வளம் மீட்பு பூங்காவை கூடுதல் இயக்குநர் ஆய்வு

பூங்காவை ஆய்வு செய்து மண்புழு உரம் தயாரிப்பு பணிக்கு அறிவுரை வழங்கினார்.அலுவலகத்தில் ஆன்லைன் வரிவிதிப்புகள் தொடர்பாக ஆய்வு செய்தார்.
சுவாமிமலையில் வளம் மீட்பு பூங்காவை கூடுதல் இயக்குநர் ஆய்வு செய்தார்.
சுவாமிமலையில் வளம் மீட்பு பூங்காவை கூடுதல் இயக்குநர் ஆய்வு செய்தார்.
Published on

சுவாமிமலை:

சுவாமிமலை பேரூராட்சியில் வளம் மீட்பு பூங்காவை கூடுதல் இயக்குநர் மலையமான் திருமுடிக்காரி வளம் மீட்பு பூங்காவை ஆய்வு செய்து மண்புழு உரம் தயாரிப்பு பணிக்கு அறிவுரை வழங்கினார்.

மேலும், சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவில் வளாகம், சன்னதி தெருவில் உள்ள வணிக கடைகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து, சன்னதி தெருவில் பக்தர்கள் பயன்பாட்டிற்கு கழிப்பறை கட்ட அறிவுறுத்தினார்.

மேலும், பேரூராட்சி அலுவலகத்தில் ஆன்லைன் வரிவிதிப்புகள் தொடர்பாக ஆய்வு செய்து அறிவுரை வழங்கினார்.

ஆய்வின் போது தஞ்சாவூர் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் கனகராஜ், உதவி செயற்பொறியாளர் மாதவன், சுவாமிமலை பேரூராட்சி பணியாளர்கள் உடன் இருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com