யூரியா, டி.ஏ.பி., காம்ப்ளக்ஸ் உரங்கள் ெரயில் மூலம் ஈரோடு வந்தடைந்தது

தூத்துக்குடியில் இருந்து உரங்கள் ெரயில் மூலம் ஈரோடு வந்தடைந்தது.இதனை வேளாண்மை இணை இயக்குநர் ஆய்வு செய்தனர்.
யூரியா, டி.ஏ.பி., காம்ப்ளக்ஸ் உரங்கள் ெரயில் மூலம் ஈரோடு வந்தடைந்தது
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் நெல், கரும்பு, மஞ்சள், நிலக்கடலை, மக்காச்சோ ளம், எள், காய்கறிகள், வாழை, மரவள்ளி, தென்னை ஆகிய பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

நடப்பாண்டில் மாவட்டத்தில் நல்ல மழை பெய்துள்ள காரணத்தால் பயிர் சாகுபடிக்கு உகந்த சூழ்நிலை நிலவி வருகிறது.

இந்நிலையில் தூத்துக்குடியில் இருந்து 637 மெட்ரிக் டன் யூரியா, 130 மெட்ரிக் டன் டி.ஏ.பி, 155 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ் மற்றும் 9 மெட்ரிக் டன் சூப்பர் பாஸ்பேட் உரங்கள் ெரயில் மூலம் ஈரோடு வந்தடைந்தது.

இதனை வேளாண்மை இணை இயக்குநர் சி.சின்னசாமி, வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டு ப்பாடு) வைத்தீஸ்வரன், வேளாண்மை அலுவலர் (தரக்கட்டுபாடு) ஜெயசந்தி ரன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

ஆய்வின் போது வேளாண்மை இணை இயக்குநர் சி.சின்னசாமி தெரிவித்ததாவது:-

ஈரோடு மாவட்டத்தில் விவசாயிகள் பயிர் சாகுபடி மேற்கொள்ள ஏதுவாக தற்போது யூரியா உரம் 5,444 மெ.டன்னும், டி.ஏ.பி உரம் 2,668 மெ.டன்னும், பொட்டாஷ் உரம் 1,308 மெ.டன்னும்,

காம்ப்ளக்ஸ் உரம் 10,010 மெ.டன்னும், சூப்பர் பாஸ்பேட் 903 மெ.டன்னும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலை யங்களில் போதிய அளவு தட்டுப்பாடின்றி இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

மேலும் விவசாயிகள் தங்கள் வட்டார வேளா ண்மை விரிவாக்க மையங்களில் வழங்கப்படும் திரவ உயிர் உரங்களை பெற்று பயன்படுத்துவதோடு,

திண்டலில் உள்ள வேளாண்மைத் துறையின் மண் பரிசோதனை நிலை யத்தில் மண் பரிசோதனை செய்து அதில் பரிந்துரை க்கப்படுவதற்கு ஏற்ப உரங்களை பெற்று பயன்படு த்தி உர செலவை குறைத்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com