search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உரம்"

    • கால்நடைகள் உட்பட அனைத்து உயிரினங்களும் பல்வேறு நோய் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றன.
    • கால்நடைகளின் சாணம், புழுக்கை மற்றும் கழிவு விவசாய நிலங்களுக்கு மீண்டும் இயற்கை உரம் சிறந்த உரமாக கிடைக்கிறது.

    பாபநாசம்:

    தஞ்சை மாவட்டம் பாபநாசம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி களில் விவசாயத்திற்கு கால்நடை களின் கழிவுகளை இயற்கை உரமாக பயன்படுத்த சமீப காலமாக விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    முந்தைய காலங்களில் கால்நடை கழிவுகளை இயற்கை உரமாக வயல்களுக்கு இட்டு அதிக அளவில் விவசாயம் செய்து வந்தனர். அதற்காக விவசாயிகள் அதிக அளவில் வீடுகளில் கால்நடைகளை வளர்த்து வந்தனர்.

    சமீப காலமாக கிராமங்களில் கால்நடைகள் வளர்ப்பவர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டதால் கால்நடை கழிவுகள் அதிக அளவில் கிடைப்பதில்லை. அதனால் இயற்கை உரத்திற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டதால் ரசாயன உரங்களின் பயன்பாடு அதிகரித்து வந்தது. இரசாயன உரங்களால் மண்வளம் பாதிக்கப்படுவதோடு, அதில் விளைவிக்கக்கூடிய தானியங்களை உண்ணும் மனித இனம் மட்டுமின்றி கால்நடைகள் உட்பட அனைத்து உயிரினங்களும் பல்வேறு நோய் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றன.

    சமீப காலமாக இரசாயன உரங்கள் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு காரணமாக சில விவசாயிகள் மீண்டும் இயற்கை உரத்திற்கு மாறி வருகின்றனர்.

    கால்நடைகளை அடைத்து வைப்பதன் மூலம் கால்நடைகளின் சாணம், புழுக்கை மற்றும் கழிவு விவசாய நிலங்களுக்கு மீண்டும் இயற்கை உரம் சிறந்த உரமாக கிடைக்கிறது.

    இதற்காக ராமநாதபுரம், அரியலூர், பெரம்பலூர் பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான செம்மறி ஆடுகள், மாடுகள், வாத்துகள் தஞ்சை உட்பட டெல்டா மாவட்டங்களுக்கு மேய்ச்சலுக்காகவும், இயற்கை உரத்திற்காகவும் கொண்டுவரப்பட்டு கழிவுகளை இயற்கை உரமாக பயன்படுத்தி வருகின்றனர்.

    மேலும் கிடை அமைக்கும் பணிகளில் தொழிலாளிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

    • சராசரி மழைபொழிவை விட 7.12 மி.மீ அதிகமாகும்.
    • விவசாயிகளிடமிருந்து 265 கோரிக்கை மனுக்களையும் கலெக்டர் பெற்றுக்கொ ண்டார்.

    திருப்பூர் :

    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.இதில் கலெக்டர் வினீத் கலந்து கொண்டு பேசிய தாவது:- திருப்பூர் மாவட்டத்தின் இயல்பான வருடாந்திர மழை 618.20 மி.மீ அளவு. மார்ச் 2023ம் மாதம் முடிய சராசரியாக பெய்ய வேண்டிய மழை அளவு 27.40 மி.மீ .நடப்பு 2023- ம்ஆண்டில் நாளது வரை பெய்த மழையின் அளவு 34.52 மி.மீ., ஆகும். இது சராசரி மழைபொழிவை விட 7.12 மி.மீ அதிகமாகும். பயிர் சாகுபடிக்கு தேவையான நெல் மற்றும் பிறபயிறு வகை தானியங்கள் விதைகள் போதிய அளவு இருப்பில் உள்ளது.

    அதன்படி நெல் 26.09 மெட்ரிக் டன், சிறுதானிய பயிறுகள் 6.63 மெட்ரிக் டன்,பயிறு வகை பயிறுகள் 28.10 மெட்ரிக் டன் மற்றும் எண்ணெய் வித்து பயிர் விதைகள்1.13 மெட்ரிக் டன் இருப்பிலுள்ளது. அமராவதி அணையிலிருந்து நீர் வரத்து தொடங்கியதால் உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம் வட்டாரங்களில் நெல் சாகுபடி செய்ய விவ சாயிகள் தங்களுடைய விவசாய நிலங்களை தயார் செய்து உள்ளனர். மேலும் கீழ் பவானி பாசன பகுதிகளான காங்கேயம் மற்றும் வெள்ளகோவில் பகுதிகளில் நெல் சாகுபடி சம்பா பருவத்தில் தொடங்க ப்படவுள்ளது.நெல் சாகுபடிக்கு தேவையான யூரியா, பா ஸ்பேட் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்கள் தேவையான அளவு இருப்பில் உள்ளது. யூரியா 1919 மெட்ரிக் டன், டி.ஏ.பி. 1499 மெட்ரிக் டன், காம்ப்ளக்ஸ் 4378 மெட்ரிக் டன் மற்றும் சூப்பர் பாஸ்பேட் 620 மெட்ரிக்டன் அளவு இருப்பில் உள்ள தென கலெக்டர் தெரி வித்தார்.

    திருப்பூர் மாவட்டத்தில் இருந்து பல்வேறு விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொ ண்டனர். முந்தைய கூட்ட ங்களில் விவசாயிகள் வழங்கிய மனுக்கள் மீதான நடவடிக்கைகள் குறித்து துறை வாரியாக மனுதா ரர்கள் முன்னிலையில் விவாதிக்கப்பட்டதுடன் விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளையும் கால தாமதமின்றி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அலு வலர்க ளுக்கு உத்தரவிட்டார்.

    மேலும் பல்வேறு கோரி க்கைகளை வலியுறுத்தி விவசாயிகளிடமிருந்து 265 கோரிக்கை மனுக்களையும் கலெக்டர் பெற்றுக்கொ ண்டார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலு வலர் ஜெய்பீம் , திருப்பூர் சார் ஆட்சியர் ஸ்ருதன் ஜெய் நாரயணன், இணை இயக்குநர் (வேளாண்மை) மாரியப்பன், கூட்டுறவு சங்க ங்களின் இணைப் பதிவாளர் சீனிவாசன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்கு நர் லட்சுமணன், மாவட்ட கலெக்டர் நேர்முக உதவி யாளர் (வேளாண்மை) கிருஷ்ணவேணி, துணை கலெக்டர்கள் உட்பட அனைத்து த்துறை அலு வலர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • உழவுத் தொழில் சாதியின் அடிப்படையில் நடைபெறவில்லை.
    • உரம் வாங்கும் உழவர்களின் சாதிப் பிரிவை கோரும் வசதியை விற்பனைக் கருவியின் மென்பொருளில் இருந்து மத்திய அரசு நீக்க வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மானியத்துடன் கூடிய உரங்களை உழவர்கள் வாங்கும்போது, அவர்கள் சாதி பிரிவைத் (பொது/ஓபிசி/எஸ்.சி/எஸ்.டி) தெரிவிக்க வேண்டியது கட்டாயம் என்று மத்திய உரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. உர விற்பனைக் கருவியின் மென்பொருளில் இதற்கான வசதி சேர்க்கப்பட்டுள்ளது. இது கண்டிக்கத்தக்கது.

    உழவுத் தொழில் சாதியின் அடிப்படையில் நடைபெறவில்லை. உர மானியமும் சாதியின் அடிப்படையில் வழங்கப்படவில்லை. அவ்வாறு இருக்கும்போது உர மானியம் வழங்குவதற்கான சாதிப் பிரிவுகளை கோருவது எந்த வகையிலும் ஏற்கத்தக்கதல்ல. மத்திய அரசின் இந்த விதி உழவர்களை காயப்படுத்தியுள்ளது.

    உர மானியம் பெறுவோரின் சாதிப் பிரிவுகளை அறிந்து அவற்றின் அடிப்படையில் உர மானியம் வழங்க மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறதோ என்ற சந்தேகம் உழவர்கள் நடுவே ஏற்பட்டிருக்கிறது. உழவர்களின் இந்த சந்தேகத்தை உடனடியாக போக்க வேண்டியது மத்திய அரசின் கடமை.

    உழவுத் தொழில் புனிதமானது; அனைவருக்கும் பொதுவானது. அதற்கான உர மானியம் பெறும் உழவர்களை சாதியின் அடிப்படையில் பார்ப்பது தவறு. எனவே, உரம் வாங்கும் உழவர்களின் சாதிப் பிரிவை கோரும் வசதியை விற்பனைக் கருவியின் மென்பொருளில் இருந்து மத்திய அரசு நீக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பூங்காவை ஆய்வு செய்து மண்புழு உரம் தயாரிப்பு பணிக்கு அறிவுரை வழங்கினார்.
    • அலுவலகத்தில் ஆன்லைன் வரிவிதிப்புகள் தொடர்பாக ஆய்வு செய்தார்.

    சுவாமிமலை:

    சுவாமிமலை பேரூராட்சியில் வளம் மீட்பு பூங்காவை கூடுதல் இயக்குநர் மலையமான் திருமுடிக்காரி வளம் மீட்பு பூங்காவை ஆய்வு செய்து மண்புழு உரம் தயாரிப்பு பணிக்கு அறிவுரை வழங்கினார்.

    மேலும், சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவில் வளாகம், சன்னதி தெருவில் உள்ள வணிக கடைகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து, சன்னதி தெருவில் பக்தர்கள் பயன்பாட்டிற்கு கழிப்பறை கட்ட அறிவுறுத்தினார்.

    மேலும், பேரூராட்சி அலுவலகத்தில் ஆன்லைன் வரிவிதிப்புகள் தொடர்பாக ஆய்வு செய்து அறிவுரை வழங்கினார்.

    ஆய்வின் போது தஞ்சாவூர் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் கனகராஜ், உதவி செயற்பொறியாளர் மாதவன், சுவாமிமலை பேரூராட்சி பணியாளர்கள் உடன் இருந்தனர்.

    • கும்மிடிப்பூண்டி பகுதியில் 30 ஆயிரம் ஏக்கர் பரப்பில் நடப்பு சம்பா பருவத்தில் நெல் பயிரிடப்பட்டு அறுவடை செய்ய தயாராக உள்ளது.
    • விதைகள் அனைத்தும் வேளாண்மை விரிவாக்க மையத்தில் 50 சதவீத மானியத்துடன் வழங்கப்பட்டு வருகிறது.

    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டி, மீஞ்சூர் பகுதி வேளாண் உதவி இயக்குனர் டில்லிகுமார் கூறியதாவது:-

    கும்மிடிப்பூண்டி பகுதியில் 30 ஆயிரம் ஏக்கர் பரப்பில் நடப்பு சம்பா பருவத்தில் நெல் பயிரிடப்பட்டு அறுவடை செய்ய தயாராக உள்ளது. இந்த நிலையில் அறுவடைக்குப் பின் பயிர் வகைகளான பச்சைப்பயிறு உளுந்து,ஆகியவற்றை சாகுபடி செய்து பயன்பெறலாம். இதற்கான விதைகள் அனைத்தும் வேளாண்மை விரிவாக்க மையத்தில் 50 சதவீத மானியத்துடன் வழங்கப்பட்டு வருகிறது.மேலும் உரங்களும் 50 சதவீத மானியத்துடன் வழங்கபடுகிறது. இதனை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.

    • நெற் பயிர்களில் ட்ரோன் மூலம் உயிர் உரம் தெளிக்கப்பட்டது
    • வறட்சியை தடுக்க விவசாயிகள் நடவடிக்கை

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆவுடையார்கோவில் பகுதிகளில் நெற்பயிர்களில் வறட்சியைத் தடுக்கும் விதத்தில் தமிழகத்தில் முதல்முறையாக ட்ரோன் தெளிப்பான் மூலம் உயிர் உரம் தெளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    அறந்தாங்கி தொகுதிக்குட்பட்ட ஆவுடையார்கோவில், மணமேல்குடி ஆகிய பகுதிகளில் 20 ஆயிரத்து 800 ஹெக்டர் பரப்பளவு கொண்ட விளை நிலங்களில் விவசாயிகள் நெற்பயிர் சாகுபடி செய்து வருகின்றனர். பருவமழை தொடங்கி தமிழகம் முழுவதும் நல்ல மழை பெய்து வருகின்ற நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் போதிய மழையின்றி விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

    முதல் தவணை உரம் இட்டு பயிர்கள் நல்ல வளர்ச்சி அடைந்திருந்த போதிலும் போதிய தண்ணீர் பற்றாக்குறையால் பயிர்கள் ஆங்காங்கே கருகத் தொடங்கியுள்ளன. இதனை சரி செய்யும் விதமாக வேளாண் அறிவியல் நிலையம் மற்றும் வேளாண்மை உழவர் நலத்துறை, தேசிய பயறு வகை ஆராய்ச்சி மையம் சார்பில் பயிர்களுக்கு உயிர் உரம் தெளிக்கும் நிகழ்வு நடைபெற்றது.இளஞ்சிவப்பு மெத்தைலோ பாக்டீரியம் எனும் உயிர் உரமானது தெளித்த 15 நாட்கள் வரை தண்ணீர் இன்றி வாடாமல் வளர்ச்சியடையும், அதனைத் தொடர்ந்து மீண்டும் 15 நாட்களுக்கு பிறகு உயிர் உரம் தெளிக்க வேண்டும். உயிர் உரம் தெளிக்கப்படுவதால் வறட்சியிலிருந்து பயிர்களை தக்க வைத்துக் கொள்ள முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    முழுக்க முழுக்க துண்ணுயிர்களால் தயாரிக்கப்படும் உரம் என்பதால் விவசாயிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இதன் முதல் சோதனை ஓட்டமாக தமிழகத்தில் முதல் முறையாக மீமிசல் பழங்குளம் பகுதியில் 1200 ஏக்கர் பரப்பளவில் உயிர் உரம் அடிக்க திட்டமிட்டு ட்ரோன் தெளிப்பான் மூலம் உயிர் உரம் தெளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    இதில் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி, வட்டார வேளாண்மை அலுவலர் பிரவீனா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • குமரி மாவட்டத்தில் கன்னி பூ, கும்பப் பூ, என இரு போக சாகுபடிகள் செய்யப்பட்டு வருகிறது.
    • தற்பொழுது கும்ப பூ சாகு படி பணியில் விவசாயி கள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கன்னி பூ, கும்பப் பூ, என இரு போக சாகுபடிகள் செய்யப்பட்டு வருகிறது. தற்பொழுது கும்ப பூ சாகு படி பணியில் விவசாயி கள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

    மாவட்டம் முழுவதும் 6500 ஹெக்டேரில் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு சாகுபடி பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் விவசா யத்திற்கு தேவையான உரம் தட்டுப்பாடு நீடித்து வந்தது.

    இதனை கவனத்தில் கொண்டு தங்கு தடை இன்றி விவசாயத்திற்கு உரம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.

    இந்த நிலையில் கொச்சி யில் இருந்து சரக்கு ரெயில் மூலம் கன்னியா குமரி மாவட்ட விவசாய பணிகளுக்காக 635 டன் பாக்டம்பாஸ் உரம் இன்று நாகர்கோவில் ரெயில் நிலையம் வந்தது. அந்த உரம் லாரிகள் மூலம் ஏற்றப்பட்டு நாகர்கோவில் ஒழுகின சேரியில் உள்ள மத்திய உர நிறுவன கிட்டங்கிக்கு கொண்டு செல்லப்பட்டது.

    கன்னியாகுமரி மாவட்ட விவசாயத்திற்கு இந்த உரம் பயன்படுத்தப்பட இருக்கிறது. தனியார் ஏஜென்சிகள் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு இந்த உரம் இங்கிருந்து விநியோகம் செய்யப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • விவசாயத்தை காப்பாற்றுவதற்குத் தேவையான உரம் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனத்திடமிருந்து யூரியா வரவழைக்கப்பட்டது.
    • 74 லாரிகளில் ஏற்றி மயிலாடுதுறை நாகை மற்றும் திருவாரூர் மாவட்ட தனியார் உர விற்பனையாளர்களுக்கு அனுப்பி வைத்தனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டத்தில் தற்பொழுது சம்பா மற்றும் தாளடி விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வடகிழக்குப் பருவமழையால் 87ஆயிரம் ஏக்கரில் விவசாயம் சேதம் அடைந்துள்ளது, மீதமுள்ள விவசாயத்தை காப்பாற்றுவதற்குத் தேவையான உரம் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனத்திடமிருந்து யூரியா வரவழைக்கப்பட்டது.

    1268டன் யூரியா சரக்கு ரயில் மூலம் மயிலாடுதுறை ரயில்நிலையத்திற்கு வந்தது, அவற்றை 74 லாரிகளில் ஏற்றி மயிலாடுதுறை நாகை மற்றும் திருவாரூர் மாவட்ட தனியார் உர விற்பனையாளர்களுக்கு அனுப்பி வைத்தனர். யூரியா வந்ததை மயிலாடுதுறை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சேகர் மற்றும் தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் முன்னிலையில் இறக்கப்பட்டது.

    • இரண்டு முறை டி.ஏ.பி. உரம் தெளித்திட 10 கிலோ டி.ஏ.பி உரம் வழங்கப்படுகின்றன.
    • பூச்சி, நோய் தாக்குதல் கட்டுப்படுத்தப்படுகிறது.

    பாபநாசம்:

    பாபநாசம் வேளாண்மை உதவி இயக்குனர் சுஜாதா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது;-

    தமிழ்நாடு மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் மாற்றுப் பயிர் சாகுபடியை ஊக்குவிக்கும் பொருட்டு ஒரு விவசாயிக்கு ஒரு ஏக்கருக்கு உரிய எட்டு கிலோ உளுந்து விதை 50 சத மானியத்திலும், இரண்டு முறை டி ஏ பி உரம் தெளித்திட 10 கிலோ டிஏபி உரமும் வழங்கப்படுகின்றன. எதிர்வரும் கார்த்திகை பட்டத்தில் உளுந்து சாகுபடி செய்ய உள்ள விவசாயிகளும், சம்பா, தாளடி நெல் வயல்களில் வரப்பில் உளுந்து விதைப்பு செய்திடவும் இந்த உளுந்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    இதன் மூலம் பூச்சி, நோய் தாக்குதல் கட்டுப்படுத்தப்படுகிறது. மண்வளம் பாதுகாக்கப்படுகிறது. எனவே, தேவைப்படும் விவசாயிகள் தங்கள் ஆதார் அட்டை நகல், உழவர் அட்டை நகல் ஆகியவற்றுடன் சென்று பாபநாசம், கணபதி அக்ரஹாரம், மற்றும் கூனஞ்சேரி ஆகிய விரிவாக்க மையங்களில் பெற்றுக் கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • உரங்களை மற்ற இடுபொருட்களுடன் இணைத்து விற்றால் உரிமம் ரத்து என தெரிவித்துள்ளார்
    • வேளாண்மை இணை இயக்குநர் எச்சரிக்கை

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் பெரியசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

    புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போது சம்பா சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சம்பா சாகுபடிக்கு தேயைhன உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் யூரியா 3248 மெட்ரிக் டன்கள், டி.ஏ.பி 1289 மெட்ரிக் டன்கள், பொட்டாஷ் 845 மெட்ரிக் டன்கள், காம்ளக்ஸ் உரங்கள் 5323 மெட்ரிக் டன்கள் மற்றும் சூப்பர் பாஸ்பேட் 443 மெட்ரிக் டன்கள் உரம் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    விவசாயிகளின் தேவைக்கு அதிகமாகவும், ஒரே நபரு க்கு அதிக அளவு உரமும் வழங்கக் கூடாது. குறிப்பிட்ட விவசாயியின் பெயரில் அதிகபடியாக உர விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் சில்லரை விற்பனை உரிமம் இரத்து செய்யப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

    உர விற்பனையாளர்கள் உர உரிமத்தில் அனுமதி பெறாத இடங்களில் உரத்தினை இருப்பு வைப்பதும், உரிமத்தில் அனுமதி பெறாத நிறுவனங்களின் உரங்களை கொள்முதல் செய்வதும் கூடாது. விவசாயம் மேற்கொள்ளாதவர்களுக்கு உரம் விற்பனை செய்யக் கூடாது. எனவே, திடீர் ஆய்வு செய்யும் போது மேற்காணும் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் உர விற்பனையாளர்களின் உர விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

    உரங்களுடன் வேறு இடுபொருட்களை இணைத்து விற்பனை செய்தாலோ அல்லது உர மூட்டையின் மேல் அச்சிடப்பட்ட அதிகபட்ச விற்பனை விலைக்கு மேல் விற்பனை செய்யப்பட்டாலோ சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்களை அல்லது மாவட்ட உரக் கண்காணிப்பு மையத்தை 04322-221666 என்ற எண்ணில் விவசாயிகள் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

    • பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படும்.
    • ஊட்டச்சத்து அடிப்படையில் உரங்களை மானிய விலையில் வழங்க ஒப்புதல்.

    டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு கூட்டத்தில், எத்தனால் கலந்த பெட்ரோல் திட்டத்தின் கீழ் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மூலம் எத்தனால் கொள்முதல் செய்யும் முறைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

    டிசம்பர் 1, 2022 முதல், 31 அக்டோபர் 2023 வரையிலான பருவத்தில் எத்தனால் கலந்த பெட்ரோல் விநியோக திட்டத்தின் கீழ், பல்வேறு கரும்புகளின் மூலப் பொருட்களிலிருந்து எத்தனால் பெறப்படுகிறது. இந்த எத்தனாலுக்கான கொள்முதல் மற்றும் அதிகபட்ச விலைக்கு அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. 


    அதன்படி, சி வகையிலான எத்தனால் லிட்டர் ரூ.46.66 லிருந்து ரூ.49.41 ஆகவும், பி வகையிலான எத்தனாலுக்கான விலை லிட்டர் ரூ.59.08 லிருந்து ரூ.60.73-ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. கரும்புச் சாறு, சர்க்கரைப்பாகு மூலம் தயாரிக்கப்படும் எத்தனால் விலை லிட்டர் ரூ.63.45-லிருந்து ரூ.65.61ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    இதேபோல் 2022-23 ரபி பருவத்தில் அக்டோபர் 1, 2022 முதல் மார்ச் 31, 2023 ஆம் ஆண்டு வரை ஊட்டச்சத்து அடிப்படையிலால் பாஸ்பேட் மற்றும் பொட்டாசியம் உரங்களை மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி ஒரு கிலோ அளவில் நைட்ரஜனுக்கு ரூ.98.02-ம், பாஸ்பரசுக்கு ரூ.66.93-ம், பொட்டாஷூக்கு ரூ.23.65-ம், சல்ஃபருக்கு ரூ.6.12-வும், மானியமாக வழங்கப்படும் என்று மத்திய உரத்துறை மந்திரி மன்சுக் மாண்டிவியா தெரிவித்துள்ளார்.

    • பாரம்பரிய நெல் ரகங்கள் இயற்கையான மற்றும் விஷமில்லாத உணவாக பயன்படுகிறது.
    • இயற்கை உயிர் உரங்களை பயன்படுத்தி மண்வளத்தை பாதுகாக்கும் முறைகள் குறித்தும் விளக்கம்.

    பேராவூரணி:

    சேதுபாவாசத்திரம் வட்டாரம் திருவத்தேவன் கிராமத்தில் விவசாயிகள் பாரம்பரிய மற்றும் புதிய நெல் ரகங்களை சாகுபடி செய்வது தொடர்பான தொழில் நுட்ப பயிற்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு சேதுபாவாசத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சாந்தி தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் முரளி, துணைத் தலைவர் சுதர்சன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்வில் வேளாண்மை உதவி இயக்குனர் சாந்தி பேசியதாவது,

    பாரம்பரிய நெல்- புதிய ரகங்கள் சாகுபடி செய்ய விவசாயிகள் முன் வர வேண்டும். பாரம்பரிய நெல் ரகங்கள் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவை.

    இவை சர்க்கரை நோய், புற்றுநோய், வயிற்றுப்புண், நரம்பு சம்பந்தமான நோய்களை தடுக்கும் திறன் கொண்டது. பாரம்பரிய நெல் ரகங்கள் இயற்கையான மற்றும் விஷமில்லாத உணவாக பயன்படுகிறது.

    விவசாயிகள் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாடு தொழில்நுட்பங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

    இயற்கை உரம் நிகழ்ச்சியில் இயற்கை உழவர் இயக்கத்தின் செயலாளர் முருகையன் பேசும்போது, 'விவசாயிகள் அனைவரும் செயற்கை உரங்களை பயன்படுத்தாமல் இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்தி சாகுபடி செய்வதால் பூச்சி மற்றும் நோய்கள் தாக்குதல் இன்றி பயிர் நன்றாக வளர்ந்து நஞ்சில்லாத மற்றும் தரமான உணவை உற்பத்தி செய்ய முடியும்' என்றார்.

    நிகழ்ச்சியில் பாரம்பரிய நெல் ரகங்களான மாப்பிள்ளை சம்பா, சீரகச் சம்பா, காட்டுயாணம், கருப்புக் கவுனி, சிவப்பு கவுனி, ஆத்தூர் கிச்சடி சம்பா, தேங்காய் பூ சம்பா, கந்தசாலா, கிச்சடி சம்பா போன்ற ரகங்களின் பண்புகள், குணாதிசயங்கள் மற்றும் சாகுபடி முறை குறித்தும், இயற்கை உயிர் உரங்களை பயன்படுத்தி மண்வளத்தை பாதுகாக்கும் முறைகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.

    இதில் அட்மா திட்ட வட்டார தொழில் நுட்ப மேலாளர் சுரேஷ், உதவி தொழில் நுட்ப மேலாளர் தமிழழகன் மற்றும் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    பயிற்சிக்கான ஏற்பாடுகளை வேளாண்மை உதவி அலுவலர் பிரதீபா, அட்மா திட்ட உதவி தொழில் நுட்ப மேலாளர் நெடுஞ்செழியன் ஆகியோர் செய்திருந்தனர்.

    ×