள் நிறைந்த வார்த்தையை ராகவேந்திர மகான் எப்போது சொன்னார் தெரியுமா?

    மந்திராலயத்தில், ஜீவசமாதியில் இறங்கி முக்தி அடைந்தார் ஸ்ரீராகவேந்திரர். அப்படி ஜீவ சமாதியில் இறங்குவதற்கு முன்னதாக, தன் சீடர்களையும் பக்தர்களையும் பார்த்து பகவான் ராகவேந்திரர் அருளிச் சொன்ன வார்த்தைகள் இவை. சத்திய வார்த்தையாக இன்றைக்கும் போற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

    ராகவேந்திர மகானை யாரெல்லாம் மனமுருகி வேண்டுகிறார்களோ, எவரெல்லாம் விரதம் மேற்கொண்டு அவரை வேண்டுகிறார்களோ அவர்களுக்கு அவர்கள் கேட்டதையெல்லாம் தந்தருள்கிறார் ராகவேந்திரர். பக்தர்கள் கேட்காததையும் தந்து அருள்பாலிக்கிறார் மகான்.

    பிருந்தாவன நாயகனை, மந்த்ராலய மகானை, குரு ராகவேந்திரரை மனதார வேண்டுவோம். ஆத்மார்த்தமாக பூஜிப்போம். அற்புத மகான் ராகவேந்திரர் நம் வாழ்வில் பல அற்புதங்களையெல்லாம் நிகழ்த்தி அருளுவார்.

    தொடர்ந்து ஒவ்வொரு வியாழக்கிழமையும் ராகவேந்திரரை விரதமிருந்து வேண்டிக்கொள்ளுங்கள். உங்கள் பிரார்த்தனைகளை விரைவில் நிறைவேற்றித் தந்தருள்வார் பூஜ்யஸ்ரீ ராகவேந்திர மகான்!

    ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional

    • ராகவேந்தரின் 428- வது அவதார ஜெயந்தி தினத்தையொட்டி புதுவை ராகவேந்திரா நகரில் உள்ள ராகவேந்திரர் கோவிலில் 108 பால் குட அபிஷேக விழா நடைபெற்றது.
    • பால்குடங்களை சுமந்து வந்த பக்தர்களே ராகவேந்தருக்கு பாலாபிஷேகம் செய்தனர்.

    புதுச்சேரி:

    ராகவேந்தரின் 428- வது அவதார ஜெயந்தி தினத்தையொட்டி புதுவை ராகவேந்திரா நகரில் உள்ள ராகவேந்திரர் கோவிலில் 108 பால் குட அபிஷேக விழா நடைபெற்றது.

    காலை 7 மணிக்கு நித்தியபடி பூஜைகள் நடை பெற்று, 10 மணியளவில் கோவில் வளாகத்தில் இருந்து பால்குட ஊர்வலம் புறப்பட்டது. பின்னர் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த ஊர்வலம் மீண்டும் ஆலயத்தை அடைந்ததும், பால்குடங்களை சுமந்து வந்த பக்தர்களே ராகவேந்தருக்கு பாலாபிஷேகம் செய்தனர்.

    இதனை தொடர்ந்து பூஜைகளும், மகா தீபாரா தனையும் நடைபெற்றது.

    பின்னர் அன்னததானம் வழங்கப்படடது. விழாவில் கே.எஸ்.பி. ரமேஷ் எம்.எல்.ஏ. உள்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • கோவில்பட்டி வட்டார ராகவேந்திரா சேவா அறக்கட்டளை 2-ம் ஆண்டு தொடக்க விழா பழனியாண்டவர் கோவில் தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
    • சங்க வரவு,செலவு கணக்குகளை பொருளாளர் கார்த்திகேயன் படித்துக் காண்பித்தார். சங்க செயல்பாடுகள் குறித்து செயலாளர் ஜோதி காமாட்சி பேசினார்

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி வட்டார ராகவேந்திரா சேவா அறக்கட்டளை 2-ம் ஆண்டு தொடக்க விழா பழனியாண்டவர் கோவில் தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    அறக்கட்டளை தலைவர் ஜெயக்கொடி தலைமை தாங்கினார். நிர்வாக குழு உறுப்பினர் செல்வம் வரவேற்று பேசினார். நிர்வாக குழு உறுப்பினர்கள் கதிரேசன், சண்முகசுந்தரம், காளிராஜ், மாரிமுத்து, முத்து மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சங்க வரவு,செலவு கணக்குகளை பொருளாளர் கார்த்திகேயன் படித்துக் காண்பித்தார். சங்க செயல்பாடுகள் குறித்து செயலாளர் ஜோதி காமாட்சி பேசினார். சங்கரேஸ்வரி, ஜெயக்கொடி, ராஜ ராஜேஸ்வரி பாண்டியன், சத்தியபாமா அசோக்குமார், பிச்சை மாரியம்மாள் தங்கராஜ், ஹேமலதா ஜெயக்குமார் ஆகியோர் குத்து விளக்கேற்றி கலை நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தனர்.

    சிறப்பு அழைப்பாளராக கோவில்பட்டி கோட்டாட்சியர் மகாலட்சுமி, நகர் மன்ற தலைவர் கருணாநிதி, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழிய பாண்டியன், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை முதுநிலை குடிமை மருத்துவர் கமல வாசன், குழந்தைகள் நல மருத்துவர் பிரபு, கே. என். சுப்புராஜ் நினைவுக் கல்வியியல் கல்லூரி செயலாளர் ராமச்சந்திரன், நிறுவனத் தலைவர் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவ- மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினர்.

    நிகழ்ச்சியில் நிர்வாக குழு உறுப்பினர் நடராஜன், லவ ராஜா, பாலமுருகன், பாண்டியன், முருகன் , சுடலைமுத்து, விக்னேஷ் என்டர்பிரைசஸ் அசோக், அருண் பேக்கரி மாடசாமி, காமாட்சி அம்மன் டிரேடிங் அசோக் மாறன், சண்முகவேல், தனபால், சக்திவேல், கருப்பசாமி, மாரிமுத்து, குமார், சக்தி மேட்ச் வொர்க் கிருஷ்ணமூர்த்தி, சேகர், கணபதி ,சூடாமணி, கண்ணன் ஜீவ அனுக்கிரக பொதுநல அறக்கட்டளை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • என் வாழ்க்கையில் நான் அனைத்து உச்சங்களையும் தொட்டு விட்டேன்.
    • சித்தர்களிடம் உள்ள நிம்மதி, சந்தோஷத்தில் 10% கூட எனக்கு கிடைக்கவில்லை.

    சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற கிரியா யோகா நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டார். அதன்பின்னர் தமிழாக்கம் செய்யப்பட்ட யோகதா சத்சங்க நூலை வெளியிட்டார். நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த் தெரிவித்துள்ளதாவது:

    எத்தனையோ படங்கள் நடித்திருந்தாலும், எனக்கு ஆத்ம திருப்தி கொடுத்தது ஸ்ரீராகவேந்திரர், பாபா படங்கள்தான். இந்த இரு படங்கள் வந்த பின்னர் தான் அனைவருக்கும் இவர்கள் இருவரையும் தெரிய வந்தது. எனக்கு மிகவும் சந்தோஷமாக விஷயம், என் ரசிகர்கள் இருவர் சன்னியாசியாக மாறியுள்ளனர். ஆனால் நான் இன்னும் நடிகராக இருக்கிறேன்.

    இமயமலையில் இயற்கையாகவே அமைந்துள்ள குகைகள் சொர்க்கம் போல் காட்சியளிக்கும்.குகைகளில் சில மூலிகைகள் கிடைக்கும். அதனை சாப்பிட்டதால் ஒரு வாரத்திற்கான புத்துணர்ச்சி அதிகமாக கிடைக்கும். கங்கை நதி ஏன் புனிதம் என்றால், மூலிகைகள் எல்லாம் அதில் கலக்கிறது. அங்கே உள்ள சித்தர்கள் அதில் குளிப்பதால் அந்த நதி பவித்ரமானது.

    சிறுவயதில் உடல் ஆரோக்கியத்தை பாதுக்காப்பை விடவும், வயது முதிர்ந்த பின் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால், சொத்துகளை விட்டுச் செல்வதை விடவும், நோயாளியாக இருந்திடக் கூடாது. இது அனைவருக்கும் துன்பம்.

    அதேபோல் நம் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். இதற்கு நல்ல உபதேசங்கள், பெற்றோர், ஆசிரியர்கள் சொல்வதை கேட்க வேண்டும். நல்ல சிந்தனைகளுக்காக புத்தகங்களை வாசிக்க வேண்டும். மனிதர்கள் கடந்த காலங்களையும், எதிர்காலத்தையும் நினைத்து கவலைக் கொள்வர். ஆனால் குழந்தைகள் அப்படியல்ல. வலிகளில் இருந்து வெளிவர நிகழ் காலத்தில் சிந்தனையை வைக்க வேண்டும்.

    வாழ்க்கையில் பணம், பேர், புகழ் எல்லாவற்றையும் கடந்து நிம்மதியாக இருக்க வேண்டும். என் வாழ்க்கையில் நான் அனைத்து உச்சங்களையும் தொட்டுவிட்டேன். ஆனால் சித்தர்களிடம் உள்ள நிம்மதி, சந்தோஷம் 10 சதவீதம் கூட இதுவரை எனக்கு கிடைக்கவில்லை.

    இவ்வாறு நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.

    • கோவில்பட்டி வேலாயுதபுரம் பத்ரகாளியம்மன், காளியம்மன் கோவிலில் அன்னதானம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
    • கே.என்.சுப்புராஜ் நினைவு கல்வியியல் கல்லூரி செயலாளர் மற்றும் தொழிலதிபர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி ராக வேந்திரா அறக்கட்டளை சார்பில் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு கோவில்களில் அன்னதானம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.

    இதில் 10-வது மாத நிகழ்ச்சியாக கோவில்பட்டி வேலாயுதபுரம் பத்ரகாளியம்மன், காளியம்மன் கோவிலில் அன்னதானம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கே.என்.சுப்புராஜ் நினைவு கல்வியியல் கல்லூரி செயலாளர் மற்றும் தொழிலதிபர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார்.

    நகர கூட்டுறவு வங்கி இயக்குனர் லவராஜா முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக அருண் பேக்கரி உரிமையாளர் மாடசாமி, வேல் விநாயகா டிரேடர்ஸ் உரிமையாளர் ஜெயபால், ஜீவ அனுக்கிரக பொதுநல அறக்கட்டளை நிறுவனர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். அன்னதான நிகழ்ச்சியை கோவில்பட்டி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழியபாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் அறக்கட்டளை நிறுவனர் சீனிவாசன், தலைவர் ஜெயக்கொடி, செயலாளர் ஜோதி காமாட்சி, பொருளாளர் கார்த்திகேயன், தொழிலதிபர்கள் அசோக், தனபால், சேகர், மாடசாமி, ரவிக்குமார மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள் நடராஜன், பாலமுருகன், சண்முகசுந்தரம், கதிரேசன், மாரிமுத்து, செல்வம், தங்கராஜ், சுப்பிரமணியன், முத்துமாரியம்மன், பொன்னு பாண்டி, காளிராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். முருகன் நன்றி கூறினார்.

    • இம்மந்திரத்தை 108 முறை 48 நாட்கள் தொடர்ந்து சொல்லி வரவேண்டும்.
    • உலகில் இறைவனின் பிரதிநிதியாக தோன்றியவர்கள் தான் மகான்களும், ஞானிகளும்.

    ஓம் வெங்கட நாதாய வித்மஹே

    ஸச் சித்தானந்தாய தீமஹி

    தந்நோ ராகவேந்திரா ப்ரசோதயாத்

    ஸ்ரீ ராகவேந்திரருக்குரிய இந்த மந்திரத்தை மகான்கள் மற்றும் சித்தர்களை வழிபடுவதற்குரிய வியாழக்கிழமைகளில் வழிபடுவது சிறப்பு என்றாலும் வாரத்தின் மற்ற எல்லா நாட்களிலும் கூறி வழிபடலாம்.

    காலையில் எழுந்து, குளித்து முடித்து விட்டு பூஜையறையில் ராகவேந்திரர் ஸ்வாமியின் படமிருந்தால் அதற்கு முன்பு மஞ்சள் நிற பூக்களை வைத்து, தூபங்கள் கொளுத்தி, வடதிசையை பார்த்தவாறு அமர்ந்து, கண்களை மூடிக்கொண்டு தியான நிலையில், ஸ்ரீ ராகவேந்திரரை மனதில் நினைத்து இம்மந்திரத்தை 108 முறை 48 நாட்கள் தொடர்ந்து செய்து வர நீங்கள் விரும்பியவற்றை நிறைவேற்றுவார் ஸ்ரீ ராகவேந்திரர்.

    இம்மந்திரத்தை உண்மையான பக்தியுடன் உரு ஜெபித்து அவரை வழிபடுபவர்களுக்கு அனைத்து நன்மைகளும் உண்டாகும்.

    உலகில் இறைவனின் பிரதிநிதியாக தோன்றியவர்கள் தான் மகான்களும், ஞானிகளும். இவர்களை நாம் எல்லோரும் தூய்மையான இதயத்துடன் சரணடையும் போது நமக்கு எல்லா வகையிலும் உதவுகின்றனர்.

    • ராகவேந்திரருக்கான விரதத்தை ஆரம்பிக்க வியாழக்கிழமை உகந்தநாள் ஆகும்.
    • இதுபோல் விரதம் கடைப்பிடித்தால் நமது குறைகள் அனைத்தும் நீங்கும்.

    மகான் ஸ்ரீ ராகவேந்திரருக்கான விரதத்தை ஆரம்பிக்க வியாழக்கிழமை உகந்தநாள் ஆகும். ஆறு வியாழக்கிழமைகள் தொடர்ந்து நம்பிக்கையுடன் பூஜை செய்ய வேண்டும். மகான் ஸ்ரீ ராகவேந்திரருக்கான விரதத்தை ஆரம்பிக்க வியாழக்கிழமை உகந்தநாள் ஆகும். ஆறு வியாழக்கிழமைகள் தொடர்ந்து நம்பிக்கையுடன் பூஜை செய்ய வேண்டும்.

    முதல் வியாழக்கிழமை காலையில் எழுந்ததும் காலைக் கடன்களை முடித்துவிட்டு குளித்து, தூய ஆடை அணிந்து கொண்டு அவரவர் விருப்பப்படி நெற்றியில் திருநீறு அல்லது சந்தனம், திருநாமம் அணியவேண்டும். பூஜையை ஆரம்பிப்பதற்கு முன் மஞ்சள் தூளினால் பிள்ளையார் பிடித்து வைத்து அதற்கு சந்தனம், குங்குமம், மலர் சூட வேண்டும். நிவேத்தியமாக வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய் முதலியவைகளை படத்தின் முன்வைத்த பின் பூஜையைத் தொடரலாம்.

    பூஜை செய்யுமிடத்தில் சுத்தம் செய்து கோலமிட்டு பூஜைக்கு என்று வைத்திருக்கும் மணைப் பலகையில் ஸ்ரீராகவேந்திரர் படத்தை வைக்க வேண்டும். படத்திற்கு சந்தனம், குங்குமம், துளசி மாலை சாத்தவேண்டும். அதேபோல குத்து விளக்கிற்கும் சந்தனம், குங்குமம் இடவேண்டும். பூஜையின்போது ஸ்ரீராகவேந்திரர் படத்தை நடுவில் வைத்து பூஜிக்க வேண்டும். மகான் படத்திற்கு தீப, தூபம் காட்டி தேங்காய் உடைத்தபின் கற்பூர ஆரத்தி எடுத்தும் கையில் துளசி தளங்களை வைத்துக் கொண்டு எழுந்து நின்று

    பூஜ்யாய ஸ்ரீராகவேந்த்ராய

    சத்ய தர்ம ரதாயச பஜதாம்

    கல்பவ்ருக்ஷாய நமதாம்

    ஸ்ரீ காம தேநுவே

    என்று சொல்லிக்கொண்டே படத்தையும் விளக்கையும் பதினோரு தடவைகள் வலம் வர வேண்டும். ஒவ்வொரு முறையும் சுலோகத்தைச் சொல்ல வேண்டும். இதுபோல் ஆறு வியாழக்கிழமை வழிபட்ட பின் ஏழாவது வியாழக்கிழமை பழங்களுடன் சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்யவேண்டும். ஏழாவது வியாழக்கிழமை பூஜையின் விரத முடிவு நாளாகும்.

    அன்று ஒரு அடி உயரத்திற்கு மேல் உள்ள ஐந்து முக குத்து விளக்கு, பூஜைக்கு வேண்டிய வெற்றிலைப் பாக்கு, பழம், மணமிக்க மலர்கள், தூப தீபங்கள் ஆகியவைகள் தேவை. ஸ்ரீராகவேந்திரரை வழிபடும் வியாழக்கிழமையில் பகலில் திரவ பதார்த்தங்கள் அருந்தலாம். இரவில் சிறிதளவு பால் அன்னம் சாப்பிடலாம். இதுபோல் விரதம் கடைப்பிடித்தால் நமது குறைகள் அனைத்தும் நீங்கும்.

    கர்நாடக மாநிலம், ஷிவ்மோகா பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர் ராகவேந்திரா 52,148 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். #Yeddyurappa #BYRaghavendrawins #Shivamogga #LokSabhabypoll
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தின் ஷிவமோகா தொகுதி பா.ஜ.க. எம்.பி.யும் அம்மாநில முன்னாள் முதல் மந்திரியுமான எடியூரப்பா சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார்.

    இதையடுத்து, காலியாக இருந்த ஷிவமோகா, மன்டியா, பல்லாரி ஆகிய பாராளுமன்ற தொகுதிகளுக்கு கடந்த மூன்றாம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.  

    அம்மாநிலத்தை ஆளும் மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சி ஆகியவை கூட்டணி அமைத்து இந்த தேர்தலை சந்தித்தன.

    கடந்த மூன்றாம் தேதி பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் ஷிவமோகா தொகுதி பா.ஜ.க. வேட்பாளரும் முன்னாள் முதல் மந்திரி எடியூரப்பா மகனுமான ராகவேந்திரா, 52,148 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

    காங்கிரஸ் கட்சி சார்பில் அவரை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளரான முன்னாள் முதல் மந்திரி பங்காரப்பாவின் மகன் மது பங்காரப்பா தோல்வியை தழுவினார். #Yeddyurappa #BYRaghavendrawins #Shivamogga #LokSabhabypoll 
    ஸ்ரீ ராகவேந்திரா சரணம் என்று சொல்லி மனம் உருகி வழிபாடு செய்பவர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    நாடெங்கும் இருந்து வரும் பக்தர்களுக்கு ராகவேந்திரர் தனது பிருந்தாவனத்தில் யோக சமாதி நிலையில் அமர்ந்து அருள்பாலித்து வருகிறார். ஸ்ரீ ராகவேந்திரா என்ற சொல்லுக்கே நமக்கு கிடைக்கும் பலன்கள் என்னவென்று பார்க்கலாம்.

    ஸ்ரீ - ஸ்ரீ பிரஹலாதன்
    ரா - ராமரை நேரில் பார்த்தவர்
    க - கண்கண்ட தெய்வம்
    வே- வேண்டியதை தருபவர்
    ந் - மந்திராலய மஹான்
    தி - திருப்பதி வேங்கடாஜலபதியின் அருளை பெற்றவர்
    ரா - மஹான்களில் ராஜாதி ராஜா

    என் மனம் வருந்துகிறது என்று சொன்னபோது "ஸ்ரீ ராகவேந்திரா" உங்களது நாமம் என்னை அமைதிப்படுத்துகிறது. 
    ஸ்ரீராகவேந்திரருக்கு உகந்த இந்த விரதத்தை ஆரம்பிக்க வியாழக்கிழமை உகந்தநாள் ஆகும். இந்த விரதத்தை எவ்வாறு அனுஷ்டிக்க வேண்டும் என்று பார்க்கலாம்.
    ஸ்ரீராகவேந்திரருக்கு உகந்த இந்த விரதத்தை ஆரம்பிக்க வியாழக்கிழமை உகந்தநாள் ஆகும். அன்று பூச நட்சத்திரமாக இருந்தால் மிகவும் சிறப்பு. வேறு நட்சத்திரமாக இருந்தாலும் வழிபடலாம். குரு ஹோரை சிறப்பு. ஆறு வியாழக்கிழமைகள் தொடர்ந்து நம்பிக்கையுடன் பூஜை செய்ய வேண்டும்.

    ஏழாவது வியாழக்கிழமை பூஜையின் விரத முடிவு நாளாகும். அன்று ஒரு அடி உயரத்திற்கு மேல் உள்ள ஐந்து முக குத்து விளக்கு, பூஜைக்கு வேண்டிய வெற்றிலைப் பாக்கு, பழம், மணமிக்க மலர்கள், தூப தீபங்கள் ஆகியவைகள் தேவை. பூஜை செய்யுமிடத்தில் சுத்தம் செய்து கோலமிட்டு பூஜைக்கு என்று வைத்திருக்கும் மணைப் பலகையில் ஸ்ரீராகவேந்திரர் படத்தை வைக்க வேண்டும்.

    படத்திற்கு சந்தனம், குங்குமம், துளசி மாலை சாத்தவேண்டும். அதேபோல குத்து விளக்கிற்கும் சந்தனம், குங்குமம் இடவேண்டும். பூஜையின்போது ஸ்ரீராகவேந்திரர் படத்தை நடுவில் வைத்து பூஜிக்க வேண்டும். பூஜையை ஆரம்பிப்பதற்கு முன் முதலில் குல தெய்வத்தை வழிபட்டு பின் மஞ்சள் தூளினால் பிள்ளையார் பிடித்து வைத்து அதற்கு சந்தனம், குங்குமம், மலர் சூட வேண்டும்.

    நிவேத்தியமாக வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய் முதலியவைகளை படத்தின் முன்வைத்த பின் பூஜையைத் தொடரலாம். மகான் படத்திற்கு தீப, தூபம் காட்டி தேங்காய் உடைத்தபின் கற்பூர ஆரத்தி எடுத்தும் கையில் துளசி தளங்களை வைத்துக்கொண்டு எழுந்து நின்று

    "பூஜ்யாய ஸ்ரீராகவேந்த்ராய சத்ய தர்ம
    ரதாயச பஜதாம் கல்பவ்ருக்ஷாய
    நமதாம் ஸ்ரீ காம தேநுவே"

    என்று சொல்லிக்கொண்டே படத்தையும் விளக்கையும் பதினோரு தடவைகள் வலம் வர வேண்டும். ஒவ்வொரு முறையும் சுலோகத்தைச் சொல்ல வேண்டும். கையில் வைத்திருக்கும் துளசி தளத்தை படத்திற்கு அர்ப்பணித்தலும் முழு நம்பிக்கையுடன் கனவில் வந்து தரிசனம் கொடுக்கும்படி பிரார்த்தனை செய்தபின் கீழே சாஸ்டாங்கமாக விழுந்து வணங்க வேண்டும்.

    இதுபோல் ஆறு வியாழக்கிழமை வழிபட்ட பின் ஏழாவது வியாழக்கிழமை பழங்களுடன் சர்க்கரைப் பொங்கல் நிவேதனம்செய்யவேண்டும்.இவ்வாறு நாம் பிரார்த்தனைசெய் யும்போது நமது கோரிக்கைகள் அனை த்தும் நிறைவேறும் .குருவின் அருளும் கிட்டும்.
    குருவின் அருட்பார்வை பெற்றிட குரு திசை நடைபெறும் போதும் குரு ஸ்ரீ ராகவேந்திரரின் 108 போற்றியை மனம் உருகி சொல்லி வழிபாடு செய்து வந்தால் நன்மைகள் உண்டாகும்.
    குருவின் அருட்பார்வை பெற்றிட குரு திசை நடைபெறும்போது, குருவானவர் 6, 8, 12,ல் மறைந்திருந்தலும் குருபலம் குன்றி இருந்தாலும் ஸ்ரீ சத்குரு
    ராகவேந்திர ஸ்வாமிகளை வழிபடவேண்டும்.

    ஓம் சத்குரு ராகவேந்திரரே போற்றி
    ஓம் காமதேனுவே போற்றி
    ஓம் கற்பகவிருட்சமே போற்றி
    ஓம் சத்குருவே போற்றி
    ஓம் சாந்தரூபமே போற்றி
    ஓம் ஞான பீடமே போற்றி
    ஓம் கருணைக் கடலே போற்றி
    ஓம் ஜீவ ஜோதியே போற்றி
    ஓம் ஸ்ரீ பிருந்தாவனமே போற்றி
    ஓம் துளசி வடிவமே போற்றி

    ஓம் தேவ தூதனே போற்றி
    ஓம் பிரகலாதனே போற்றி
    ஓம் பக்தப் பிரயனே போற்றி
    ஓம் திவ்ய ரூபமே போற்றி
    ஓம் தர்ம தேவனே போற்றி
    ஓம் அலங்காரப் பிரியனே போற்றி
    ஓம் அன்பின் உருவமே போற்றி
    ஓம் காவியத் தலைவனே போற்றி
    ஓம் அருட் பெரும் தெய்வமே போற்றி
    ஓம் தேவ கோஷ பிரியனே போற்றி

    ஓம் துவைத முனிவரே போற்றி
    ஓம் கலைவாணிச் செல்வரே போற்றி
    ஓம் மந்திராலய பிரபுவே போற்றி
    ஓம் குருராஜரே போற்றி
    ஓம் சுசீந்திரரின் சிஷ்யரே போற்றி
    ஓம் மத்யமவத பீடமே போற்றி
    ஓம் தீனதயாளனே போற்றி
    ஓம் கருணா மூர்த்தியே போற்றி
    ஓம் ஜெகத் குருவே போற்றி
    ஓம் கலியுகக் கடவுளே போற்றி

    ஓம் நல்லோரைக் காப்பவனே போற்றி
    ஓம் தீயோரை அழிப்பவனே போற்றி
    ஓம் ஸ்ரீ அனுமந்தப் பிரியரே போற்றி
    ஓம் திம்மண்ணரின் தவப்புதல்வரே போற்றி
    ஓம் வைராக்கிய தீட்சிதரே போற்றி
    ஓம் ஸ்ரீ ஹரிபக்தரே போற்றி
    ஓம் தோஷங்களைத் தீர்ப்பவனே போற்றி
    ஓம் பிரத்யட்ச தெய்வமே போற்றி
    ஓம் அருட்பெரும் தெய்வமே போற்றி
    ஓம் அறிவின் சுடரே போற்றி

    ஓம் பண்டித மேதையே போற்றி
    ஓம் தீய சக்தியை அழிப்பவனே போற்றி
    ஓம் வெங்கட பட்டரே போற்றி
    ஓம் வேதங்களை அறிந்தவரே போற்றி
    ஓம் ஸ்ரீ பிராமணப் பிரியரே போற்றி
    ஓம் அஞ்ஞானத்தை அழிப்பவரே போற்றி
    ஒம் மெஞ்ஞானத்தை அளிப்பவரே போற்றி
    ஓம் வியாதிகளைத் தீர்ப்பவரே போற்றி
    ஓம் அமானுஷ சக்தியே போற்றி
    ஓம் மோட்சத்தை அருள்பவரே போற்றி

    ஓம் ஆனந்த நிலைய்மே போற்றி
    ஓம் கஷாயத்தை அணிந்தவரே போற்றி
    ஓம் தூய்மை நிதியே போற்றி
    ஓம் வரங்களை அளிப்பவரே போற்றி
    ஓம் கண்னனின் தாசனே போற்றி
    ஓம் சத்ய ஜோதியே போற்றி
    ஓம் ஸ்ரீ ஜகத்குருவே போற்றி
    ஓம் பாவங்களை அழிப்பவனே போற்றி
    ஓம் மனிதகுல மாணிக்கமே போற்றி
    ஓம் தெய்வாம்சப் பிறவியே போற்றி

    ஓம் திருப்பாற்கடல் சந்திரனே போற்றி
    ஓம் மகிமை தெய்வமே போற்றி
    ஓம் அணையர் தீபமே போற்றி
    ஓம் அகந்தையை அழிப்பவனே போற்றி
    ஓம் யக்ஞ நாராயணரை வென்றவரே போற்றி
    ஓம் பரிமளத்தை இயற்றியவரே போற்றி
    ஓம் திராவிட நாட்டு தெய்வமே போற்றி
    ஓம் முக்காலத்தை உணர்ந்தவரே போற்றி
    ஓம் ஸ்ரீ மஞ்சாலத்தின் மாமுனிவரே போற்றி
    ஓம் கஷ்டங்களைத் தீர்ப்பவரே போற்றி

    ஓம் சுகங்களை அளிப்பவரே போற்றி
    ஓம் வியாச பகவானரே போற்றி
    ஓம் சங்கு கர்ணரே போற்றி
    ஓம் பரமாத்மாவே போற்றி
    ஓம் குருதேவரே போற்றி
    ஓம் நன்மைகளைத் தருபவரே போற்றி
    ஓம் தயாநிதியே போற்றி
    ஓம் அருட்தவசீலரே போற்றி
    ஓம் ஞான மூர்த்தியே போற்றி
    ஓம் விஷ்ணு பக்தரே போற்றி

    ஓம் ஸ்ரீ புண்ணிய புருஷரே போற்றி
    ஓம் அமுத கலசமே போற்றி
    ஓம் அழகின் உருவமே போற்றி
    ஓம் சந்தானத்தை அளிப்பவரே போற்றி
    ஓம் சாஸ்திரங்கள் அறிந்தவரே போற்றி
    ஓம் துளஸி மாலை அணிந்தவரே போற்றி
    ஓம் ஜெபமாலை கொண்டவரே போற்றி
    ஓம் மங்களம் தருபவரே போற்றி
    ஓம் மன்மதனை ஜெயித்தவரே போற்றி
    ஓம் காவல் தெய்வமே போற்றி

    ஓம் நல் ஆயுளைத் தருபவரே போற்றி
    ஓம் நல் ஐச்வர்யங்களை அளிப்பவரே போற்றி
    ஓம் நல் அபயம் அளிப்பவரே போற்றி
    ஓம் ஸ்ரீ உலகைக் காப்பவரே போற்றி
    ஓம் காந்தக் கண்களே போற்றி
    ஒம் யதிராஜரே போற்றி
    ஓம் ஓம்கார ரூபமே போற்றி
    ஓம் பிரம்ம ஞானியே போற்றி
    ஒம் துங்கை நதியின் தூயவரே போற்றி
    ஓம் இணையில்லா இறைவனே போற்றி

    ஓம் விபீஷணரே போற்றி
    ஓம் அனாத ரட்சகரே போற்றி
    ஓம் சங்கீதப் பிரியரே போற்றி
    ஓம் சுந்தர வதனரே போற்றி
    ஓம் வியாச ராஜேந்திரரே போற்றி
    ஓம் நரஹரி பிரியரே போற்றி
    ஓம் தியாகமூர்த்தியே போற்றி
    ஓம் வாணியின் வீணையே போற்றி
    ×