search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "யூரியா"

    • பிரதமர் மோடி ஜார்க்கண்டில் ரூ,35,700 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார்.
    • ஜார்க்கண்ட் மாநிலம் சிந்த்ரியில் நடைபெற்ற விழாவில் பிரதமருக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது

    ராஞ்சி:

    பிரதமர் நரேந்திர மோடி இன்று ஜார்க்கண்டில் ரூ,35,700 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். அங்குள்ள தன்பாத் மாவட்டத்தில் உள்ள சிந்த்ரி பகுதியில் ரூ.8,900 கோடி மதிப்பில் புதுப்பிக்கப்பட்டுள்ள ஹிந்துஸ்தான் உர்வராக் மற்றும் ரசாயன லிமிடெட் உரத்தொழிற்சாலையை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். சிந்த்ரியில் நடைபெற்ற விழாவில் பிரதமருக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது

    இந்த தொழிற்சாலை ஆண்டுக்கு 12.7 லட்சம் மெட்ரிக் டன் உள்நாட்டு யூரியா உற்பத்தி செய்யும். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:

    இந்தியாவின் யூரியா உற்பத்தி 2014-ல் 225 லட்சம் டன்னாக இருந்தது. இது தற்போது 310 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது.

    இன்று ரூ.35 ஆயிரம் கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள திட்டங்களை ஜார்க்கண்ட் பெற்றுள்ளது.

    சிந்த்ரி உர ஆலையை புதுப்பிப்பது மோடியின் உத்தரவாதமாக இருந்தது. அது இன்று நிறைவேற்றப்பட்டது.

    இந்த ஆலையை நாட்டுக்கு அர்ப்பணிப்பதன் மூலம் இந்தியா யூரியாவில் தன்னிறைவு பெறும் என தெரிவித்தார்.

    இதுதவிர, ஜார்க்கண்டில் ரூ.26,000 கோடி மதிப்பிலான ரெயில், மின்சாரம் மற்றும் நிலக்கரி திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார்.

    • உரங்கள் ரெயில் மூலம் ஈரோடு வந்தடைந்ததை ஆய்வு செய்தனர்.
    • உர விற்பனை நிலையங்களில் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் நெல், கரும்பு, மஞ்சள், நிலக்கடலை, மக்காச் சோளம், எள், காய்கறிகள், வாழை, மரவள்ளி, தென்னை ஆகிய பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

    நடப்பாண்டில் மாவட்டத்தில் நல்ல மழை பெய்துள்ள காரணத்தால் பயிர் சாகுபடிக்கு உகந்த சூழ்நிலை நிலவி வருகிறது.

    இந்நிலையில் தூத்துக்குடியில் இருந்து 301 மெட்ரிக் டன் யூரியா, 127 மெட்ரிக் டன் டி.ஏ.பி, 893 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் மற்றும் கொச்சியில் இருந்து 1,370 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் ரெயில் மூலம் ஈரோடு வந்தடைந்ததை வேளா ண்மை இணை இயக்குநர் சின்னசாமி, வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டு ப்பாடு) வைத்தீஸ்வரன், வேளாண்மை அலுவலர் (தரக்கட்டுபாடு) ஜெய சந்திரன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    ஆய்வின் போது வேளா ண்மை இணை இயக்குநர் சின்னசாமி கூறியதாவது:

    ஈரோடு மாவட்டத்தில் விவசாயிகள் பயிர் சாகுபடி மேற்கொள்ள ஏதுவாக தற்போது யூரியா உரம் 4,027 மெ.டன்னும், டி.ஏ.பி உரம் 2,894 மெ.டன்னும், பொட்டாஷ் உரம் 3,133 மெ.டன்னும், காம்ப்ளக்ஸ் உரம் 11,086 மெ.டன்னும், சூப்பர் பாஸ்பேட் 856 மெ.டன்னும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் போதிய அளவு தட்டுப்பாடின்றி இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

    மேலும் விவசாயிகள் தங்கள் வட்டார வேளா ண்மை விரிவாக்க மையங்க ளில் வழங்கப்படும் திரவ உயிர் உரங்களை பெற்று பயன்படுத்துவ தோடு, திண்டலில் உள்ள வேளா ண்மைத் துறையின் மண் பரிசோதனை நிலையத்தில் மண் பரிசோதனை செய்து அதில் பரிந்துரைக்கப்படு வதற்கு ஏற்ப உரங்களை பெற்று பயன்படுத்தி உர செலவை குறைத்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • தூத்துக்குடியில் இருந்து உரங்கள் ெரயில் மூலம் ஈரோடு வந்தடைந்தது.
    • இதனை வேளாண்மை இணை இயக்குநர் ஆய்வு செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் நெல், கரும்பு, மஞ்சள், நிலக்கடலை, மக்காச்சோ ளம், எள், காய்கறிகள், வாழை, மரவள்ளி, தென்னை ஆகிய பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

    நடப்பாண்டில் மாவட்டத்தில் நல்ல மழை பெய்துள்ள காரணத்தால் பயிர் சாகுபடிக்கு உகந்த சூழ்நிலை நிலவி வருகிறது.

    இந்நிலையில் தூத்துக்குடியில் இருந்து 637 மெட்ரிக் டன் யூரியா, 130 மெட்ரிக் டன் டி.ஏ.பி, 155 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ் மற்றும் 9 மெட்ரிக் டன் சூப்பர் பாஸ்பேட் உரங்கள் ெரயில் மூலம் ஈரோடு வந்தடைந்தது.

    இதனை வேளாண்மை இணை இயக்குநர் சி.சின்னசாமி, வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டு ப்பாடு) வைத்தீஸ்வரன், வேளாண்மை அலுவலர் (தரக்கட்டுபாடு) ஜெயசந்தி ரன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    ஆய்வின் போது வேளாண்மை இணை இயக்குநர் சி.சின்னசாமி தெரிவித்ததாவது:-

    ஈரோடு மாவட்டத்தில் விவசாயிகள் பயிர் சாகுபடி மேற்கொள்ள ஏதுவாக தற்போது யூரியா உரம் 5,444 மெ.டன்னும், டி.ஏ.பி உரம் 2,668 மெ.டன்னும், பொட்டாஷ் உரம் 1,308 மெ.டன்னும்,

    காம்ப்ளக்ஸ் உரம் 10,010 மெ.டன்னும், சூப்பர் பாஸ்பேட் 903 மெ.டன்னும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலை யங்களில் போதிய அளவு தட்டுப்பாடின்றி இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

    மேலும் விவசாயிகள் தங்கள் வட்டார வேளா ண்மை விரிவாக்க மையங்களில் வழங்கப்படும் திரவ உயிர் உரங்களை பெற்று பயன்படுத்துவதோடு,

    திண்டலில் உள்ள வேளாண்மைத் துறையின் மண் பரிசோதனை நிலை யத்தில் மண் பரிசோதனை செய்து அதில் பரிந்துரை க்கப்படுவதற்கு ஏற்ப உரங்களை பெற்று பயன்படு த்தி உர செலவை குறைத்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • ஒரு ஏக்கருக்கு ஒருமுறை மேலுரம் இடுவதற்கு அரை மூட்டை யூரியா.
    • மகசூலும் ஏக்கருக்கு 300 கிலோ முதல், 500 கிலோ வரை கூடுதலாக கிடைக்கிறது.

    மெலட்டூர்:

    அம்மாபேட்டை வட்டாரம், சூழியக்கோட்டை கிராமத்தில் வேளாண்மை துறை மற்றும் இந்திய உழவர் உர கூட்டுறவு நிறுவனம் சார்பில் டிரோன் மூலமாக நானோ யூரியா தெளிப்பு செயல்முறை விளக்கம் மற்றும் வயல்வெளி தின விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அம்மாபேட்டை உதவி வேளாண் இயக்குனர் மோகன், இந்திய உழவர் உர கூட்டுறவு நிறுவன விற்பனை துணை மேலாளர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்நிகழ்ச்சியில் டிரோன் மூலம் நானோ யூரியா தெளிக்கும் வயல்வெளி செயல்முறை விளக்கம் தந்து இப்கோ நிறுவன அதிகாரி சுரேஷ், டிரோன் மூலம் நானோ யூரியா தெளிப்பது குறித்து கூறியதாவது,

    விவசாயிகள் உரசெலவை குறைக்கும் வகையில் 500 மில்லி நானோ யூரியா, ஒரு மூட்டை யூரியாவுக்கு சமமானது ஆகும். வழக்கமாக ஒரு ஏக்கருக்கு ஒருமுறை மேலுரம் இடுவதற்கு அரை மூட்டை யூரியா, அரை மூட்டை பொட்டாஷ் பயன்படுத்தப்படுகிறது.

    இதன் செலவு ரூ.1000 வரை செலவாகிறது. அதற்கு பதிலாக அரை லிட்டர் நானா யூரியா மற்றும் அரை லிட்டர் சாகரியா இரண்டையும் கலந்து ஒரு ஏக்கருக்கு தெளிப்பதன் மூலம் உர செலவு பாதியாக குறைகிறது.

    மேலும் நானா யூரியா இலை வழியாக உறிஞ்சப்பட்டு பயிரிநுல் ஊடூருவி செல்கிறது.

    இதன் மூலம் மண் வளம் காக்கப்படுவதோடு, மகசூலும் ஏக்கருக்கு 300 கிலோமுதல், 500 கிலோ வரை கூடுதலாக கிடைக்கிறது. நானோ யூரியா பயன்படுத்துவதால் விவசாயிகளுக்கு உர செலவு பாதியாக குறையும் என்றார்.

    இதில் முன்னோடி விவசாயிகள், உழவர்கள், விவசாய தொழிலாளர்கள், வேளாண் களப்பணியாளர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

    • பயிர்களுக்கு இலை வழியாக யூரியா உரம் இடும் பணி நடக்கிறது.
    • நில அளவை பிரிவில் 8 சர்வேயர் உள்ள இடத்தில் 4 பேர் மட்டுமே உள்ளனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

    இதில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த ஏராளமான விவசாயிகள் கோரிக்கை மனுக்களை கலெக்டரிடம் அளித்தனர்.

    விவசாயி வீரசேனன் அளித்த மனுவில், தஞ்சை மாவட்டத்தில் தற்போது சம்பா நெற்பயிர்கள் வளர்ந்து வருகிறது. பயிர்களுக்கு இலை வழியாக யூரியா உரம் இடும் பணி நடக்கிறது.

    இந்த சூழ்நிலையில் பல இடங்களில் உரம் தட்டுப்பாடு நிலவி வருகிறது. அதனை உடனடியாக போக்க வேண்டும் என்ற குறிப்பிட்டிருந்தார். தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் அளித்த மனுவில்,

    கூட்டுறவு சங்க ங்களில் உடனடியாக விவசாயிகளுக்கு கடன் மற்றும் உரம் வழங்க வேண்டும், ஒரத்தநாடு நில அளவை பிரிவில் 8 சர்வேயர் உள்ள இடத்தில் 4 பேர் மட்டுமே உள்ளனர்.

    இவர்களை இடமாற்றம் செய்வதை தடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.இதேபோல் ஏராளமான விவசாயிகள் தங்களது கோரிக்கை மனுக்களை கலெக்டரிடம் அளித்தனர்.

    • விவசாயத்தை காப்பாற்றுவதற்குத் தேவையான உரம் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனத்திடமிருந்து யூரியா வரவழைக்கப்பட்டது.
    • 74 லாரிகளில் ஏற்றி மயிலாடுதுறை நாகை மற்றும் திருவாரூர் மாவட்ட தனியார் உர விற்பனையாளர்களுக்கு அனுப்பி வைத்தனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டத்தில் தற்பொழுது சம்பா மற்றும் தாளடி விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வடகிழக்குப் பருவமழையால் 87ஆயிரம் ஏக்கரில் விவசாயம் சேதம் அடைந்துள்ளது, மீதமுள்ள விவசாயத்தை காப்பாற்றுவதற்குத் தேவையான உரம் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனத்திடமிருந்து யூரியா வரவழைக்கப்பட்டது.

    1268டன் யூரியா சரக்கு ரயில் மூலம் மயிலாடுதுறை ரயில்நிலையத்திற்கு வந்தது, அவற்றை 74 லாரிகளில் ஏற்றி மயிலாடுதுறை நாகை மற்றும் திருவாரூர் மாவட்ட தனியார் உர விற்பனையாளர்களுக்கு அனுப்பி வைத்தனர். யூரியா வந்ததை மயிலாடுதுறை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சேகர் மற்றும் தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் முன்னிலையில் இறக்கப்பட்டது.

    • உரக்கடைகளை நாடி உரம் வாங்கி பயன்படுத்த முயற்சிக்கின்றனர்.
    • உரக்கடைகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    திருப்பூர் :

    குன்னத்தூரில் யூரியா உரம் வாங்க சென்ற விவசாயிகளிடம் மற்றொரு உரத்தை வாங்க வற்புறுத்திய உரக்கடை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் எழுந்துள்ளது.

    திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி, குன்னத்தூர் வட்டாரங்களில் சோளப்பயிர் தற்போது முளைத்து வளரத் தொடங்கியுள்ளது. தற்போது பெய்து வரும் மழையை பயன்படுத்தி யூரியா உரம் சீராக கொடுத்தால் பயிர் நல்ல வளர்ச்சி அடையும் என்று விவசாயிகள் எண்ணி, யூரியா உரம் வாங்க அருகில் இருக்கும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கு சென்றால் அங்கு இருப்பு இல்லை.

    இந்நிலையில், தனியார் உரக்கடைகளை நாடி உரம் வாங்கி பயன்படுத்த முயற்சிக்கின்றனர். குன்னத்தூரில் உள்ள உரக்கடைக்கு, விவசாயிகள் யூரியா உரம் வாங்க சென்றால், அங்கு பணியாளர் யூரியா உரம் தனியாக தர முடியாது. மற்றொரு உரமும் சேர்ந்து வாங்கினால்தான் தர முடியும். இல்லையென்றால் இரண்டுக்கும் சேர்ந்து ரூ.1100 கொடுத்தால்தான் யூரியா 1 மூட்டை தருவேன் என்று கறாராக சொல்லி அனுப்பிவிட்டார். இது போன்று விவசாயிகள் பலரும் ஏமாற்றப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    மேலும் இது தொடர்பாக முறையிட்டபோது, யாரிடம் வேண்டுமானால் புகார் அளித்து கொள்ளுங்கள் என பேசினார். யூரியா உரம் கேட்டுச்செல்லும் விவசாயிகளிடம் தேவையற்ற பொருட்களை வாங்க வேண்டும் என்று நிர்ப்பந்திக்கிற உரக்கடைகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் தேவையான உரங்கள் இருப்பு வைத்து, விவசாயிகளுக்கு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத்துக்கும், வேளாண்மைத்துறை அலுவலர்களுக்கும் புகார் அனுப்ப உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

    • தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து ரெயில் மூலமாக 1,930 டன் யூரியா ஈரோடு ரெயில் நிலையத்தில் உள்ள பணிமனைக்கு கொண்டு வரப்பட்டது.
    • இதில் ஈரோடு மாவட்டத்துக்கு 1,680 மெட்ரிக் டன் யூரியாவும், திருப்பூர் மாவட்டத்துக்கு 250 மெட்ரிக் டன் யூரியாவும் அனுப்பி வைக்கப்பட்டன.

    ஈரோடு:

    தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து ரெயில் மூலமாக 21 பெட்டிகளில் 1,930 டன் யூரியா இன்று காலை ஈரோடு ரெயில் நிலையத்தில் உள்ள பணிமனைக்கு கொண்டு வரப்பட்டது.

    இதையடுத்து அவற்றை ஈரோடு மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங் களுக்கு லாரிகள் மூலமாக அனுப்பும் பணி மண்டல மேலாளர் ஸ்ரீதர் மற்றும் கிரிப்கோ கள அலுவலர் கதிர் வடிவேலன் ஆகியோர் மேற்பார்வையில் நடைபெற்றது.

    இதில் ஈரோடு மாவட்டத்துக்கு 1,680 மெட்ரிக் டன் யூரியாவும், திருப்பூர் மாவட்டத்துக்கு 250 மெட்ரிக் டன் யூரியாவும் அனுப்பி வைக்கப்பட்டன.

    • இதுவரை பயிர் காப்பீடு இழப்பீடு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்கவில்லை.
    • உரத்தட்டுப்பாட்டை போக்கி விலையை குறைக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் இன்று மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

    இதற்கு கலெக்டர் தினேஷ் பொ ன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார்.

    மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த விவசா யிகள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

    அப்போது கூட்டம் நடந்து கொண்டிருக்கும் போது விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் மாநிலத் துணைத் தலைவர் கக்கரை சுகுமாரன் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட விவசாயிகள் அடகு வைக்கப்பட்ட பித்தளை குடங்களுடன் வந்து திடீரென கலெக்டர் இடம் முறையிட்டனர் .

    கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

    இது குறித்து கக்கரை சுகுமாறன் கூறும்போது, தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு பெய்த கனமழையால் நெற்பயிர்கள் சேதம் அடைந்தது.

    மகசூல் இல்லை என தெரிந்தும் 2021-22-ம் ஆண்டுக்கு பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு செய்ய விவசாயிகள் அண்டா, குண்டா அடகு வைத்து பிரிமியம் தொகை கட்டினார்கள்.

    ஆனால் அடகு வைத்த பொருட்கள் ஏலம் போனது தான் மிச்சம். இதுவரை பயிர் காப்பீடு இழப்பீடு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்கவில்லை. உடனே பயிர் இன்சூரன்ஸ் இழப்பீடு வழங்க வேண்டும்.

    வரலாறு காணாத அளவுக்கு விலைவாசி உயர்ந்துள்ளது. ஆனால் விவசாயத்திற்கான யூரியா உரம் தட்டுப்பாட்டில் உள்ளது.

    உரம் தட்டுப்பா ட்டை போக்கி விலையை குறைக்க வேண்டும்.

    நெல் குவிண்டால் விலை ரூ.2500-ம், கரும்புக்கான விலை டன் ஒன்றுக்கு ரூ.4000 விலையை அறிவிக்க வேண்டும்.

    விவசாயிகளுக்கு வழங்கும் இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது. 2022-23-ம் ஆண்டுக்கான சம்பவ பருவத்திற்கு கூட்டுறவு கடன் உடனே வழங்க வேண்டும்.

    விவசாயிகளுக்கு பாரபட்சமின்றி விவசாய கடன் ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வழங்க வேண்டும்.

    மேற்கண்ட கோரி க்கைகள் அனைத்தையும் நிறைவேற்றக்கோரி என்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தை புறக்கணி த்தோம்.

    அடகு வைத்தது தான் மிச்சம் என்பதை வலியுறுத்தி பித்தளை பாத்திரம், பித்தளை குடத்துடன் வந்தோம் என்றார்.

    இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    • 1 ஏக்கருக்கு சுமார் 45 கிலோ பயன்படும் இடத்தில் 500 எம்.எல் நானோ யூரியாவை எளிதில் ஏக்கர் முழுவதும் தெளித்துவிடலாம்.
    • நானோ யூரியா பயன்படுத்தும் முறை குறித்து அனைத்து வட்டாரங்களிலும் விழிப்புணர்வு செயல் விளக்கங்கள் மேற்கொள்ள விவசாயிகள் முன்வரவேண்டும்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் மேலப்பூதனூரில் குறுவை நெல் பயிறில் டிரோன் மூலம் நானோ யூரியா மற்றும் பயிர் பாதுகாப்பு மருந்து தெளித்தல் செயல் விளக்கம் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் முன்னிலையில் நடைபெற்றது.

    அப்போது அவர் கூறியதாவது:-மேலப்பூதனூர் கிராமத்தில் ஒரு முன்னோடி விவசாயி அவரின் நிலத்தில் குறுவை சாகுபடி செய்து அவற்றிற்கு ட்ரோன் மூலமாக நானோ யூரியா என்ற உரத்தை தெளித்துள்ளார்.

    நானோ யூரியா பயன்படுத்துவதன் மூலம் 1 ஏக்கருக்கு சுமார் 45 கிலோ பயன்படும் இடத்தில் 500 எம்.எல் நானோ யூரியாவை எளிதில் ஏக்கர் முழுவதும் தெளித்துவிடலாம்.ட்ரோன் மூலம் நானோ யூரியா மற்றும் பயிர்பாதுகாப்பு மருந்து தெளிப்பதால் ஒரு குறைவான நேரத்தில் அதிக பரப்பினை தெளிக்க முடியும். தற்சமயம் ஆள் பற்றாக்குறையை போக்க ட்ரோன் முறை பயன்படுத்தலாம். நானோ யூரியா பயன்படுத்தும் முறை குறித்து அனைத்து வட்டாரங்களிலும் விழிப்புணர்வு செயல் விளக்கங்கள் மேற்கொள்ள விவசாயிகள் முன்வரவேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இந்த செய்முறை விளக்கத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை இணை இயக்குநர் ஜாக்குலா அகண்டராவ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • விவசாய பயனாளிகளுக்கு 100 சதவீத மானியத்தில் 1 ஏக்கருக்கு யூரியா, 45 கிலோ டிஏபி, 50 கிலோ பொட்டாஷ், 25 கிலோ வீதம் ரசாயன உரத்தை வழங்கினார்.
    • 75 ஏக்கருக்கு பயறு தொகுப்பும், 20 ஏக்கருக்கு எண்ணை வித்து தொகுப்பும் வழங்கப்படவுள்ளதாக வேளாண்மைத்துறையினர் தெரிவித்தனர்.

    சீர்காழி:

    சீர்காழி அருகே அகணி கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் குறுவை தொகுப்பு திட்டத்திற்கான தொடக்க விழா நடைபெற்றது. இதில் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராஜராஜன் தலைமை வகித்தார். வேளாண் இணை இயக்குனர் சேகர் குறுவை தொகுப்பு திட்டம் குறித்து விளக்கவுரையாற்றினார். விழாவில்சீர்காழி பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. பங்கேற்று 33 விவசாய பயனாளிகளுக்கு 100 சதவீத மானியத்தில் 1 ஏக்கருக்கு யூரியா, 45 கிலோ டிஏபி, 50 கிலோ பொட்டாஷ், 25 கிலோ வீதம் ரசாயன உரத்தை வழங்கினார். சீர்காழி வட்டாரத்தில் 6500 ஏக்கருக்கு சுமார் 7100 விவசாயிகளுக்கு இலவசமாக ரசாயன உரம் வழங்கப்படவுள்ளதாகவும், 10 ஏக்கருக்கு சிறுதானிய தொகுப்பும், 75 ஏக்கருக்கு பயறு தொகுப்பும், 20 ஏக்கருக்கு எண்ணை வித்து தொகுப்பும் வழங்கப்படவுள்ளதாக வேளாண்மைத்துறையினர் தெரிவித்தனர். விழாவில் வேளாண்மை அலுவலர் சுகன்யா, உதவி வேளாண்மை அலுவலர் தமிழரசன், ஒன்றியக்குழு உறுப்பினர் ரிமா, ஒன்றிய பொறுப்பாளர் பிரபாகரன், மாவட்ட பிரதிநிதி அன்பழகன், மாவட்ட கவுன்சிலர் விஜயேஸ்வரன், ஊராட்சி மன்ற தலைவர் மதியழகன், தி.மு.க. நிர்வாகி முருகன் பங்கேற்றனர்.

    ×