என் மலர்
புதுச்சேரி

பக்தர்கள் ராகவேந்திரருக்கு பால் அபிஷேகம் செய்த காட்சி.
ராகவேந்திரருக்கு 108 பால் குட அபிஷேகம்
- ராகவேந்தரின் 428- வது அவதார ஜெயந்தி தினத்தையொட்டி புதுவை ராகவேந்திரா நகரில் உள்ள ராகவேந்திரர் கோவிலில் 108 பால் குட அபிஷேக விழா நடைபெற்றது.
- பால்குடங்களை சுமந்து வந்த பக்தர்களே ராகவேந்தருக்கு பாலாபிஷேகம் செய்தனர்.
புதுச்சேரி:
ராகவேந்தரின் 428- வது அவதார ஜெயந்தி தினத்தையொட்டி புதுவை ராகவேந்திரா நகரில் உள்ள ராகவேந்திரர் கோவிலில் 108 பால் குட அபிஷேக விழா நடைபெற்றது.
காலை 7 மணிக்கு நித்தியபடி பூஜைகள் நடை பெற்று, 10 மணியளவில் கோவில் வளாகத்தில் இருந்து பால்குட ஊர்வலம் புறப்பட்டது. பின்னர் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த ஊர்வலம் மீண்டும் ஆலயத்தை அடைந்ததும், பால்குடங்களை சுமந்து வந்த பக்தர்களே ராகவேந்தருக்கு பாலாபிஷேகம் செய்தனர்.
இதனை தொடர்ந்து பூஜைகளும், மகா தீபாரா தனையும் நடைபெற்றது.
பின்னர் அன்னததானம் வழங்கப்படடது. விழாவில் கே.எஸ்.பி. ரமேஷ் எம்.எல்.ஏ. உள்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story






