என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குறைதீர் கூட்டத்தில் நூதன முறையில் மனு கொடுத்த விவசாய சங்க நிர்வாகிகள்
    X

    பித்தளை குடத்துடன் வந்து மனு கொடுத்த விவசாய சங்க நிர்வாகிகள்.

    குறைதீர் கூட்டத்தில் நூதன முறையில் மனு கொடுத்த விவசாய சங்க நிர்வாகிகள்

    • இதுவரை பயிர் காப்பீடு இழப்பீடு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்கவில்லை.
    • உரத்தட்டுப்பாட்டை போக்கி விலையை குறைக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் இன்று மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

    இதற்கு கலெக்டர் தினேஷ் பொ ன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார்.

    மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த விவசா யிகள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

    அப்போது கூட்டம் நடந்து கொண்டிருக்கும் போது விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் மாநிலத் துணைத் தலைவர் கக்கரை சுகுமாரன் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட விவசாயிகள் அடகு வைக்கப்பட்ட பித்தளை குடங்களுடன் வந்து திடீரென கலெக்டர் இடம் முறையிட்டனர் .

    கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

    இது குறித்து கக்கரை சுகுமாறன் கூறும்போது, தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு பெய்த கனமழையால் நெற்பயிர்கள் சேதம் அடைந்தது.

    மகசூல் இல்லை என தெரிந்தும் 2021-22-ம் ஆண்டுக்கு பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு செய்ய விவசாயிகள் அண்டா, குண்டா அடகு வைத்து பிரிமியம் தொகை கட்டினார்கள்.

    ஆனால் அடகு வைத்த பொருட்கள் ஏலம் போனது தான் மிச்சம். இதுவரை பயிர் காப்பீடு இழப்பீடு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்கவில்லை. உடனே பயிர் இன்சூரன்ஸ் இழப்பீடு வழங்க வேண்டும்.

    வரலாறு காணாத அளவுக்கு விலைவாசி உயர்ந்துள்ளது. ஆனால் விவசாயத்திற்கான யூரியா உரம் தட்டுப்பாட்டில் உள்ளது.

    உரம் தட்டுப்பா ட்டை போக்கி விலையை குறைக்க வேண்டும்.

    நெல் குவிண்டால் விலை ரூ.2500-ம், கரும்புக்கான விலை டன் ஒன்றுக்கு ரூ.4000 விலையை அறிவிக்க வேண்டும்.

    விவசாயிகளுக்கு வழங்கும் இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது. 2022-23-ம் ஆண்டுக்கான சம்பவ பருவத்திற்கு கூட்டுறவு கடன் உடனே வழங்க வேண்டும்.

    விவசாயிகளுக்கு பாரபட்சமின்றி விவசாய கடன் ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வழங்க வேண்டும்.

    மேற்கண்ட கோரி க்கைகள் அனைத்தையும் நிறைவேற்றக்கோரி என்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தை புறக்கணி த்தோம்.

    அடகு வைத்தது தான் மிச்சம் என்பதை வலியுறுத்தி பித்தளை பாத்திரம், பித்தளை குடத்துடன் வந்தோம் என்றார்.

    இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×